- Thursday
- January 16th, 2025
"கடந்த காலங்களில் கட்சிகளைப் பிளவுபடுத்தும் கைங்கரியத்தில் ஈடுபட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பிளவுபடுத்த முயற்சிக்கின்றார்." - இவ்வாறு குற்றஞ்சாட்டினார் ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக. ஐக்கிய தேசியக் கட்சியின் தலையகமான சிறிகொத்தவில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றியபோதே அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார். இதன்போது அவர்...
யாழ்ப்பாணத்தில் மிகவும் அச்சத்தின் மத்தியிலேயே வாழவேண்டியுள்ளது. இதை மாற்றவேண்டும். நாட்டைப் பாதுகாக்க ஓகஸ்ட் 17ஆம் திகதி சிங்களவர்கள் அனைவரும் வாக்களிக்கவேண்டும். சிங்களவர்கள் யார் என்பதைக் காட்டவேண்டும்." - இவ்வாறு நயினைதீவு நாகவிகாரதிபதி வண. நவந்தகல பதுமகீர்த்தி தேரர் தெரிவித்தார். நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் 61 பெளத்த மற்றும் சிவில் அமைப்புகள் நேற்று மஹிந்த ராஜபக்ஷவுடன் கைகோர்த்தன....
நாட்டை விரும்பாத டொலர்களுக்கு வேலை செய்யும் சிவில் அமைப்புகளுக்கு மத்தியில் உண்மையில் நாட்டை நேசிக்கும் தேசிய அமைப்பு இருப்பது மகிழ்ச்சி என முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட வேட்பாளருமாகிய மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பிக்குகள் குரல் மற்றும் தேசிய ஒற்றுமை என்ற அமைப்புக்கள் இணைந்து கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் உரையாற்றிய போதே...
வருமானத்துக்காக இனமானதையும் தன் மானத்தையும் விற்பதற்கு தமிழர் விடுதலை கூட்டணி ஒரு போதும் தயாராக இல்லை என்பதை இந்த வேளையில் தெரிய படுத்தி கொள்கின்றேன் என கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடும் தமிழர் விடுதலை கூட்டணி வேட்பாளர் நாகேந்திரன் டர்ஷன் தெரிவித்துள்ளார். கடந்த பாராளுமன்ற தேர்தலில் வேறு ஒரு மாவட்டத்தில் போட்டியிட்டு தோற்றதன் பின்னர் தேசிய பட்டியலில்...
இலங்கையில் தொழில் ரீதியாக பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு எதிராக குரல் கொடுக்கும் நோக்குடன், முதல் முறையாக பெண்களுக்காக, பெண்களால் நடத்தப்படும் தொழிற்சங்கம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. அது விரைவில் உரிய முறையில் பதிவு செய்யப்படும் என பெண்கள் ஒற்றுமை ஒன்றியம் எனப்படும் இந்த தொழிற்சங்கத்தை ஏற்படுத்தியுள்ளவர்களில் ஒருவரான பத்மினி விஜயசூரிய தெரிவித்தார். நாட்டிலுள்ள ஏனைய தொழிற்சங்கங்கள் பெண்களின்...
பிரபாகரன் யுத்தத்தின் மூலம் அடைய நினைத்ததை இன்று அரசியலின் ஊடாக புலிகள் அடைய முயற்சிக்கின்றனர். நாம் முடித்து வைத்த ஆயுத கலாசாரத்தையும் அவர்கள் மீண்டும் ஆரம்பித்துள்ளனர் என கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பங்காளிக் கட்சியான தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரான விமல் வீரவன்ஸ எழுதிய 'யுத்தம் இல்லாத நாடு -...
கொட்டாஞ்சேனை புளூமென்டல் வீதியில் ஐ.தே.கவின் ஆதரவாளர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாக அதிகரித்துள்ளதாக, கொழும்பு தேசிய மருத்துவமனைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சம்பவத்தில், பெண் ஒருவர் கொல்லப்பட்ட நிலையில், படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த மற்றொருவர் மரணமாகியுள்ளார். அதேவேளை, மேலும் 13 பேர் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர்களில்...
நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவின் ஆதரவாளர்கள் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொழும்பு ப்ளூமணெ்டல் வீதியில் ரவி கருணாநாயக்கவின் ஆதரவாளர்கள் தேர்தல் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது இரண்டு வேன்களில் வந்த சிலர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி காயமடைந்த 12 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதனையடுத்து காயமடைந்த...
முகநூல் (Facebook) சமூக வலைதளத்தின் தெற்காசியாவவுக்கான பொதுக்கொள்கைப் பணிப்பாளர் அன்கி தாஸ் தலைமையிலான ஒரு முகநூல் குழுவினர் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களை நேற்று (29) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்து, நாட்டின் முன்னேற்றத்திற்கான ஜனாதிபதியின் முயற்சிகளை முன்னெடுப்பதில் முகநூலை வினைத்திறன்மிக்க வகையில் பயன்படுத்துவது குறித்து கலந்துரையாடினர்.
கொழும்பு - புறக்கோட்டை பேருந்து நிலையத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட பெண் ஒரு தமிழ் பெண் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றையதினம் குறித்த சடலம் பயணப் பொதி ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டது. பேருந்து நிலையத்தில் அனுராதபுரம் செல்லும் பேருந்துகள் நிறுத்தப்பட்டிருந்த பகுதியில் இருந்து இந்த சடலம் மீட்கப்பட்டது. எனினும் சடலம் இன்னும் அடையாளம் காணப்படவில்லை....
கண்டி - யட்டிநுவர பிரதேச சபையின் முன்னாள் தலைவர் துஷிதகுமார வலகெதர கைது செய்யப்பட்டுள்ளார். கண்டியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற எதிர்கட்சி தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் தேசிய கொடியை ஒத்த திரிபுபடுத்தப்பட்ட கொடி போடப்பட்டிருந்தது. இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்திய பொலிஸார் முன்னாள் பிரதேச சபைத் தலைவரை கைது செய்துள்ளனர்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம், கொழும்பு ஹென்ரி பேதிரிஸ் விளையாட்டரங்களில் நேற்று செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது. கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர். இந்த விஞ்ஞாபன வெளியிடும் நிகழ்வில், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் குருநாகல் மாவட்ட வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷ, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பற்றி பாடல் ஒன்றை சிங்களத்தில்...
நல்லாட்சிக்கான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிடும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் கட்சி உறுப்புரிமையில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார். அதன்படி, இம்முறை தேர்தலில் நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியில் இணைந்து போட்டியிடும் அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, அர்ஜுன ரணதுங்க, எஸ்.பி.நாவின்ன, எம்.கெ.டி.எஸ்.குணவர்த்தன...
"நாடாளுமன்றத் தேர்தலுக்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனமானது 1976ஆம் ஆண்டு வட்டுக்கோட்டைப் பிரகடனத்துக்கு நிகரானது'' - என்று சுட்டிக்காட்டிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் மாத்தறை மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரதம வேட்பாளருமான டலஸ் அழகப்பெரும, இது நல்லிணக்கத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் பிரிவினைவாதத்தைத் தூண்டும் என்றும் குறிப்பிட்டார். கொழும்பில் அமைந்துள்ள எதிர்க்கட்சி...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் முன்மொழியப்பட்டுள்ள விடயங்களானவை இன நல்லுறவுக்கும், நாட்டின் தேசிய பாதுகாப்புக்கும் பெரும் அச்சுறுத்தலாகும். இவ்வாறு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சுட்டிக்காட்டியுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே திஸ்ஸ அத்தநாயக்க மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு மேலும் கூறியதாவது:- கொடிய...
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இறுதிப்போரில் கொல்லப்படவில்லை எனவும், அவர் உயிருடன் கைதுசெய்யப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டே கொலைசெய்யப்பட்டுள்ளார் எனவும் வெளியாகியுள்ள செய்தியில் எந்தவித உண்மைத்தன்மையும் இல்லை இவ்வாறு தெரிவித்துள்ளார் முன்னாள் அமைச்சரும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கண்டி மாவட்ட வேட்பாளருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார். கொழும்பில் அமைந்துள்ள எதிர்கட்சித் தலைவர் அலுவலகத்தில்...
மிரிஹான வெள்ளைவான் சம்பவமானது இலங்கை அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், நேற்று வெள்ளிக்கிழமை மற்றுமொரு வெள்ளைவான் சம்பவம் இடம்பெற்றுள்ளமையானது அரசியல் களத்தைப் பெரும் பரபரப்பாக்கியுள்ளது. இராணுவ இலக்கத் தகடு பொருத்தப்பட்ட வெள்ளை வாகனமொன்றிலிருந்து ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளர் வீரகுமார திஸாநாயக்கவின் சுவரொட்டிகள் மீட்கப்பட்டுள்ளன. இராணுவ இலக்கத் தகடு மற்றும் பிறிதொரு இலக்கத்...
அக்குரஸை பிரதேசத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தின் போது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் குருநாகல் மாவட்ட வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷவின் கையைப் பிடித்து இழுத்ததாகக் கூறப்படும் எச்.எஸ்.ஜீ.சமிந்த என்பவர், மாத்தறையின் நேற்று (24) ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தினார். அக்குரஸையை வசிப்பிடமாகக் கொண்ட அவர், மேற்படி சம்பவம் தொடர்பில் கூறியதாவது, 'அந்த கூட்டம் இடம்பெற்ற போது...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கம்பஹா பண்டாரநாயக்க வித்தியாலயத்தில் நேற்று (24) காலை இடம்பெற்ற பரிசளிப்பு விழாவின் போது, மாணவர் படையணியில் இருந்த மாணவர் ஒருவரின் துப்பாக்கியில் தோட்டாக்கள் நிரப்பப்பட்டிருந்தமை தொடர்பாக பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது மாணவர் படையணியில் முன்வரிசையில் நின்றிருந்த மாணவர் ஒருவரிடம் இருந்த துப்பாக்கியில்,...
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு பிளவுபட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுவதை மறுத்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தனது தனிப்பட்ட நலன்களுக்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை கைவிட விரும்பாததாலேயே புதிய கட்சியை ஆரம்பிக்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். தனது முகப்புத்தகத்தில் மக்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதியான நீங்கள் ஏன் பொதுத் தேர்தலில் போட்டியிடத்...
Loading posts...
All posts loaded
No more posts