- Thursday
- January 16th, 2025
தனக்குக் கிடைத்துள்ள மக்கள் ஆணையின்படி நாடாளுமன்றம் சென்று அரசியலை தொடரவுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிட்டு அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்ற மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றிபெறும் என்றும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மக்கள் ஆணைக்கு மதிப்பளிப்பார் எனத் தாம் எதிர்பார்ப்பதாகவும்,...
இலங்கையின் பாராளுமன்ற தேர்தல் அமைதியான முறையில் இடம்பெற்றமைக்கு ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் வரவேற்பு தெரிவித்துள்ளார். அத்துடன் நாட்டில் இடம்பெற்றுள்ள புதிய மாற்றம் குறித்தும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றி குறித்தும் பான்கீமூன் பாராட்டுக்களையும் தமது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். தேர்தலை அமைதியான முறையில் நடத்த ஒத்துழைப்பு வழங்கிய...
தேசிய ஆபத்தான மருந்துகள் கட்டுப்பாட்டு வாரியத்தின் தூதுவராக பிரபல கிரிக்கெட் வீரர் குமார் சங்கக்கார நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கான தகைமை கடிதத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று (19) குமார் சங்கக்காரவிடம் கையளித்தார். இதற்கான நிகழ்வு ஜனாதிபதி உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது. இதேவேளை இன்றைய தினம ஆரம்பம் ஆகும் இந்திய இலங்கை போட்டியுடன் சங்கக்கார தனது டெஸ்ட்...
இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்துவிட்ட மகிந்த ராஜபக்சவை போர்க்குற்றத்துக்காக சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கு இதுவே சரியான தருணம் என்று ஆஸ்திரேலியா எம்.பி. லீ ரியன்னோன் வலியுறுத்தியுள்ளார். இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே போட்டியிட்டார். எப்படியும் பிரதராகிவிடுவோம்.. தம் மீதான போர்க்குற்றவிசாரணையில் இருந்து தப்பித்துவிடுவோம் என்று அவர் கனவு கண்டார். ஆனால் மகிந்த...
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல் நிறைவடையும் வரையிலும் தேர்தலில் தொடர்பில் பல்வேறான சுவாரஸ்யமான சம்பவங்கள் இடம்பெற்றன. அவற்றில் சில... ரணிலுக்கு ஆகக்கூடிய விருப்பு வாக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்க, நடந்து முடிந்த தேர்தலில் ஆகக்கூடுதலான விருப்பு வாக்குகளை பெற்றுள்ளார். அவர், 500,566 விருப்பு வாக்குகளை பெற்றுள்ளதுடன் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா...
இலங்கைத் தேர்தல் வரலாற்றில் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றவர் என்ற சாதனையைப் படைத்துள்ளார் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க. கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட அவருக்கு 5 இலட்சத்து 56 ஆயிரத்து 600 வாக்குகள் கிடைத்துள்ளன. இதேவேளை அதிக விருப்பு வாக்குகளைப் பெறவேண்டும் என்ற நோக்கில் அதிக வாக்காளர்கள் கொண்ட மாவட்டங்களில் ஒன்றான குருநாகலில்...
இலங்கை பாராளுமன்ற தேர்தல் இறுதி முடிவுகள் வெளியாகிவிட்டது இதன்படி கட்சிகள் பெற்ற ஆசனங்கள் வருமாறு ஐக்கியதேசியக்கட்சி( 45.66 %) - 106 ஐக்கியமக்கள் சுதந்திர கூட்டமைப்பு (42.38%) - 95 தமிழரசுக்கட்சி (4.62%)- 16 மக்கள் விடுதலை முன்னணி (4.87%) - 6 சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்(0.40%) -1 ஈழமக்கள் ஜனநாயக கட்சி (0.30%) - 1
கடந்த ஜனவரி மாதம் 08 திகதியின் புரட்சியை தொடர்ந்து முன்னோக்கி கொண்டு செல்வதோடு நல்லாட்சி மற்றும் கொள்கைகளை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு இந்நாட்டின் பெரும்பான்மை மக்களின் அனுமதி கிடைத்துள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். விசேட அறிக்கை ஒன்றினை வெளியிட்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்க இதனை குறிப்பிட்டுள்ளார். விசேட அறிக்கையில்...
ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியத் தலைவர் ரணில் விக்ரமசிங்க இன்று பிரதமராக பதவிப் பிரமாணம் செய்ய உள்ளதாக ஜனாதிபதி செயலக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று மாலை மிகவும் எளிமையான நிகழ்வு ஒன்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முன்னிலையில் ரணில் விக்ரமசிங்க இலங்கையின் 15ம் நாடாளுமன்றின் பிரதமராக பதவிப்...
15ஆவது நாடாளுமன்றத்துக்கான தேர்தலில் தோல்வியடைந்துள்ளதை ஏற்றுக் கொள்வதாக, முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் குருநாகல் மாவட்ட வேட்பாளருமான மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளதாக, ஏ.எஃப்.பி செய்திச் சேவை தெரிவிக்கின்றது. இந்தத் தேர்தலில் ஐ.ம.சு.கூ அறுதிப் பெரும்பான்மையைப் பெற முடியாது என்பதனாலேயே அவர் தனது தோல்வியை ஏற்றுக் கொண்டுள்ளதாகத் தெரிகின்றது. "பிரதமராக வருவது என்ற என்னுடைய...
நாடாளுமன்றத் தேர்தல் வாக்களிப்பையடுத்து தேசியப்பட்டியலுக்கு நியமிக்கப்படும் உறுப்பினர்கள் தொடர்பான விபரங்களை கட்சியின் பொதுச்செயலாளர்களே தேர்தல் ஆணையாளருக்கு அறிவிக்கின்ற நிலையில் ஜனாதிபதியின் நடவடிக்கை தமக்கு நெருக்கமானவர்களை தேசியப்பட்டியல் மூலம் நியமிக்க வழிகோலிலுள்ளதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவர் என்ற வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கட்சியின் மத்திய குழுவிலிருந்து 25 அங்கத்தவர்களை பதவிநீக்கம் செய்துள்ளார். மத்திய குழுவிலிருந்து...
தேர்தல் வாக்களிப்பின் போது தனது வாக்குச் சீட்டை, சட்டவிரோதமான முறையில் புகைப்படம் எடுத்த நபர் ஒருவரைக் இன்று காலை (17) கைதுசெய்துள்ளதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர். வென்னப்புவ லுனவில பௌத்த கனிஷ்ட வித்தியாலய வாக்களிப்பு நிலையத்தில் வைத்து, லுனுவில பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயது இளைஞர் ஒருவரையே கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட நபர்...
ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான அநுர பிரியதர்ஷன யாப்பா மற்றும் சுசில் பிரேமஜயந்த ஆகியோரின் கட்சி உறுப்புரிமை தடை செய்யப்பட்டுள்ளது. ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தீர்மானத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
2018 ஆம் ஆண்டிற்குப் பின்னர் வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு எஸ்பெஸ்டஸ் (asbestos) கூரைத்தகடுகளை இறக்குமதி செய்வதை முழுமையாக நிறுத்துவதற்கு அமைச்சரவையுடன் ஆலோசனை செய்து முடிவு செய்யவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். நாட்டு மக்களின் சுகாதார ஆரோக்கிய நிலைமைகள் தொடர்பாகக் கவனத்திற் கொண்டு இந்தத் தீர்மானத்தை எடுக்கவுள்ளதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். ‘ஒத்துழைப்புடன் அபிவிருத்தியை நோக்கி’ என்ற...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனுப்பிய ஐந்து பக்க கடிதத்திற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று ஒரு பக்கத்தில் பதில் கடிதம் அனுப்பியுள்ளார். அதில் ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் ஆணைக்கு தான் மதிப்பளித்தது போல பொதுத் தேர்தலில் மைத்திரிபால சிறிசேன மக்கள் ஆணைக்கு மதிப்பளிக்க வேண்டும் என மஹிந்த ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார். மஹிந்த ராஜபக்ஷ...
எந்தவகையில் கடிதம் கிடைத்தாலும் கட்சிக்காரர்கள் தங்களது தீர்மானத்தை எடுத்து முடிந்துவிட்டதாக முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட வேட்பாளருமாகிய மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியை கூட்டமைப்பாக வலுப்படுத்தியவன் தான் என கடவத்த பகுதியில் இடம்பெற்ற கூட்டத்தில் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். குறித்த கடிதத்தில் உள்ள விடயங்களை ஊடகங்களில் பிரசுரிக்காதிருக்க நடவடிக்கை எடுக்குமாறு ஐக்கிய மக்கள்...
"வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்பேசும் மக்களின் தாயகமான வடக்கு, கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிகப்படியான ஆசனங்களைப் பெற்று மாபெரும் சாதனை படைக்கும்.'' - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் அக்கட்சியின் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். "எமது தமிழ் மக்கள் தன்மானத் தமிழர்கள். அவர்கள் சலுகைகளுக்கு...
இரண்டு தசாப்த காலமாக நான்கு ஜனாதிபதி தேர்தல்கள் மற்றும் நான்கு பொதுத் தேர்தல்களை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான கூட்டமைப்புகள் வெற்றியீட்டிருந்தன. எனினும் கடந்த ஜனவரி மாதம் 8ம் திகதி நடைபெற்ற உங்களது தலைமையிலான அரசாங்கம் கடந்த ஜனாதிபதி தேர்தலில் தோல்வியைத் தழுவி ஏழு மாதங்கள் கடந்துள்ள நிலையில் கட்சியின் தலைவர் என்ற ரீதியில் இந்த...
ஊழல்களில் ஈடுபடும் தனிநபர்களிடமிருந்து எமது நாட்டை காப்பாற்றவேண்டும் என்றால், நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் வெற்றிலை மற்றும் கை சின்னங்களைத் தவிர வேறெந்த விலங்குக்கு வேண்டுமென்றாலும் வாக்கயுங்கள் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரதுங்கா தெரிவித்துள்ளார். ஒரு தேசிய அரசாங்கத்தை உருவாக்குவதற்காகவே கடந்த ஜனவரி மாதம் 8ஆம் திகதியன்று, ஐ.தே.க, ஹெல உறுமய, ஸ்ரீ லங்கா சுதந்திரக்...
இன்றைய சூழ்நிலையில் சில அரசியல் கட்சிகள் பணத்துக்காக உறுப்பினர்களை கட்சியில் இணைத்து வேட்பாளர்களாக்கும் நிலையில் தமிழர் விடுதலை கூட்டணி சாதாரண சிவில் சமூகத்தவர்களையும் புத்தியீவிகளையும் வேட்பாளர்களாக நியமித்து தேர்தலில் போட்டியிடுகின்றது. மனோ கணேசன் பண பலம் படைத்தவர்களை கட்சியில் இணைத்து அரசியல் வங்குரோத்து நிலையை சீர் செய்வதற்காக மக்களின் எதிர் காலத்தை விலை பேச முடியாது...
Loading posts...
All posts loaded
No more posts