- Thursday
- January 16th, 2025
புதிய நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்களுக்கு மசாஜ் சேவை சேவை வழங்கப்பட உள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் சேவைகளில் ஒன்றாக மசாஜ் பார்லர் சேவை உள்ளடக்கப்பட்டுள்ளது. இதில் ஆயுர்வேத முறையிலான மசாஜ் வழங்கப்பட உள்ளது. ஆயுர்வேத திணைக்களத்தினால் நிர்வாகம் செய்யப்படும் ஹெலவெத புனருத என்னும் நிறுவனம் இந்த சேவையை வழங்க உள்ளது. தலை, கால் மற்றும்...
நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள உறுப்பினர்களுக்கு பல்வேறு சிறப்புரிமைகள் வழங்கப்படுகிறது. அவற்றில் சில... நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் மாதச் சம்பளம் 54 ஆயிரத்து 525 ரூபாவாகும். அமைச்சர் ஒருவரின் சம்பளம் 65 ஆயிரம் ரூபாவாகும். நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு கிடைக்கும் கொடுப்பனவுகள். அடிப்படைச் சம்பளம் – 54,525 போக்குவரத்து கொடுப்பனவு-10,000 உபசரிப்பு கொடுப்பனவு -1,000 செல்போன் கொடுப்பனவு...
ஐக்கிய தேசிய கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் கூட்டிணைவதால் மாத்திரம் தேசிய அரசாங்கம் ஆகிவிட முடியாது. தமிழ், முஸ்லிம் கட்சிகளுக்கு உரிய இடங்கள் வழங்கப்பட்டால்தான் இது தேசிய அல்லது தேசிய ஐக்கிய அரசாங்கமாக முடியும். இதேபோல் எப்பாடுபட்டாவது அமைச்சுப் பதவிகளை கைப்பற்றிக்கொள்வது என்பது தேசிய அரசாங்கத்தின் முன்னுரிமை பட்டியலில் முதலிடம் பிடிக்க முடியாது. இது தேசிய...
அண்மையில் குடிவரவு குடியகல்வு திணைக்களம் அறிமுகப்படுத்திய சர்வதேச தர அங்கீகாரம் மிக்க கடவுச்சீட்டுக்களை பெற்றுக்கொள்வதில் அதிக காலதாமதம் ஏற்பட்டுள்ளதால் விண்ணப்பதாரிகள் அல்லாத ஏனையோருக்கு திணைக்களத்தின் உள்வளாகத்திற்குள் செல்ல அனுமதி வழங்காதிருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் ஊடகபேச்சாளர் லக்ஷான் டி சொய்ஸா தெரிவித்துள்ளார் இது தொடர்பில் ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர்...
ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல் ஹூசைன், இலங்கை தொடர்பான விசாரணை அறிக்கையை கைளிப்பதற்காக விரைவில் கொழும்பு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 14ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஐ.நாவின் 30வது கூட்டத்தொடரில், இலங்கை தொடர்பான சர்வதேச விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது. இந்நிலையில், அதற்கு முன்னர் அதனை இலங்கை ஜனாதிபதியிடம் கைளிப்பதற்காக அவர் வருகை...
எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை அமர்வின் போது, இலங்கைக்கு ஆதரவளிக்கப்போவதாகவும் இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றங்கள் தொடர்பான விசாரணைக்கு உள்ளகப் பொறிமுறையொன்றை வலியுறுத்தவுள்ளதாகவும் அமெரிக்கா நேற்று புதன்கிழமை (26) அறிவித்தது. இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் போது, இரு தரப்பினராலும் மேற்கொள்ளப்பட்டதாகக்...
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகம் தொண்டமான் மற்றும் ஈ.பி.டி.பி.யின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா ,தமிழ்தேசியக்கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஆகியோர் தேசிய அரசாங்கத்துக்கு ஆதரவளிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே சுதந்திரக்கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் ஒரு பகுதியினர் ஆதரவினை தெரிவித்துள்ளனர். அதேவேளை ஜேவிபி எதிர்க்கட்சியாகவே செயற்படும் என கூறியுள்ளது.இருப்பினும் சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பு...
வடக்கில் பிரபாகரனின் சிலை அமைக்கப்பட வேண்டுமென்ற விஜயகலா மகேஸ்வரனின் கனவு இன்று நனவாகிக் கொண்டிருக்கின்றது. வடக்கிலிருந்து இன்று சிங்களவர்கள் வெளியேற்றப்படுகின்றனர் எனத் தெரிவித்த பியகம சுசில தேரர், தூங்கிக் கொண்டிருக்கும் சிங்கத்தை தட்டியெழுப்ப வேண்டாம் என நான் அரசுக்கு எச்சரிக்கை விடுக்கிறேன் என்றும் தெரிவித்தார். பிட்டகொட்டே பாகொட வீதியில் தூய்மையான ஹெல உறுமயவின் ஊடகவியலாளர் மாநாட்டில்...
சிறிலங்காவின் புதிய அமைச்சரவை 45 அமைச்சர்களைக் கொண்டதாக இருக்கும் என்று, ஐதேகவின் பிரதித் தலைவர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். தேசிய அரசாங்கத்தில், ஐதேகவுக்கும், சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கும் அமைச்சர் ஆசனங்களைப் பங்கீடு செய்வதில் குழப்பமான நிலை நீடித்து வருகிறது. இருதரப்பும் இன்னமும் இணக்கப்பாடு ஒன்றுக்கு வராத நிலையில், ஏற்கனவே அமைச்சரவை பதவியேற்பு இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டுள்ளது....
இலங்கையில் தயாரிக்கப்படும் கொக்கோ - கோலா (பெரரேஜஸ்) நிறுவனத்தின் சுற்றாடல் பாதுகாப்பு அனுமதிப் பத்திரத்தை தற்காலிகமாக ரத்து செய்யவுள்ளதாக மத்திய சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் லால் தர்மசிறி தெரிவித்தார். கொக்கோ - கோலா நிறுவனம் தனது உற்பத்திக்கான நீரை களனி கங்கையில் இருந்தே பெறுகின்றது. இந்நிலையில் களனி கங்கையில் எண்ணெய் கலந்திருப்பது அண்மைய...
அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்க செயலாளர் நிஸா பிஸ்வால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துள்ளார். நேற்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. மேலும் கடந்த தேர்தலை நியாயமானதும் மற்றும் சுதந்திரமானதுமான முறையில் நடத்தியமை குறித்து நிஸா பிஸ்வால் தனது பாராட்டுக்களை...
சம்பூர் மீள்குடியேற்றம் மற்றும் அம் மக்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக ஒரு மில்லியன் டொலர்களை மானியமாக வழங்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக நிஸா பிஸ்வால் குறிப்பிட்டுள்ளார். இலங்கை வந்துள்ள அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்க செயலாளர் நிஷா பிஸ்வால் இன்று காலை வௌிவிவாகர அமைச்சர் மங்கள சமரவீரவை சந்தித்தார். வௌிவிவகார அமைச்சில் நடைபெற்ற...
ஐக்கிய தேசிய முன்னணி மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஆகியன இணைந்து ஏற்படுத்தியுள்ள தேசிய அரசாங்கத்தின் அமைச்சரவை, இன்று செவ்வாய்க்கிழமை (25) பதவிப்பிரமாணம் செய்வதாக இருந்த போதிலும், தற்போது அது பிற்போடப்பட்டுள்ளது. இதற்கிணங்க, நாளை மறுதினம் வியாழக்கிழமையும் அதற்கடுத்த நாளான வெள்ளிக்கிழமையுமே புதிய அமைச்சரவை, பதவிப்பிரமாணம் செய்யும் என அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உலகில் இலங்கை தொடர்பில் காணப்படும் தவறான கருத்துக்களை களைய இலங்கை சார்பாக குரல் கொடுக்கப் போவதாக முன்னாள் பிரித்தானிய பிரதமர் டோனி பிளேயர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு உறுதியளித்துள்ளார். இலங்கைக்கு தனிப்பட்ட விஜயம் மேற்கொண்டுள்ள டோனி பிளேயர் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து மைத்திரிபால சிறிசேனவை சந்தித்தார். கடந்த பாராளுமன்றத்...
இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை செய்ய சர்வதேச சமூகத்திற்கு எந்தவொரு உரிமையும் இல்லை என, பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார். சர்வதேச சமூகம் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளமை நாட்டின் நீதிதுறையின் மீது நம்பிக்கை குறைவடைந்தமையினாலேயே என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்தியாவின் தி ஹிந்து ஊடகத்திற்கு வழங்கிய விஷேட செவ்வியிலேயே அவர்...
புதிய அரசாங்கத்தின் சில அமைச்சர்கள் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டுள்ளனர். இதன்படி, ஐக்கிய தேசியக் கட்சியின் மங்கள சமரவீர வௌிவிவகார அமைச்சராகவும் நீதி அமைச்சராக விஜயதாஸ ராஜபக்ஷவும் டி.எம்.சுவாமிநாதன் மீள்குடியேற்ற அமைச்சராகவும் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
சமரச தேசிய அரசாங்கமாக புதிய பாராளுமன்றில் ஒன்றிணைந்து செயற்படவென ஐக்கிய தேசிய கட்சிக்கும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்ற பின்னர் , அதே நிகழ்வில் ஐதேக பொதுச் செயலாளர் கபீர் ஹாசிம் மற்றும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பதில் பொதுச் செயலாளர்...
தமது பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோரி, அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 49 தமிழ்க் கைதிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பொதுத் தேர்தல் முடிவுகள் வெளியாகியதைத் தொடர்ந்து, அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ்க் கைதிகள் வதைக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து கைதிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்றைய தினம் 49 தமிழ்க் கைதிகளும் சிறிய அறையொன்றுக்கு...
சுதந்திர இலங்கையின் 22 ஆவது பிரதமராக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று (21) சத்தியப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இன்று (21) காலை 10 மணிக்கு பிறக்கும் சுபவேளையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் ரணில் விக்கிரமசிங்க புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்க சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளார். இலங்கையின் வரலாற்றில்...
ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து தேசிய அரசாங்கம் ஒன்றை அமைக்க ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு இணக்கம் தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து செயற்பட 6 பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இக்குழுவிற்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமை வகிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஐதேகவுடன் இணைந்து சமரச அரசாங்கம் ஒன்றை...
Loading posts...
All posts loaded
No more posts