அமைச்சர்கள் தொகை அதிகரிப்புக்கு எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் எதிர்ப்பு! – இந்தியாவை உதாரணம் காட்டி கண்டனம்

இரண்டு பிரதான அரசியல் கட்சிகள் இணைந்து தேசிய அரசாங்கம் அமைத்திருப்பது தற்காலத்திற்கு அவசியம் என்றும், இது நாட்டிற்கு நன்மை பயக்கும் என்றும் புதிய எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்திருக்கிறார். இலங்கை நாடாளுமன்ற எதிர்க்கட்சித்தலைவராக நியமிக்கப்பட்ட பிறகு முதல்முறையாக நாடாளுமன்றத்தில் உரையாற்றிய சம்பந்தன், இலங்கை அரசை ஆதரிப்பதற்கு நியாயமான காரணங்கள் இருக்கும் அனைத்து விவகாரங்களிலும் தாம் அரசாங்கத்தை...

சிங்கள எதிர்க்கட்சி தலைவர் செய்வதை சிங்கள மக்களுக்கு செய்வேன் – சம்பந்தன்

ஒரு சிங்கள எதிர்க்கட்சித் தலைவர் சிங்கள மக்களுக்கு என்ன செய்வாரோ அவையனைத்தையும் நான் செய்வேன் என்று புதிய நாடாளுமன்றத்துக்கு எதிர்க்கட்சித் தலைவராக நேற்று வியாழக்கிழமை (03) தெரிவு செய்யப்பட்ட இரா. சம்பந்தன், தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன், எதிர்க்கட்சி தலைவராக நியமிக்கப்படுவதாக நாடாளுமன்றம் நேற்று வியாழக்கிழமை கூடியபோது...
Ad Widget

சந்திரிக்கா – மோடி சந்திப்பு

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க நேற்று வியாழக்கிழமை புதுடெல்லியில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். புதுடெல்லியில் நடைபெறும் அனைத்துலக இந்து - பௌத்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்தியா சென்றுள்ள சந்திரிக்கா மோடியை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இந்த மாநாடு, நேற்று ஆரம்பமாகி எதிர்வரும் 5ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

“அய்ஸே உட்காரு! குரங்கு போல் நடக்காதே” ரணில் ஆவேசம்

புதிய பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக ஆர். சம்பந்தன் நியமிக்கப்பட்டதற்கு எதிராக கடும் வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றன. இதன்போது குமார வெல்கமவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்குமாறு கோரி 56 உறுப்பினர்கள் கையொப்பமிட்ட கடிதம் ஒன்று கையளிக்கப்பட்டதாக விமல் வீரவன்ச தெரிவித்தார். அவ்வாறிருக்கும் போது இந்த நியமனம் செல்லுபடியாகுமா என்றும் அவர் கேள்வியெழுப்பி இருந்தார். இதற்கு பதிலளித்த சபாநாயகர்...

சம்பந்தனுக்கு ஜனாதிபதி வாழ்த்து

8ஆவது நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் தலைவருமான இரா.சம்பந்தனுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது வாழ்த்துக்களை தெரிவித்துகொண்டுள்ளார்.

இலங்கை அரசியலில் புதிய திருப்பம் – சம்பந்தன் எதிர்க்கட்சி தலைவரானார்!

8 வது பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவராக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். 01ம் திகதி புதிய பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வுகள் இடம்பெற்றிருந்த நிலையில் எதிர்க்கட்சி தலைவருக்கான வெற்றிடம் காணப்பட்டது. இந்த நிலையில் இன்று பாராளுமன்றம் மீண்டும் கூடிய போது சபாநாயகர் கரு ஜயசூரிய எதிர்க்கட்சி தலைவராக இரா. சம்பந்தனை அறிவித்தார்....

எனது பயணம் மெதுவானது! 30 வருடம் நீடித்த யுத்தம் மஹிந்தவாலேயே முடிந்தது!!

"நாட்டுக்காக அனைவரையும் ஒன்றிணைத்துக்கொண்டு இடம்பெறவுள்ள எனது பயணம் வேகமான பயணம் அல்ல. இது மெதுவான பயணம் என்பதால் மீள்திருப்பம் இல்லை." - இவ்வாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆட்சியை நாட்டில் அமைப்பதற்கான முதற்கட்ட நடவடிக்கையாக கட்சியை முழுமையாக மறுசீரமைக்கு உட்படுத்தவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 64ஆவது மாநாடு...

ஜனாதிபதியின் 64ஆவது பிறந்ததினம் இன்று!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் 64ஆவது பிறந்த தினம் இன்றாகும். ஜனாதிபதியின் பிறந்த தினத்தை முன்னிட்டு பொலன்னறுவையில் நேற்றும் இன்றும் பல்வேறு சமய நிகழ்வுகள் நடந்தவண்ணமுள்ளன. ஜனாதிபதிக்கு ஆசி வேண்டி நேற்று இரவு (02) சோமாவதி தூபியின் முன்னால் பிரித் ஓதும் நிகழ்வு இடம்பெற்றது. கப்றுக் பூஜை மற்றும் கிரி ஆஹார பூஜை என்பன இன்றுகாலை நடைபெறுகின்றன....

நாளை முதல் விஹாரமகா தேவி பூங்காவில் இலவச WiFi

கொழும்பு விஹாரமகா தேவி பூங்காவில் இலவச WiFi வசதியை பெற்றுக்கொடுக்க கொழும்பு மாநகர சபை நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கமைய நாளை முற்பகல் விஹாரமகா தேவி பூங்காவின் வை-பை வலயம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக மாநகர சபை விடுத்துள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்தல சர்வதேச விமான நிலையத்தில் பதற்றம்

மத்தல சர்வதேச விமான நிலையத்தில் தற்போது பதற்றமான நிலைமையொன்று காணப்படுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவித்தன. மத்தல ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தை நெற்களஞ்சியசாலையாக மாற்றுவது தொடர்பில் அரசாங்கம் மேற்கொண்ட தீர்மானத்துக்கு எதிராக, விமான நிலைய சேவையாளர்கள் மற்றும் பிரதேச மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர். நெல் மூட்டைகளுடன் முதலாவது லொறி, மத்தல விமான நிலையத்தை...

கன்னியமர்வின் சில சுவாரசியங்கள்…

நாடாளுமன்றத்தின் கன்னியமர்வு நேற்று இடம்பெற்ற நிலையில் அதில் சில சுவாரசியமான மறக்கு முடியாத சம்பவங்களும் இடம்பெற்றன. அவற்றில் சில... முதலாவது ஒழுங்குப் பிரச்சினை 8ஆவது நாடாளுமன்றத்தின் கன்னியமர்வின் போதே முதலாவது ஒழுங்குப்பிரச்சினை எழுப்பப்பட்டது. பிவித்துரு ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்பன்பில், உரையாற்றிக் கொண்டிருந்த போதே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஒழுங்குப் பிரச்சினையை எழுப்பினர்....

எம்.பிக்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி மேலும் அதிகரிப்பு!

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக ஒதுக்கப்படும் பன்முகப்படுத்தப்பட்ட நிதியை மேலும் அதிகரிக்கவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று சபையில் தெரிவித்தார். இருப்பினும், இந்த பன்முகப்படுத்தப்பட்ட நிதி எவ்வளவு தொகையால் அதிகரிக்கப்படவுள்ளது என்பதைக் குறிப்பிடவில்லை. நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு வருடாந்தம் 50 இலட்சம் ரூபா பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கப்பட்டது. கடந்த ஜனவரி 8ஆம் திகதி ஆட்சிக்கு வந்த அரசு சமர்ப்பித்த...

20வது திருத்த சட்டத்தை நிறைவேற்றிக்கொள்ள ஆதரவு கோருகின்றார் ஜனாதிபதி

அரச சொத்துக்களை முறைகேடாக பயன்படுத்துவோர் மீது அரசியல் கட்சி தராதரம் பாராது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 08வது பாராளுமன்றத்தின் இரண்டாவது அமர்வு இன்று பிற்பகல் 03 மணிக்கு ஆரம்பமானபோது விஷேட உரையாற்றிய ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், நாட்டின் தேசிய பாதுகாப்பு மற்றும் ஐக்கியம்...

த.தே. கூ.வின் பாராளுமன்றக்குழு நிர்வாகம் தெரிவு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுக்களின் தலைவராக இரா. சம்பந்தன் தெரிவுசெய்யப்ட்டுள்ளதோடு கூட்டமைப்பின் கொறடாவாக த. சித்தார்த்தன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். குழுக்களின் செயலாளராக சிறிதரனும் பேச்சாளராக எம்.ஏ. சுமந்திரனும் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். எதிர்க்கட்சி தலைவர் பதவி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா . சம்பந்தனுக்கு வழங்கப்படவேண்டுமென கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன்...

பிரதி சபாநாயகர் திலங்க, குழுக்களின் பிரதித் தலைவர் செல்வம்!

8வது பாராளுமன்றின் பிரதி சபாநாயகராக கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால தெரிவு செய்யப்பட்டுள்ளார். அத்துடன் குழுக்களின் பிரதித் தலைவராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்களநாதன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.கடந்த பாராளுமன்றில் ஈபிடிபி கட்சி எம்பியான சந்திரகுமாருக்கு இந்த பதவி வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது திலங்க சுமதிபாலவின் பெயரை ரவுப் ஹக்கீமும் செல்வம்...

8 ஆவது பாராளுமன்றத்தின் சபாநாயகராக கரு ஜயசூரிய அவர்கள் தெரிவு!

8 ஆவது பாராளுமன்றத்தின் சபாநாயகராக கரு ஜயசூரிய அவர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். பாராளுமன்றத்தின் புதிய சபாநாயகராக கரு ஜயசூரிய தெரிவு செய்யப்பட்டுள்ளார் கரு ஜயசூரியவின் பெயரை பிரதமர் ரணில் விக்ரமசிங்க முன்மொழிந்ததுடன், அவரது பெயரை நிமல் சிறிபால டி சில்வா வழிமொழிந்துள்ளார். இதற்கமைய பிரதமர் மற்றும் நிமல் சிறிபால டி சில்வா ஆகியோர் புதிய சபாநாயகரை பாராளுமன்ற...

சர்வதேச விசாரணை நடைபெற்றுள்ளது: விரைவில் அறிக்கை

இலங்கை மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான சர்வதேச விசாரணை நடைபெற்றிருப்பதாகவும், அந்த அறிக்கை சில நாட்களில் வெளிவரும் என்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தர் தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்டக் குழுவான இணைப்புக் குழுவை உடனடியாகக் கூட்ட வேண்டும் என்று ஞாயிறன்று கொழும்பில் கூடிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் மூன்று கட்சிகள் (டெலோ,...

எதிர்க்கட்சித் தலைவர் தெரிவில் தலையிடேன் – ஜனாதிபதி

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவரைத் தெரிந்தெடுக்கும் விடயத்தில் தான் தலையிடப் போவதில்லை எனவும் அது நாடாளுமன்றத்துக்கு உரித்தான விடயமெனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுடனான சந்திப்பின் போதே, ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

எதிர்க்கட்சி தலைவர் பதவியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு தரமுடியாது – துமிந்த

எதிர்க்கட்சித் தலைவர் பதவியை தமக்கு தருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுத்துள்ள கோரிக்கையை நிராகரிப்பதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். பெரும்பான்மை நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்ட எதிர்த்தரப்பு எந்த கட்சி என்பது தொடர்பில் சபாநாயகர் தீர்மானித்து எதிர்க்கட்சி தலைவர் யார் என்பது தொடர்பில் அறிவிப்பார் எனவும் அதுதொடர்பிலான பூரணமான...

தமிழர்கள் தனிநாடு கேட்கவில்லை; தன்மானத்துடன் வாழும் உரிமையையே கேட்கின்றனர்!!

தமிழ் மக்களுக்கு அதிகாரப் பரவலாக்கலைத் தடுக்கமுனையும் இனவாதிகளின் முயற்சிகளுக்கு அரசு முற்றுப்புள்ளி வைக்கும் நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ளவேண்டும் என்று தெரிவித்துள்ளார் ஜனநாயக மக்கள் முன்னணியின் உப செயலாளரும் மேல்மாகாணசபை உறுப்பினருமான சண்.குகவரதன். தேர்தலில் பின்னடைவு கண்ட தமிழருக்கு எதிரான இனவாதிகள், நாட்டில் இரத்த ஆறு ஓடும் எனக் கடுமையான தொனியில் இனவாதத்தை விஷமாக வெளியிடுகின்றனர். இதற்கு...
Loading posts...

All posts loaded

No more posts