- Thursday
- January 16th, 2025
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அவருக்கு நெருக்கமான பெண் மருத்துவர் ஒருவர் அண்மையில் தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார். ஜனாதிபதி பதவிக்கு தெரிவாகியுள்ளதை முன்னிட்டு வாழ்த்துக்களை தெரிவிப்பதற்காக அந்த மருத்துவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார். சிறிது நேரம் ஜனாதிபதியுடன் உரையாடிய பின்னர், ஜனாதிபதியின் மனைவியிடம் பேச மருத்துவர் விருப்பம் தெரிவித்துள்ளார். அதற்கு பதிலளித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தனது...
தேசிய அரசாங்கத்தின் பிரதியமைச்சர்களாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் நேற்று புதன்கிழமை (09) சத்தியப்பிரமாணம் செய்துகொண்ட இரு பிரதியமைச்சர்கள் தமது பதவிகளை மாற்றிக்கொண்டுள்ளனர். சுற்றுலாத்துறை அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ மத அலுவல்கள் பிரதியமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துகொண்ட நிமல் லன்ஸாவும் உள்நாட்டலுவல்கள் பிரதியமைச்சராக பதவியேற்றுக்கொண்ட அருந்திக்க பெர்னாண்டோவும் தங்களுடய அமைச்சுப் பதவிகளை மாற்றிக்கொண்டுள்ளனர். இதற்கமைவான, உள்நாட்டலுவல்கள்...
தேசிய அரசாங்கத்தின் பிரதி மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் சிலர் சற்றுமுன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிபிரமாணம் செய்து கொண்டுள்ளனர். அதன் முழு விபரம் வருமாறு, இராஜாங்க அமைச்சர்கள் ஏ.எச்.எம்.பௌசி - தேசிய ஒருமைப்பாட்டு டிலான் பெரேரா - பெருந்தெருக்கள் ரி.பி.ஏக்கநாயக்க - காணி பிரியங்கர ஜயரட்ன - சட்டம் ஒழுங்கு லக்ஷமன் யாப்பா -...
அமைச்சரவை அந்தஸ்துள்ள 44 அமைச்சுகளுக்கான செயலாளர்கள், நேற்று மாலை நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி செயலாளர் பீ.பி.அபேகோன் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது. இதில் சில அமைச்சுக்கள் குறித்த விபரம் வருமாறு, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத விவகார அமைச்சு - வீ.சிவஞானஜோதி நிதி அமைச்சு - ஆர்.எம்.எச்.சமரதுங்க பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு - எஸ்.எம்.கோதாபய ஜெயரத்ன...
காட்டு யானை தாக்கியதில் அததெரணவின் பிரதேச செய்தியாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார். பிரியன்த ரத்னாயக்க என்ற பிரதேச ஊடகவியலாளரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மின்னேரியா பகுதியில் காட்டு யானைகளினால் இடம்பெறும் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் செய்தி சேகரிக்க சென்ற வேளையே இவர் உயிரிழந்துள்ளார்.
மேல் மற்றும் வடமேல் மாகாண சபைகளுக்கான புதிய முதலமைச்சர்கள் இருவர் நேற்று (07) காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், மேல் மாகாணசபை முதலமைச்சாராக இசுரு தேவப்பிரிய நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தமக்கான நியமனக் கடிதத்தினை ஜனாதிபதியின் முன்னிலையில் மேல்மாகாண ஆளுனர் கே.சி.லோகேஸ்வரன் அவர்களிடமிருந்து பெற்றுக்கொண்டார். அதேவேளை வடமேல் மாகாண...
முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே தம்பி கோத்தபய ராஜபக்சே. இவர் முந்தைய ராஜபக்சே அரசில் ராணுவ மந்திரியாக இருந்தார். இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் நடந்த அதிபர் தேர்தலில் ராஜபக்சே படுதோல்வி அடைந்தார். அதை தொடர்ந்து ராஜபக்சே மற்றும் அவரது குடும்பத்தினர் மீதும் ஊழல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அப்போது மிதக்கும் ஆயுத கிடங்கை...
குருநாகல் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவராக முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்படவிருப்பதாக தெரியவருகின்றது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜ் ரவிராஜ், சண்டேலீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க, ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட, றகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜூதீன் படுகொலைகள் மற்றும் காணாமல் போனவர்கள் பற்றி இதுவரையிலும் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் முன்னேற்றம் மற்றும் சட்டரீதியாக எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பில் உடனடியாக அறிவிக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அதிகாரிகளுக்கு கட்டளையிட்டுள்ளார்.
புதிய அரசாங்கத்தின் பிரதியமைச்சர்கள் மற்றும் ராஜாங்க அமைச்சர்களின் பதவிப்பிரமான நிகழ்வுகள் பெரும்பாலும் நாளை இடம்பெறலாம் என அரசாங்க தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன. இதன்படி, ராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்கள் 45 பேர் பதவிகளை ஏற்றுக்கொள்ளவுள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் மேற்கொண்டது. அன்றைய தினம் சத்தியப்பிரமாணம் மேற்கொண்ட 42...
எதிர்வரும் வாரங்களில் எரிபொருள் விலை குறைவடையும் என்று தெரிவிக்கப்படுகிறது. உலக சந்தையில் மசகெண்ணெய் விலை குறைவடைந்துள்ளது. இதன் அடிப்படையில் இலங்கையிலும் எரிபொருள் விலை குறைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கனியவள மற்றும் பெற்றோலிய வளத்துறை அமைச்சர் சந்திமவீரக்கொடி இதனைத் தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவில் காணாமல்போகச் செய்யப்பட்டவர்கள் தொடர்பான ஆணைக்குழுக்களின் விசாரணைகள், நீதிமன்ற விசாரணைகள் தொடர்பாக, மனித உரிமைகளுக்கும் அபிவிருத்திக்குமான நிலையம் அறிக்கை ஒன்றை தயாரித்து, ஐ.நாவுக்கும் இந்தியா உள்ளிட்ட முக்கியமான நாடுகளின் தூதரக அதிகாரிகளுக்கும் கையளித்துள்ளது. மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்புகூறும் விடயத்தில் ஐ.நாவின் விசாரணை அறிக்கை வெளியிடப்படவுள்ள நிலையிலும், அடுத்து நடத்தப்பட வேண்டியது உள்நாட்டு விசாரணையா அல்லது...
எதிர்க்கட்சித் தலைவர் பதவி, இரா.சம்பந்தனுக்கு வழங்கப்பட்டமை சரியானதே என்றாலும், சம்பந்தனின் செயற்பாட்டிற்கு அமைய அவரை எதிர்க்கட்சி தலைவர் பதவியிலிருந்து நீக்குவதற்கு வழியுள்ளதாகவும் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார். குறிப்பாக போர்க்குற்றம் சுமத்தி இராணுவத்தினரை தண்டிக்க மற்றும் தனி அரசை உருவாக்க முயற்சித்தால், தேசிய நலன்...
சீனா உதவியிருக்காவிடின் 30 வருடங்களாக நிலவிய யுத்தத்தை நிறைவுக்கு கொண்டுவந்திருக்க முடியாது என்று பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார். சீனாவின் பிங்கூவா செய்திச்சேவைக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அதேபோல, சீனாவுடன் இருக்கின்ற தொடர்பை தொடர்ந்தும் பேணவேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். அதுமட்டுமன்றி சீனாவினால் எம்நாட்டுக்கு செய்ததை ஒருபோது மறக்கமுடியாது என்றும் அவர்...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பயன்படுத்திய இல்லம் முன்னாள் ஜனாதிபதியான மஹிந்த ராஜபக்ஷவுக்கான உத்தியோகபூர்வ இல்லமாக வழங்கப்பட்டுள்ளது. அந்த வீட்டில் திருத்த வேலைகள் சில இருப்பதனால் மஹிந்த ராஜபக்ஷ இன்னமும் அங்கு குடியேறவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு விஜயராம மாவத்தை உள்ள வீடு ஒன்றே முன்னாள் ஜனாதிபதியான மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வமாக கடந்த செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டுள்ளது என்பது...
தேசிய அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் நேற்று வெள்ளிக்கிழமை சத்தியப்பிரமாணம் செய்துக்கொண்டது. இந்த வைபவம் நேற்று வெள்ளிக்கிழமை பகல் 12.11க்கு ஆரம்பமாகி 13.42க்கு நிறைவுக்கு வந்தது. இந்த பதவியேற்பு வைபவத்தில் இடம்பெற்ற சில சுவாரசியமான சம்பவங்கள்... வருகை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் அவரது பாரியாரும் 12.10க்கு வருகைதந்தனர்....
அரசியல்வாதிகள் மற்றும் அரச ஊழியர்கள் ஊழல் மோசடி செய்து மக்கள் மத்தியில் மறைந்திருக்க முடியாது என்பதால் அனைவரும் லஞ்ச, ஊழலில் ஈடுபடாது பார்த்துக் கொள்ள வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். புதிய அமைச்சர்கள் நேற்று பதவியேற்ற நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். பிரதமருடன் நடத்திய கலந்துரையாடலின் பயனாக அரச கூட்டுத்தாபனம்,...
19ம் அரசியலமைப்பு திருத்தத்திற்கு அமைவாக 30 அமைச்சர்களுக்கு மேல் நியமிப்பதாயின் பாராளுமன்ற அங்கீகாரம் பெறப்படவேண்டும். இந்நிலையில் இதுதொடர்பில் 3ம்திகதி பாராளுமன்றில் கொண்டுவரப்பட்ட பிரேரணையின் மீதான வாக்களிப்பில் தமிழ் அரசு கட்சியின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொள்ளாமல் புறக்கணித்தனர். முன்னதாக இது பற்றி எதிர்கட்சித்தலைவர் இரா.சம்பந்தன் உரையாற்றும்போது ”அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது என்பது நல்ல அரசாங்கத்தை அளிப்பது என்கிற கொள்கையோடு...
தேசிய அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை சற்று முன்னர் ஜனாதிபதி செயலகத்தில் பதவியேற்றுக் கொண்டது. அதன்படி, அமைச்சரவையில் 48 பேர் அடங்குகின்றனர். அமைச்சரவை முழு விபரம் வருமாறு, 01.ரணில் விக்கிரமசிங்க – தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சர் 02.ஜோன் அமரதுங்க - சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ சமய அலுவல்கள் அமைச்சர் 03.காமினி ஜயவிக்ரம...
தேசிய அரசாங்கத்தின் அமைச்சரவை இன்று பதவியேற்கின்றது.இதனிடையே, தேசிய அரசாங்கத்தின் 48 அமைச்சரவை அமைச்சர்கள் 45 பிரதி மற்றும் ராஜாங்க அமைச்சர்களை தெரிவு செய்வதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் நேற்று முன்வைக்கப்பட்ட யோசனை 127 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. யோசனைக்கு ஆதரவாக 143 வாக்குகளும், எதிராக 16 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன. யோசனைக்கு ஜே.வி.பி, தேசிய சுதந்திர முன்னணி,...
Loading posts...
All posts loaded
No more posts