- Friday
- January 17th, 2025
வாகனங்களை மீள் மின்னேற்றம் செய்வதற்கு அவசியமான உபகரணங்கள் மற்றும் மின்னேற்றல் கட்டமைப்பை அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் ஸ்தாபிக்கத் திட்டமிட்டுள்ளதாக கனியவள மற்றும் எரிவாயுத்துறை அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்தார். மின் பாவனையை மாத்திரம் கொண்ட வாகனங்களுக்கு தற்போது அதிக கேள்வி நிலவுவதால் இந்த திட்டம் அமுல்படுத்தவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார். மின்னை மீள் நிரப்பும்...
இலங்கை முழுவதும் சுமார் 2,000 பாடசாலைகள் சுத்தமான குடிநீர் இல்லாத நிலையில் உள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம், நேற்று திங்கட்கிழமை(14) தெரிவித்துள்ளார். அத்துடன், எந்தவிதமான மலசலகூட வசதிகள் இன்றி சுமார் 500 பாடசாலைகள் உள்ளதுடன், ஒரு மலசலகூடத்துடன் மாத்திரம் 2,000 பாடசாலைகள் உள்ளதாகவும் அவர் கூறினார். கணினி, ஆய்வுக்கூடம், நூலகம் இல்லதாக நிலையில்...
கடந்த காலங்களில் வழங்கப்பட்ட நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளையும் அனுபவங்களையும் 'யு டேர்ண்'களையும் வைத்து, தம்மை எடைபோட வேண்டாமென, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் மங்கள சமவீர கோரிக்கை விடுத்துள்ளார். ஜெனீவாவில் நேற்று ஆரம்பமான, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 30ஆவது அமர்வில் உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இவ்வாண்டுமார்ச் மாதத்தில் இடம்பெற்ற 28ஆவது மனித...
புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டு விடுதலை செய்யப்பட்ட முன்னாள் விடுதலைப் புலி போரளிகள் மீண்டும் புலனாய்வுத்துறையினரால் விசாரணைக்காக அழைக்கப்படுவது விசனத்தை ஏற்படுத்துவதாக நாடாளுமன்ற உறுப்பினரும், நாடாளுமன்ற குழுக்களின் பிரதி அவைத்தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், யுத்தத்தின் பின் ஸ்ரீலங்கா அரசிடம் சரணடைந்த மற்றும் இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்ட முன்னாள் தமிழீழ...
பாலியல் ஊக்கி வில்லைகள் இலங்கையில் அதிகளவில் விற்பனையாவதாக தேசிய அபாயகர மருந்துகள் கட்டுப்பாட்டுச் சபை தெரிவிக்கின்றது. வருடாந்தம் 20 மில்லியனுக்கும் அதிகமான வில்லைகள் இங்கு விற்பனையாவதாக தெரிவிக்கப்படுகின்றது. மருத்துவ ஆலோசனையின்றி , பெரசிடமோல் விற்பனை எண்ணிக்கைக்கு இணையாக இவை விற்பனையாவதாகவும் அச்சபையின் தலைவர் தெரிவிக்கின்றார். நிர்ணயிக்கப்பட்டதை விட அதிகமாக இம்மாத்திரை உள்ளெடுக்கும் போது மரணம் சம்பவிக்கும்...
நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறும் விடயத்தில் ஜெனிவாவில் இந்தியாவின் முழுமையான ஆதரவைப் பெற்றுக்கொள்வதற்காகவும், போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் உள்ளகப் பொறிமுறைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை இணங்க வைப்பதற்காகவும் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று திங்கட்கிழமை இந்தியா பயணமாகவுள்ளார். இன்று இந்தியாவின் தலைநகர் டில்லிக்குப் பயணமாகும் பிரதமர்...
கூட்டமைப்புக்குள் எந்தப் பிரச்சினைகளும் கிடையாது. சில கருத்து முரண்பாடுகள் அவ்வப்போது ஏற்படலாம். அதைப் பெரிதுபடுத்துவதில் ஒரு சில ஆங்கில, சிங்கள ஊடகங்கள் முனைப்பாக உள்ளன எனத் தெரிவித்துள்ளார் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன். தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் முரண்பாடுகள் அதிகரித்து வருவதாக வெளியாகும் செய்திகள் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள அவர்- தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஓர் ஜனநாயகக்...
இலங்கையில் அரச படைகளினால் திட்டமிட்டுக் கட்டவிழ்த்துவிடப்பட்ட போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு சர்வதேச சமூகத்தின் ஊடாக நீதியைப் பெற்றுக்கொடுக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராகிய நாம் அயராது பாடுபடுவோம்.'' - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். "தமிழர் நீதிக்கான...
எதிர்க்கட்சித் தலைவராக உள்ள சம்பந்தனை நீக்கிவிட்டு குமாரவெல்கமவை எதிர்க்கட்சித் தலைவராக நியமித்தே தீருவோம். அதில் விட்டுக் கொடுப்பிற்கு இடமில்லை. நாம் விட்டுக்கொடுக்கவும்மாட்டோம் என்று பாராளுமன்ற உறுப்பினர்களான தினேஷ் குணவர்த்தன மற்றும் விமல் வீரவன்ச ஆகியோர் தெரிவித்தனர். எதிர்க்கட்சித் தலைவர் விவகாரம் தொடர்பில் சபாநாயகரை சந்தித்து பேச்சு நடத்தியமை தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே தினேஷ் குணவர்த்தனவும் விமல்...
ஐ.நா மனித உரிமைப் பேரவையினால் இலங்கை தொடர்பான அறிக்கை உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்ட பின்னரே அடுத்த கட்ட நகர்வு குறித்து முடிவு செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன். தமிழரக்கட்சியின் மத்திய குழுக் கூட்டம் நேற்றுக் கொழும்பில் இடம்பெற்றது. இந்தக் கூட்டத்தில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை கூட்டத்தொடர் எதிர்வரும்...
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 30ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமவீர தலைமையிலான உயர்மட்டக் குழுவினர் இன்று சனிக்கிழமை அதிகாலை ஜெனிவா பயணமாகியுள்ளனர். ஜெனிவா சென்றுள்ள வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, நாளைமறுதினம் திங்கட்கிழமை உரையாற்றவுள்ளதுடன், ஐ,நா. மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் - ஹுசேனை சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்....
"இறுதிக் கட்டப் போரின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சர்வதேச விசாரணைக்கு இடமில்லை'' என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்த்தன தெரிவித்தார். ஐக்கிய அமெரிக்காவும் இந்த நிலைப்பாடு தொடர்பில் நம்பிக்கை தெரிவித்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். நாட்டின் தேசிய பாதுகாப்புத் தொடர்பில் புதிய அரசு கூடிய...
இராணுவ வீரர்களின் குருதியில் ஐக்கியப்படுத்தப்பட்ட நாட்டை பிளவுபடுத்த எவருக்கும் இடமளிக்கப்பட மாட்டாதென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். இராணுவ வீரர்கள் பாரிய அர்ப்பணிப்பு, அறிவு, அனுபவம், தெளிவு போன்றவற்றை அன்று வழங்கியிருக்காவிட்டால் நாடு இரண்டாக பிளவுபட்டிருக்கும் என அவர் கூறினார். அந்த பாரிய அர்ப்பணிப்பை மறப்பதற்கு அரசாங்கம் ஒருபோதும் தயாரில்லை என ஜனாதிபதி குறிப்பிட்டார். நமக்காக...
பல வருட காலமாக வழக்கு எதுவும் இன்றி சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யுமாறு கபே மற்றும் இலங்கை மனித உரிமை கேந்திரம் ஆகியன கோரிக்கை விடுத்துள்ளன. சட்டமா அதிபர், ஜனாதிபதி உள்ளிட்ட அனைத்து அரசியல் தலைவர்களும் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கபே மற்றும் இலங்கை மனித...
எதிர்கட்சித் தலைவராக இரா.சம்பந்தனை ஏற்றுக்கொள்ள முடியாதென்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் 55 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் கடிதம் ஒன்றைச் சமர்ப்பித்துள்ளனர். அந்த பதவிக்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவை நியமிக்க வேண்டுமென்றும் அவர்கள் கோரியுள்ளனர். இந்தக் கடிதத்தின் பிரதியொன்றை சபாநாயகர் கரு ஜெயசூரியவுக்கும் அனுப்பி வைத்துள்ளதாக...
சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் உறவுகளை பார்வையிடச் செல்லும் பெண்களிடம் சிறை அதிகாரிகளினால் பாலியல் இலஞ்சம் கேட்கப்படுவதாக கைதிகளின் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி நேற்று வெலிக்கடை சிறைச்சாலைக்கு முன்பாக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட சிறைக்கைதியொருவரின் மனைவி இந்த தகவலை வெளியிட்டுள்ளார். தான் தனது கணவரைப் பார்வையிடச் செல்லும்...
மினுவாங்கொட, யாகொடமுல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த நால்வர் உயிரிழந்தனர். மரண வீடு ஒன்றுக்குச் சென்று கொண்டிருந்த போதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. பஸ் ஒன்றை இவர்கள் பயணித்த டிபென்டர் முந்திச் செல்ல முற்பட்ட வேளை, டிபென்டர் மீது இரு பஸ்கள் மோதியதாகவும் இதில் டிபென்டர் கடுமையான சேதத்திற்கு உள்ளானதாகவும்...
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி இல்லாதொழிக்கப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். புதிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நேற்று (10) ஆரம்பமான செயலமர்வின் ஆரம்ப நிகழ்வில் உரையாற்றிய போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார். பிரதமர் இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், மக்களுக்கான சேவையை அலட்சியம் செய்வோருக்கு பன்முகப்படுத்தப்பட்ட நிதி அவசியமில்லை என குறிப்பிட்ட பிரதமர் தமது பிரதேசத்தில்...
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பல்லாயிரக் கணக்கான சிறுவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டிய பொறுப்பு எனக்கு புதிய அமைச்சின் மூலம் வழங்கப்பட்டுள்ளது.எனவே இந்தப்பணியினை உரிய வகையில் நான் மேற்கொள்வதுடன் தேசிய ரீதியிலும் செயற்பாடுகளை முன்னெடுப்பேன் என்று சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார். இராஜாங்க அமைச்சராக அவர் செய்தியாளர்களிடம் உரையாற்றுகையிலேயே இவ்வாறு கூறியுள்ளார். அவர்...
வாரியபொல பஸ்தரிப்பிடத்தில் யுவதி ஒருவர் இளைஞன் ஒருவனை சராமாரியாக தாக்கும் வீடியோ வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு பலராலும் பேசப்பட்டது. இந்த சம்பவம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இடம்பெற்றது. இந்த சம்பவத்துடன் தொடர்புபட்ட இளைஞனுக்கு 6 மாத கடூழிய சிறைத்தண்டனையும் 50 ஆயிரம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டது. அபராத பணத்தை குறித்த பெண்ணுக்கு செலுத்துமாறும் தீர்ப்பளிக்கப்பட்டது....
Loading posts...
All posts loaded
No more posts