- Friday
- January 17th, 2025
"போர்க் குற்றங்கள், மனித உரிமைகள் மீறல் தொடர்பில் விசாரணை நடத்துவதாக ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலுக்கு இலங்கை உறுதியளித்தது. இதற்கான உள்ளூர் பொறிமுறையை உருவாக்க புதிய அரசியல் சட்டங்கள் அவசியம். இதனால் அச்சட்டங்களை உருவாக்குவது தொடர்பில் சகல தரப்புக்களுடனும் அரசாங்கம் பேச்சுக்களை நடத்துகிறது" - இவ்வாறு நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார். கொழும்பில் இருந்து...
சர்வதேச கரையோரப் பாதுகாப்பு தினம் இன்று நினைவுகூரப்படுவதை முன்னிட்டு, இலங்கையிலும் கடற்கரையைத் தூய்மைப்படுத்தும் தேசிய வேலைத்திட்டம் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தியோகபூர்வ நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் காலி முகத்திடலில் ஆரம்பமாகியுள்ளது. பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உட்பட 55,000 இற்கும் அதிகமான தொண்டர் படையணி இந்த வேலைத்திட்டத்தில் இணைந்துகொண்டுள்ளது. கரையோரம்...
இலங்கையின் முன்னாள் பாதுகாப்புத்துறை செயலர் கோட்டாபய ராஜபக்ஷ, விடுதலைப் புலிகளுக்கெதிரான போரை வென்றது குறித்து தான் வருந்துவதாகத் தெரிவித்திருக்கிறார். அந்தப் போரில் வென்றதால்தான் தன் மீது இப்போது போர்க்குற்றங்கள் சுமத்தப்படுவதாக அவர் கூறியிருக்கிறார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரரான கோட்டாபய ராஜபக்ஷ ஐநா மனித உரிமைக் கவுன்சில் இலங்கைப் போரில் இழைக்கப்பட்ட மனித உரிமை...
நாடாவை வெட்டிய இரண்டு பெண்களை கைது செய்த பொலிஸார் அவ்விருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய சம்பவம் கடவத்தையில் இடம்பெற்றுள்ளது. கடவத்தை-கடுவெல அதிவேக நெடுஞ்சாலையை வைபவரீதியாக திறந்துவைப்பதற்கு முன்னர், அங்குவந்த இரண்டு பெண்களும் வீதிக்கு குறுக்காக கட்டப்பட்டிருந்த ரிப்பனை (நாடாவை) வெட்டியுள்ளனர். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் படம் அடங்கிய பதாதையை கையில் ஏந்தியிருந்த இருவரும் 'மஹிந்தவுக்கு...
மஹிந்த ராஜபக்ஷ இல்லாத அரசாங்கம் ஒன்றுதான் நாட்டிற்குத் தேவையாக உள்ளது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் இணைந்த ஊடக நிறுவனங்களின் பிராணிகளுடனான சந்திப்பு ஒன்று நேற்று பிற்பகல் இடம்பெற்றது. இதில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்தினால் இலங்கை சம்பந்தமாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கை தொடர்பில்...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் இணைந்த, ஊடக நிறுவனங்களின் பிராணிகளுடனான சந்திப்பு ஒன்று நேற்று பிற்பகல் இடம்பெற்றது. இதில் உரையாற்றிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க, நாடு பாரிய சிக்கலில் இருந்து விடுபட்டுள்ளதாக தெரிவித்தார். ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்தினால் இலங்கை சம்பந்தமாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கை தொடர்பில் கருத்து வௌியிடும்போது பிரதமர்...
காலி, அக்மீமன ஜனபாலா பகுதியில் எட்டு வயது சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். அக்மீமன குருந்துவத்த பகுதில் உள்ள ஸ்ரீ சுமங்கல வித்தியாலயத்தில் கல்வி கற்கும் தெமுனி பூஜானி என்ற 8 வயதுடைய சிறுமியே இவ்வாறு துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த சிறுமி வீட்டுக்கு அருகில் இருந்த...
அடுத்த வருடம் தொடக்கம் மரண தண்டனையை செயற்படுத்த எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பாராளுமன்றில் அனுமதி கிடைத்தால் மரண தண்டனையை செயற்படுத்த நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் ஜனாதிபதி இன்று கூறுகையில், ´நாட்டில் இன்று இடம்பெறும் கொலை, கொள்ளை, சிறுவர் துஸ்பிரயோகம், பாலியல் துஸ்பிரயோகம், குற்றச் செயல்கள் அதிகரிப்பு தொடர்பில் புதிய...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மட்டுமல்ல தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் கூட போர்க் குற்றவாளிதான் என நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமர் உருத்திரகுமரன் தெரிவித்துள்ளார். இந்திய ஊடகம் ஒன்றுக்கு அளித்த பிரத்தியேக பேட்டியில் அவர் இவ்வாறு கூறினார். இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்களில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சம்பந்தம் உண்டு என...
ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸில் வெளியிட்ட விசாரணை அறிக்கையையும் அதன் பரிந்துரைகளையும் போரை நடத்திய இராணுவத் தளபதியான சரத்பொன்சேகா வரவேற்றுள்ளார். அத்துடன் நீதியை நாட்டப்படுவதற்கான செயற்பாடுகளுக்கு தான் முழுமையான ஆதரவை வழங்குவேன் என்றும் அவர் கூறியுள்ளார். அரசாங்கம் ஐக்கிய நாடுகள் சபைக்கு உதவவேண்டும், குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும். இந்த நாட்டு மக்களிற்கு நீதி வழங்கப்படவேண்டும், இந்த...
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பாக தாக்கல்செய்யப்பட்டுள்ள அறிக்கையின் சில விஷயங்கள் தொடர்பான உள் நாட்டு விசாரணைகளை 18 மாதங்களுக்குள் முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்போவதாக வெளிவிவகாரத் துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். கொழும்பு நகரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் மங்கள சமரவீர இந்தத் தகவலைத் தெரிவித்தார். எதிர்வரும் ஜனவரி...
சர்வதேச விசாரணை மட்டுமே, இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயத்தைப் பெற்றுத்தரும் என வடக்கு-கிழக்குப் பகுதியைச் சேர்ந்த 170 கத்தோலிக்க மதகுருமார்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் அவர்கள் கூட்டாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையருக்கு அவசரக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். இலங்கை மீது சர்வதேச விசாரணை தேவை என்று கோரி வந்த அமெரிக்காவும், இப்போது தவறான...
அண்மையில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுக் கொண்ட இலங்கையின் நட்சத்திர கிரிக்கெட் வீரர்களான குமார் சங்கக்கார மற்றும் மஹெல ஜயவர்தன ஆகியோரை, துறைமுக அபிவிருத்தி அமைச்சரும் முன்னாள் இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவருமான அர்ஜூன ரணதுங்க கடுமையாக சாடியுள்ளார். நேற்றைய தினம் நிட்டம்புவ பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இவ்வாறு கடுமையான விமர்சனம்...
5 வயது சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்களை கைது செய்யக் கோரி நடைபெற்ற ஆரப்பாட்டத்திற்கு பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் புலனாய்வுப் பிரிவு அதிகாரி ஒருவர் மாரடைப்பினால் உயிரிழந்துள்ளார். திவுலப்பிட்டிய நகரில் இன்று காலை இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. திடீர் என ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக பொலிஸ் அதிகாரி...
2010 ஆம் ஆண்டு 19 ஆம் இலக்க இறப்பை பதிவு செய்தல் (தற்காலிக நடைமுறை) சட்டத்தில் திருத்தம் செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 1951 ஆம் ஆண்டு 17 ஆம் இலக்க பிறப்பத்தாட்சி மற்றும் இறப்பத்தாட்சி படுத்தும் சட்டத்தின் அடிப்படையில் இறப்பத்தாட்சிபடுத்தும் அதிகாரத்தை பதிவத்தாட்சி ஆணையாளர் திணைக்களத்திற்கு வழங்கப்பட்டது. எனினும் பயங்கரவாததாக்குதல், மக்கள் புரட்சி மற்றும் இயற்கை...
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் நடாத்தப்பட்ட விசாரணையின் அறிக்கைக்கு, இலங்கை தனது பதிலை வழங்கியுள்ளது. அவ்வறிக்கையில் வழங்கப்பட்டுள்ள பரிந்துரைகளுக்குப் போதிய கவனம் வழங்கவுள்ளதாகத் தெரிவித்துள்ள வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு, இது தொடர்பில் மேலதிகக் கலந்துரையாடல்களுக்குத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. இலங்கையின் பதிலில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கியமான அம்சங்கள்: மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினது...
சிறுவர்கள் மீதான குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை வழங்கக் கூடியவாறு புதிய சட்ட மூலமொன்றை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்ப்பதாக சமூக சேவைகள் மற்றும் சமூக நலன்புரி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். கொடதெனியவைச் சேர்ந்த சேயா என்ற சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து...
போர்க் குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்படுவதை ஏற்க முடியாது என்றும் சர்வதேச அளவில் ஒப்புக்கொள்ளக்கூடிய உள்நாட்டு விசாரணை நடத்துவது என்பதுதான் தங்களுடைய நிலைப்பாடு என்றும் இலங்கையின் சுகாதாரத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். இலங்கைப் போரின் இறுதிக்கட்டத்தில் போரில் ஈடுபட்ட இரு தரப்பினராலும் போர்க் குற்றங்களும், மனித குலத்துக்கு எதிரான குற்றங்களும் செய்யப்பட்டிருப்பதாக கூறும்...
நாட்டில் இடம்பெறும் சிறுவர் துஷ்பிரயோகங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கும் சிறுவர்களையும் மகளிர்களையும் பாதுகாப்பதற்குமான சட்டத்தை மிகவும் கடினமாக்கப்படவேண்டும் என்று மகளிர் மற்றும் சிறுவர்கள் அபிவிருத்தி அமைச்சர் சந்திராணி பண்டார தெரிவித்தார். இசுருபாயவில் அமைந்துள்ள மகளிர் மற்றும் சிறுவர்கள் அபிவிருத்தி அலுவலகத்தில் தனது கடமைகளை நேற்று செவ்வாய்க்கிழமை (15) பொறுப்பேற்று கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே...
இலங்கை அரசாங்கத்துக்கும் இந்திய அரசாங்கத்துக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் நான்கு கைச்சாத்திடப்பட்டுள்ளன. இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் முன்னிலையிலேயே இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன. சார்க் வலயத்தில் செய்மதி பரிமாற்றும் வேலைத்திட்டம், வவுனியா மாவட்ட வைத்தியசாலையை புனரமைக்கும் வேலைத்திட்டம், சிறிய அபிவிருத்திக்கு உதவி வழங்குதல், இந்தியாவில் 17 மாநிலங்களில்...
Loading posts...
All posts loaded
No more posts