- Friday
- January 17th, 2025
தன்னலம் பேராசைகளிலிருந்து விடுபட்டு ஏழை எளியோர்க்கு வாரி வழங்கி சமூகத்தின் உயர்வு, தாழ்வுகளை போக்க அனைவரும் முன்வர வேண்டுமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். பிரதமரின் வாழ்த்துச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, முழு மனித சமூகமும் ஆன்மீக மற்றும் லெளகீக ரீதியிலான வெற்றியை அடைந்துகொள்ள வேண்டுமாயின் நாம் அனைவரும் தன்னலம்...
இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் இறக்குமதி செய்யப்படும் சமையல் எண்ணைக்கான வரி 20 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஒரு கிலோ எண்ணைக்கான விஷேட பாண்ட வரி 90 ருபாவில் இருந்து 110 ரூபாவாக உயர்வடைந்துள்ளது என, நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. தேசிய எண்ணெய் உற்பத்தியாளர்களின் நலனுக்காகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொடதெனியாவில் 5 வயது சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், நேற்று கைதான சந்தேகநபர் தானே அதனைச் செய்ததாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார் என, பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரயந்த ஜெயக்கொடி தெரிவித்துள்ளார். குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாகவும் சந்தேகநபர் தொடர்ந்தும் காவலில் வைக்கப்பட்டு விசாரணை...
எவன்காட் சம்பவம் குறித்து தொடர்ந்தும் உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சம்பந்தப்பட்ட பிரிவினருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக, அமைச்சரவை ஊடகப் பேச்சாளர், அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார். இன்று கொழும்பில் இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். மேலும் இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள்...
நேற்று பிற்பகல் ஒரு மணிக்கு நாடாளுமன்றம் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியது. எம்.பிக்கள் பதவிப்பிரமாணம், சபாநாயகர் அறிவிப்பு, 23/2 இன் கீழான விசேட அறிவிப்பு ஆகியன முடிவடைந்த பின்னர் அமைச்சின் அறிவிப்பு இடம்பெற்றது. இதன் போது கொட்டிதெனியவில் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சேயா என்ற சிறுமியின் கொலையுடன் தொடர்புடைய குற்றவாளியை கண்டுபிடிப்பதற்கு முன்னெடுக்கப்பட்டுவரும்...
பாரிய மோசடி மற்றும் ஊழல்களை விசாரணைக்கு உட்படுத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுக்கு இன்று புதன்கிழமை சமுகமளிக்குமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி தேர்தலின் போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வெற்றிக்காக சுயாதீன தொலைக்காட்சியில் விளம்பரப்படுத்தப்பட்ட சுமார் ஒரு கோடி ரூபாய் பெறுமதியான விளம்பரங்களுக்கு பணம் செலுத்தாமை தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்கே அவர் அழைக்கப்பட்டுள்ளார்.
ஐ.நா. அறிக்கையில் உரிய சாட்சியங்கள் எதுவுமின்றியே முப்படையினருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன என்றும், அறிக்கையின் சிபாரிசுகள் பயங்கரமானவை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார் மஹிந்த ஆட்சியில் வெளிவிவகார அமைச்சராக பதவி வகித்த பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ். ஐ.நா. அறிக்கையின் சிபாரிசுகள் சர்வதேச விசாரணைக்கு வழிகோலும் வகையிலேயே அமைந்துள்ளன என்றும் அவர் தெரிவித்தார். இலங்கையில் இடம்பெற்றவை எனக் கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும்...
இந்திய - இலங்கை கடல் எல்லையைத் தாண்டி மீன்பிடிக்க வரும் இரு தரப்பு மீனவர்களை இருநாட்டு கடற்படையோ, கடலோரக் காவல் படையோ தாக்கக் கூடாது என்று டெல்லியில் நடைபெற்ற இரு நாடுகளின் பாதுகாப்புத் துறைச் செயலர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. "இந்திய - இலங்கை பாதுகாப்பு பேச்சுவார்த்தை´ எனும் பெயரில் இரு நாடுகளின் பாதுகாப்புத் துறைச்...
சர்வதேச போர்க்குற்ற நீதிமன்றம் அமைக்கும் அதிகாரம் மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் மனித உரிமைகள் ஆணையாளருக்கு கிடையாதென இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியும் குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். போர்க்குற்ற நீதிமன்றம் அமைக்கும் அதிகாரம் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபைக்கே இருப்பதாக அவர் சுட்டிக் காட்டியுள்ளார். இலங்கை தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள்...
இந்த நாட்டில் வாழும் சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பது கட்டாயமானதாகும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று பிற்பகல் பாராளுமன்றத்தில் விஷேட உரையொன்றை நிகழ்த்தியிருந்தார். இதன்போது உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார். தொடர்ந்து உரையாற்றிய அவர், கடந்த காலத்தில் இடம்பெற்ற விரும்பத்தகாத செயல்முறைகள் மீண்டும் நாட்டில் இடம்பெறாதிருக்க...
நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சபையின் அமர்வில், ஐக்கிய அமெரிக்காவினால் சமர்ப்பிக்கப்படவுள்ள தீர்மானத்தின் முதலாவது வரைவுக்கு, இலங்கை தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. ஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் கட்டடத்தில், ஐக்கிய அமெரிக்காவின் நாடாளுமன்றக் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட உத்தியோகபூர்வமற்ற கலந்துரையாடலிலேயே இலங்கையின் எதிர்ப்பை, ஜெனீவாவுக்கான இலங்கையின் தூதுவர் ரவீந்திர ஆரியசிங்க வெளிப்படுத்தினார். சமர்ப்பிக்கப்பட்டுள்ள...
பாராளுமன்றத்தில் உறுப்பினர்களின் ஆசனங்கள் ஒழுங்குகள் குறித்து முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கு அடுத்ததாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் கரு ஜெயசூரியவுடன் இடம்பெற்ற பேச்சுகளின் அடிப்படையில் நாடாளுமன்றத்தின் ஆசனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற செயலாளர் தம்மிக்க தசநாயக்க தெரிவித்துள்ளார். இதன்படி, நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற 6 அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு முன்வரிசையில்...
செப்டம்பர் மாத இறுதிக்குள் சிறைச்சாகைளில் விசாரணைகளின்றி அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில், அந்தக் கைதிகளையும் உள்ளடக்கி சாத்வீக ரீதியிலான தொடர் உண்ணாவிரதப்போராட்டத்தை முன்னெடுக்கப் போவதாக அரசியல் கைதிகளின் விடுதலைக்கான மக்கள் அமைப்பு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதம் ஒன்றில் தெரிலித்துள்ளது. அந்தக்...
இறுதி யுத்தத்தில் 7 ஆயிரத்து 700 பேர் வரையானோரே கொல்லப்பட்டிருக்கலாம் என காணாமற் போகச் செய்யப்பட்டோர் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பரணகம தெரிவித்துள்ளார். இந்தியன் எக்ஸ்பிரஸுக்கு அவர் கருத்து வெளியிட்டபோதே மேற்கண்ட தகவலைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு: 2011 இல், ஐ.நா பொதுச் செயலர் பான்...
புகைப்பிடித்தல் காரணமாக வருடத்திற்கு 30 ஆயிரம் பேர் வரையில் உயிரிழப்பதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். களுத்துறையில் இடம் பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவி க்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தந்தைகள் புகைப்பிடிப்பதன் காரணமாக உயிரிழக்கும் குழந்தைகளும் அவர்களுள் உள்ளடக்கப்படுவார்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். புகைத்தலற்ற சமுதாயம் ஒன்றை உருவாக்குவதற்காக...
பலவந்தமாக அல்லது விருப்பத்துக்கு மாறாக காணாமல் போனோர் தொடர்பிலான ஐக்கிய நாடுகள் சபையின் பணியாளர்கள் குழுவொன்று இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது. நவம்பர் 9ம் திகதி முதல் 18ம் திகதி வரை இவர்கள் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக ஜெனீவாவில் இடம்பெறும் ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழு அமர்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காணாமல் போனோர் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இரண்டாவது அறிக்கையை ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழு அமர்வில் சமர்ப்பிக்குமாறு கோரி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெனிவாவின் முன்னாள் இலங்கையின் பிரதிநிதிகளான பேராசிரியர் தயான் ஜயதிலக்க, தமரா குணநாயகம், பாராளுமன்ற உறுப்பினர்களான பேராசிரியர் ரஜீவ் வீஜேசிங்க, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்...
இலங்கையில் நடந்த இறுதி கட்ட போரின் போது இராணுவத்தின் மீது போர்க் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. அது குறித்த எந்த விசாரணையையும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன் என, முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். நம்பத்தகுந்த ஆதாரங்களுடன் விசாரணை நடத்தப்பட்டு குற்றம் நிரூபிக்கப்பட்டால் தண்டனையை ஏற்க தயார் எனவும் அவர் கூறியுள்ளார். இந்திய ஊடகம் ஒன்றுக்கு...
2015 இலங்கை அழகி போட்டியில் மூன்றாம் இடத்தைப் பெற்ற ஹர்சனி ருமான், 2015 உலக சுற்றுலா அழகி போட்டியில் மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளார். இப்போட்டி லெபனானில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் இரகசியத் தடுப்பு முகாம்கள் உள்ளன என்றும், அவை தொடர்பான இரகசியங்கள் மறைத்துவைக்கப்பட்டுள்ளன என்றும் ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு சார்பாக இடம்பெற்ற சிறிய கூட்டங்களின்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் இடம்பெற்ற கடத்தப்பட்டு காணாமல்போனோர் விவகாரம் தொடர்பாக Forum Asia, Franisans Intenational ஆகிய அமைப்புகள் நடத்திய சிறிய கூட்டங்களின்போது இரகசியத் தடுப்பு முகாம்கள் குறித்து...
Loading posts...
All posts loaded
No more posts