- Friday
- January 17th, 2025
சீனி, உப்பு, எண்ணெய் ஆகியவற்றின் வரிகள் அதிகரிக்கப்பட வேண்டும். இதன்மூலம் நாட்டில் இருதய நோயாளர்களின் எண்ணிக்கையை குறைக்க முடியும் என்று சுகாதார அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். மது, சிகரட் பாவனையால் நோய்களுக்கு இலக்காகுபவர்களின் மருத்துவ செலவுகளுக்கு அரசாங்கம் பல இலட்சம் ரூபாய்க்களை செலவு செய்ய வேண்டியுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார். கிருலப்பனையிலுள்ள அரசாங்க...
வடக்கு, கிழக்கில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினர் உடன் வெளியேற்றப்பட வேண்டும் சிங்களக் குடியேற்றங்கள் தடுத்து நிறுத்தப்படவேண்டும். - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களில் ஒருவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் ஜெனிவாவில் வைத்து வலியுறுத்தியுள்ளார். ஜெனிவாவில் நடைபெற்று வரும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் மாநாட்டிற்கு சார்பாக நடைபெற்ற கூட்டங்களில் கலந்துகொண்டு...
கம்பஹா, கொட்டதெனியாவ 5 வயது சிறுமியான சேயா சந்தவமியை வன்புணர்வுக்கு உட்படுத்தி கொலைச்செய்த சந்தேகத்தில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 17 வயதான மாணவனும், ஒரு குழந்தையின் தந்தையையும் (31) விடுதலை செய்யப்பட்டுள்ளனர். சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் முதலாவதாக கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களின் DNA மாதிரிகள், பொருந்தவில்லை என்று மினுவாங்கொட நீதவான் நீதிமன்றம் அறிவித்துள்ளது....
எமது நாட்டில் வாழ்கின்ற பிள்ளைகளின் இதயத்தில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட மரண பயம், அவர்களின் இதயங்களில் மீண்டும் சூழ்கொண்டுள்ளது. இது தனக்கு பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு அவர் அனுப்பிவைத்துள்ள வாழ்த்துச்செய்தியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். சேயா சந்தவமி கொலை மற்றும் சிவலோகநாதன் வித்யா என்ற...
இலங்கையில் மனித உரிமைகளை உறுதிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். உண்மையைக் கண்டறிதல், நீதியை நிலைநாட்டுதல் ஆகியன மூலமாக கடந்த கால பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார். ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 70ஆவது மாநாட்டில் உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நிலையான அபிவிருத்தி மற்றும்...
அண்மைக்காலமாக வௌியாகி வரும் தமிழ் திரைப்படங்கள் சிறுவர்களை இலக்கு வைக்கும் விதம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வறிக்கையொன்றும், 'நிதர்சனம்' பத்திரிகை வௌியீடும் மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையத்தினால் (ADIC) நேற்று (30) வௌியிடப்பட்டது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (30) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே இவ் இரண்டு வௌியீடுகளும் நடைபெற்றன. இன்று (01) இடம்பெறவுள்ள...
கொழும்பு நகர சபைப் பகுதியில் வைத்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மீது தற்கொலை தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில், குற்றவாளிகள் என இணங்காணப்பட்ட இருவருக்கு சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இதன்படி தாக்குதலுக்கு உதவி வழங்கியதாக குற்றம்சாட்டப்பட்ட வேலாயுதம் வரதராஜ் என்பவருக்கு 290 வருடங்களும் சந்திரா ரகுபதி என்பவருக்கு 300 வருடங்களும் சிறைத்தண்டனை விதித்து...
நாட்டில் இடம்பெற்று வரும் குற்றச் செயல்களை தடுக்க பொலிஸ் பதிவு முறைமை மீளவும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நாட்டின் சகல பொலிஸ் பிரிவுகளிலும் தற்காலிக அடிப்படையில் தங்கியிருப்பவர்கள் அந்தந்த பொலிஸ் நிலையங்களில் தங்களை பதிவு செய்து கொள்ள வேண்டுமென கோரப்பட்டுள்ளது. பொலிஸ் தலைமையகம் இந்த உத்தரவினை நேற்று பிறப்பித்துள்ளது. தற்காலிக அடிப்படையில் ஒர் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட...
நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் சில மணித்தியாலங்களுக்கு நாடுபூராகவும் மின்தடை ஏற்பட்டமைக்கு காரணம், வார இறுதியில் மின்சாரத்திற்கான கேள்வி குறைவடைந்தமையால், ஏற்பட்ட கொள்ளவு அதிகரிப்பே என தெரியவந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை நிலவிய காலநிலை காரணமாக மின்சாரப் பாவனை குறைவடைந்திருந்ததாக, இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர், எம்.சீ.விக்ரமசேகர தெரிவித்துள்ளார். வார இறுதியில் இரவு 09.00 மணிக்குப் பின்னர்...
சட்டக் கல்லூரி அனுமதி - 2016 கல்வியாண்டுக்கான போட்டிப் பரீட்சையில் தsrilanka law collegeமிழ்மொழி மூல பரீட்சார்த்திகளில் கணிசமான தொகையினருக்கு அப்பட்டமாக அநீதி இழைக்கப்பட்டு உள்ளது. கடந்த சனிக்கிழமை இப்பரீட்சை கொழும்பில் இடம்பெற்றது. வடக்கு, கிழக்கு அடங்கலாக நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் தமிழ் பேசும் பரீட்சார்த்திகள் பரீட்சை எழுத வந்திருந்தனர். சட்டக் கல்லூரி அனுமதியில்...
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 30வது அமர்வில் இலங்கை தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட வரைவுத் தீர்மானம் முழுமையாக தமிழில் இதோ!
திருகோணமலை, சம்பூர் பிரதேசத்திலிருந்து கடற்படை வெளியேறுவதாக கூறியபோதிலும், மக்களின் விவசாய நிலங்களில் கடற்படை முகாம்களை அமைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். கடந்த மாதம் சம்பூருக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடற்படையினரின் வசமிருந்த 40 ஏக்கர் நிலப்பரப்பை மக்களிடம் கையளித்தார். எனினும் குறித்த பகுதியிலிருந்து கடற்படையினர் வெளியேறுவதற்கான முயற்சிகளை...
மக்கா புனித தலத்துக்கு யாத்திரை சென்ற இரு இலங்கை யாத்திரிகர்களைக் காணவில்லை என முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கொழும்பு வெள்ளவத்தையைச் சேர்ந்த அபூபக்கர் அசீஸ் (வயது 58), ரோஷன் அப்துல் அசீஸ் (வயது 55) தம்பதியினரே இவ்வாறு காணாமல் போயுள்ளனர். இவர்கள் இருவரையும் தேடும் பணியை விரைவாக செயற்படுத்தபடுவதாக மக்கா யாத்திரையில் ஈடுபட்டிருந்த அப்துல் காதர் தெரிவித்துள்ளார்....
ஜெனிவா மனித உரிமைகள் கவுன்ஸிலின் பிரேரணையில் அடங்கிய யோசனைகள் சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அரசாங்கம் எப்போதும் மீள் நல்லிணக்கம் தொடர்பான வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதில் அர்ப்பணிப்புடன் செயற்படும் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூனிடம் உறுதியளித்துள்ளார். மேலும் ஐ.நா. பிரகடனங்களுக்கு மதிப்பளிக்கும் அரசாங்கம் தொடர்ந்தும் அனைத்து நடவடிக்கைகளையும்...
மூன்று விசேட குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளகப் பொறிமுறையுடனான விசாரணை நடத்தப்படும். எனவே சர்வதேச விசாரணை என்று சிலர் பொய்யான தகவல்களைப் பரப்புகின்றனர். இதில் எவ்வித உண்மைகளும் இல்லையென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். பரணகம ஆணைக்குழுவை அமைத்து சர்வதேச சட்டத்தரணிகளின் உதவியைப் பெற்றவர் மஹிந்த ராஜபக்ஷவே ஆவார் என்றும் பிரதமர் குற்றம் சாட்டியுள்ளார். ஊடகத்துறை சார்ந்த...
நேற்று நள்ளிரவு நாடுபூராகவும் மின்சாரம் தடைப்பட்டது. எதுஎவ்வாறு இருப்பினும் நிலைமை அதிகாலை 03.30 - 04.00 மணிவரையான காலப்பகுதிக்குள் முழுமையாக வழமைக்குத் திரும்பியுள்ளதாக, இலங்கை மின்சாரசபை பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார். தொழிநுட்பக் கோளாறு காரணமாக இருக்கலாம் என கருதப்படுகின்றது. இது குறித்து விஷேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதோடு, இனிமேல் இவ்வாறு நடக்காமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் இதனால்...
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியொருவரை விசாரணைக்கு உட்படுத்தி வாக்குமூலம் பெற்றுக்கொண்ட முதலாவது தருணத்துக்கு மஹிந்த ராஜபக்ஷ முகங்கொடுத்தததாக பாரிய ஊழல் மற்றும் மோசடி தொடர்பான விசாரணை குழுவின் செயலாளர் செயலாளர் லெசில் த சில்வா தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வீட்டுக்கு ஆணைக்குழுவின் அதிகாரிகளை அனுப்பி விசாரணைகளை முன்னெடுத்தமையானது, பாரிய இலஞ்ச ஊழல் மோசடிகளை விசாரணை...
அநுராதபுரம், கஹட்டகஸ்திகிலிய நகரத்தில் வைத்து கடந்த 22ஆம் திகதியன்று போக்குவரத்து பொலிஸாரினால் தாக்கப்பட்ட விசேட தேவையுடையவருக்கு எதிராக இதுவரையிலும் ஒன்பது வழக்குகள் உள்ளன என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளர் திணைக்களம் அறிவித்துள்ளது. அந்த நபர், போக்குவரத்து பொலிஸாரின் சமிக்ஞையை மீறி, மோட்டார் சைக்கிளை செலுத்திச்சென்றதாகவும் அவரிடம், சாரதி அனுமதிப்பத்திரம் இல்லை என்றும் அத்திணைக்களம் தெரிவித்துள்ளது. அவருக்கு எதிராக,...
நாடாளுமன்றத்தின் நேற்றைய அமர்வின்போது எதிர்க்கட்சித் தலைவருக்குரிய ஆசனத்தில் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர். ஈ.சரவணபவன் அமர்ந்தார். பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோருக்கு உரித்தான ஆசனங்களில் வேறு எவரேனும் உறுப்பினர்கள் அமர்தல் ஆகாது என்பது பாராளுமன்ற மரபாகும். எதிர்க்கட்சித் தலைவரின் ஆசனத்தில் நீண்ட நேரம் அமர்ந்திருந்த உறுப்பினர் சரவணபவன், பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவிடம் உரையாடிக்...
மோட்டார் சைக்கிளில் பயணித்த விசேட தேவையுடைய ஒருவரை, போக்குவரத்து பொலிஸார் நடைபாதையில் போட்டு புரட்டி, புரட்டி தாக்கிய சம்பவம் கஹட்டகஸ்திகிலிய நகரத்தில் இடம்பெற்றுள்ளது. கஹட்டகஸ்திகிலிய பொலிஸின் போக்குவரத்து பொலிஸ் பிரிவு அதிகாரிகளினால் நேற்று முன்தினம் 22ஆம் திகதி, செவ்வாய்க்கிழமை காலைவேளையில் மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் வீடியோ சமுக மற்றும் செய்தி வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன....
Loading posts...
All posts loaded
No more posts