மஹிந்தவிடம் விசாரணை ஆரம்பம்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சற்று முன்னர், பாரிய மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு முன்னிலையில் ஆஜரானார். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் அரசாங்க தொலைக்காட்சி ஒன்றில் விளம்பரங்களை பிரசுரித்தமைக்கு கட்டணம் வழங்காமை தொடர்பிலேயே இவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. முன்னதாக அண்மையில் பாரிய மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு...

வெலே சுதாவுக்கு மரண தண்டனை

பாரிய போதைப் பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடையதாக கூறி கைதுசெய்யப்பட்ட வெலே சுதா எனப்படும் சமந்த குமாரவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.
Ad Widget

உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் அரசியல் கைதிகளின் கண்ணீர்க் கதறல்!

நேசத்தமிழ் உறவுகளே! உங்களின் விடிவிற்காய் உதிரம் சிந்தி ஊருக்காய் உழைத்த நாம் இன்று உறவுகளை பிரிந்து உற்றவரை பிரிந்து பூட்டிய சிறைகளுக்குள் பட்டினி போராட்டம் நடத்துகிறோம். உங்கள் பிள்ளைகளாகிய எங்கள் அவல குரல் கேட்கிறதா சொல்லுங்கள். ஒரு மனித வாழ்க்கையின் சத்தான அரைவாசி காலத்தை சிறையில் தொலைத்து ஏக்கங்கள், தாக்கங்கள், நிராகரிப்புகள், நிராசைகள், அவமானங்கள், அருவப்புக்கள்...

அப்பாவிகளான தமிழ் அரசியல் கைதிகளை உடன் விடுவியுங்கள்! எதிர்க்கட்சித் தலைவர் அவசர கோரிக்கை

"சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் தனிப்பட்ட ரீதியில் குற்றங்கள் எதுவும் செய்யவில்லை. பொதுவான செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளதனால்தான் அவர்கள் கைதுசெய்யப்பட்டு சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். எனவே, புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப்புலிகளை விடுவித்தது போன்று அப்பாவிகளான தமிழ் அரசியல் கைதிகளையும் உடன் விடுவிக்க ஜனாதிபதி, பிரதமர், நீதியமைச்சர் ஆகியோர் நடவடிக்கை எடுக்கவேண்டும்.'' - இவ்வாறு அவசர கோரிக்கை விடுத்துள்ளார் எதிர்க்கட்சித்...

எம்.பிக்கள் படுகொலை பற்றி ஆராய நாடாளுமன்ற விசாரணைக்குழு! – பிரதமர் ரணில் அதிரடி நடவடிக்கை

நாடாளுமன்ற உறுப்பினர்கள் படுகொலைசெய்யப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காக நாடாளுமன்ற விசாரணைக்குழுவொன்றை அமைப்பதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார். நாடாளுமன்றத்தின் அதிகாரம் மற்றும் விசேட வரப்பிரசாதங்கள் சட்டமூலத்தின்கீழ் இந்தக்குழு அமைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. எம்.பிக்களின் படுகொலைகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் பொலிஸ் உத்தியோகத்தர்களை நாடாளுமன்ற விசாரணைக்குழு முன்னிலையில் அழைத்து தகவல்களைப் பெற்றுக்கொள்ளவும், பொலிஸாரின் விசாரணைகளை மேற்பார்வையிடவும்...

தந்தையை நாய்க் கூட்டில் அடைத்து வைத்திருந்த மகள் கைது!

தனது தந்தையை நாய்க் கூட்டில் அடைத்து வைத்திருந்த மகள் ஒருவர் பலகொல்ல பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார். 42 வயதான பெண்ணொருவரே இவ்வாறு கைதாகியுள்ளார். பலகொல்ல பொலிஸார் அந்தப் பகுதியால் சென்ற வேளை குறித்த கூட்டினைக் கண்டுள்ளனர். இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் குறித்த வயோதிபரின் மகளே அவரை கூட்டில் அடைத்து வைத்தமை தெரியவந்துள்ளது. பின்னர் 73 வயதான...

‘சிறார்களின் ஆரோக்கியத்திற்காக ஒன்றிணைய வேண்டும்’ – கொழும்பில் சச்சின்

இலங்கையில் சிறார்கள் மத்தியில் சுத்தம்- சுகாதாரப் பழக்க வழக்கங்களை ஊக்குவிக்கும் யுனிசெஃப் அமைப்பின் வேலைத்திட்டத்திற்காக இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கர் இலங்கை வந்துள்ளார். யுனிசெஃப் நிறுவனத்தின் பிராந்திய நல்லெண்ணத் தூதுவரான சச்சின் டெண்டுல்கருடன் இலங்கையின் கிரிக்கெட் நட்சத்திரம் முத்தையா முரளிதரனும் இந்தப் பணிக்காக கைகோர்த்துள்ளார். பள்ளிக்கூடங்களில் சிறார்களிடத்தில் சுத்தம்- சுகாதார பழக்கவழக்கங்களை ஊக்குவிக்கும் வேலைத்திட்டத்தை...

கோட்டபயவின் கீழ் மூன்று ஆயுதக் குழுக்கள் வெள்ளைவான் கடத்தலை மேற்கொண்டது

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, தமக்குக் கீழ் மூன்று ஆயுதக் குழுக்களை செயற்படுத்தி வெள்ளைவான் கடத்தலை மேற்கொண்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. குறித்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மேற்படி மூன்று குழுக்களும் கடத்தல் தொடர்பான செயற்பாட்டினை பகுதி பகுதியாக திட்டமிட்டு மேற்கொண்டுள்ளன. குறிப்பாக இந்த மூன்று குழுக்களில் விடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மானின்...

அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரி உறவுகள் போராட்டம்!

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரி கொழும்பில் நாளை புதன்கிழமை கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. அதேபோன்று, யாழ்ப்பாணத்திலும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை போராட்டம் நடத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. தமது விடுதலையை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக அரசியல் கைதிகளின் உறவினர்களாலேயே இந்தப் போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. பொதுமன்னிப்பு வழங்கி தம்மை உடனடியாக விடுதலை செய்ய...

5 வருடங்களுக்கு இ.போ.ச.வில் எவருக்கும் தொழில் வழங்க முடியாது

எதிர்வரும் ஐந்து வருடங்களுக்கு இலங்கை போக்குவரத்துச் சபையில் எவருக்கும் தொழில் வழங்க முடியாது என போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபாலடி சில்வா தெரிவித்துள்ளார். காத்தான்குடியிலுள்ள இலங்கை போக்குவரத்துச் சபையின் டிப்போவுக்கு விஜயம் செய்த அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா அங்கு கடமையாற்றும் ஊழியர்கள் மத்தியில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு கூறினார். இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த...

பார்பர் வீதி கோவில் பிரச்சினைக்கு சுமூக தீர்வு

மத்திய கொழும்பின் பார்பர் வீதி என்ற மகா வித்தியாலய வீதியின் 36ம் தோட்டத்தில் அமைந்துள்ள இந்து கோவிலின் தேர் திருவிழா இம் மாதம் 22 முதல் 31க்கு உட்பட்ட தினத்தில் நடைபெறும். தற்சமயம் நவராத்திரி உற்சவங்கள் ஆரம்பித்து உள்ளதால் இந்த திருவிழா தேர் பவனியுடன் இந்த மாதமான ஒக்டோபர் இறுதிக்குள் ஆகமமுறைப்படி சாஸ்திரிகள் தீர்மானத்து கொடுக்கும்...

எமது தலைவர் நிரபராதியாக வௌியே வருவார் – டீ.எம்.வீ.பி நம்பிக்கை

வடக்கு, கிழக்கில் இருக்கின்ற அரசுக்கு முட்டுக்கொடுக்கும் சிறுசிறு தமிழ் கட்சிகளை திருப்திப்படுத்த வேண்டும் என்பதற்காக சில கைதுகள் மேற்கொள்ளப்படுகின்றனவா என்ற சந்தேகம் உள்ளதாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளர் பூ.பிரசாந்தன் தெரிவித்தார். தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் குற்றப் புலனாய்வுத் துறையினரால் தடுத்து...

சாகும் வரையிலான உண்ணாவிரதம் : ஜனாதிபதிக்கு வடக்கு முதல்வர் கடிதம்

நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தங்களை விடுதலை செய்ய வேண்டும் எனக்கோரி சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ள தமிழ் கைதிகளின் பிரச்சினையை மனிதாபிமானத்துடன் அணுகி, அவர்களுடைய பிரச்சினைக்குக் குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் தீர்வு காணப்படும் என்ற உத்தரவாதத்தை, வழங்கி அந்த உண்ணாவிரதத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஜனாதிபதியிடம்...

ரணிலின் வெற்றிக்காக அங்கபிரதட்சணம் செய்த முன்னாள் இராணுவச் சிப்பாய்!

பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றி பெற்று ரணில் விக்ரமசிங்க பிரதமராக வர வேண்டும் என்று சியம்பலாகஸ்ஹேன பகுதியில் உள்ள அய்யநாயக்க கோயிலில் நேர்ந்து கொண்டிருந்தார்சிலாபம் ஆடிகமம் பிரதேசத்தை சேர்ந்த 33 வயதான சனத் குமார என்ற முன்னாள் இராணுவ வீரர். இதனடிப்படையில், நேற்று அவர் மூன்று கிலோ மீற்றர் தூரம் வரை அங்கபிரதட்சணமாக...

புலிகளின் வரைபடங்களுடன் கொழும்பு வந்தார் கருணா

கிழக்கில் இருந்து தப்பி வந்த போது, கருணா எனப்படும், விநாயகமூர்த்தி முரளிதரன், ஒரு பயணப் பெட்டி நிறைய விடுதலைப் புலிகளின் முகாம்கள் அமைந்துள்ள வரைபடங்களை எடுத்து வந்தார் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அலிசாகிர் மெளலானா தெரிவித்துள்ளார். 2004ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளிடம் இருந்து கருணாவை காப் பாற்றி, கொழும்புக்குப் பாதுகாப்பாக அழைத்துச் சென்றிருந்த அலிசாகிர்...

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் கைதுசெய்யப்பட்டார்

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவருமான பிள்ளையான் என்கின்ற சிவநேசத்துரை சந்திரகாந்தன் கைதுசெய்யப்பட்டுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைக்காக கொழும்பிலுள்ள குற்றப்புலனாய்வு பிரிவுக்கு சென்றிருந்தபோதே பிள்ளையான் கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. அவரை விசாரணைக்காக அழைத்துச் செல்வதற்காக...

இலத்திரனியல் தேசிய அடையாள அட்டைக்கு அமைச்சரவை அனுமதி

இலங்கையில் தற்போது பாவனையில் இருக்கும் தேசிய அடையாள அட்டைக்குப் பதிலாக இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை வழங்குவது குறித்து நீண்டகாலமாக கவனம் செலுத்தப்பட்டு வரும் நிலையில் கடந்த வாரம் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எதிர்வரும் இரண்டு வருடங்களினுள் இந்த செயற்பாட்டை நடைமுறைக்குக் கொண்டு வரவும், அதன் பின்னர் இலங்கையிலுள்ள அனைவருக்கும் இலத்திரனியல்...

உண்மைக்கு முதலிடம் வழங்க வேண்டியது ஊடகவியலாளர்களின் பொறுப்பு – ஜனாதிபதி

முழுமையான பத்திரிகை சுதந்திரம் உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அடிப்படைவாதிகளின் குறுகிய நோக்கங்களை அடைந்துகொள்வதற்கு இடமளிக்காது உண்மைக்கு முதலிடம் வழங்க வேண்டியது ஊடகவியலாளர்களின் பொறுப்பாகும் என ஜனாதிபதி மைத்திரபால தெரிவித்தார். நாட்டின் சுதந்திரத்தையும் ஊடகத்துறையின் சுதந்திரத்தையும் முழுமையாக உறுதிப்படுத்துவதற்கு புதிய அரசாங்கம் அர்ப்பணிப்போடு இருப்பதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிரதான பத்திரிகைகளின் தலைப்புகளை பிரசுரிக்குமாறு கட்டளை...

முப்படையினருக்கு சிறந்த சேவைக்கான விபூஷண பதக்கங்கள் வழங்கி கௌரவிப்பு!

முப்படையின் நிரந்த படையணிகளின் சிரேஸ்ட அதிகாரிகளின் சேவையை பாராட்டி சிறந்த சேவைக்கான விபூஷண பதக்கங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று முன்தினம் (08) காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் இலங்கை இராணவத்தின் தற்போதைய தளபதி லெப்டினட் ஜெனறல் கிரிஷாந்த டி சில்வா, கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்த்ர விஜேகுணரத்ன,...

கொழும்பில் தடையின்றி கள்ளுக் கடைகளை ஆரம்பிப்பதற்கு எதிர்ப்பு

கொழும்பு நகருக்குள் தடையின்றி கள்ளுக்கடைகளை ஆரம்பிப்பதற்கு கொழும்பு பிரதேச செயலாளர் வழங்கியுள்ள அனுமதியை ரத்துசெய்யுமாறு கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தர்ம ஷக்தி அமைப்பு இந்த மனுவை தாக்கல்செய்துள்ளதாக அந்த அமைப்பின் தலைவர் மாதம்பாகம அச்சாஜி தேரர் தெரிவித்தார். கொழும்பு நகரில் தற்போது 5 கள்ளுக்கடைகளை நடத்துவதற்கு மட்டுமே அனுமதி உள்ளது. தற்போது...
Loading posts...

All posts loaded

No more posts