- Saturday
- January 18th, 2025
அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான சந்திப்பொன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் நாளை மாலை இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது. ஜெனிவா மனித உரிமைகள் அறிக்கை தொடர்பில் அரசியல் கட்சிகளுக்கு தௌிவுபடுத்துவதே இதன் நோக்கம் என தெரியவந்துள்ளது.
விசாரணைகளின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள 67 தமிழ் அரசியல் கைதிகளை இவ்வார இறுதிக்குள் விடுவிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக, அரச உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு, இதுவரை காலமும் வழக்குத்தாக்கல் செய்யப்படாமல் எவ்வித விசாரணைகளுமின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளையே இந்த வாரம் விடுவிக்க ஏற்பாடாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன், ஏனைய தமிழ் அரசியல் கைதிகள் குறித்தும் விசாரணையை...
முன்னைய அரசாங்கத்தின் காலத்தில் வெளிநாடுகளில் தூதுவர்களாகப் பணியாற்றிய படைத் தளபதிகள் அண்மையில் பாரிய, மோசடிகள் குறித்த விசாரிக்கப்பட்டது குறித்து, மைத்திரிபால சிறிசேன அதிருப்தி தெரிவித்துள்ளார். முன்னைய அரசாங்கத்தின் காலத்தில், வெளிநாடுகளில் தூதுவர்களாகப் பணியாற்றிய, முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சாந்த கொட்டேகொட, முன்னாள் கடற்படைத் தளபதிகள் அட்மிரல் திசார சமரசிங்க, அட்மிரல் வசந்த கரன்னகொட, முன்னாள்...
தனது வயோதிபத் தந்தையை நாய்க் கூட்டில் அடைத்து வைத்ததாக குற்றம்சாட்டப்பட்ட 42 வயதான பெண் எதிர்வரும் 2ம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கண்டி - பலகோல்ல பகுதியிலுள்ள சொகுசு வீடொன்றில் வேறாக கட்டப்பட்டிருந்த கூட்டில் இருந்து வயோதிபர் ஒருவர் பலகோல்ல பொலிஸாரால் அண்மையில் மீட்கப்பட்டார். பின்னர் குறித்த வயோதிபர் அந்த வீட்டு உரிமையாளரின்...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைப் படுகொலை செய்வதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிள்ளையானின் உதவியை நாடியதாக அவர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பாக கிழக்கு மாகாண முன்னாள் முதல்வர் பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அவரிடம்...
கம்பஹா கொட்டதெனியா பிரதேசத்தைச் சேர்ந்த சிறுமி சேயா கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட கொண்டயா எனப்படும் துனேஷ் பிரியசாந்த குற்றத்திலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். சேயா கொலை வழக்கு இன்று (திங்கட்கிழமை) மினுவாங்கொட நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, நீதவான் இத்தீர்ப்பை வழங்கியுள்ளார். அத்துடன், கொலையுடன் தொடர்புடைய கொண்டயாவின் அண்ணனை எதிர்வரும் நவம்பர் மாதம் 2ஆம் திகதிவரை விளக்கமறியலில்...
தமிழ் அரசியல் கைதிகள் விவகாரத்தில் ஜனாதிபதி வழங்கிய உறுதி மொழியை அவர் மீறினால் உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்படும் என்று தமிழ் தேசியக்கூட்டமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழ் அரசியல் கைதிகள் கடந்த 10ஆம் திகதி திங்கட்கிழமை முதல் நடத்திய உண்ணாவிரதப் போராட்டம் நவம்பர் மாதம் 7 ஆம் திகதிவரை தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் வெலிக்கடை சிறைச்சாலைக்கு இன்று (17) சென்று கைதிகளுடன் உரையாடினார். அதன் பின்னரே தங்களின் உண்ணாவிரதப் போராட்டத்தை தற்காலிகமாக கைவிடுவதற்கு...
உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடயம் தொடர்பாக அடுத்த மாதம் 7ஆம் திகதிக்கு முன்னதாக தீர்வு முன்வைக்கப்படும் என்ற ஜனாதிபதியின் உறுதிமொழியை கைதிகள் நிராகரித்துள்ளனர். இந்த உறுதிமொழியை ஜனாதிபதி பகிரங்கமாக அறிவிக்க வேண்டுமெனவும், அதுவரை தங்களது போராட்டத்தை கைவிடப்போவது இல்லை எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். தமிழ் அரசியல் கைதிகளின் விடயம் தொடர்பாக எதிர்வரும்...
தமக்கு பொதுமன்னிப்பளித்து விடுதலை செய்யக் கோரி உண்ணாவிரதமிருக்கும் கைதிகளில் மேலும் 12பேரின் உடல் நிலை மோசமடைந்த நிலையில் வைத்தியசாலையில் நேற்றைய தினம் அனுமதிகக்ப்பட்டுள்ளனர். அதன்படி கடந்த ஐந்து தினங்களில் உடல் நிலை மோசமடைந்து வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வரும் கைதிகளின் எண்ணிக்கை 33ஆக உயர்வடைந்துள்ளது. நேற்றுக் காலையிலும் அனைத்து சிறைச்சாலைகளிலும் மருத்துவ அதிகாரிகளால் உண்ணாவிரதமிருக்கும்...
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விவகாரம் தொடர்பில் எதிர்வரும் நவம்பர் மாதம் 7 ஆம் திகதிக்கு முன்னர் நிரந்தரத் தீர்வு பெற்றுத் தரப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனிடம் நேற்று(16.10.2015) உறுதியளித்துள்ளார். ஜனாதிபதி தலைமையிலான நல்லாட்சி அரசு பொதுமன்னிப்பில் தம்மை விடுதலை செய்ய வேண்டும் என்று...
பெண் ஒருவரை கொலை செய்த குற்றத்திற்காக தாயொருவருக்கும் மகனுக்கும் மரண தண்டனை விதித்து கண்டி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவர் மற்றும் கணவனின் தாய் ஆகிய இருவருக்குமே இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2009ம் ஆண்டு மாத்தளை, ரத்தொட்டை பிரதேசத்தில் 30 வயதுடைய பெண் ஒருவர் கூரிய ஆயுதங்கள் மற்றும் தடிகளால்...
"அரசு தம்மை விடுதலை செய்யும் என்ற நம்பிக்கையில்", உண்ணாவிரதமிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் இல்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். உண்ணாவிரதமிருப்பவரின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் அரசுதான் அதற்கான பொறுப்பை ஏற்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். கொழும்பு - மகஸின் சிறைச்சாலையில் உண்ணாவிரதமிருக்கும் அரசியல் கைதிகளை...
பாரிய ஊழல், மோசடிகள் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு உயர்நீதிமன்ற நீதியரசர்கள் நியமிக்கப்படுவதற்கு அதிகாரமில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்ததையடுத்து, அவர் மீதான நேற்றைய விசாரணை ஒத்திவைக்கப்பட்டு மீண்டும் இன்றைய தினம் விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளது. இதேவேளை, பாரிய மோசடி, ஊழல், அரச வளங்கள் மற்றும் அதிகார சிறப்புரிமைகள் துஷ்பிரயோகம், ஆகியவற்றை விசாரணை...
நாடுமுழுவதும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் தமது போரட்டத்தைக் கைவிடவேண்டும் என நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ நேற்று மகஸின் சிறைக்கைதிகள் முன்னிலையில் விடுத்த கோரிக்கையை கைதிகள் ஏற்க மறுத்துள்ளனர். தமது விடுதலை தொடர்பில் ஜனாதிபதியிடமிருந்து ஒரு பதில் கிடைக்கும்வரை உண்ணாவிரதத்தைக் கைவிடப்போவதில்லை என உண்ணாவிரதமிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் அமைச்சர் விஜயதாஸ...
அம்மா, வருவார் வருவார் என ஒவ்வொரு நாளும் எதிர்பார்க்கின்றேன். அம்மா வருவதாக இல்லை. தயவு செய்து எனது அம்மாவை விட்டுவிடுங்கள் என வவுனியாவைச் சேர்ந்த யுவதியான சசிதரன் யதிந்தினி கதறியழுதமை அரசியல் கைதிகளது உறவுகளின் கதறல்களுக்கு மத்தியில் நெஞ்சை உலுக்கியது. அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கொழும்பு – கோட்டையில் உறவினர்கள், அரசியல் வாதிகள் சிவில்...
கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவருமான பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனை மேலும் இரு வாரங்கள் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு நீதிமன்றத்தினால் குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்பாக கடந்த ஞாயிற்றுக்கிழமை குற்றப்புலனாய்வுத் துறையினரால் இவர் கைது...
தமது விடுதலையை வலியுறுத்தி நேற்று மூன்றாவது நாளாக உண்ணாவிரத போராட்டத்தை நடத்திய தமிழ் அரசியல் கைதிகளில் 12 பேரின் உடல் நிலை மோசமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 14 சிறைச்சாலைகளில் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள 217 அரசியல் கைதிகள் தமது விடுதலையை வலியுறுத்தி கடந்த 12ஆம் திகதி உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர். எனினும், இவர்களின் விடுதலை தொடர்பாக...
தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பில், பிரதமர் தலைமையிலான குழு எதிர்வரும் 20ஆம் திகதி கூடி ஆராயும் என்று தேசிய கலந்துரையாடல்கள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார். பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்ட நாட்கள் தடுப்பு காவல் மற்றும் சிறைவாசம் அனுபவிக்கும் தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில், அமைச்சர் மனோ கணேசன்,...
இலங்கை சிறைகளில் அரசியல் கைதிகள் என எவரும் இல்லை என்றும் மாறாக கொலை கொள்ளை குற்றம் சாட்டப்பட்டவர்களே இருக்கிறார்கள் என்றும் நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளமை நியாயமற்றது. இவ்வாறு தெரிவித்துள்ளனர் உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் பெற்றோர். அவர்கள் ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது - நீண்ட நெடுஞ்சிறை வாழ்வை...
Loading posts...
All posts loaded
No more posts