- Saturday
- January 18th, 2025
நவம்பர் மாதம் 13ம் திகதி காலி பிரதேசத்தில் 65 கிலோ மீட்டர் தூர கடற்பகுதியில் மர்மப் பொருள் ஒன்று வானில் இருந்து விழவுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன. இந்தப் பொருள் சுமார் 7 அடி அளவு இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மர்மப் பொருள் என்னவென்பது தொடர்பில் முதலில் கண்டறியப்படாத நிலையில் பின்னர் வானியலாளர்கள் அது...
இலங்கைச் சிறைகளிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளை பிணையில் விடுதலை செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வது தொடர்பான விஷேட கலந்துரையாடல் ஒன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெற்றுள்ளது. இந்தக் கலந்துரையாடலில் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம். சுவாமிநாதன், நீதி ஒழுங்கு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் திலக் மாரப்பன...
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஆராயும் விசேட மாநாடு இன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வின் தலைமையில் அலரி மாளிகையில் நடைபெறவுள்ளது. தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் பல்வேறு தரப்புகளிலிருந்தும் கருத்துக்கள் முன்வைக்கப் படுகின்ற நிலையில் பிரதமர் தலைமையி லான இன்றைய மாநாடு தீர்க்கமான முடிவொன்றை மேற்கொள்ளும் களமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது....
அண்மையில் பாராளுமன்றத்தில் நடைபெற்ற ஜெனிவா பிரேரணை சம்பந்தமான விவாதத்தை தான் புறக்கணிக்கவில்லை என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அன்றைய தினம் தனக்கிருந்த தனிப்பட்ட காரணமொன்றிற்காக அந்த விவாதத்தில் கலந்துகொள்ள முடியவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார். ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட பிரேரனையில் பயங்கரமான விடயங்கள் பல குறிப்பிடப்பட்டுள்ளதாக மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார் நாரஹேன்பிட்டிய அபயராம விகாரையில்...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஆகியோர் பங்கேற்ற நிகழ்வு ஒன்றின் கலை நிகழ்ச்சிகளுக்காக நிமிடம் ஒன்றுக்கு இரண்டு லட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளது. முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் வழிகாட்டல்களுக்கு அமைய பெல்லன்வில உடற் பயிற்சி பாதை மற்றும் உணவு கட்டமைப்பு ஆகியனவற்றை அங்குரார்ப்பணம் செய்யும் நிகழ்விற்காக இரண்டு...
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் எமது நாடு தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நிராகரிக்க முடியாதென தெரிவித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றுபடவேண்டும் எனவும் அழைப்பு விடுத்ததுடன் அரசியல் அமைப்புக்கு உட்பட்டே செயற்பாடுகள் அனைத்தும் முன்னெடுக்கப்படுமெனவும் சுட்டிக்காட்டினார். இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் மனிதாபிமானச் சட்ட மீறல்கள்...
வடமாகாண நட்டலமொத்தன் குளத்தில் நடந்த 51 பாடசாலை பெண் பிள்ளைகள் சாவிற்கும் மூதூரில் பிரஞ்சு தன்னார்வத் தொண்டு நிறுவனத்தில் வேலை செய்த 17 ஊழியர்கள் கொலைச் சம்பவத்திற்கும் விடுதலைப்புலிகளே காரணம் என விசாரணை ஆணைக்குழு குற்றம் சுமத்தியுள்ளது. உடலகம ஆணைக்குழு 2005 ஓகஸ்டிற்கும் நவம்பர் 2006 ஆம் ஆண்டிற்கும் இடையில் இடம்பெற்ற 16 மனித உரிமை...
கோட்டையில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையின் நிலக்கீழ் அதிசொகுசு மாளிகைக்கு நேற்றுக் குறிப்பிட்ட சில ஊடகவியலாளர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தனது பதவிக்காலத்தில் இந்த மாளிகையை நிர்மாணித்திருந்தார். மாளிகையை நிர்மாணிப்பதற்கான நல்லநேரத்தையும் மஹிந்தவின் ஆஸ்தான சோதிடரான சுமணதாச என்பவரே குறித்துக் கொடுத்துள்ளார். மாளிகையின் உள்ளே நுழைவதற்கு இரகசியக் குறியீடுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன் உள்ளே...
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரவிராஜ், ஜோசப் பரராஜசிங்கம் மற்றும் இரண்டு செஞ்சிலுவை சங்க உறுப்பினர்கள் உட்பட்ட 16 கொலைகளுக்கு முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவும் முன்னாள் பிரதியமைச்சர் கருணாவும் பொறுப்பேற்க வேண்டும் என்று கொழும்பு ஆங்கில செய்தி இணையம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அத்துடன் இந்தக்கொலைகளுக்கு தற்போது அவுஸ்திரேலியாவில் வசிக்கும் பறங்கியரான முன்னாள் பொலிஸ்...
வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட 5 வயது சிறுமியான சேயா சந்தவமியின் கொலையுடன் தொடர்புடைய ஒப்புதல் வாக்குமூலமடங்கிய போலிப்பத்;திரத்தில், என்னை கட்டாயப்படுத்தி கைச்சாத்திட வைத்தார்கள் என்று 'கொண்டையா' என்று அழைக்கப்படும் துனேஷ் பிரியஷாந்த தெரிவித்துள்ளார். அவரை பிணையில் எடுப்பதற்காக அவரது தாயார் கையொப்பம் இட்டுள்ளமையால் அவரை விடுதலை செய்ய, கம்பஹா நீதவான் நீதிமன்றம் நேற்று வெள்ளிக்கிழமை (23)...
"வடக்கில் மீண்டும் ஒருபோதும் ஆயுதப்போராட்டம் உருவாகாது. ஆனால், பிரச்சினைக்குத் தீர்வு காணாவிட்டால் ஆயுதப் போராட்டம் உருவாகலாம்'' - இவ்வாறு நாடாளுமன்றில் தெரிவித்தார் ஜே.வி.பியின் தலைவரும் எதிர்க்கட்சியின் பிரதான கொரடாவுமான அநுரகுமார திஸாநாயக்க. மேலும் புலிகளின் ஆயுதக் கொள்வனவு தொடர்பில் கே.பியை பகிரங்க நீதிமன்றத்திற்கு அழைத்து விசாரணைக்கு உட்படுத்தவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். நாடாளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை...
வெள்ளைக் கொடியுடன் சரணடைய வந்தவர்கள், பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் ஆகியோரைக் கொலைசெய்ய வேண்டிய அவசியம் களத்தில் இருந்த இராணுவத்தினருக்கு இருக்கவில்லை என்றும், உயர்மட்டத்தில் இருந்து பிறப்பிக்கப்பட்ட கட்டளையின்படியே அவ்வாறு நடைபெற்றது என்றும் கூறப்படுகின்றது. கட்டளையிட்டவர்களை விசாரிக்கும் வகையில் சட்டத் திருத்தம் அவசியம். இதற்கான பரிந்துரையையும் பரணகம குழு முன்வைத்துள்ளது." - இவ்வாறு வெளிவிவகார அமைச்சர்...
இந்தியாவின் பொதுத்தேர்தல் நடைபெறுவதற்கு முன்னர் போரை முடிவுக்குக் கொண்டுவருமாறு முன்னாள் அரசால் (மஹிந்த அரசு) படையினருக்கு உத்தரவிடப்பட்டிருந்தது என்ற தகவலை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றில் வெளியிட்டார். 2005 ஆகஸ்டில் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கும், முன்னாள் அரசால் புலிகளுக்கு பணம் கொடுக்கப்பட்ட விவகாரத்துக்குமிடையில் தொடர்பிருக்கிறது என்றும் அவர் சபையில்...
நேற்றுகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் விசாரணை செய்யப்பட்டு கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் அவரை 10,000 ரூபா ரொக்கம் மற்றும் ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணையிலும் விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நேற்று...
கொண்டையா எனப்படும் துனேஷ் பிரியஷாந்த விடுதலை செய்யப்பட்டுள்ளார்.கொடதெனியாவ பகுதியில் ஐந்து வயது சிறுமி சேயா கொலை செய்யப்பட்ட வழக்கில் இவர் கைதாகி இருந்தார். குறித்த சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டிருந்த கொண்டைய்யா அந்த வழக்கில் இருந்து ஏற்கனவே விடுவிக்கப்பட்டார். எனினும் அவர் மீதுள்ள வேறு சில குற்றங்களுக்காக தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். இந்தநிலையில் கம்பஹா நீதவான்...
இன்றுகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் விசாரணை செய்யப்பட்டு கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். இன்று காலை விமல் வீரவன்சவிடம் வாக்குமூலம் பதிவு செய்து கொண்ட பின்னர் அவரை கைது செய்து நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர்ருவன் குணசேகர தெரிவித்தார்....
பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் ஐரோப்பிய பயணத்திற்கு தேவையான சகல ஏற்பாடுகளையும் செய்து கொடுக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்ததாக சபை முதல்வர் லக்ஷ்மன் கிரியெல்ல பாராளுமன்றில் தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான காரணம் என்ன என்றும் பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன...
கதிர்காமம் பஸ்நாயக்க நிலமே என்றழைக்கப்படும் கதிர்காமம் ஆலய பொறுப்பாளர் டி.பி.குமாரகே என்பவருக்கு அதிர்ஷ்ட இலாபச்சீட்டில் கிடைக்கப்பெற்ற சுமார் 20 இலட்சம் ரூபாயை, ஆலயத்துக்கே ஒப்படைத்துள்ளார். மேற்படி ஆலயத்துக்கு முன்பாக இருந்து வரும் அதிர்ஷ்ட இலாபச்சீட்டு விற்பனை நிலையத்தில் குறித்த ஆலயப் பொறுப்பாளர் 'மஹாஜன சம்பத' தேசிய லொத்தர் ஒன்றைப் பெற்றுள்ளார். கடந்த 16ஆம் திகதி குழுக்கப்பட்ட...
இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கவுன்ஸிலில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தையும் தாண்டி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நியமித்த மெக்ஸ்வெல் பரணகம ஆணைக்குழுவின் அறிக்கையின் பரிந்துரைகள் பாரதூரமானதாக அமைந்துள்ளன என்று அமைச்சரவை பிரதிப் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:- "பரணமக ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கையை...
இடம்பெற்ற இறுதிக் கட்ட யுத்தத்தின் போது, இலங்கையின் இராணுவத்தினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களினால் பொதுமக்கள் கொல்லப்பட்டதை ஏற்றுக் கொள்வதாக, ஓய்வுபெற்ற நீதியரசர் மக்ஸ்வெல் பரணகம தலைமையிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு தெரிவிக்கின்றது. காணாமல் போனவர்கள் தொடர்பான விசாரணைகளுக்காக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் காலத்தில் நியமிக்கப்பட்ட இந்தக் குழுவினது ஆணைப்பரப்பு, இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்தக் குற்றங்கள்...
Loading posts...
All posts loaded
No more posts