சம்பந்தனின் தோளில் தட்டி விடைபெற்ற மஹிந்த

தேசிய அர­சாங்­கத்தின் 2016 ஆம் ஆண்­டிற்­கான வரவு – செலவுத் திட்டம் நேற்று வெள்­ளிக்­கி­ழமை நிதி­ய­மைச்சர் ரவி கரு­ணா­நா­யக்­க­வினால் பாரா­ளு­மன்­றத்தில் முன்­வைக்­கப்­பட்­டது. இதன் போது முன்னாள் ஜனா­தி­ப­தியும் குருணாகல் மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்பி­ன­ரு­மான மஹிந்த ராஜ­பக்ச மாலை 4.55 மணி­ய­ளவில் சபைக்கு வந்தார். நிதி­ய­மைச்சர் ரவி கரு­ணா­நா­யக்க தனது வரவு – செலவு திட்­டத்தை 2.00...

பிச்சைக்காரனுக்கு பவுடர் போட்டு அலங்காரம்! – பந்துல

அலங்கோலமான பிச்சைக்காரனுக்கு பவுடர் போட்டு அலங்கரித்து விட்டதைப் போன்று வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகள் அமைந்திருப்பதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன கடுமையாக விமர்சித்துள்ளார். இந்த வரவு செலவுத் திட்டம் வெறும் வார்த்தை ஜாலங்களை மட்டுமே கொண்டுள்ளது. வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக பொதுமக்களுக்கு எதுவித சலுகைகளும் வழங்கப்படவில்லை. அத்துடன் நெல்...
Ad Widget

மக்களை ஏமாற்றும் ‘பட்ஜெட்’! – கூட்டு எதிர்க்கட்சி

தேசிய அரசினால் முன்வைக்கப்பட்டுள்ள கன்னி வரவு - செலவு திட்டத்தின் மூலம் அவர்களது பொருளாதாரக் கொள்கை தெளிவாகியுள்ளதுடன், தனியார் துறையை நோக்கிச் செல்லும் இப்பயணமானது நாட்டின் எதிர்காலத்துக்குப் பெரும் பாதிப்பாக அமையும் என்று மஹிந்த தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சி குற்றம்சாட்டியுள்ளது. மக்களுக்குச் சலுகைகளை வழங்கும் போர்வையில் பல முக்கிய சலுகைகளை இல்லாது ஒழிக்கப்பட்டுள்ளது என்று முன்னாள்...

துண்டுவிழும் தொகை 74 ஆயிரம் கோடி ரூபா

2016ஆம் ஆண்டின் வரவு செலவுத் திட்ட துண்டு விழும் தொகை 74 ஆயிரம் ரூபா என்று மதிப்பிடப்பட்டுள்ளது. நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க நேற்று நாடாளுமன்றில் சமர்ப்பித்த வரவு செலவுத் திட்டத்தின்படி 2016 ஆம் ஆண்டுக்கான வருமானம் 2 இலட்சத்து 4 ஆயிரத்து 700 கோடி ரூபா, செலவீனம் 2 இலட்சத்து 78 ஆயிரத்து 700 கோடி...

வரவுசெலவுத் திட்டம் மீதான விவாதம் இன்று!

புதிய அரசாங்கத்தின் 2016 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் மீதான விவாதம் இன்று (21) பாராளுமன்றத்தில் ஆரம்பமாகவுள்ளது. 2016 ஆம் ஆண்டுக்கானதும் நாட்டின் 69 ஆவதுமான வரவுசெலவுத் திட்டத்தினை நேற்று (20) நிதியமைச்சர் ரவிகருணாநாயக்க பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த பின்னர் வரவுசெலவுத் திட்டம் மீதான உரையை நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்து சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று(21)...

2016ம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் (ஒரே பார்வையில்)

எட்டாவது பாராளுமன்றத்தின் 69வது வரவு செலவு திட்ட உரை நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் நேற்று பிற்பகல் 2 மணிக்கு பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டது. பலமான பொருளாதார கொள்கை ஒன்றை ஸ்தாபிப்பது தற்போதைய அரசாங்கத்தின் நோக்கமாகும் என்று நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க இதன்போது தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியன இணைந்த...

2016 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்ட வாசிப்பு ஆரம்பமானது

2016 ஆம் ஆண்டுக்கானதும் 79 ஆவதுமான வரவு செலவுத்திட்ட வாசிப்பு இன்று (21) சற்று முன்னர் பாராளுமன்றத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு வாசிப்பு தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.

இரகசிய தடுப்புமுகாம் குறித்து யாரும் சாட்சியமளிக்கவில்லையாம்! – பரணகம

திருகோணமலையில் இரகசிய தடுப்பு முகாம்கள் இருப்பதாக தமது ஆணைக்குழுவில் எவரும் சாட்சியமளிக்கவில்லை என்றும், அவ்வாறு யாராவது சாட்சியமளித்திருந்தால் நாங்களும் திருமலையில் உள்ளதாகக் கூறப்படும் இரகசிய முகாமுக்கு சென்று பார்த்திருப்போம் என்றும் தெரிவித்துள்ளார் காணாமல்போனோர் குறித்து விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பரணகம. நாங்கள் வடக்கு கிழக்கு மாகாணங்கள் முழுவதும் எமது ஆணைக்குழுவின் ஊடாக...

‘தமிழ்ப் பெயர்ப் பலகைகளை தகர்த்தெறிவோம்’ – ராவணபலய

யாழ்ப்பாணத்தில் நாகதீபு என்ற பெயரை, நயினாதீவு என்று பெயர்மாற்றம் செய்தால், கண்ணில் தென்படுகின்ற அனைத்து தமிழ் வீதிகளின் பெயர்ப் பலகைகளையும் இலங்கையில் எப்பகுதியில் இருந்தாலும் சரி, தகர்த்தெறிவோம் என்று ராவணபலய அமைப்பின் பொதுச் செயலாளர் இத்தன்கந்த சத்தாதிஸ்ஸ தேரர் தெரிவித்தார். பௌத்தர்களின் புனித தீவான யாழ்ப்பாணம், நாகதீப என்ற பெயரை நயீனாதீவு என்று பெயர் மாற்றம்...

2 மணிக்கு வரவு செலவுத் திட்டம்!

எட்டாவது பாராளுமன்றத்தின் முதலாவது வரவு செலவுத்திட்டம் இன்று பிற்பகல் 2 மணிக்கு நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் பாராளுமன்றத்தில் சமர்க்கப்படும். ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்த நல்லாட்சி அரசாங்கத்தின் இந்த முதலாவது வரவு செலவுத்திட்டம் குறித்து ஒருபோதுமில்லாத அளவு மக்கள் பாரிய எதிர்பார்ப்புகளுடன் இருப்பது குறிப்பிடத்தக்கது. இலங்கைக்கு புதியதொரு ஆரம்பமாக அமையவிருக்கும்...

ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜரானார் மஹிந்த

பாரிய மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சற்று முன்னர் ஆஜராகியுள்ளார். அரச தொலைக்காட்சி ஒன்றுக்கு கட்டணம் வழங்காமை தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்காக இன்று மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆணைக்குழு அழைப்பு விடுத்திருந்தது. அத்தியவசிய ஆவணங்கள் சிலவற்றை பிரதிவாதி தரப்பிற்கு அனுப்பி வைப்பதில் தாமதம் ஏற்பட்டமையால் நேற்று இடம்பெற இருந்த...

சீருடை வழங்க வவுச்சர் முறை ஏன்? கல்வி அமைச்சரின் விளக்கம்

சீருடைகளை பெற்றுக் கொள்ள மாணவர்களுக்கு வவுச்சர் வழங்க தீர்மானித்தமையானது, தரமற்ற துணிகளை அவர்களுக்கு வழங்குவதைத் தவிர்க்கவும் இடைத்தரகர்களுக்கு கமிஷன் செல்வதைத் தவிர்க்கவும் 500 மில்லியன் ரூபாய் வரை சேமித்து அவற்றை கல்வி வளர்ச்சிக்கு செலவிடவுமே என, கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். நாட்டில் 42 இலட்சம் பாடசாலை மாணவர்கள் உள்ளனர். அவர்களுக்கு சீருடை வழங்க...

750 குற்ற சம்பவங்களுடன் ராஜபக்ஷ குடும்பத்துக்கு தொடர்பு

கடந்த அரசாங்கத்தில் இடம்பெற்ற இலஞ்சம், ஊழல் மற்றும் மனித படுகொலைகள் தொடர்பான 725 சம்பவங்களுடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குடும்பத்தினருக்கு தொடர்புள்ளதாகவும் இவை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். கடந்த அரசாங்கத்தில் இடம்பெற்ற இலஞ்சம், ஊழல் மற்றும் மனித படுகொலைகள் தொடர்பானமுறைப்பாடுகளுக்கு அமைய, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ...

தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்த பெண் மின்னல் தாக்கி பலி

திருகோணமலை, கோமரங்கடவெல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிவ்லக்கடவெல கிராமத்தில் மின்னல் தாக்கி பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். நேற்று புதன்கிழமை (18) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 50 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். வயலில் இப்பெண் வேலை செய்துவிட்டு கணவருக்கு தொலைபேசியூடாக அழைப்பை மேற்கொண்டிருந்தபோதே மின்னல் தாக்கத்துக்குள்ளானார். இந்நிலையில், இவரை கோமரங்கடவெல வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லும் வழியில்...

விக்னேஸ்வரன் அறிக்கைக்கு சுமந்திரன் பதில்!

வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் வெளியிட்டிருந்த அறிக்கைக்கு பதிலளிக்கும் வகையில், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் நேற்றிரவு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:- நேற்றைய தினம் வட மாகாண சபை முதலமைச்சர் விக்னேஸ்வரன் விடுத்த அறிக்கையில் பொதுத்தேர்தல் நேரத்தின் போது கட்சிக்கு எதிராக செயற்பட்டார் என்ற குற்றச்சாட்டிற்கு தன்னுடைய நீண்ட...

கடற்படையின் இரகசிய முகாமை சுவரிலிருந்த வரிகள் காட்டிக் கொடுத்தன

திருகோணமலைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது அங்கு கடற்படையின் இரகசியத் தடுப்பு முகாம் என்று சொல்லப்பட்ட நிலையத்துக்கும் சென்றோம். அங்கிருந்த சுவர்களில் எழுதப்பட்டிருப்பதை வைத்து பார்க்கின்ற போது, அங்கு பல பேர் தடுத்து வைக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது என்று ஐக்கிய நாடுகள் பணிக்குழுவின் பிரதிநிதிகள் தெரிவித்தனர். இலங்கைக்கு விஜயம் செய்திருந்த காணாமல் போனோர் தொடர்பாக ஆராயும் ஐக்கிய நாடுகள்...

ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைக்க அமைச்சரவை அனுமதி

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பது மற்றும் புதிய தேர்தல் முறைமை தொடர்பிலான ஜனாதிபதியின் யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது . இது குறித்து பிரதமரின் தலைமையில் அமைச்சரவை உப குழு ஒன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக இன்று இடம் பெற்ற கூட்டத்தின் பின்னர் அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் தலைமையில் இன்று...

‘திறமைக்கு தொழில்’ தொழிற்சந்தை கொழும்பு மாவட்டச் செயலகத்தில்

'திறமைக்கு தொழில்' தொழிற்சந்தை இம்மாதம் 20ஆம் திகதி காலை கொழும்பு மாவட்ட செயலகத்தின் முதலாவது மாடியில் அமைந்துள்ள பிரதான கேட்போர்கூடத்தில நடைபெறவுள்ளது. கைத்தொழில் தொடர்பு அமைச்சின் ஆளணி மற்றும் தொழில்வாய்ப்பு திணைக்களத்தின் கீழ் கொழும்பு மாவட்டச் செயலகத்தின் மக்கள் சேவை மத்தியநிலையம் இத்தொழில் சந்தையை ஏற்பாடு செய்துள்ளது. அன்றைய தினம் தொழில்சந்தையில் பங்குபற்றவிருப்போருக்காக பிரபல பேச்சாளர்...

விறகு வெட்டிக் கொண்டிருந்த பாட்டியின் அருகில் சென்ற குழந்தை பரிதாபமாக பலி

மஹியங்கன - தியகோமல பிரதேசத்தில் கோடரி தலையில் பட்டதில் ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்துள்ளது. தனது பாட்டி விறகு வெட்டிக் கொண்டிருந்த போது குறித்த குழந்தை அந்தப் பக்கம் சென்றுள்ளது. இதன்போது குழந்தையின் தலையில் கோடரி தாக்கியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இதனால் படுகாயமடைந்த குழந்தை பிபில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக பதுளை வைத்தியசாலைக்கு...

புலம்பெயர் இலங்கையர் நாடு திரும்பவேண்டும்! பிரதமர் ரணில் அழைப்பு!!

"யுத்தம், அரசியல், மதப் பிரச்சினைகளால் இலங்கையிலிருந்து வெளியேறி வெளிநாடுகளில் குடியேறியுள்ள அனைத்து இலங்கைப் பிரஜைகளும் மீண்டும் நாட்டுக்குத் திரும்பவேண்டும்'' என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார். வெளிநாடுகளில் வாழும் இலங்கைப் பிரஜைகளுக்கு இரட்டைப் பிரஜாவுரிமை வழங்கும் நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை அலரிமாளிகையில் நடைபெற்றது. உள்ளக அலுவல்கள், வடமேல் அபிவிருத்தி மற்றும் கலாசார அமைச்சின் ஏற்பாட்டில்...
Loading posts...

All posts loaded

No more posts