போலியான துண்டுப்பிரசுரங்களை நம்பி ஏமாறாமல் துணிச்சலுடன் வாக்களிக்கவும் – மாவை

தமிழர்களாகிய நாங்கள் மகிந்தவையும், மைத்திரியையும் நிராகரிப்போம்.தேர்தலைப் பகிஸ்கரிப்போம்.வாக்களிப்பை தவிர்ப்போம்.அல்லது எமது வாக்குகளைச் செல்லுபடியற்றதாக ஆக்கிவிடுவோம். என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஜனநாயகப் பிரிவு என்று உரிமை கோரப்பட்ட துண்டுப்பிரசுரங்கள் யாழ்.குடாநாட்டில் பலபாகங்களில் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. இது குறித்து தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய மாவை சேனாதிராஜாவிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது, இவ்வாறான துண்டுப்பிரசுரங்கள்...

பாதுகாப்பு காரணங்களுக்காக வாக்களிப்பை படையினர் தடுக்கமுடியாது – தேர்தல் ஆணையாளர்

மக்கள் வாக்களிப்பதனை தடுக்க படையினருக்கு எவ்வித அதிகாரமும் கிடையாது. பாதுகாப்பு காரணங்களுக்காக வாக்களிக்க வேண்டாம் என படையினர் கோரினால் அதனை கவனத்திற் கொள்ள வேண்டாம் எனவும் அந்த உத்தரவினை உதாசீனம் செய்து வாக்களிப்பில் பங்கேற்குமாறு கோரியுள்ளார். எந்தவொரு பாதுகாப்பு காரணங்களையும் காட்டி படையினர் வாக்காளர்கள் வாக்களிப்பதனை தடுத்து நிறுத்து முடியாது என தேர்தல் ஆணையாளர் மஹிந்த...
Ad Widget

வாக்காளர் அட்டை கிடைக்கப் பெறாதோர் தபால் நிலையங்களில் பெற்றுக்கொள்ள வசதி

வீட்டிலில்லாமை மற்றும் வேறு ஏதேனும் காரணத்தினால் வாக்காளர் அட்டை கிடைக்கப்பெறாதவர்கள் எஞ்சியுள்ள நாட்களில் தமது பிரதேசத்திற்குப் பொறுப்பான தபால் நிலையங்களுக்கு நேரில் சென்று அடையாளத்தை உறுதிசெய்து அவற்றை பெற்றுக்கொள்ளுமாறு தபால் மா அதிபர் ரோஹண அபயரட்ன தெரிவித்தார். வாக்காளர் அட்டை விநியோகிக்கப்பட்ட தினத் தன்று அதனுடன் சம்பந்தப்பட்ட நபர்கள் வீட்டிலில்லாமை அல்லது தபாலில் ஏற்பட்டிருந்த ஏதேனும்...

காங்கேசன்துறை வரையான ரயில் சேவையின் புதிய நேர அட்டவணை

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வரை நடைபெற்ற ரயில் சேவை கடந்த 2ஆம் திகதி முதல் காங்கேசன்துறை வரையில் நீடிக்கப்பட்டதையடுத்து புதிய ரயில் சேவை அட்டவணையை யாழ். பிரதம புகையிரத நிலைய அதிபர் ரி.பிரதீபன் திங்கட்கிழமை (05) வெளியிட்டார். குளிரூட்டிய கடுகதி ரயில் காலை 5.50 மணிக்கு கொழும்பில் இருந்து புறப்பட்டு 11.56 மணிக்கு யாழ்ப்பாணத்தை வந்தடையும் ரயில், யாழ்ப்பாணத்திலிருந்து...

ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு வீதிகள் மூடப்படும்

2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் வாக்கெண்ணும் நிலையங்களுக்கு பாதுகாப்பு வழங்கும் பொருட்டு 2015 ஜனவரி மாதம் 6ஆம் திகதி மாலை 6 மணி தொடக்கம் மறுஅறிவித்தல் வரை யாழ். நகரப்பகுதியில் குறிப்பிட்ட சில வீதிகள் மூடப்பட்டிருக்கும் என யாழ். மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ஏ.ரவிந்திர வைத்யலங்கார, திங்கட்கிழமை (05) தெரிவித்தார். காந்தி வீதி,...

தெளிவாக இருப்போம்: இந்த சிறிசேன அல்ல அந்த சிறிசேன!

எங்கள் பொது எதிரணியின் சின்னம், அன்னப்பறவை சின்னம். எங்கள் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன போட்டியிடும் சின்னம், அன்னப்பறவை சின்னம். இதை நாடு முழுக்க வாழும் தமிழ் மக்கள் மனதில் கொண்டு வாக்களிக்க வேண்டும். ஆர். ஏ. சிறிசேன என்ற ஒரு வேட்பாளரை தேடிப்பிடித்து, அவரை போட்டியிட வைத்து, அவருக்கு மைத்திரிபாலவை போல் ஆடை உடுத்தி,...

வடக்கு மக்களை குழப்ப சதி: நம்ப வேண்டாம் என்கிறார் சிவிகே

வட மாகாண மக்களை குழப்பும் வகையில் அரச தரப்பினால் மைத்திரிபால சிறிசேனாவிற்கு எதிராக போலி பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையினால் வட மாகாண மக்களை அவதானமாக இருக்குமாறு வடக்கு மாகாண அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் வேண்டுகோள் விடுத்துள்ளார். மைத்திரிபால சிறிசேனாவிற்கு எதிராக அரச தரப்பினால் மக்களை குழப்பும் வகையில் துண்டு பிரசுரங்கள் மற்றும் மாதிரி வாக்குசீட்டுகள் என்பன விநியோகிக்கப்பட்டு...

ஜனாதிபதி தேர்தல் பரப்புரை நடவடிக்கைகள் இன்று நள்ளிரவுடன் நிறைவு

ஜனாதிபதி தேர்தல் பரப்புரை நடவடிக்கைகள் இன்று நள்ளிரவு 12 மணியுடன் நிறைவுபெறவுள்ளது. இன்று நள்ளிரவு 12 மணிக்கு பின்னர் ஜனாதிபதி தேர்தலுடன் தொடர்புடைய எந்தவொரு பரப்புரை நடவடிக்கைகளையும் முன்னெடுக்க முடியாது என மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் குறிப்பிட்டுள்ளார். இன்று நள்ளிரவுக்கு பின்னர் முன்னெடுக்கப்படுகின்ற சட்டவிரோத தேர்தல் பரப்புரைகளை தடுப்பதற்கான ஒழுங்குகளை மேற்கொண்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம்...

ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பது எவ்வாறு?

ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பது எவ்வாறு என்பது தொடர்பாக தேர்தல்கள் திணைக்களம் தெளிவுபடுத்தியுள்ளது. தேர்தலில் 22 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர்களில் தங்களுக்குரியவரை புள்ளடியிட்டு வாக்களிப்பதா? அல்லது ஒன்று, இரண்டு, மூன்று என இலக்கமிட்டு வாக்களிப்பதா? என்பது குறித்து வாக்காளர்கள் மத்தியில் குழப்பம் நிலவுகின்றது. இது தொடர்பான விபரம் வருமாறு: வாக்காளர்கள் தனியொருவருக்குத் தமது வாக்கை அளிக்கலாம். அல்லது...

மாநகர சபை எல்லைக்குள் திண்ம கழிவகற்றல் நடவடிக்கை

டெங்கு நோய்த்தாக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் டெங்கு ஒழிப்பு விசேட வேலைத்திட்டத்தின் கீழ் மாநகரசபை எல்லைக்குட்பட்ட 23 வட்டாரங்களில் திண்மக்கழிவுகள் அகற்றும் பணிகள், வியாழக்கிழமை(01) முதல் முன்னெடுக்கப்பட்டு இந்த மாதம் முழுவதும் மேற்கொள்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக யாழ். மாநகர ஆணையாளர் செல்லத்துரை பிரணவநாதன் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில், இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வழமையைவிட மேலதிகமாக...

யாழ். மத்திய கல்லூரியை சூழவுள்ள வீதிகளை பயன்படுத்த தடை ; பொலிஸ் அறிவிப்பு

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியைச் சூழவுள்ள வீதிகளினூடாக அனுமதிக்கப்பட்ட வாகனங்களைத் தவிர ஏனையவை செல்ல அனுமதிக்க முடியாது என யாழ்ப்பாணம் போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்தார். எதிர்வரும் 8 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் யாழ். மாவட்ட வாக்குகளை எண்ணும் நிலையமாக இம்முறையும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியே தெரிவு செய்யப்பட்டுள்ளது. எனவே எதிர்வரும் 8,9 ஆம்...

முப்படையினரும் களத்தில், அவசர இலக்கங்களும் அறிவிப்பு

கடந்த சில நாட்களாக தொடர்ந்த சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கைகள் மற்றும் மீட்பு பணிகளில் மூப்படையினரும் ஈடுபட்டு வருவதுடன் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் அமைக்கப்பட்டுள்ள 409 நிவாரண முகாம்களில் படையினர் தமது உதவிகளை வழங்கி வருவதாக இராணுவ பேச்சாளரும் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடக மைய பணிப்பாளருமான பிரிகேடியர் ருவன்...

யாழில் கிரிக்கெட் பயிற்சி முகாம்

யாழில் அனைத்து பாடசாலையிலுமுள்ள 13-19 வயதிற்குட்பட்ட கிரிக்கெட் வீரர்களுக்கான பயற்சி முகாம் ஒன்று யாழ்.மத்திய கல்லாரியில் எதிர்வரும் 28,29 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது. குறித்த பயிற்சி முகாமை நடாத்துவதற்கு என கொழும்பில் இருந்து கிரிக்கெட் பயிற்சியாளர்களுடன் இலங்கை சுழல்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனும் வருகை தரவுள்ளார். எனவே இந்த பயிற்சி முகாமிற்கு யாழிலுள்ள அனைத்து பாடசாலை...

மோசமான காலநிலையையடுத்து சிவப்பு அறிவித்தல்!

நாட்டில் நிலவுகின்ற மிக மோசமான காலநிலையை அடுத்து நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் சிவப்பு அறிவித்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன. புத்தளம் முதல் காங்கேசன்துறை ஊடாக பொத்துவில் வரை கரையோரபகுதிகளில் வாழும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, மலையகத்துக்கான ரயில் சேவைகள் முற்று முழுதாக இரத்து செய்யப்பட்டுள்ளன என்று ரயில்வே கட்டுப்பாட்டறை அறிவித்துள்ளது. அத்துடன், மட்டக்களப்புக்கான...

இ-ரீடர்கள் தூக்கத்தையும் ஆரோக்கியத்தையும் கெடுக்கும்

இ-ரீடர்ஸ் (E-Readers) என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் மின்படிகளை உறங்கச் செல்வதற்கு முன்னர் படுக்கையில் படிக்கும் பழக்கத்தால் ஒருவரின் தூக்கம் கெடுவதாகவும், அதனால் அவரது ஒட்டுமொத்த ஆரோக்கியமும் பாதிக்கப்படக்கூடும் என்றும் அமெரிக்க மருத்துவர்கள் எச்சரித்திருக்கிறார்கள். புத்தகம் என்றால் அது காகிதத்தில் அச்சடிக்கப்பட்ட புத்தக வடிவில் மட்டுமே இருந்த நிலைமை மாறி இன்று மின்படிகளிலும் புத்தகங்கள் வெளியிடப்படுகின்றன. ஆங்கிலத்தில்...

நாட்டின் அனைத்து பாகங்களிலும் மழை பெய்வதற்கான சாத்தியம்?

காலநிலை மாற்றத்தினால் இன்று (22) நாட்டின் அனைத்து பாகங்களிலும் மழைவீழ்ச்சியினளவு அதிகரிப்பதற்கான சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றது எனவும் வடக்கு மத்திய வடமத்திய கிழக்கு ஊவா மாகாணங்களில் மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் இடியுடன் கூடிய மழைக்கு சாத்தியம் நிலவுவதாகவும் வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. அத்துடன் மற்றும் பல பிரதேசங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய...

வேகத்தை குறையுங்கள் , இல்லையேல் சட்டநடவடிக்கை

யாழ். மாவட்டத்திலுள்ள வீதிகளில் டிப்பர் ரக வாகனம், ஏனைய வாகனங்கள் அதிக வேகத்துடன் சென்றால் எதிர்காலத்தில் சாரதிகளுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என யாழ். மாவட்ட போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி சமிந்தசில்வா தெரிவித்தார். போக்குவரத்து பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வரும் மாதாந்த அமர்வு அண்மையில் இடம்பெற்றது. அதன்போதே போக்குவரத்துப் பொலிஸ் பொறுப்பதிகாரி இதனை தெரிவித்தார் . அவர்...

காங்கேசன்துறை – அம்பாந்தோட்டை வரையான கடலோரங்களில் மழை?

நாட்டின் பெரும்பாலான கடலோரப்பகுதிகளில் இன்று (15) இடி காற்றுடன் மழை பெய்யக்கூடிய சாத்தியம் நிலவுவதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக முல்லைத்தீவு மன்னார் காங்கேசன்துறை வரையான மாத்தறை திருகோணமலை பொத்துவில் மட்டக்களப்பு அம்பாந்தோட்டை வரையான கடலோரங்களில் இடி காற்றுடன் கூடிய மழை பெய்யலாம் எனவம் வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. அத்துடன் பெரும்பாலான கடலோரங்களில்...

நாவலர் விழா!

யாழ்ப்பாணம் தமிழ் சங்கம் நடத்தும் நாவலர் விழா நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணிக்கு நல்லூர் துர்க்காதேவி மணி மண்டபத்தில் நடைபெறவுள்ளது. யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத் தலைவர் பேராசிரியர் தி. வேல்நம்பி தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்வில் சிறப்புரையை "நாவலரின் பன்முக ஆளுமை" என்ற தலைப்பில் உரும்பிராய் இந்துக்கல்லூரி ஆசிரியர் தி.செல்வமனோகரன் நிகழ்த்துவார். தொடர்ந்து...

க.பொ.த சா. தர பரீட்சை முறைக்கேடுகள் தெரிவிக்க தொலைபேசி இலக்கங்கள்

க.பொ.த சாதாரண தர பரீட்சை முறைக்கேடுகள் தொடர்பான முறைப்பாடுகளை பரீட்சைத் திணைக்களத்தின் 1911 என்ற ஹொட்லைன் இலக்கம் அல்லது 0112785211 பொது தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு தெரிவிக்க முடியும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று (09) காலை 8.30 மணிக்கு ஆரம்பித்த க.பொ.த சாதாரண தர பரீட்சை எதிர்வரும் டிசம்பர் 18ஆம் திகதி வரை...
Loading posts...

All posts loaded

No more posts