- Saturday
- January 18th, 2025
கடந்த சில நாட்களாக வங்காள விரிகுடாக் கடலில் காணப்பட்ட தாழமுக்க வலயமானது தற்போது தாழமுக்கமாக வலுவடைந்துள்ளது. அது தற்போது இலங்கையின் வடகிழக்கிற்கு மிக அண்மையில் காணப்படுகிறது. இதன் தாக்கத்தினால் மேகமூட்டத்துடன் கூடிய மழை கொண்ட காலநிலை இன்றும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டிலும் சூழவுள்ள கடல் பிராந்தியங்களிலும் கடும் காற்றும் வீசும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக இலங்கைத்தீவின்...
வானிலையில் ஏற்பட்டுள்ள தாழமுக்க மாற்றம் தற்போது கிழக்கு பாகத்தில் நிலை கொண்டுள்ளது. இதனால் நாட்டின் அனைத்து பாகங்களிலும் இன்றும் (15) அதிக மழை பெய்வதற்கான சாத்தியம் நிலவுகிறது என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் அனைத்து பாகங்களிலும் பகல் இரவு என எந்நேரங்களிலும் இம் மழை பெய்யலாம் எனவும் அத்துடன் இம் மழைவீழ்ச்சியினளவு 150...
வானிலையில் ஏற்பட்டுள்ள தாழமுக்க மாற்றத்தினால் நாட்டின் அனைத்து பாகங்களிலும் இன்று (14) அதிக மழை பெய்வதற்கான சாத்தியம் நிலவுகிறது என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் அனைத்து பாகங்களிலும் பகல் இரவு என எந்நேரங்களிலும் இம் மழை பெய்யலாம் எனவும் அத்துடன் இம் மழைவீழ்ச்சியினளவு 100 மில்லிமீற்றரைத் தாண்டலாம் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது. குறிப்பாக...
நீண்டகாலமாக இலங்கைச் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரி நாளை 13ஆம் திகதி வடக்கு, கிழக்கில் பூரண கடையடைப்புப் போராட்டம் நடைபெறவுள்ளது. இப் போராட்டத்திற்கு அரசியல் கட்சிகளும் பொது அமைப்புக்களும் அழைப்பு விடுத்துள்ளன. அனைத்துத் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தும் விதமாக நாளை வெள்ளிக்கிழமை வடக்கு கிழக்கு மாகாணங்களில் கடையடைப்பு...
அரசியல் கைதிகள் அனைவரதும் விடுதலையை வலியுறுத்தி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டம் வெள்ளிக்கிழமை(13-11-2015) திட்டமிட்டவாறு நடைபெறும் என தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் அறிவித்துள்ளார். அவரது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது பல நூற்றுக் கணக்கானவர்கள் தசாப்தகாலமாக கொடிய பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் சிறைகளில் வாடும்போது ஒரு சிலருக்கு மட்டும் பிணைவழங்குவதன் மூலம் சர்வதேச சமூகத்தை ஏமாற்றுவதற்கு...
அரசியல் கைதிகளின் விடுதலைக்காக எதிர்வரும் 13ஆம் திகதி வெள்ளிக்கிழமை வடக்கு, கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்பாடு செய்துள்ள பூரண ஹர்த்தாலுக்கு மக்களை ஒத்துழைக்குமாறு கோரியுள்ளார் வடக்கு மாகாண அமைச்சர் பா. டெனிஸ்வரன். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு:- "கடந்த மாதம் தமிழ் அரசியல் கைதிகள் முன்னெடுத்த உண்ணாவிரதப் போராட்டம் ஜனாதிபதியின்...
யாழ்.மாவட்டத்தில் வாகனங்களுக்கு புகைப்பரிசோதனை மேற்கொள்ள வருபவர்கள் முக்கிய ஆவணங்களை கொண்டு வருவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதென்பதுடன் அவ்வாறு கொண்டுவரத் தவறும் பட்சத்தில் புகைப்பரிசோதனை மேற்கொள்ளப்படமாட்டாது என யாழ்.மாவட்டச் செயலகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் புகைப்பரிசோதனையின் போது மூலப் பதிவுச் சான்றிதழ் (Original Certificate of Registration) அல்லது வாகன அடையாள அட்டை மூலப்பிரதி (Original Vehicle Identy Card) இனை...
வடக்கு, கிழக்குக் கடல் பகுதிகளில் கடும் கடல் கொந்தளிப்பு அபாயம் நீடிப்பதால் மீனவர்களை கடலுக்குச் செல்லவேண்டாம் என திருநெல்வேலி வானிலை அவதானிப்பு நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. யாழ்ப்பாணத்தில் இருந்து வடகிழக்குத் திசையில் 300 கிலோமீற்றருக்கு அப்பால் மணிக்கு 300 கிலோமீற்றர் வேகத்தில் தாழமுக்கம் மையங்கொண்டுள்ளது. இதனால் கடும் காற்று வீசுவதுடன் மிகக் கொந்தளிப்பான கடலும் காணப்படும்....
காணாமற் போனோர் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் எதிர்வரும் டிசெம்பர் மாதம் 11 ஆம் திகதியில் இருந்து 16 ஆம் திகதி வரை யாழ். மாவட்டத்தில் நடைபெறும் என யாழ். மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார் யாழ். மாவட்டச்செயலர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பாக...
2015-ம் ஆண்டு வாக்காளர் இடாப்பிற்கான பெயர்களை உள்வாங்கும் இறுதிக்கட்ட நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் தெரிவித்துள்ளார். 2015ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பிற்கு பெயர் உள்வாங்கப்படாத, வாக்களிக்க தகுதியானவர்கள் இருப்பார்களாயின் அவர்கள் தமது உரிமை கோரிக்கை கடிதத்தை தேர்தல்கள் செயலகத்திற்கு எதிர்வரும் 12ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டார்....
யாழ்.மாவட்டத்தில் நடைபெறும் சமூக விரோதச் சம்பவங்கள் மற்றும் போதைப் பொருள் பாவனை, கடத்தல் போன்ற சம்பவங்கள் தொடர்பாக அறிவிப்பதற்கான தொடர்பிலக்கத்தினை யாழ்.அரச அதிபர் என்.வேதநாயகன் நேற்று அறிவித்துள்ளார். 0212225000 என்ற எண்ணிற்கு அழைத்து அரச அதிகாரிகளின் பொறுப்பற்ற தன்மை உள்ளிட்ட சகலவிதமான முறைப்பாடுகளையும் அறிவிக்கலாம் என்றும் அரச அதிபர் தெரிவித்துள்ளார். மாவட்ட செயலகத்திற்கு வழங்கப்படும் அனைத்து...
இலங்கை பொலிஸ் மோட்டார் வாகனச் சட்டத்தின் பிரகாரம் மோட்டார் சைக்கிள் பெற்றோல் தாங்கியில் சிறுவர்களை வைத்து கொண்டு செல்வது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் மோட்டார் போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பதிகாரி ஆர்.துஷார திலங்க ஜெயலால் தெரிவித்தார். சிறுவர்களை விபத்துக்களில் இருந்து பாதுகாக்கும் நோக்கில் குறித்த சட்டம் இலங்கை பொலிஸ் மோட்டார் வாகனச் சட்டத்தின்...
வடமாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டு மாபெரும் மலர்க் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வடமாகாண சுற்றாடல் அமைச்சின் ஏற்பாட்டில், வடமாகாண தாவர உற்பத்தியாளர்கள் சங்கம் பங்கேற்கும் இம்மலர்க் கண்காட்சி நல்லூர் சங்கிலியன் பூங்காவில் (கிட்டு பூங்கா) நாளை வியாழக்கிழமை (05.11.2015) பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமாக உள்ளது. இதனை வடமாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா சம்பிரதாயபூர்வமாகத் திறந்து...
ஆவணப்படம், குறும்படம் தயாரித்தல் தொடர்பான கருத்தரங்கொன்று எதிர்வரும் டிசெம்பர் மாதம் 14 ஆம் திகதியிலிருந்து 18 ஆம் திகதி வரை அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது. ஆசிய திரைப்பட மையத்தின் பங்களிப்புடன் இணைந்து தகவல் திணைக்களத்தின் அரசாங்க திரைப்பட பிரிவினரால் இதற்கென ஏற்பாடுகள் அனைத்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. நடைபெறவுள்ள இக்கருத்தரங்கு இந்தியாவின் சென்னை...
யாழ்ப்பாணத்தில் பெய்துவரும் கடும் மழை காரணமாக வயிற்றோட்டத்தால் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்தும் பெய்து வரும் கடும் மழை காரணமாக நோய் தொற்றுக்குள்ளான நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தநோய் தொற்றுக்களிலிருந்து மக்கள் தங்களை பாதுகாப்பதற்காக சுட்டாறிய நீரை பருகுமாறு யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நந்தகுமாரன் பொதுமக்களிற்கு கோரிக்கை விடுத்துள்ளார்....
தற்போது சந்தையில் மலிவு விலையில் விற்கப்படும் திராட்சைப் பழங்களை வாங்கி உட்கொள்ள வேண்டாமென கிண்ணியா பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி எம்.எச்.எம்.றிஸ்வி இன்று ஞாயிற்றுக்கிழமை மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார். கிண்ணியாவில் சனிக்கிழமை (31) வாராந்தச் சந்தையில் ஒரு கிலோகிராம் திராட்சைப்பழம் 100 ரூபாய் படி விற்கப்பட்ட திராட்சைப்பழத்தை வாங்கி உட்கொண்ட சில மணி நேரங்களில் வாந்தியும் தலைச்சுற்றும்...
யாழ்.போதனா வைத்தியசாலையில் நாளை மறுதினம் தொடக்கம் நோயாளரைப் பார்வையிட வருவோர் மற்றும் சிகிச்சை பெறவருவோர் விடயத்தில் புதிய நடைமுறைகள் பின்பற்றப்படவுள்ளதாக வைத்தியசாலைப் பணிப்பாளர் அறிவித்துள்ளார். இந்த நடைமுறைகளுக்கு பொதுமக்கள் அனைவரையும் பூரண ஒத்துழைப்பு வழங்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். விடுதிகளில் தங்கி சிகிச்சை பெறும் நோயாளர்களை பார்வையிடுபவர்களுக்கான நேரங்கள் மாற்றப்பட்டுள்ளது. குறிப்பாக காலை 6மணிமுதல் காலை...
தமிழ் அரசியல் கைதிகளை தீபாவளிக்கு முன்னர் விடுவிக்க வேண்டும். இல்லையேல் அரசாங்கத்தின் தீபாவளி தொடர்பான நிகழ்வுகளில் சுயகௌரவமுடைய எந்தவொரு இந்து மகனும் கலந்து கொள்ளமாட்டான் என்று அகில இலங்கை இந்து மாமன்றம் எச்சரித்துள்ளது. இது குறித்து இந்துமாமன்றத்தின் தலைவர் கந்தையா நீலகண்டன், பொதுச் செ லாளர் பொ.கதிர்காமநாதன் ஆகியோர் இணைந்து விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இந்த...
புனர்வாழ்வு அதிகார சபையினரின் ஏற்பாட்டில் இம்மாதம் 29, 30 ஆந் திகதிகளில் உடுவில் மற்றும் கரவெட்டி பிரதேச செயலங்களில் நடமாடும் சேவைகள் இடம்பெறவுள்ளன. கோப்பாய், தெல்லிப்பளை, உடுவில் ஆகிய பிரதேச செயலக பிரிவினைச் சேர்ந்த பயனாளிகளுக்கு உடுவில் பிரதேச செயலகத்தில் இம்மாதம் 29 ஆந்ததிகதி மு.ப 8.00 மணிமுதல் பி.ப. 4.00 மணிவரையும் பருத்தித்துறை, மருதங்கேணி,...
பதப்படுத்தப்பட்ட இறைச்சி உணவுவகைகளை உண்பது புற்றுநோயை உண்டாக்கும் என்று கூறுகின்ற உலக சுகாதார நிறுவனம், சிவப்பு இறைச்சி வகைகளை உண்பது அந்த ஆபத்தை அதிகரிக்கும் என்று முடிவு செய்துள்ளது. தினமும் 50 கிராம் அளவுக்கு பதப்படுத்தப்பட்ட இறைச்சியை உண்பது குடல் புற்றுநோய் ஆபத்தை 18 வீதத்தால் அதிகரிக்கும் என்றும் அந்த நிறுவனம் கண்டறிந்துள்ளது.
Loading posts...
All posts loaded
No more posts