- Saturday
- January 18th, 2025
தென்னிந்தியாவில் வழக்கத்தை விட அளவுக்கு அதிகமாக பொழியும் மழை பெப்ரவரி மாதம் வரை தொட வாய்ப்புள்ளதாக ஐ.நா. வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பருவ நிலை மாற்றம் மற்றும் எல்-நினோ குறித்து ஐ.நா. நேற்று வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- தென்னிந்தியாவில் வடகிழக்குப் பருவ மழை அதிகமாகப் பொழிய எல்-நினோ...
உயர் தரத்தில் விஞ்ஞானம் தவிர்ந்த ஏனைய துறையில் கல்வி கற்றவர்களையும் மருத்துவ துறைக்குள் உள்ளீர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்த இதனை நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் முன்வைத்த வாய் மூல கேள்விக்கு பதில் வழங்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். இது வரைக்காலமும்,...
ரயில்களில் டிக்கட் இன்றி பயணிப்பவர்களுக்கு 5000 ரூபா தண்டப் பணம் விதிக்கப்படுவதோடு, கட்டணம் இரு மடங்காக வசூலிக்கப்படும் எனவும், போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் இந்த நடவடிக்கை அமுல்படுத்தப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை தற்போது ரயிலில் டிக்கட் இன்றி பயணிப்பவர்களுக்கு 2500 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
அரச பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்கள் இதுவரையில் பாடநூல்களை பெற்றுக் கொள்ளாத பாடசாலை மாணவர்கள் பாடநூல்களை இணையத்தில் தரவிறக்கம் செய்து பெற்றுக் கொள்ளலாம். பொருத்தமான மொழியை தெரிவு செய்து பின்பு தரத்தை தெரிவு செய்து குறித்த பாடநூல்களை பெறமுடியும். http://www.edupub.gov.lk/BooksDownload.php
சரியான புரிந்துணர்வு இல்லாமையால் மக்கள் இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பில் முறைப்பாடுகளை முன்வைக்க தயங்குவதாக, இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதனால் ஊழலுடன் தொடர்புடைய நபர்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல் ஏற்படுவதாக ஆணைக்குழு மேலும் குறிப்பிட்டுள்ளது. எதுஎவ்வாறு இருப்பினும் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் மக்களுக்கு தௌிவூட்டும் வேவைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும்...
வளிமண்டலத்தில் நிலவும் குழப்பநிலை தொடர்ந்தும் நீடித்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. இதனால் நாட்டின் பெரும்பாலான இடங்களில் குறிப்பாக பிற்பகலில் மழை அல்லது இடியுடனான மழை பெய்யக்கூடிய சாத்தியம் உள்ளதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. ஒருசில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிக கடும் மழை பெய்யலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது. இடியுடனான மழை பெய்யும் சந்தர்ப்பங்களில்...
யாழில் டெங்கு காய்ச்சல் , வயிற்றோட்டம், எலிக்காய்ச்சல் மற்றும் உண்ணிக்காய்ச்சல் ஆகிய தொற்று நோய்கள் அதிகரித்து வருவதாக எச்சரித்துள்ள யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் எஸ்.சத்தியமூர்த்தி, இவை தொடர்பில் சுகாதார பிரிவினரால் விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறும் அறிவுறுத்தியுள்ளார். இவ்வருடத்தில் இதுவரை இந்நான்கு தொற்று நோய்களினால் ஆயிரத்து 734 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் டெங்கு காய்ச்ச...
யாழ்.போதனா வைத்தியசாலையில் நோயாளர்களை பார்வையிடுவோருக்கென விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் வைத்தியசாலை நிர்வாகத்தினரால் தளர்த்தப்பட்டுள்ளன. இதில் நோயாளர்களை பார்வையிட வருவோர் அமர்ந்திருப்பதற்கென ஆசனங்களும் கடந்த வாரம் முதல் ஒதுக்கப்பட்டுள்ளது. யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளர்களை பார்வையிடுவதற்கென வருவோர்கள் பாஸ் நடைமுறையின் படியே கடந்த சில வருடங்களாக அனுமதிக்கப்பட்டு வந்தனர். இதேபோல் பார்வையிட வருவோர் உள்ளே அனுமதிக்கப்படும் வரையில் வைத்தியசாலைக்கு...
இலங்கைக்கு அருகில் நிலவும் வளிமண்டல தளம்பல் நிலை காரணமாக நாட்டிலும் நாட்டைச் சூழவுள்ள கடல் பிரதேசத்திலும் தொடர்ச்சியாக மழை பெய்யும் வாய்ப்பு அதிகம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் வானம் இருள் சூழ்ந்து காணப்படும் எனவும், இதன்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும், தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, சில இடங்களில் 100 மில்லிமீற்றரிலும்...
யாழ்ப்பாணத்திலுள்ள பாதுகாப்பான ரயில் கடவைகள் ரயில் வருவதற்காக மூடப்படும் போது, ரயில் கடவையானது எப்போது திறக்கப்படும் என்ற அவசரத்தில் எதிரே வரும் வாகனங்களுக்கு இடம் விட்டுக்கொடுக்க வேண்டும் என்று நினைக்காமல் வீதியை முழுமையாக ஆக்கிரமித்து நிற்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. யாழ்ப்பாணத்தில் இரட்டை வீதிகள் என்பது இல்லாமல், இருவழிக்கு ஒரே வீதியில் நடுவில் வெள்ளைக்...
இம்முறை வரவுசெலவில் அத்தியவசிய பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது. விலைக்குறைப்பை கண்காணிக்க நுகர்வோர் அதிகாரசபையூடாக எமது அமைச்சு நடவடிக்கை எடுக்கும் என சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார். வரவுசெலவு 2016 இரண்டாம் வாசிப்பின் மீதான விவாதம் நேற்று (26) பாராளுமன்றில் இடம்பெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து தெரவிக்கையைில், மக்களுக்கு...
இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2 மணிக்கு பின்னர் நாட்டில் சகல பகுதிகளில் வாழ்கின்ற பொதுமக்களையும் விழிப்பாக இருக்குமாறு வானிலை அவதான நிலையம் அறிவுறுத்தியுள்ளது. பிற்பகல் 2 மணிக்கு பின்னர் ஆகக் கூடிய பாதிப்புகளை ஏற்படுத்தும் வகையில் மின்னல் தாக்கும் என்றும் அந்நிலையம் அறிவுறுத்தியுள்ளது.
சந்திரனை சுற்றி பல வர்ணங்களுடன் வெளிச்சமான வளையங்கள் தோற்றுவதன் ஊடாக எதிர்வரும் நாட்களில் புயலுடன் கடும் மழை பெய்யக் கூடிய சாத்தியக் கூறுகள் தோன்றும் என நட்சத்திர உயிரியல் விஞ்ஞான ஆய்வு நிபுணர் கீர்த்தி விக்கிரமரத்ன எதிர்வு கூறப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். வானவில்லைப் போன்று சந்திரனைச் சுற்றி தோன்றியிருந்த வளையங்களை கடந்த சில நாட்களாக இரவு வானில்...
யாழ்.நகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் டெங்கு காய்ச்சலின் தீவிரம் அதிகரித்து வருவதாக யாழ்.போதனா வைத்திய சாலை தரப்பினர் எச்சரித்துள்ளனர். கடந்த இரு நாட்களில் மட்டும் எட்டுப்பேர் டெங்கு காய்ச்சலினால் பீடிக்கப்பட்ட நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அத்தரப்பினர் தெரிவித்துள்ளனர். தற்போது மழை காலம் ஆரம்பித்து உள்ள நிலையில், மழை பெய்து வெற்றுக் காணிகள், வீட்டில் காணப்படும் பொருட்களில்...
இலங்கையின் குளியாப்பிட்டிய பிரதேசத்தில் அறைகளை வாடகைக்கு விடும் விடுதியொன்றில் ரகசியக் கமரா மூலம் அறைகளில் நடைபெறுபவற்றை பதிவு செய்து வந்த நபர்களை பொலிசார் கைது செய்துள்ளனர். பிளக் பொயிண்ட் இன் ஒரு துவாரத்திற்குள் ரகசியக் கமரா வைக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. குறித்த ஹொட்டலில் உள்ள அறைகளில் சூட்சுமமான முறையில் அந்தரங்க விடயங்கள் பதிவு செய்யப்பட்டு அவை வேறொரு...
யாழ் மாவட்டத்தில் விற்பனை செய்யப்படும் நெற்செய்கைக்கான உரங்களை (யூரியா, சுப்பர் பொசுபரசு (TSP), மியூரேற் பொட்டாசு (MOP), விவசாயிகள் நிர்ணய விலையை விட அதிக விலைக்கு கொள்வனவு செய்யும் நிலை ஏற்படின் அது தொடர்பான முறைப்பாட்டினை மாவட்ட செயலகத்திற்கு அறியத்தருமாறு யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்...
மோட்டார் சைக்கிளில் பயணிக்கும் சிறுவர்கள் தலைக்கவசம் அணிவது கட்டாயமாக்கும் சட்டத்தை அறிமுகப்படுத்த வீதி பாதுகாப்பு தொடர்பிலான தேசிய சபை தீர்மானித்துள்ளது. மோட்டார் சைக்கிளில் பாதுகாப்பற்ற முறையில் சிறுவர்கள் பயணிக்கும்போது விபத்துக்கள் நேர்வதாக சபையின் தலைவர் வைத்தியர் சிசிர கோதாகொட தெரிவித்துள்ளார். இருவர் மாத்திரம் பயணிக்க கூடிய மோட்டார் சைக்கிளில் மூவர் அல்லது நால்வர் பயணிப்பதாக சுட்டிக்காட்டியுள்ள...
திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி, பெண்களை காதலித்து ஏமாற்றி அவர்களிடமிருந்து நகைகளை கொள்ளையடித்து வந்த நபரை, பிரதேச மக்கள் நையப்புடைத்து பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. தோப்பூர் திருகோணமலை பகுதியைச் சேர்ந்த அப்துல் கலீம் (வயது 36) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே, இவ்வாறு நையப்புடைக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது, யாழ்ப்பாணம், நல்லூர்...
வடக்கில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகின்ற காரணத்தினால் தாழ்நிலப் பிரதேசங்களில் வெள்ளம் புகுந்து ஏராளமான மக்கள் இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களிலும், பொது இடங்களிலும், நண்பர்கள் உறவினர்களின் வீடுகளிலும் தங்கியுள்ளனர். குறிப்பாக பெண்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள், சிறுவர்கள், வயதானோர் என அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளுடன் சமைத்த உணவுகளையும் உடனடியாக வழங்கி வரும்...
2015.11.16 ஆம் திகதி காலை காலை 05.30 மணிக்கு வழங்கப்பட்ட வானிலை முன்னறிவிப்பு: நேற்றைய தினம் வங்காளவிரிகுடாப் பகுதியில் திருகோணமலைக்கு அருகில் காணப்பட்ட தாழமுக்கமானது தற்போது அதன் வலு குறைவடைந்து இலங்கையை விட்டு அப்பால் நகர்கின்றது. இது நாளை பிற்பகல் இந்திய தமிழ் நாட்டு கரையோரத்திற்கு நகரும் என உதிர்பார்க்கப்படுகிறது. இதன் தாக்கத்தினால் நாட்டின் வட...
Loading posts...
All posts loaded
No more posts