- Saturday
- January 18th, 2025
மின்வழங்கியோடு இணைக்கப்பட்டிருந்த கைப்பேசி சார்ஜரின் வயரை தவறுதலாக வாயில் வைத்தமையால், ஏழு மாத பெண் சிசுவின் உடலில் மின்சாரம் பாய்ந்து பரிதாபகரமாக பலியான சம்பவமொன்று நேற்று பிற்பகல் திவுலப்பிட்டியவில் இடம்பெற்றுள்ளது. மின்சாரம் தாக்கப்பட்ட நிலையில், அச்சிசுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், குறித்த சிசுவை காப்பற்ற முடியவில்லை என பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டில் எல் நினோ (El Nino) எனப்படும் காலநிலை தாக்கத்தினால் இலங்கையில் பெரும் இயற்கை அனர்த்தங்கள் ஏற்படும் என்று அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா எச்சரித்துள்ளது. புயல், வெள்ளம் மற்றும் வரட்சி போன்ற அனர்த்தங்களை இலங்கை இந்த வருடத்தில் எதிர்நோக்குமென நாசா குறிப்பிட்டுள்ளது. இந்த ஆண்டில் எல் நினோ (El Nino) எனப்படும்...
தமிழ் நாடு பெரம்பலூாில் ஒவ்வொரு ஆண்டும் புத்தகத்திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. 2016ம் ஆண்டுக்கான புத்தகத்திருவிழா ஜனவரி 29 ம் தேதி தொடங்கி பிப்ரவாி 7 ந் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் சிறப்பம்சமாக வெளிநாட்டுவாழ் தமிழா்களின் புத்தகங்களை வைத்து விற்பதற்கான தனி அரங்கு அமைக்கப்பட உள்ளது. இந்த அரங்கில். வெளிநாட்டில் வாழும் தமிழ்...
வங்கிகளில் செயலிழந்துள்ள கணக்குகளில் காணப்படும் வைப்புக்களை அரசுடமையாக்க தீர்மானித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இந்த நடைமுறை ஏற்கனவே வங்கிகள் சட்டத்தில் காணப்படும் ஒன்று என மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜுன மஹேந்திரன் தெரிவித்துள்ளார். 10 வருடங்களுக்கு அதிக காலம் செயலிழந்துள்ள கணக்குகளில் காணப்படும் பணம் இந்த சட்டத்தின்படி மத்திய வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்படும்...
12 இலக்கங்களைக் கொண்ட புதிய தேசிய அடையாள அட்டை நேற்று முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக, ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது. 16 வயதை பூர்த்தி செய்துள்ள இலங்கை பிரஜைகள் அனைவரும் ஆட்பதிவு திணைக்களத்தில் தம்மை பதிவு செய்து, அடையாள அட்டையை பெற்றுக் கொள்ள வேண்டும். இதுவரையில் 9 இலக்கங்களும், ஆங்கில எழுத்தும் கொண்ட அடையாள அட்டைகள் விநியோகிகப்பட்டு...
20 மைக்ரோன் இற்கும் குறைவான அளவுடைய பொலித்தீன் பாவனைக்கு நேற்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. சாதாரணமாக உணவு வகைகளை கொண்டு செல்வதற்கு பயன்படுத்தப்படும் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் வகைகளின் மைக்ரான் அளவு 20க்கும் குறைவாக காணப்படுகின்றது. இவ்வாறான பொலித்தீன் வகை தயாரிப்பு, விற்பனை மற்றும் பாவனை போன்றவற்றிற்கு எதிராக இன்று முதல் சுற்றிவளைப்புக்களை மேற்கொள்ள இருப்பதாக...
பலாலி கன்னார் வயல் ஸ்ரீ இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் நடைபெறவுள்ள தைப்பொங்கல் தின விழாவில் பங்கேற்கவுள்ள மக்களை முன் பதிவு செய்து கொள்ளுமாறு பலாலி ஸ்ரீ இராஜ இராஜேஸ்வரி அம்மன் கோவிலும் இந்துக் கோயில்கள் மற்றும் மீள்குடியேற்ற சபையும் அறிவித்துள்ளது. 2016 ஆம் ஆண்டுக்கான தேசிய தைப்பொங்கல் விழா பலாலி கன்னார் வயல் ஸ்ரீ...
தேசிய அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்ட யோசனைக்கு அமைய, புதிதாகப் பெறப்படும் கடவுச் சீட்டுக்கான கட்டணங்கள் இன்று முதல் அதிகரிக்கப்பட்டுள்ளன. வரவுசெலவு திட்டத்தில் முன்மொழியப்பட்ட யோசனைக்கு அமைய இந்தக் கட்டண அதிகரிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் நிஹால் ரணசிங்க குறிப்பிட்டுள்ளார். இதற்கு அமைய, ஒரே நாளில் அனைத்து நாடுகளுக்குமான கடவுச் சீட்டுக்களைப் பெற்றுக்...
எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதி தொடக்கம் பொலித்தீன் பொதிகள், பைகள் மற்றும் அவை சார்ந்த உற்பத்திகளை பயன்படுத்துதல் மற்றும் விற்பனை செய்தல் தடைசெய்யப்படவுள்ளது. பொதுமக்களின் ஆரோக்கியத்தினையும் சுற்றுச்சூழலையும் பாதுகாக்கும் நோக்குடனே இவ்வாறான திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 20 மைக்ரோன்களுக்கு குறைவான கனவளவை கொண்ட பொலித்தீன் பொதிகள், பயன்பாட்டிற்கே எதிர்வரும் முதலாம் திகதி தொடக்கம் தடையுத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளது....
நாடளாவிய ரீதியிலுள்ள ஆசிரியர் கல்லூரிகளில் இவ்வருட ஆசிரிய பயிற்சி நெறிக்கு விண்ணப்பிப்பதற்கான் இறுதி நாள் நாளை (28) என கல்வியமைச்சு அறிவித்துள்ளது. இது தொடர்பிலான வர்த்தமானி அறிவுறுத்தல் ஏற்கனவே கல்வியமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது. கணிதம், விஞ்ஙானம், ஆரம்பக்கல்வி , சமூகவியல், விவசாயம், மனையியல், சங்கீதம், சித்திரம், அரபு, இஸ்லாம், இந்துசமயம், கிறிஸ்தவம், நடனம், விசேட கல்வி, தமிழ்,...
பண்டிகைக் காலங்களில் சீனி மற்றும் தேங்காய் எண்ணெயின் பாவனையை குறைக்குமாறு சுகாதார அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது. சமீப காலமாக இந்நாட்டில் நீரிழிவு உட்பட பல நோய்கள் உருவாகுவதற்கு பிரதான காரணியாக சீனி மற்றும் எண்ணெய் காணப்படுகின்றது. இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் பாலித மஹீபால,சீனி பாவனைக்கு ஏற்ப குறித்த...
சுனாமி பேரலையால் உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இன்று இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் கேட்டுக் கொண்டுள்ளது. அதன்படி இன்று காலை 9.25 மணி முதல் 9.27 வரை இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்துமாறு அந்த நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார்....
மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்கள் இன்று முதல் கைது செய்வற்கான விசேட சட்டம் ஒன்று அமுல் படுத்தப்பட்டுள்ளது. பண்டிகை காலத்தையொட்டியே இந்த சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும் இந்த விசேட சட்டம் இன்று முதல் எதிர்வரும் ஜனவரி 3 ஆம் திகதி வரை நடைமுறையில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்பற்ற இடங்களான ஆறு, கடல், குளங்களில் பொதுமக்கள் குளிக்க...
கொழும்பு நகரில் அமைந்துள்ள ஆயுர்வேத மசாஜ் நிலையங்களில் 4500 முதல் 6000 பேர் வரையிலான பாலியல் தொழில் சேவையில் ஈடுபடுவதாக ஹெக்டர் கொப்பேகடுவ ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது. இவர்களில் பெரும்பான்மையோருக்கு எச்.ஐ.வி. தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் இந் நிலையங்களுக்கு செல்வோர் அவதானமாக இருக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அண்மைக்காலமாக நாட்டில் எச்.ஐ.வி. தொற்று வெகுவாக பரவி வருகின்றடை...
இலங்கையில் கத்தோலிக்க தேவாலயங்களுக்குள் கிறிஸ்துமஸ் மரங்களையும் கிறிஸ்துமஸ் தாத்தாக்களையும் (நத்தார் தாத்தா அல்லது சாண்டா கிளாஸ்) கொண்டுவர அனுமதிக்கக் கூடாது என்று ஆயர்கள் முடிவுசெய்துள்ளதாக இலங்கை ஆயர்கள் மன்றத்தை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன. 'கிறிஸ்துமஸ் மரங்களும் கிறிஸ்துமஸ் தாத்தாக்களும் வழிபாட்டுக்கு உரியவை அல்ல' என்ற அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை கத்தோலிக்க திருச்சபையின் தேசிய...
யாழ்ப்பாணத்தில் போதைப் பொருள் விற்பனை மற்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் தொடர்பில் அறியத்தருமாறு யாழ். பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர். போதைப் பொருள் விற்பனை, சட்டவிரோத செயல்களை தடுக்கும் நோக்கிலும், இவ்வாறான செயற்பாடுகளை முற்றாக ஒழிப்பதற்கு உதவி வழங்குமாறு பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். அத்தோடு, குறித்த விடயங்கள் தொடர்பில் 076-6633750 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறும் தெரிவித்துள்ளனர். கடந்த...
கொழும்பு-10 இல் உள்ள, குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம், பத்தரமுல்லையில் அமைந்துள்ள செத்சிறிபாயவுக்கு, அடுத்தவருடம் ஜனவரி மாதம் முதல் மாற்றப்படும் என, உள்நாட்டலுவல்கள் அமைச்சர் எஸ்.பி நாவின்ன, நேற்று வியாழக்கிழமை(17) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். குறித்த திணைக்களத்தில், சட்டவிரோத நடவடிக்கைகள் இடம்பெறுவது தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரண கேள்வியெழுப்பியபோதே அமைச்சர் நாவின்ன இவ்விடயத்தைத் தெரிவித்தார். குடிவரவு...
தொண்டைமானாறு செல்வச் சந்நிதி ஆலயத்துக்கு வழிபாடுகளுக்கு வருகின்ற காதல் ஜோடிகள், ஆலய வளாகத்தில் உலாவித் திரிவதற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஆலய நிர்வாக சபையால், இது தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அறிவித்தலில் கூறப்பட்டுள்ளதாவது, ஆலயத்துக்கு வரும், காதல் ஜோடிகள் தரிசனம் செய்த பின்னர், திரும்பிச் செல்ல வேண்டும். அதனை விடுத்து ஆலய வளாகங்களில் அமர்ந்து பொழுதைப் போக்கக்கூடாது. புனிதமான இந்தப்...
கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைகளை நாளை நடத்தாதிருக்குமாறு பரீட்சைகள் ஆணையாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக, ஆசிரியர், அதிபர் தொழிற்சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது. நாளைய தினம் இடம்பெறவுள்ள வேலை நிறுத்தத்தை முன்னிட்டு இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதம செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, பரீட்சைகள் ஒழுங்கமைக்கப்பட்டுள்ள முறைக்கு அமைய அதனைப் பிற்போட...
பாடசாலை மாணவர்களுக்கு சீருடை துணி விநியோகம் செய்வதற்கு யாழ்ப்பாண நகரத்தில் தெரிவு செய்யப்பட்டுள்ள பல கடைகளில் சீருடை துணி இருப்பில் இல்லையென தெரிவிக்கப்படுகின்றது. மாணவர்களுக்கு இலவச சீருடை வழங்கும் திட்டத்தை மாற்றியமைத்து, சீருடைத்து துணிக்குப் பதிலாக வவுச்சர் வழங்கும் திட்டம் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மாணவர்கள் தங்களுக்கு கிடைத்துள்ள வவுச்சரை, தங்கள் பிரதேசத்திள் சீருடை துணி விநியோகம்...
Loading posts...
All posts loaded
No more posts