- Saturday
- January 18th, 2025
யாழ்.மாவட்டத்தில் பயணிகள் சேவையில் உள்ள முச்சக்கர வண்டிகளுக்கு சித்திரை மாதம் 15ம் திகதிக்கு முன்னதாக மீற்றர் பொருத்தப்படவேண்டும். என தெரிவித்திருக்கும் யாழ்.மாவட்டச் செயலர் என் வேதநாயகன், முச்சக்கர வண்டிகள் தொடர்பாக பல முறைப்பாடுகள் பொது மக்களிடமிருந்து கிடைக்கப்பெறுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். சம்மந்தப்பட்ட தரப்புக்களுடன் பேசி உரிய தீர்மானங்களை எடுத்திருக்கின்றோம். எனவே உரிய நடைமுறை ஒழுங்குகளை சாரதிகள் பின்பற்றவேண்டும்....
யாழ்.குடாநாட்டில் போக்குவரத்துச் சட்டங்களை அல்லது ஒழுங்குகளை மதிக்காத சாரதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ்.மாவட்டச் செயலர் என்.வேதநாயகன் தெரிவித்துள்ளார். யாழ்.குடாநாட்டில் பேருந்து சாரதிகள் மிக மோசமாக போக்குவரத்து விதிகளை மீறி வாகனங்களை ஓட்டும் நிலையில் அதிகளவான விபத்துக்களும் இடம்பெறுகின்றன. இந்நிலையில் போக்குவரத்துச் சட்டங்களை அல்லது ஒழுங்குகளை மதிக்காத சாரதிகள் மீது கடுமையான நடவடிக்கை...
ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செய்யித் அல் ஹுஸைனின் யாழ். விஜயத்தின் போது காணாமல் போனவர்களின் உறவுகள் ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுக்கவுள்ளனர். அகில் இலங்கை தமிழ் காங்கிரஸின் ஏற்பாட்டில் நாளை ஞாயிற்றுக்கிழமை (07) இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. யாழ். நல்லூர் ஆலய முன்றலில் காலை 9.30 மணியளவில் நடைபெறவுள்ள இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெறவுள்ளது. குறித்த ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுப்பதற்கான...
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் அனைத்துலக சைவ மாநாடு எதிர்வரும் 12 ஆம் திகதி நடைபெறவுள்ளது. மெய்ப்பொருள் காண்பது அறிவு எனும் மகுட வாசகத்தை கருப்பொருளாகக் கொண்டு விளங்கும் யாழ் பல்கலைக்கழகத்தின் முதலாவது அனைத்துலக சைவமாநாடே எதிர்வரும் 12 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம் தெரிவித்துள்ளார். இந்து நாகரீகத்துறையினரின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள இம்மாநாடு 12...
யாழ் -கொழும்பு புகையிரத சேவை ........................... 1. இன்ரசிற்றி அல்லது நகர்சேர் கடுகதி ........................... புறப்படல் காலை 6.10 மணி கொழும்பை சென்றடைதல் பிற்பகல் 1.05 மணி 2. யாழ்தேவி புகையிரதம் ................. புறப்படல் காலை 9.35 மணி கொழும்பை சென்றடைதல் பிற்பகல் 6.35 மணி 3. குளிரூட்டப்பட்ட புகையிரத சேவை .......................... புறப்படல் பிற்பகல்...
ஸிகா வைரஸ் காய்ச்சல் பற்றி பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை என்ற போதிலும் இது குறித்து அவதானத்துடன் செயற்படுவது சிறந்தது என சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவு அறிவித்துள்ளது. ஈட்ஸ் என்ற ஒரு வகை நுளம்புகளினாலேயே இந்த நோய் பரவுகின்றது. தலைவலி, தசைப்பிடிப்பு, கால் வீக்கம், கண்களைச் சுற்றி வலி போன்ற நோய்க் குணங்கள் தொடர்ச்சியாக...
சர்வதேச நாடுகளை அச்சுறுத்திவரும் சைகா வைரஸ் பாதிப்பிற்கு, அமெரிக்காவில் மட்டும் 4 மில்லியன் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்து ஆய்வு அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சைகா வைரஸ், கொசு மூலமாகவே பரவிவருகிறது என்று தெரியவந்த நிலையில், உடலுறவின் மூலமும் இந்த வைரஸ் தொற்று பரவுவதாக, டெக்சாஸ் மாகாணத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
பாடசாலை சீருடைகளுக்கான வவுச்சர் காலாவதியாகும் திகதி நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது. அவ்வகையில் ஜனவரி 31 ஆம் திகதியுடன் காலாவதியாகவிருந்த கால எல்லையானது தற்போது பெப்ரவரி மாதம் 29 ஆம் திகதி வரையாக நீடிக்கப்பட்டுள்ளது என கல்வியமைச்சு மேலும் அறிவித்துள்ளது. குறிப்பிட்ட காலத்திற்குள் தமக்கான சீருடைகளை பெற்றுக் கொள்ள முடியாது போன மாணவர்களின் நலன் கருதியே இத்தீர்மானம்...
அதிஷ்ட இலாபச் சீட்டிழுப்பில் வெற்றிப்பெற்றதாக கூறி வெளிநாடுகளில் இருந்து வரும் அழைப்புக்கள், குறுஞ்செய்திகளுக்கு பதில் அளித்தல் மற்றும் தொடர்பை ஏற்படுத்தல் என்பவற்றை தவிர்க்குமாறு தொலை தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது. பொதுமக்களிடம் பணம் பறிக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படும் இவ்வாறான போலி வெளிநாட்டு அழைப்புகள் தொடர்பில் நாட்டின் பல பாகங்களில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை அடுத்து, அந்த...
2016 ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் பெப்ரவரி முதலாம் திகதி முதல் 29 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. பாடசாலை பரீட்சார்த்திகளுக்கான விண்ணப்பங்கள் மற்றும் ஆலோசனை வழிகாட்டல்களை பாடசாலைகளின் அதிபர்களுக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் தனிப்பட்ட பரீட்சார்த்திகளுக்கான மாதிரி விண்ணப்பப்படிவங்கள் மற்றும் ஆலோசனை வழிகாட்டல்களை www.doenets.lk...
நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கான வரி 35 ரூபாயில் இருந்து 50 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஒரு கிலோகிராம் அரிசிக்கான வரி 15 ரூபாவால் உயர்வடைந்துள்ளது.
சவூதி அரேபியாவுக்குச் சென்றிருந்த தங்கவேல் செல்வராணி வீரைய்யா என்ற இப்பெண், மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த 17ஆம் திகதி நாடு திரும்பியுள்ளார். அப்பெண்ணிடம் கடவுச்சீட்டோ அல்லது அடையாளத்தை உறுதிப்படுத்தக்கூடிய ஆவணங்களோ இல்லை. ஆகையால் அப்பெண்தொடர்பில் தகவல் தெரிந்தோர். 011 - 2259341, 011 - 2259954 என்ற தொலைபேசி இலக்கங்கள் ஊடாக தொடர்புகொண்டு அறிவிக்குமாறு வெளிநாட்டு...
ஊழியர்கள் மற்றம் தொழிலாளர்கள் மத்தியில் தமது உரிமைகள் மற்றும் கடமைகள் தொடர்பான விழிப்புணர்வை மேம்படுத்தும் வகையில் Salary.lk இணையத்தளத்தில் இலங்கையின் ஊழியர் சட்ட விதிமுறைகள் பற்றிய விவரங்கள் தமிழ் மற்றும் சிங்கள மொழி பெயர்ப்புகளை உள்ளடக்கியுள்ளதாக சர்வதேச தொழில் ஸ்தாபனம் (ILO) அறிவித்துள்ளது. இலங்கையின் தொழிலாளர் சட்ட விதிமுறைகள் பற்றிய தெளிவான விவரங்களை இந்த இணையத்தளம்...
சமூக இணையத்தளங்களை பயன்படுத்தி ஆபாச புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை பரிமாற்றிக் கொள்ளும் குழு செயற்பாடு தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டு வருவதாக ரகசிய காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். பேஸ்புக் வலைத்தளத்தை பயன்படுத்தி யுவதிகளாக முன்னிலையாகி இளைஞர்களின் ஆபாச புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் பெற்று கொள்ளப்படுகின்றன. பின்னர் காணொளி மற்றும் புகைப்படங்களை பெற்று கொண்டவர்களை அச்சுறுத்தி பணம் பெற்று கொள்ளும்...
இலங்கையில் அதிவிரைவாக வளர்ச்சிகண்டு வருகின்ற 3G வலையமைப்புக்களில் ஒன்றான Hutch, பெறுமதிமிக்க தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கிவரும் பெறுமதிசேர் சேவைகளில் மற்றுமொரு அம்சமாக Hutch கையடக்கத்தொலைபேசியூடாக நேரடியாக புகையிரத டிக்கட்டுக்களைக் கொள்வனவு செய்வதற்கு இடமளிக்கும் வகையில் மொபிடெல் மற்றும் இலங்கை புகையிரத திணைக்களம் ஆகியவற்றுடன் பங்குடமையை ஏற்படுத்தியுள்ளது. தினசரி புகையிரதம் மூலமாக பயணிக்கும் 300,000 பிரயாணிகளுக்கு இச்சேவை...
வடக்கு மற்றும் தலைமன்னார் நோக்கி புறப்படும் புகையிரதங்களின் நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் இன்று தெரிவித்துள்ளது. அதன்படி புதிய நேர அட்டவணைகள் வருமாறு, கொழும்பு யாழ்பாணம் இடையில் சேவையில் உள்ள யாழ்தேவி கல்கிஸ்ஸையில் இருந்து காலை 05.50 மணிக்கு ஆரம்பமாகி கொழும்பு கோட்டையில் இருந்து காலை 06.35 இற்கு யாழ்ப்பாணம் நோக்கி புறப்படும் இந்த...
தரம் ஒன்றுக்கு மாணவர்களை சேர்த்துக்கொள்ளும் போது பணம் அல்லது நன்கொடை தருமாறு பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் மற்றும் பழைய மாணவர்கள் சங்கத்தைச் சேர்ந்தவர்களென யாராவது கேட்டால் அது தொடர்பில் தமக்கு அறிவிக்குமாறு இலங்கை ஆசிரியர் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. பணம் அல்லது நன்கொடை ஆகியவற்றின் ஊடாக பெற்றோரிடம் இலஞ்சம் வாங்கும் சகலருக்கும் எதிராக தமது சங்கம், நீதிமன்ற...
போன் செய்த 15 நிமிடங்களில் வீடு தேடிவரும் பீட்ஸாவின் பின்னணியில் பாலின மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய ஆபத்தான மூலக்கூறுகள் இருப்பது சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. பீட்ஸாவில் உள்ள வெண்ணை போன்ற வழவழப்பான பொருட்கள் அவற்றை பேக்கிங் செய்து எடுத்துச்செல்ல பயன்படுத்தப்படும் கார்ட்போர்ட் பெட்டிகளின் வெளிப்பக்கத்தில் கசியாமல் இருக்க ஒருவகையான இரசாயனப்பூச்சு அட்டைப் பெட்டிகளில் பூசப்படுகிறது. அவ்வகையிலான அட்டைப்...
பேக்கரி உற்பத்திப் பொருட்களுக்கான விலையை அதிகரிக்க எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லை என, அனைத்து இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது. சில பேக்கரி உரிமையாளர்கள் பான் உள்ளிட்ட பொருட்களுக்கு விலையை உயர்த்தியுள்ளதாக தெரியவந்துள்ளது என, அச் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜெயவர்த்தன குறிப்பிட்டுள்ளார். இதேவேளை அண்மையில் கோதுமை மாவுக்கான விலை அதிகரிக்கப்பட்டுள்ளாக செய்திகள் வௌியாகின. எனினும் கோதுமை...
பொது மக்களின் பிரச்சினைகளை ஜனாதிபதிக்கு நேரடியாக முன்வைக்கும் வகையில் ´ஜனாதிபதியிடம் சொல்லுங்கள்´ என்ற வேலைத் திட்டம் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன பதவியேற்று ஒரு வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் இந்த திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று காலை ஜனாதிபதி செயலகத்தில் இந்த திட்டம்...
Loading posts...
All posts loaded
No more posts