- Sunday
- January 19th, 2025
மாலை 6.30 மணி முதல் இரவு 10.30 மணி வரையான நேரத்தில் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அநாவசியமான மின் உபகரணங்களை பயன்படுத்துவதில் இருந்து தவிர்ந்து கொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை மின்சார சபை பொது மக்களிடம் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது. நுரைச்சோலை அனல் மின் நிலையத்தை மீள செயற்படுத்தும் வரையே இதனை...
வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் கூரேவை ஒவ்வொரு புதன்கிழமைகளிலும் பொதுமக்கள் சந்தித்து தமது தேவைகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பில் தெரிவிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண ஆளுநர் செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எதிர்வரும் மார்ச் மாதம் 2ஆம் திகதி புதன்கிழமை முதல் இது நடைமுறைக்கு வருகின்றது. வடமாகாணத்தைச் சேர்ந்த அனைத்து பொதுமக்களும் இன மற்றும் மத பேதமின்றி ஆளுனரைச்...
அமெரிக்காவில் ஜோன்சன் அன்ட் ஜோன்சன் பவுடர் பாவித்த பெண் அண்மையில் கருப்பை புற்றுநோயால் உயிரிழந்துள்ளார். இதனால் இவரது குடும்பத்துக்கு 72 மில்லின் அமெரிக்க டொல் நஸ்ட ஈடு வழங்குமாறு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அமெரிக்காவின் மிசௌரி மாகாணத்தைச் சேர்ந்த ஜக்குலின் (62) என்பவர் கடந்த 35 வருடங்களாக ஜோன்சன் அன்ட் ஜோன்சன் பவுடரையும், ஷவர் டூ ஷவர்...
கடந்த 16 ஆம் திகதி வவுனியாவில் படுகொலை செய்யப்பட்ட மாணவி ஹரிஸ்ணவிக்கு நீதி வேண்டியும், குற்றவாளிகளை கைது செய்ய கோரியும் நாளைய தினம் (24) ஹர்த்தால் அனுஷ்டிக்க கோரப்பட்டுள்ளது. யாழ் திருநெல்வேலி பொதுச்சந்தை வியாபார நடவடிக்கை அனைத்தையும் முற்றாக நிறுத்தி ஹார்த்தால் இடம்பெற வேண்டும் என கோரிய துண்டு பிரசுரங்கள் இன்று திருநெல்வேலி சந்தையில் ஒட்டப்பட்டுள்ளன....
மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகள் மற்றும் ஓட்டுனர்களுக்கு ஆகக்கூடியது 3 மாத விளக்கமறியலும் அபராதத்துடன் கூடிய 1 மாத கால சிறைத்தண்டனையும் வழங்குமாறு யாழ். மேல் நீதிமன்றத்துக்குட்பட்ட மாவட்ட நீதிமன்றங்களுக்கு, யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் அறிவுறுத்தினார். இதேவேளை, விபத்தின் போது நபரொருவர் உயிரிழந்தார் எனின், அவ்விபத்தை ஏற்படுத்தியவருக்கு எதிராக கொலைக்குற்றச்சாட்டில் வழக்கு பதிவு...
மன்னார் திருக்கேதீஸ்வரம் திருத்தலத்தில் எதிர்வரும் மார்ச் மாதம் 7ம் திகதி மகா சிவராத்திரி சிறப்பாக நடைபெறும் என அதன் செயலாளர் எம்.வை.எஸ்.தேசபிரிய தெரிவித்தார். மன்னார் மாவட்ட செயலக மண்டபத்தில் அதன் செயலாளர் எம்.வை.எஸ்.தேசபிரிய தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இம் முடிவு எடுக்கப்பட்டது. தீருக்கேதீஸ்வரம் திருத்தலத்தில் இந்திய அரசினால் முன்னெடுக்கப்பட்டுவரும் புனரமைப்பு வேலைகள் காரணமாக இம்முறை மகா...
ஒன்பதாவது தேசிய சாரணர் ஜம்போரி இன்று (20) யாழ். நகரில் ஆரம்பமாகிறது. “நட்புறவும் தெளிவும்” என்ற தொனிப் பொருளில் எதிர்வரும் 26ஆம் திகதி வரை சாரணர் ஜம்போரி நடைபெறவுள்ளது. 37 சாரணர் மாவட்டங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி 10,000க்கும் மேற்பட்ட சாரணர்கள் இதில் பங்குகொள்வர். 05 வெளிநாடுகளிலிருந்து 17 தலைவர்கள், 110 சாரணர்கள் இதில் பங்கு கொள்வரென பிரதான...
உள்ளூராட்சி மன்றங்களின் எல்லை நிர்ணயம் தொடர்பிலான முறைபாடுகளை அனுப்பி வைப்பதற்கான கால அவகாசம், சனிக்கிழமை (20) வரை வழங்கப்பட்டுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவித்துள்ளது. ஏற்கெனவே, 2015 நவம்பர் 30 திகதிக்கு முன்னர் இது தொடர்பிலான முறைபாடுகளையும் ஆலோசனைகளையும் அனுப்பிவைக்குமாறு பொதுமக்களை அமைச்சு கேட்டுக் கொண்டிருந்த போதும், பலரின் வேண்டுகோளின் பிரகாரம் தொடர்ந்தும்...
யாழ்ப்பாண மாவட்ட கடலோர வான்பரப்பில் கடந்த மூன்று தினங்களாக கிபிர் ரக போர் விமானங்களின் பயணங்களால் மக்கள் மத்தியில் அச்சநிலை ஏற்பட்டுள்ளது. குடா நாட்டு வான்பரப்பில் கடந்த 7 வருடங்களாக கிபிர் ரக போர் விமானங்கள் பறக்கவில்லை. இந்த நிலையில் கடந்த 3 தினங்களாக கிபிர் ரக விமானங்கள் பாரிய இரைச்சலுடன் வட்டமிட்டிருக்கின்றமை குடா நாட்டு...
காணாமல் போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு யாழ். மாவட்டத்திற்கான மீண்டுமொரு அமர்வை ஏற்பாடு செய்து வருகின்றது. இதற்கமைய எதிர்வரும் 27ஆம் திகதி முதல் அடுத்தமாதம் முதலாம் திகதி வரையான காலப்பகுதியில் யாழ். மாவட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட சில இடங்களில் முறைப்பாடுகளை ஏற்பதற்கு இந்த ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. காணாமல் போனோர் ஆணைக்குழுவின் ஆயுட்காலம் ஏற்கனவே...
பாடசாலை சிறுவர்களிடையே உள்ள புதிய உணவுப் பழக்கவழக்கங்களின் ஒன்றான, சீனி கலந்த பானங்கள், சுவையூட்டப்பட்ட குளிர்பானப் பொடிகள், சுவையூட்டப்பட்ட பால் பக்கெட்கள் போன்றவற்றின் பயன்பாடானது எதிர்காலத்தில் பல்வேறு சுகாதார பிரச்சினைகள் ஏற்படுத்தும் என்று, தேசிய வைத்தியசாலையின் நச்சியல் மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பிளாஸ்டிக் போத்தல்களிலோ அல்லது வேறு சில பொருட்களால் செய்யப்பட்ட பக்கெட்டுகளிலோ, ஸ்ட்ரோ (உறிஞ்சும்...
ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பில் சந்தேகநபர்கள் பற்றிய தகவல் தெரிந்தால் அறிவிக்கும் படி, பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர். குறித்த வழக்கின் சாட்சியாளர்கள் வழங்கிய தகவல்களின் பிரகாரம் இரு சந்தேகநபர்களின் உருவம் குற்றப் பதிவு பிரிவினரால் ஓவியமாக வரையப்பட்டுள்ளது. இதன்படி இவர்கள் தொடர்பில் சரியான தகவல் தெரிந்தால் கீழ் காணப்படும் தொலைபேசி இலக்கங்களுக்கு அறிவிக்குமாறு பொலிஸ்...
அரச ஊழியர்களுக்கு புதிய கட்டளை சட்டமொன்று முன்மொழியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அரச அலுவலகங்களுக்கு மூன்று தினங்களுக்கு தாமதமாக வரும் பணியாளர்களுக்கு அவர்களது சொந்த விடுமுறையிலிருந்து அரை நாள் விடுமுறை குறைக்கப்பட வேண்டும் என்று அரச நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சின் செயலாளர் ஜே.தடல்லகே அனைத்து திணைக்களத் தலைவர்களுக்கும் நிர்வாகச் சுற்றறிக்கை மூலம் அறிவித்துள்ளார். அரச நிர்வாகச் சுற்றறிக்கையின்...
யாழ். குடாநாட்டின் நீதிபதிகளால் பிறப்பிக்கப்படும் போக்குவரத்து குற்றம் சம்பந்தமான தீர்ப்புக்களில் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் அநாவசியமாகத் தலையிடாது என மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் தெரிவித்துள்ளார். போக்குவரத்துக் குற்றம் தொடர்பான வழக்கொன்றில் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றின் தீர்ப்பு தொடர்பாக யாழ். மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மீளாய்வு மனு மீதான விசாரணையின்போதே நீதிபதி இளஞ்செழியன் மேற்கண்டவாறு...
அரசியல் அமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் பொதுமக்கள் கருத்தறியும் அமர்வு இன்று (15) யாழ்ப்பாணத்தில் ஆரம்பமாகவுள்ளது. புதிய அரசாங்கம் தற்போது புதிய அரசியலமைப்பு சீர்திருத்தம் ஒன்றினை கொண்டுவர நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், அது குறித்து மக்களின் கருத்துக்களை அறியும் வகையில் குழு நியமிக்கப்பட்டு மாவட்ட மட்டத்தில் கருத்துக்கள் பெறப்பட்டு வருகின்றன. இதன் ஒரு கட்டமாக யாழ் மாவட்டத்திற்கான...
வடமாகாண சுகாதார அமைச்சும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீட சமுதாய மற்றும் குடும்ப மருத்துவதுறையும் இணைந்து 35ஆம் அணி மருத்துவ மாணவர்கள் ஊடாகத் தொற்றா நோய்களிலிருந்து தவிர்த்துக் கொள்வதற்கான ஆரோக்கிய வாழ்க்கை முறைகள் தொடர்பான விழிப்புணர்வுச் செயற்பாடுகளை முன்னெடுக்கிறார்கள். ‘மாகாண ஆரோக்கிய விழா-2016’ எனப் பெயரிடப்பட்டு வடமாகாணத்தைப் பிரதி நிதித்துவப்படுத்தி இந்நிகழ்வுகள் கடந்த மாசி மாதம்...
விபத்தின் மூலம் உயிரிழப்பை ஏற்படுத்தும் வாகனச் சாரதிகளுக்கு எதிராக, இனிமேல் விபத்துச் சாவு என்று வழக்குத் தாக்கல் செய்யப்படாமல், கொலைக் குற்றம் என்றே வழக்குத் தாக்கல் செய்யப்படவேண்டும். இவ்வாறு யோசனை முன்வைத்துள்ளார் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன். அத்துடன், வீதிப் போக்குவரத்தின் போது, பஸ் நடத்துநர்கள் மிதி பலகையில் நின்று, வீதியில் செல்லும்...
காணாமல்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அடுத்தகட்ட அமர்வு யாழ்.குடாநாட்டில் முன்னெடுப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கமைய, எதிர்வரும் 27, 28, 29 ஆம் திகதிகளிலும், மார்ச் முதலாம் திகதியும் சாட்சி விசாரணைகளை நடத்துவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது என்று ஆணைக்குழுவின் செயலாளர் எச்.டப்ளியூ குணதாச தெரிவித்துள்ளார். கோப்பாய், வலிகாமம் வடக்கு, வலிகாமம் தெற்கு, சாவகச்சேரி, காரைநகர்...
மேல் மாகாணம் உட்பட டெங்கு பாதிப்புள்ள 7 மாவட்டங்களில் இரு நாள் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை நேற்றுமுதல் (11) ஆரம்பமாகியுள்ளது என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அதற்கமைய, கேகாலை, யாழ்ப்பாணம், வவுனியா, புத்தளம், மட்டக்களப்பு, குருணாகல, அம்பாறை ஆகிய பிரதேசங்களில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளன. இவ்வாண்டு ஆரம்பம் தொடக்கம் இன்று வரை டெங்கு நோயாளர்களின்...
அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் மீதான பொது மக்களின் கருத்தறியும் செயலமர்வு எதிர்வரும் 15 ஆம் திகதி யாழில் நடைபெறவுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார். யாழ். மாவட்ட செயலக அரசாங்க அதிபரின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் 15...
Loading posts...
All posts loaded
No more posts