- Sunday
- January 19th, 2025
கலாசார அலுவல்கள் திணைக்களம், இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் கலாபூஷண விருதுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. எனவே இதற்கமைவாக நாட்டிலுள்ள நாடகக் கலைஞர்கள், எழுத்தாளர்கள், ஓவியக் கலைஞர்கள், சிற்பக் கலைஞர்கள், பொம்மலாட்டக் கலைஞர்கள், தற்காப்புக் கலைஞர்கள், நடனம், தாள வாத்தியம், இசை, மஜிக், கிராமியக் கலை, கவி, திரைப்படம்...
இலங்கையில் சூறாவளி ஏற்படக் கூடிய அபாயம் காணப்படுவதாக வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நாட்டில் தற்போது நிலவி வரும் காலநிலையின் அடிப்படையில் இவ்வாறு பலத்த காற்று வீசக்கூடிய அபாயம் காணப்படுவதாக தெரிவித்துள்ளது. நேற்று மாலை கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கடும் காற்று வீசியது. இதனால் இங்கு பல மரங்கள் முறிந்து...
இலங்கை அரசியலமைப்புச் சீர்திருத்தம் தொடர்பில் கருத்துச் சொல்ல விரும்புவர்களுக்கு, அரசியலமைப்புச் சீர்திருத்தம் தொடர்பில் மக்கள் கருத்துக்களை கேட்டறியும் குழு சந்தர்ப்பமளித்துள்ளது. சட்டத்தரணி லால் விஜேநாயக்க தலைமையிலான 20 பேரடங்கிய குழுவே இவ்வாறு சந்தர்ப்பமளித்துள்ளது. www.yourconstitution.lk என்ற இணைத்தளத்தின் குறிப்பிடப்பட்டுள்ள கருப்பொருட்களுக்கு அமைவாக, தங்களுடைய யோசனைகளை தனியாகவோ அல்லது குழுவாகவோ முன்வைக்கலாம் என்றும் அக்குழு அறிவித்துள்ளது. குழுவின்...
யாழ்.மாவட்டத்தில் ரௌடித்தனத்திலும் தெருச் சண்டித்தனத்திலும் ஈடுபடும் மாணவர்கள் சிறைத் தண்டனைக்கு உள்ளாக நேரிடும் என்று யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் எச்சரிக்கை செய்துள்ளார். ரெளடித்தனத்தில் ஈடுபடும் மாணவர்கள் உயர் கல்விக்காகப் பல்கலைக்கழகம் செல்ல முடியாத நிலை உருவாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ரௌடித்தனம், தெருச் சண்டித்தனம் என்பவற்றில் ஈடுபடும் பிள்ளைகளை கட்டுப்பாட்டில் வைப்பதற்கு சம்பந்தப்பட்ட...
உணவுப் பொருட்களின் விலையை அதிகரிப்பதற்கு அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கமைய எதிர்வரும் மே மாதம் 2ஆம் திகதி முதல் உணவுப் பொருட்களின் விலை அதிகரிக்கப்படவுள்ளது. பெறுமதி சேர் வரி அதிகரிப்பின் காரணமாகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலைகள் உரிமையாளர்கள் சங்கத்தின் தேசிய ஏற்பாட்டாளார் அசேல சம்பத் தெரிவித்துள்ளார். சிற்றுண்டிகளின்...
சிறீலங்காவில் வடபகுதிக்குப் பயணிக்கும் வெளிநாட்டவர்கள் இராணுவத்தினரிடம் பதிவை மேற்கொள்ளவேண்டுமென பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. பாதுகாப்பு அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் இந்த விடயம் பிரசுரமாகியுள்ளது. மனிதாபிமான உதவிகளை மேற்கொள்ள ஐரோப்பாவிலிருந்து வருகைதந்த ஒரு ஈழத்தமிழர் மனித உரிமை ஆணையகத்தில் இது தொடர்பில் முறைப்பாடொன்றைப் பதிவு செய்துள்ளார். இராணுவப் புலனாய்வுப் பிரிவினரால் வடபகுதியில் கடத்தல்கள் அதிகரிக்கப்பட்டுள்ள பின்னணியில் இச்...
கடந்த சில வாரங்களாக யாழ்ப்பாணத்தில் நிலவும் உச்ச வெயில் மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இதன் காரணமாக மக்கள் தமது நாளாந்த வாழ்க்கையில் சில கட்டாய மாற்றங்களை ஏற்படுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். வெயிலினால் எமது உடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுகின்றன. தோலில் ஏற்படும் சாதாரண மாற்றங்களிலிருந்து (பருக்கள்) வெப்ப அதிர்ச்சி எனப்படும் பாரதூரமான நோய் வரை...
இலங்கை மக்கள் எதிர்வரும் மே மாதத்திலும் அதிகளவு வெப்பத்துடன் கூடிய காலநிலையை அனுபவிக்க நேரிடும் என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது. மே மாதம் இறுதி வரையில் காற்று வீசக்கூடிய சாத்தியங்கள் கிடையாது எனவும், மாலை நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
விவசாயம் மற்றும் உணவுப் பொருட்களில் பயன்படுத்தப்படும் இரசாயனங்களால் யாழ் குடாநாட்டு மக்களின் வாழ்வும் இருப்பும் மெல்ல மெல்ல அழிந்துவருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உலகில் பெருகிவரும் மக்கள் தொகையினால் இயற்கைச் சமநிலையில் பல மாறுதல்கள் ஏற்பட்டு சூழலில் பல விளைவுகள் ஏற்படுகின்றன. அதற்கு யாழ் குடாநாடும் விதிவிலக்கல்ல. போருக்கு முன்னரும், போர் நடைபெற்றுக்கொண்டிருந்த நேரமும் இயற்கைப் பசளை,...
தமிழ் - சிங்கள சித்திரைப் புத்தாண்டுக் காலத்தில், மது போதையில் வாகனம் செலுத்துத்துவோரின் வாகன அனுமதிப்பத்திரத்தை மீண்டும் கையளிக்கப்போவதில்லை என்றும், நேற்று திங்கட்கிழமை முதல் இந்த நடவடிக்கை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என்று போக்குவரத்து மற்றும் வீதிப் பாதுகாப்பு தொடர்பான பிரதி பொலிஸ் மா அதிபர் அமரசிறி சேனாரத்ன தெரிவித்தார். 'இதற்கு முன்னரும், மது போதையில் வாகனம் செலுத்தியவர்களின்...
முச்சக்கர வண்டியொன்றில் கூடிய சத்தத்துடன் பாடலை ஒலிக்கச் செய்துகொண்டு சென்ற சாரதிக்கு மூவாயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்ட சம்பவம் பதுளையில் பதிவாகியுள்ளது. பதுளை, தெய்யனாவலையைச் சேர்ந்த ஏ.ஐ.ஆர் ஆனந்த என்பவருக்கே இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. குறித்த நபருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு நேற்று முன்தினம் பதுளை நீதவான் நீதிமன்றத்தில் பதில் நீதிபதி எஸ். சத்தியமூர்த்தி முன்னிலையில்...
சித்திரைப் புத்தாண்டு சமயத்தில் பட்டாசுகள் மற்றும் வானவேடிக்கைகளின் பயன்பாட்டின் போது கவனமாக செயல்படுமாறு இலங்கை கண் அறுவை சிகிச்சை விஷேட வைத்தியர் சங்கம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. தீப்பொறி பரவல் காரணமாக சிறுவர்களுக்கு அதிக பாதிப்புக்கள் ஏற்படலாம் என்று அந்த சங்கம் கூறுகின்றது. அதன்காரணமாக பிள்ளைகளின் கண்களை பாதுகாத்துக் கொள்ளுமாறு விஷேட வைத்தியர் தர்மா இருகல்பண்டார...
சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு இன்று (08) முதல் விஷேட பஸ் சேவைகள் இடம்பெறவுள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபை கூறியுள்ளது. பயணிகள் தமது சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு வசதியாக இந்த சேவை இடம்பெறவுள்ளதாக அந்த சபையின் பிரதி பொது முகாமையாளர் ராஜா குணதிலக கூறினார். அத்துடன், புத்தாண்டின் பின்னர் வெளிப்பிரதேசங்களிலிருந்து விஷேட பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படும் என்றும்...
வெப்பத்தின் கொடுமை இப்பொழுதே அதிகரித்துள்ள நிலையில் யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் புத்தாண்டன்றும் மறுநாளும் தற்போதுள்ள வெப்ப நிலையை விட மேலும் அதிகரித்த வெப்பநிலை காணப்படும் என்று #யாழ்.#திருநெல்வேலியியுள்ள வளிமண்டலவியல் திணைக்களப் பொறுப்பதிகாரி ரி.பிரதீபன் தெரிவித்துள்ளார். அத்துடன் குறித்த காலப்பகுதிக்குள் சிறு மழை பெய்ய வாய்ப்புள்ள போதும் அதனைப் பெரியளவில் எதிர்பார்க்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார். இதுகுறித்து...
தமிழ்-சிங்கள புத்தாண்டு சேவையில் 3,000 பஸ்களை ஈடுபடுத்த தீர்மானித்துள்ளதாகவும் அந்த பஸ்கள் யாவும், 8ஆம் திகதிமுதல் சேவையில் ஈடுபடுத்தப்படும் என்றும் இலங்கை போக்குவரத்து சேவை ஆணைக்குழு அறிவித்துள்ளது. 25ஆம் திகதி வரையிலும் ஈடுபடுத்தப்படும் இந்த விசேட பஸ் சேவையின் போது, பயணிகளிடமிருந்து அறவிடும் பஸ் கட்டணத்தை ஒன்றரை மடங்காக அதிகரித்து அறவிடுவதற்கு ஆணைக்குழு அனுமதியளித்துள்ளது. இந்த...
யாழ். குடாநாட்டு கோவில்கள் சிலவற்றில் விலங்குகள் வெட்டி வேள்வி நடத்துவதற்கு எதிராக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு ஒன்றை வெள்ளிக்கிழமை பிறப்பித்துள்ளது. ஆலயங்களில் விலங்குகளைப் பலிகொடுத்து நடத்தப்படும் வேள்விகளை உடனடியாகத் தடுத்து நிறுத்த இடைக்கால உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி அகில இலங்கை சைவ மகாசபை தாக்கல் செய்திருந்த மனு மீதான விசாரணையின்போதே இந்த உத்தரவை...
போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு மக்களுக்கு அரசாங்கம் அமைத்துக் கொடுக்கவுள்ள 65,000 உருக்கு வீடுகள் தொடர்பான விஞ்ஞான ரீதியான கலந்துரையாடல் ஒன்று கொழும்பில் நடைபெறவுள்ளது. வடக்கில் மீள்குடியேற்றப்பட்டுள்ள மக்களின் வதிவிடப் பிரச்சினையைத் தீர்க்கும் வகையில் வெளிநாட்டு நிதியுதவியுடன் வீடமைப்புத் திட்டம் ஒன்றினை இலங்கை அரசு தொடங்கியுள்ளது. இவ்வாறு அமைத்துக் கொடுக்கப்படும் வீடுகள் முன்னரே தயாரிக்கப்பட்ட உருக்கு, பிளாஸ்டிக்...
வடக்கில் அமைக்கப்படவுள்ள 65,000 வீடுகள் தொடர்பில் மக்களிடம் கருத்தறியும் செயற்பாடொன்று யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக யாழ். மாவட்டத்திலுள்ள பிரதேச செயலகங்களுக்கு முன்னால் மக்கள் தமது கருத்துக்களைத் தெரிவிப்பதற்கான பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. இதில் இந்த அறுபத்தையாயிரம் வீடுகள் அமைப்பதில் மக்கள் தமக்குரிய அபிப்பிராயங்கள் மற்றும் குறைகள் தொடர்பில் எழுதிப் போடலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைவிட பொருத்துவீடுகளை விரும்...
நாட்டில் தற்போது நிலவுகின்ற அதிக வெப்பநிலை காரணமாக கர்ப்பிணிகள், சுத்தமான தண்ணீரை அடிக்கடி பருகவேண்டும் என்று மகப்பேற்றியல் மற்றும் குழந்தை நல வைத்திய நிபுணர் ருவன் சில்வா தெரிவித்துள்ளார். கர்ப்பிணித் தாய்மார்களின் உடல் வெப்பநிலை சாதாரணமாக 37.5 செல்சியஸ் பாகையாகும். அந்த வெப்பநிலை, 38 செல்சியஸ் பாகையாகவோ அல்லது அதற்கு மேல் கூடினாலோ, கர்ப்பப் பையில்...
சீரற்ற காலநிலை காரணமாக கொழும்பு உள்ளிட்ட நாட்டின் அனைத்து பகுதிகளிலும் கடும் வெப்பநிலை நிலவுவதாக வானிலை அவதான நிலையம் தெரிவிக்கின்றது. மே மாதம் வரையில் இதே கடும் வெப்பத்துடன் கூடிய காலநிலை தொடரும் என்பதால் பொதுமக்கள் உஷ்ணத்திலிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ள அவசியமான தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் வானிலை அவதான நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது. நாட்டில் கடந்த...
Loading posts...
All posts loaded
No more posts