- Wednesday
- January 15th, 2025
சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட புதிய சுகாதார வழிகாட்டுதல்களை மீறுவதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆகவே சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வழங்கிய சுகாதார வழிகாட்டுதல்களை பொதுமக்கள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண கேட்டுக்கொண்டார். சுகாதார வழிகாட்டுதல்கள்...
யாழ் மாவட்டத்தை அவதானிக்கும் போது இன்னும் அபாயமான கட்டம் நீங்க வில்லை. எனவே பொதுமக்கள் அவதானமாக செயற்பட வேண்டுமென அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார். இன்றைய தினம் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அரசாங்க அதிபர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட 5,000 ரூபா கொடுப்பனவு முதற்கட்டமாக...
யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக் களத்தில் (Clinic) வைத்தியசேவை பெறும் நேயாளர்களுக்கான மருந்து வகைகள், நாட்டில் நிலவும் கொரோனா நிலைமை காரணமாக தபால் மூலமாக அனுப்ப தீர்மானிக்கப்பட்டுள்ளது. யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளரினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “எனவே நோயாளர்கள் தங்களுக்கு தேவையான மருந்து வகைகளை கீழ் குறிப்பிட்ட தெலைபேசி இலக்கங்களுடன்...
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையிலுள்ள சிகிச்சை களத்தில் வைத்திய சேவை பெறும் நோயாளிகளுக்கான மருந்து பொருட்கள், தபால் ஊடாக அனுப்பி வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் ஸ்ரீ பவானந்தராஜா தெரிவித்துள்ளார் ஆகவே இன்றிலிருந்து யாழ்.போதனா வைத்தியசாலையின் கிளினிக் பிரிவில் வைத்திய சேவை பெறும் நோயாளர்கள், தமக்குரிய மருந்துப் பொருட்களை 021- 2214249, 021- 2222261, 021- 2223348...
அரசு மருத்துவமனைகளில் மாதாந்த பரிசோதனைக்கு (கிளினிக் – Clinic) பதிவுசெய்யப்பட்ட நோயாளிகளுக்கான வீட்டு விநியோக திட்டம் நெற்று (வியாழக்கிழமை) முதல் செயற்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பயணக் கட்டுப்பாடு காரணமாக மருத்துவமனைகளில் நடத்தப்படும் மாதாந்த பரிசோதனையில் கலந்துகொள்ள முடியாத நோயாளிகளின் வசதிக்காக சுகாதார அமைச்சகம் மற்றும் தபால் துறை இணைந்து இந்த திட்டத்தை செயற்படுத்துகின்றன. அதன்படி, அரச...
அந்தமான் கடல் பிராந்தியத்தின் வடக்கு வங்காள விரிகுடாவின் கிழக்கு மத்திய பகுதியில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் எதிர்வரும் 72 மணித்தியாலங்களில் சூறாவளியாக மாறும் அபாயம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதனால் நேற்று (20) தொடக்கம் மறுஅறிவித்தல் வரை இந்தக் கடற் பிரதேசத்தில் கடற்றொழில் நடவடிக்கைகளில் அல்லது கடல் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என்று திணைக்களம் கோரிக்கை...
நாடளாவிய ரீதியில் இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 11 மணிமுதல் எதிர்வரும் 25ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை முழுநேர பயணத்தடை விதிக்கப்படவுள்ளது. இதனையடுத்து மீண்டும் 25ஆம் திகதி இரவு 11 மணி முதல் 28ஆம் திகதி அதிகாலை 4 மணி வரையில் மீண்டும் பயணத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்....
தற்போது வைரஸ் தொற்றானது யாழ். மாவட்டத்தில் வேகமாகப் பரவி வருகின்றது. இலங்கையின் ஏனைய மாவட்டங்களைப் போல் வட மாகாணத்திலும் கொவிட் தாக்கம் அதிகரித்து உள்ளது. தற்போது பரவும் வைரஸ் தாக்கத்தினால் 20 தொடக்கம் 60 வயது வரையானோர் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். நோய்த் தாக்கத்திற்கு உட்பட்டவர்களில் 10% ஆனோர் சுவாசிப்பதற்குச் சிரமப்படுவதனை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. இவர்களுக்கு...
நாட்டில், 55 வயதுக்கு மேற்பட்டோருக்கு சுவாசிப்பதில் சிரமம் போன்ற கொரோனா அறிகுறிகள் காணப்படும் பட்சத்தில் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு நிலையத்தின் தலைவர் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனைத் தெரிவித்தார். அவ்வாறில்லையெனின் உடனடியாக வைத்திய ஆலோசனையை பெற்றுக்கொள்ளுமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார். நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால்...
பயண கட்டுப்பாடு அமுலில் இருக்கின்ற வேளையில், தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கத்தை அடிப்படையாகக் கொண்டு வெளியில் செல்லும் நடைமுறை அமுலாகவுள்ளது. அதன்படி அத்தியாவசிய தேவைகளுக்காக வீட்டை விட்டுச் செல்லும் நடைமுறை நாளை (வியாழக்கிழமை) முதல் மே 31 வரை நடைமுறைக்கு வருகிறது. எனவே அடையாள அட்டையின் இறுதி இலக்கமாக 0, 2,4,6,8 ஐ கொண்டவர்கள்...
போரில் இழைக்கப்பட்ட குற்றங்களுக்கு நீதி கேட்டுப் போராடும் மக்களோடு இணைந்து வடக்கு-கிழக்கு ஆயர்களாகிய நாம் மே 18ம் திகதியை இனப்படுகொலையை நினைவுகூரும் நாளாகவும் செப நாளாகவும் அனுசரிக்கும்படியாக தமிழ் மக்கள் அனைவரையும் வினயமாகக் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு வடக்கு-கிழக்கு ஆயர் மன்றம் அழைப்புவிடுத்துள்ளது. இதுதொடர்பில் போரில் கொல்லப்பட்டோரை நினைவுகூரும் தினம் என்ற தலைப்பில் மன்றம் வெளியிட்டுள்ள ஊடக...
இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக இலங்கைக்குள் பிரவேசிப்பவர்கள் தொடர்பாக வடக்கு மக்கள் அவதானமாக இருக்குமாறு யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் எச்சரிக்கை விடுத்துள்ளார். கொரோனா பரவல் நிலைமை தொடர்பாக யாழ். மாவட்டச் செயலகத்தில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் குறிப்பிடுகையில். “யாழ். மாவட்டத்தில் கொரோனா நிலைமை சற்று அதிகரித்துள்ளது....
கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தால் குறித்த பகுதிகள் முன்னறிவிப்பின்றி முடக்கப்படும் என இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். எவ்வாறிருப்பினும் நாட்டை முடக்குவதற்கான எவ்வித தீர்மானமும் இல்லை என அவர் மேலும் தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் தொற்றினால் கணிசமான எண்ணிக்கையிலான குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளமையினால், தங்கள் குழந்தைகளைப் பாதுகாக்குமாறு குடும்ப சுகாதார பணியகம், பெற்றோரை வலியுறுத்தியுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் தீவிரமடைந்து வருகின்றமையினால் நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகள் மற்றும் பிரத்தியேக வகுப்புகள் தற்போது மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் தங்களது குழந்தைகளை, வீட்டிலேயே வைத்திருக்குமாறு பெற்றோருக்கு குடும்ப சுகாதார பணியகத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் வைத்தியர் சித்ரமாலி டி...
நாட்டினுள் தற்போது வைரஸ் காய்ச்சல் நிலமை ஒன்று காணப்படுவதாக விஷேட வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். டெங்கு காய்ச்சலை போன்று இந்த வைரஸ் காய்ச்சல் நாட்டின் பல்வேறு பகுதிகளில் காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். மக்கள் இது தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் மூன்று வாரங்கள் வடக்கில் கொரோனா தொற்று வீதம் அதிகரிக்கும் நிலை காணப்படுவதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ. கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். தற்போதுள்ள கொரோனா நிலைமைகள் தொடர்பில் மதத் தலைவர்களுக்கும், மாகாண சுகாதார பிரிவினருக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போது மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், “வடக்கு மாகாணத்தில் அண்மைய நாட்களில்...
கொரோனா வைரஸ் குறித்த செய்திகள், பாதிப்புகள், இழப்புகள் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. பலரும் மன உளைச்சலுக்கு ஆளாகுகின்றனர். இதுவும் ஒருவித பாதிப்பே என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். அனைவரும் திடமான மனதுடன் வாழ பழகி கொள்ள வேண்டும் என மனோ தத்துவ நிபுணர்கள் அறிவுரை வழங்குகின்றனர். அந்த பரிந்துரைகள் பினவருமாறு: கொரோனா...
பண்டிகை காலங்களில் தன்னிச்சையாக செயல்படுவதைத் தவிர்க்குமாறு இலங்கை பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தினர் பொது மக்களிடம் கோரியுள்ளனர். புதிய வகை கொரோனா வைரஸ் அடையாளம் கண்டறியப்பட்டதை தொடர்ந்து, நாட்டின் மூன்றாவது அலை தாக்காம் தோற்றம் பெறாத வகையில் அவதானத்துடன் செயற்படுவது பொதுமக்களின் பொறுப்பாகும் என்று பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் செயலாளர் மகேந்திர பாலசூரிய தெரிவித்துள்ளார்....
யாழ்ப்பாணம் மாநகர சபை எல்லைக்குள் எச்சில் துப்பினால் 2 ஆயிரம் ரூபாயும் வீதிகளில் கழிவுகளை வீசினால் 5 ஆயிரம் ரூபாயும் தண்டமாக அறவிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ்.மாநகர சபையில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய போதே முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் இந்த அறிவிப்பை விடுத்தார். இதேவேளை மாநகர சபைக்கு உட்பட்ட பிரதேசங்களில் சுகாதார...
நாளாந்தம் 100 ற்கும் மேற்பட்ட நோயாளிகளை அடையாளம் காணப்படுவதால் நாட்டில் கொரோனா தொற்றின் புதிய கொத்தணி உருவாகக்கூடும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய தொற்றுநோயியல் பிரிவின் பிரதானி வைத்தியர் சுதத் சமரவீர, மக்கள் அதிகளவில் கூடும் இடங்கள் இன்னும் ஆபத்தில் உள்ளன என கூறினார். ஆகவே முக்கவசம் அணிவதுமற்றும்...
Loading posts...
All posts loaded
No more posts