வறுமை நிலையிலுள்ளவர்களுக்கு தொழிற்பயிற்சி

வடமாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் நிதியுதவியின் மூலமாக கிளிநொச்சி மாவட்ட சமூக சேவைகள் அலுவலகத்தின் அணுசரனையில் மாற்றுத் திறனாளிகள், பெண்கள், நோய்த் தாக்கத்துக்குள்ளானவர்கள் ஆகியோருக்கான தொழிற்பயிற்சி நெறிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. எதிர்வரும் 20ஆம் திகதி திங்கட்கிழமை காலை 9 மணிக்கு வீட்டு மின் உபயோகப் பொருள்களை திருத்துதல், தையல் வேலை ஆகிய பயிற்சி நெறிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. எதிர்வரும்...

க்ளைபோசெட்டை விட அதிக விஷமுடைய கிருமிநாசினி சந்தையில்?

இரண்டரை வருடங்களுக்கு முன்னர் தடைசெய்யப்பட்ட க்ளைபோசெட் (Glyphosate) எனும் கிருமி நாசினியை விட, அதிக விஷமுடைய பிறிதொரு விவசாய இரசாயனம் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக, தெரியவந்துள்ளது. இதன்படி க்ளுபோசினேட் (Glufosinate) எனும் பெயரில் குறித்த கிருமி நாசினி சந்தைகளில் விற்பனை செய்யப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது. இப் புதிய களை நாசினி க்ளைபோசெட்டை விட 15 மடங்கு அதிக...
Ad Widget

தலைக் கவசங்களுக்கு SLS தரம் அறிமுகம்

மோட்டார் சைக்கிள் தலைக்கவசங்களுக்கு செப்டெம்பர் முதலாம் திகதி முதல் எஸ். எல். எஸ். தரமொன்றை அறிமுகப்படுத்த போக்குவரத்து அமைச்சு முடிவு செய்துள்ளது. இதன்படி, செப்டெம்பர் மாதம் முதல் இறக்குமதி செய்யப்படும் மற்றும் இங்கு உற்பத்தி செய்யப்படும் தலைக் கவசங்கள் எஸ். எல். எஸ். 517 தரத்தை உடையதாக இருக்க வேண்டும் என அமைச்சு தெரிவித்தது. உரிய...

இவரை கண்டீர்களா?

நெடுங்கேணி ஒலுமடு பகுதியில் 17 வயது யுவதி ஒருவரை காணவில்லையென பெற்றோர் முறையிட்டுள்ளனர். இவர் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் உடனடியாக தந்துதவுமாறும் கோரியுள்ளனர். ஒலுமடு வேலடியைச் சேர்ந்த 17 வயது சந்திரகுமார் கிருசாந்தினி என்ற யுவதி கடந்த சனிக்கிழமை 11.06.2016 அன்று வவுனியாவுக்கு தையல் பயிற்சிக்கான பொருட்கள் வாங்கச் சென்றபோது காணாமல் போயுள்ளார். இவ் யுவதி...

அதிகரிக்கும் எயிட்ஸ்!! சுகாதார அமைச்சு எச்சரிக்கை!

நாட்டிலுள்ள இளைஞர்கள் மத்தியில் எச்.ஐ.வி தொற்று அதிகரித்துள்ளதாக, சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. 15 தொடக்கம் 25 வயதுக்குட்பட்ட இளைஞர்களே இவ்வாறு அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக, பாலியல் நோய்கள் மற்றும் எச்.ஐ.வி எயிட்ஸ் ஒழிப்பு வேலைத்திட்டத்தின் பணிப்பாளர் வைத்தியர் சிசிர லியனகே தெரிவித்துள்ளார். இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியின் முதல் ஐந்து மாதங்களில் எச்.ஐ.வி தொற்றுக்குள்ளான 135 பேர்...

உடுப்பிட்டியில் சிறப்பு மருத்துவ முகாம்

உடுப்பிட்டி நலன்புரிச் சங்கத்தின் ஆதரவில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் நீரிழிவு சிகிச்சை நிலையத்தினரால் சிறப்பு மருத்துவ முகாம் ஒன்று வரும் 10.06.2016 வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு உடுப்பிட்டி பொது நோக்கு மண்டபத்தில் (உடுப்பிட்டி வாசிகசாலைச் சந்தி, சமுர்த்தி வங்கி அருகில்) ஆரம்பமாகி இடம்பெறவுள்ளது. யாழ்போதனா வைத்தியசாலையின் நீரிழிவு சிகிச்சை நிலையத்தால் நடாத்தப்படும் இந்த சிறப்பு...

உங்களுக்கு ஜனாதிபதி மாளிகையை நேரில் பார்வையிட விருப்பமா?

கொழும்பு - கோட்டையில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையை பார்வையிடும் வாய்ப்பை மக்களுக்கு வழங்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார். இதன்படி நாளை முதல் எதிர்வரும் 14ம் திகதி வரை பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட பொது மக்கள் அனைவருக்கும், ஜனாதிபதி மாளிகை மற்றும் கோல்டன் பூங்காவைப் பார்வையிட முடியும் என, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இதுவரை...

இவர்களை தெரியுமா?? பொதுமக்களிடம் உதவிகேட்கும் பொலிஸார்

யாழ்ப்பாணத்தில் கடந்த கால வாள் வெட்டு சம்பவங்கள், ஆட்கடத்தல், கப்பம் கோரல் உள்ளிட்ட பல சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக மூன்று சந்தேக நபர்களை இனங்காட்டி தருமாறு பொலிஸார் பொதுமக்களை கேட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வரும் சமூக விரோத செயல்கள் மற்றும் வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புபட்ட பிரதான சந்தேகநபர்களாக அடையாளம் காணப்பட்ட தேவா, சன்னா, பிரகாஸ் ஆகியோர்...

வாக்காளர்களாக பதிவு செய்யுமாறு முதலமைச்சர் வேண்டுகோள்!

அனைவரும் வாக்காளர்களாக பதிவு செய்ய வேண்டும் என வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழ் இளைஞர்கள் பலர் வெளிநாடுகளுக்கு செல்வதற்கு அதிகம் விரும்புகின்றனர். இதனால் வடக்கில் நாடாளுமன்ற ஆசனங்களின் எண்ணிக்கை குறைவடைகிறது. வாக்காளர்களாக பதிவு செய்யாமல் இருந்தால் இந்த எண்ணிக்கை மேலும் குறைவடைந்து செல்லும். இதனால் பல்வேறு பாதிப்புக்களை எதிர்நோக்க வேண்டி வரும்...

புலம்பெயர் இலங்கையர்கள் இனி இலங்கைக் கடவுச்சீட்டு பெறலாம்

கடந்த காலத்தில் நாட்டில் இருந்த முரண்பாடுகள் மற்றும் அரசியல் காணரங்களால் புலம்பெயர்ந்துள்ள இலங்கை பிரஜைகளுக்கு இலங்கை கடவுச்சீட்டு பெறுவதற்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. இத்தடை நேற்று முதல் நீக்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.

புதிய தொழில்முனைவோர்களுக்கான Startup Weekend நிகழ்வு இலங்கையில் முதன் முதலாக யாழ்ப்பாணத்தில் !

Techstar அமைப்பின் வணிக புத்தாக்குனர்களுக்கான Startup Weekend நிகழ்வு இலங்கையில் முதன் முதலாக யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் ஜூன் 24ம் திகதி மாலை 5.30 தெடாக்கம் 26ம்திகதி இரவு 9 மணிவரை யாழ் ரில்கோ விடுதியில்  நடாத்தப்படஉள்ளது. இதில் நுாற்றுக்கும் மேற்பட்ட தொழில்முனைவோர் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர். இலங்கைக்கான சர்வதேச தொழில்நுட்ப நிகழ்வு ஒன்று யாழ்ப்பாணத்தில் இடும்பெறுவது இதுவே...

நாளை நாடளாவிய ரீதியில் வைத்தியர்கள் பணிப் பகிஸ்கரிப்பு

வைத்தியர்கள் நியமனம் தொடர்பில் இடம்பெறுவதாக கூறப்படும் முறைகேடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாளை நாடளாவிய ரீதியில் பணிப் பகிஸ்கரிப்பை மேற்கொள்ளவுள்ளதாக, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. எனினும், அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட கொழும்பு, கம்பஹா, கேகாலை ஆகிய மாவட்டங்கள் மற்றும் சிறுநீரக நோயாளர்களின் விடுதி, புற்றுநோய் வைத்தியசாலை, காசல் வைத்தியசாலை உள்ளிட்ட அத்தியவசிய வைத்தியசாலைகளில் இந்த நடவடிக்கை...

அனர்த்தப்பொதி தயாரா?

திடீர் அனர்த்த நிலைமைகளுக்கு முகங்கொடுப்பதற்கான நிலைமையொன்று ஏற்படுமாயின், உடனடியாக எடுத்துச்செல்லக்கூடிய பொருட்கள் அடங்கிய அனர்த்தப் பொதியொன்றைத் தயாராக வைத்திருக்குமாறு, அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது. அனர்த்தங்கள் ஏற்படக்கூடிய பிரதேசங்களில் வசிப்போருக்கே, இவ்வாறான அறிவிப்பொன்று விடுக்கப்பட்டுள்ளது. கல்விச்சான்றிதழ்கள், அடையாள அட்டைகள், காணி உறுதி, பணம், தங்க நகைகள், டோர்ச், அத்தியாவசியமான மருந்துகள் ஆகியன அடங்கிய பொதியையே, தயாராக...

பிரமிட் கட்டமைப்புசார் நிதி மோசடிகள் அதிகரிப்பு!! கட்டுப்படுத்துமாறு மக்கள் கோரிக்கை

யாழில் தொடர்சியாக அதிகரித்து வரும் பிரமிட் கட்டமைப்புசார் நிதி மோசடியை அதிகாரிகளும் மக்கள் பிரதிநிதிகளும் கண்டுகொள்ளாமல் உள்ளனர் என மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். இலங்கை மத்திய வங்கியால் தடை செய்யப்பட்ட பிரமிட் கட்டமைப்புசார் நிதி மோசடியொன்று யாழ்.குடாநாட்டில் நடைபெற்று வருவதாக பாதிக்கப்பட்ட நபர்கள் பலர் கவலை வெளியிட்டிருக்கின்றனர். தென்னிலங்கையைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று இந்த நிதி...

யாழில் பார்வையற்றவர்கள் பிச்சை எடுப்பின் அறிவியுங்கள்!

பார்வையற்றவர்கள் பிச்சை எடுப்பதற்கு அனுமதிக்காதீர்கள், அவ்வாறு பிச்சை எடுப்பவர்களைக் கண்டால், யாழ். விழிப்புலனற்றோர் சங்கத்திற்கு அறிவியுங்கள் என யாழ். விழிப்புலனற்றோர் சங்க தலைவர். எஸ்.அற்புதராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார். யாழ். விழிப்புலனற்றோர் சங்கத்தின் 40வது ஆண்டு நிறைவு நிகழ்வில் நேற்று திங்கட்கிழமை உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், விழிப்புலனற்றோரால் முடியாதது என...

வெள்ளம் பாதிப்பு; யாழ். மாவட்ட செயலகத்தில் நிவாரணப் பொருட்கள் சேகரிப்பு

அனர்த்தப் பாதிப்புக்குள்ளானவர்களுக்கான நிவாரணப் பொருட்கள் சேகரித்தலும் விநியோகித்தலுக்குமான பொறிமுறை யாழ். மாவட்ட செயலகத்தில் உருவாக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நா. வேதநாயகன் தெரிவித்தார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் செயலாளரினால் தமக்கு அறிவுறுத்தப்பட்டதற்கு அமைவாக நிவாரணப் பொருட்களை சேகரித்தல், விநியோகித்தலுக்கான நிலையம் யாழ். மாவட்ட செயலகத்தில் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். எனவே, நன்கொடைகளை வழங்க முன்வரும்...

இந்தியாவில் இருந்து வருகைதரும், பாதபராமரிப்பில் சிறப்புத்தேர்ச்சி பெற்ற வல்லுநர்களால் நீரிழிவு நோயாளர்களுக்கான இலவச கருத்தரங்கு

எதிர்வரும் 27 ஆம் திகதி யாழ். மருத்துவ பீடத்தில் (கூவர் கேட்போர் கூடம்) காலை 9 மணிக்கு நீரிழிவு நோயாளர்களுக்கான பாதப் பராமரிப்பு மற்றும் பாதணிகள் உபயோகம் சம்பந்தமான விளக்கங்கள் வழங்கப்படவுள்ளன. இந்தியாவில் இருந்து வருகைதரும், பாதபராமரிப்பில் சிறப்புத்தேர்ச்சி பெற்ற வல்லுநர்களால் நீரிழிவு நோயாளர்களுக்கான கருத்தரங்கு நடத்தப்பட உள்ளது. பாத பராமரிப்புபற்றி அறிந்து கொள்ள விருப்பமுடைய...

மீண்டும் இன்று மழை பெய்யும்

நாட்டின் பல பாகங்களிலும் மீண்டும் இன்று திங்கட்கிழமை முதல் மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. நாட்டில் பெய்துவந்த அடை மழை கடந்த மூன்று தினங்களாக சற்று குறைவடைந்து காணப்பட்டதாக திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், வட மேல், தெற்கு, மத்திய, மற்றும் சப்ரகமுவ ஆகிய மாகாணங்களுக்கு விசேடமாக இன்று திங்கட்கிழமை மழை பெய்யும்...

உயிரிழந்த கடற்றொழிலாளர்களின் விவரங்கள் திரப்படுகின்றன

தொழிலின் போது கடலில் உயிரிழந்த கடற்றொழிலாளர்கள் பற்றிய விவரங்களை வடமாகாண கூட்டுறவு அமைச்சு, கூட்டுறவுத் திணைக்களத்தினூடாகத் திரட்டிவருகிறது. கடலில் தொழில் செய்யும்போது உயிரிழந்த கடற்றொழிலாளர்களின் குடும்பங்களுக்கு வடமாகாண கூட்டுறவு அமைச்சு வாழ்வாதார உதவுதொகையாக ஒரு இலட்சம் ரூபாய் வழங்குவதற்குத் தீர்மானித்திருந்தது. இதற்கமைய கடலில் உயிரிழந்த கடற்றொழிலாளர்கள் தொடர்பான விவரங்கள் திரட்டப்படுகின்றன. கடலில் இறந்த கடற்றொழிலாளர்களின் குடும்பங்கள்,...

யாழில் நிவாரணப் பொருட்கள் சேகரிக்கும் பணி

அனர்த்த பாதிப்புக்குள்ளானவர்களுக்கான நிவாரணப் பொருட்கள் சேகரித்தலும் விநியோகத்தலுக்குமான பொறிமுறை யாழ் மாவட்ட செயலகத்தில் உருவாக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் செயலாளரினால் எமக்கு அறிவுறுத்தப்பட்டதற்கமைவாக நிவாரணப் பொருட்களை சேகரித்தல், விநியோகித்தலுக்கான நிலையம் யாழ்மாவட்ட செயலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது எனவும் நன்கொடைகளை வழங்க முன்வரும்...
Loading posts...

All posts loaded

No more posts