- Sunday
- January 19th, 2025
ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம், பான்கீ மூன் அவர்கள் நாளை வெள்ளிக்கிழமை (02-09-2016) யாழ்ப்பாணம் விஜயம் செய்யவுள்ளார். அவரது விஜயத்தின்போது யுத்தம் முடிந்து ஏழு ஆண்டுகளாகியும் மீள் குடியேற அனுமதிக்கப்படாதுள்ள மயிலிட்டி, பலாலி உள்ளிட்ட வலிவடக்கு, கேப்பாபிலவு உட்பட வடக்கு கிழக்கு பிரதேசங்களில் இடம்பெயர்ந்த மக்களின் உடனடி மீள் குடியேற்றத்தை வலியுறுத்தியும்! போரின் போதும்,...
சந்தையில் விற்பனை செய்யப்படும் தண்ணீர் போத்தல்கள் மற்றும் ஹெல்மட் எனப்படும் பாதுகாப்பு தலைக் கவசங்களுக்காக, இன்றுமுதல் புதிய சட்ட நடைமுறை ஒன்று அமுல்படுத்தப்படுகின்றது. இந்த புதிய சட்ட அமுலாக்கத்தின்படி இவை அனைத்திற்கும், SLS தரச் சான்றிதழ் அத்தியாவசியமாக்கப்பட்டுள்ளது. இலங்கையின் தயாரிப்புகள் அனைத்திற்கும் SLS தரச் சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ள போதிலும், அதனை இதுவரை அமுல்படுத்தாத வர்த்தகர்கள் தமது...
விச ஊசி விவகாரத்திற்கு தீர்வு காணும் முகமாக முன்னாள் போராளிகளுக்கு இவ்வாரம் முதல் மருத்துவப் பரிசோதனைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, புனர்வாழ்வு பெற்று சமூகத்துடன் இணைக்கப்பட்ட முன்னாள் போராளிகள் மத்தியில் தமது உடல்...
ரஜரட்ட உள்ளிட்ட உலர் வலயப் பகுதிகளில் பரவியுள்ள சிறுநீரக பிரச்சினைக்கு நேரடியாகத் தொடர்புபட்டுள்ள க்லய்போசேட் கிருமி நாசினி திரவம் இலங்கையில் தடைசெய்யப்பட்டுள்ளது. இவ்வாறு தடை விதிக்கப்பட்ட பின்னரும் தூள்களாக பக்கற்றில் அடைக்கப்பட்டு அவை விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தியாவின் ஹரியனா மாநிலத்தில் இருந்து இலங்கையின் வட பகுதிக்கு கடல் மார்க்கமாக இவை கொண்டு வரப்பட்டு சந்தைகளில்...
அதிக சம்பளத்துடன் கட்டார் நாட்டில் வேலை வாய்ப்பு என இணையதளங்களில் வெளியாகும் செய்திகளை நம்பி ஏமாறவேண்டாம் என கட்டார் நாட்டிலுள்ள இலங்கை தூதரகம் அறிவித்துள்ளது. இணையத்தளங்களூடான விளம்பரங்களை நம்பி இலங்கையிலிருந்து கட்டார் நாட்டுக்கு வேலைக்காக வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும், இவ்வாறு வருபவர்களில் பலர் வேலையற்று காணப்படுவதாகவும் அத்தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது. மேலும் இவ்வாறான விளம்பரங்கள் தொடர்பில்...
யாழ்ப்பாணம், நல்லூர் தேர்த்திருவிழாவை முன்னிட்டு, தெற்கிலிருந்து அங்கு செல்லும் பக்தர்களுக்காக, யாழ்ப்பாணத்துக்கு பயணிக்கும் ரயில்களில் குளிரூட்டப்பட்ட மூன்று பெட்டிகளை இணைப்பதற்கு ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுது;துள்ளது. இன்று (30), நாளை (31) மற்றும் நாளை மறுதினம் (01) ஆம் திகதி ஆகிய மூன்று தினங்களுக்கே இச்சேவை நடத்தப்படவுள்ளது. அதனடிப்படையில், நாளாந்தம் கல்கிஸை ரயில் நிலையத்திலிருந்து காங்கேசன்துறை...
நல்லூர்க் கந்தசுவாமி கோவில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு சகல வர்த்தக நிலையங்களுக்கும் விடுமுறை வழங்குமாறு யாழ்.வணிகர் கழகம் கேட்டுக்கொண்டுள்ளது. இது தொடர்பாக யாழ். வணிகர் கழகசெயலாளர் இ. ஜனக்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், யாழ்ப்பாணம் வணிகர் கழகத்தில் நேற்று முன்தினம் 27 ஆம் திகதி நடைபெற்ற நிர்வாக சபைக் கூட்டத்தில் எடுத்த தீர்மானத்திற்கு அமைய 31ஆம் திகதி புதன்கிழமை...
நாளை 30 ஆம் திகதி அனைவரையும் துக்க தினமாக அனுட்டிக்குமாறு பொது அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன. எதிர்வரும் 30 ஆம் திகதி காணாமல் ஆக்கப்பட்டோர் தினமாகும். இத்தினத்தில் சர்வதேசம் தலையிட்டு எமக்குத் தீர்வைப் பெற்றுத் தரவேண்டுமெனக் கோரி காணாமல் போனோரின் குடும்பங்கள் வடக்குக் கிழக்கு முழுவதும் அடையாள போராட்டங்களை நடாத்தவுள்ளனர். அன்றைய தினம், அமைதியான முறையில்...
கொன்சுலர் பிரிவினரால் வழங்கப்படும் சேவைகள் தொடர்பான விழிப்புணர்வு நடமாடும் சேவையினை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நேற்று யாழில் ஆரம்பித்து வைத்தார். வெளிவிவகார அமைச்சின் ஏற்பாட்டில், நல்லூர் ஆலயத்திற்கு முன்புறமாக பருத்துத்துறை வீதியில் இந்த நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதற்கு, வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், சிறுவர் மகளீர் விவகார அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், பாராளுமன்ற...
தமது உறவுகளைத் தொலைத்த 7200 குடும்பங்கள் மரணச்சான்றிதழைப் பெற்றுள்ளன. அவர்கள் அனைவருக்கும் காணமல்போனேர் சான்றிதழைப் பெறுவதற்கு உரித்துடையவர்கள். அதற்கான சட்ட ரீதியான ஏற்பாடுகளும் உள்ளதாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். இவ்விடயம் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, பாராளுமன்றத்தில் இறப்புக்களின் பதிவு(தற்காலிக ஏற்பாடுகள்) (திருத்த) சட்டமூலம் கடந்த வியாழக்கிழமையன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. இத்திருத்தச்சட்டத்தில்...
வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து விடுவிக்கப்படவுள்ளள 460 ஏக்கர் காணியில் காங்கேசன்துறை(ஜே.233,) காங்கேசன்துறை மத்தி (ஜே.234), காங்கேசன்துறை மேற்கு (ஜே-235), பளை , வீமன்காமம் (ஜே.236), தையிட்டி (ஜே.250) போன்ற கிராம சேவையாளர் பிரிவுகளைக் கொண்ட நலன்புரி நிலையங்களில் வாழும்மக்கள் நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில ஒன்றுகூடுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. விடுவிக்கப்படவுள்ள...
முன்னாள் போராளிகளுக்கு குறைந்த வட்டிவீதத்தில் கடன் வழங்க சிறீலங்கா அரசாங்கம் தீர்மானித்துள்ளது. சுயதொழில் வாய்ப்புக்களைப் பெற்றுக்கொள்ளும் பொருட்டு இக்கடன் வழங்கப்படவுள்ளதாகவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது. புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சின் நாடாளுமன்ற மேற்பார்வை குழு இந்த விடயம் குறித்து கலந்துரையாடியுள்ளது. இதன்படி, புனர்வாழ்வின் பின் சமூகமயப்படுத்தப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு குறைந்த வட்டிவீதத்தில் கடன் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், இதற்கான...
வெளிவிவகார அமைச்சின் கொன்சுலர் பிரிவினரால் வழங்கப்படும் சேவைகள் தொடர்பான விழிப்புணர்வை வடமாகாண மக்களிற்கு ஏற்படுத்தும் வகையில் நடமாடும் சேவையொன்று இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை பருத்துத்துறை வீதியில் நல்லூர் ஆலயத்திற்கு முன்புறமாக இடம்பெறவுள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் அறிவித்துள்ளார். வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வின் ஆரம்ப...
மருதானையில் அமைந்துள்ள குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பிரதான அலுவலகத்தை பத்தரமுல்லைக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பிரதான அலுவலகத்திற்கு நாளை விடுமுறை விடப்படவுள்ளதாகவும் இதன்படி, நாளையதினம் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் எந்தவொரு செயற்பாடுகளும் இடம்பெறாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கண்டி, மாத்தறை மற்றும் வவுனியா ஆகிய பகுதிகளிலுள்ள திணைக்களத்தின் கிளைகளுக்கும்...
வடக்கில் நூதனமான முறையில் மோசடியில் ஈடுபட்டு வருபவர்கள் தொடர்பில் இளைஞர் யுவதிகள் அவதானமாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். யாழ்.மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களை சேர்ந்த வேலையற்ற இளைஞர்கள், யுவதிகளை இலக்கு வைத்து மோசடி சம்பவம் இடம்பெற்று வருகின்றது. குறித்த மோசடி மூலம் இதுவரை நூற்றுக்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இது தொடர்பில் தெரியவருவதாவது, வேலையற்ற இளைஞர் யுவதிகளை...
இன அடக்குமுறைக்கெதிராக போராடுவதற்காக எதிர்வரும் 14ஆம் திகதி யாழ். மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக அனைத்துத் தமிழ் மக்களையும் ஒன்றிணையுமாறு தமிழ் மக்கள் பேரவை அழைப்பு விடுத்துள்ளது. தமிழ் மக்கள் பேரவையின் செயற்குழுவின் ஏற்பாட்டில் யாழ். மாவட்டத்தினைப் பிரதிநித்துவப்படுத்தும் பொது அமைப்புக்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலொன்று அண்மையில் யாழ். பொதுநூலகத்தின் கேட்போர் கூடத்தில்...
வாகனங்களின் உரிமையை சரியான முறையில் மாற்றிக் கொள்ளாமல் பயன்படுத்தும் தற்போதைய உரிமையாளர்கள், தமது வாகனங்களை தமது பெயர்களுக்கு மாற்றிக் கொள்வதற்கான சலுகைக் காலம் வழங்கப்படும் என்று மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் ஜகத் சந்திரசிறி கூறினார். வாகனங்களின் ஆரம்ப உரிமையாளரிடமிருந்து சரியான முறையில் உரிமை மாற்றப்படாமையின் காரணமாக வாகன விபத்துக்களின் போது பல்வேறு குழப்படிகளுக்கு முகங்கொடுக்க...
புகையிரதம் மீது கல்வீச்சு நடாத்துவோரை சுடுவதற்கு பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது. கல் வீச்சுத் தாக்குதல் மேற்கொள்வோர் மீது துப்பாக்கிச் சூடு நடத்த 0.38 மில்லிமீற்றா ரக 25 கைத்துப்பாக்கிகள் புகையிரத திணைக்களத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அனுமதியுடன் வெலிசறை கடற்படை முகாமிலிருந்து இந்த துப்பாக்கிகள் வழங்கப்பட்டுள்ளதாக புகையிரதப் பாதுகாப்புப் பிரிவு பொறுப்பாளர் அனுர பிரேமரட்ன தெரிவித்துள்ளார்....
நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்துக்கு வருகை தரும் பக்தர்கள், தங்க நகைகள் அணிந்து வருவதை குறைத்துக்கொள்ளுமாறு யாழ். மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் சஞ்ஜீவ தர்மரட்ண தெரிவித்தார். நல்லூர் ஆலய மகோற்சவம் கடந்த 8ஆம் திகதி ஆரம்பமாகி இடம்பெற்று வரும் நிலையில், பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பில் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர்...
கிளிநொச்சி, இரணைமடு, கனகாம்பிகை அம்மன் ஆலய வளாகத்தில் புத்த விகாரை அமைப்பது பௌத்தர்கள் இல்லாத இடங்களில் திட்டமிட்டு பௌத்த சின்னங்களை அமைப்பது உள்ளிட்ட செயற்பாடுகளை கண்டித்து நாளை திங்கட்கிழமை கிளிநொச்சியில் மாபெரும் பேரணி ஒன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி ஆனையிறவில் இருந்து கரடிப் போக்கு சந்தி வரை இடம்பெறவுள்ள இந்தப் பேரணிக்கு கிளிநொச்சி மாவட்ட பொது...
Loading posts...
All posts loaded
No more posts