- Monday
- January 20th, 2025
அமைச்சர் ராஜித்த சேனாரத்னவின் பணிப்புரையின் பேரில் உணவுப் பாதுகாப்பு வாரம் இன்று முதல் எதிர்வரும் 3ம் திகதி வரை நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக, சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதன்படி, ஹோட்டல்கள், பேக்கரிகள் மற்றும் தூர இடங்களுக்கு பயணிக்கும் பஸ்கள் நிறுத்தும் இடங்களிலுள்ள உணவகங்களில் இக் காலப் பகுதியில் விஷேட சோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக, அமைச்சு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது. இதேவேளை, குடி...
கல்லூண்டாய் வெளியில் வாள்வெட்டுக்கு இலக்காகி வீழ்ந்து கிடந்த நிலையில் பொலிஸாரால், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் தொடர்பில், எந்தத் தகவலையும் பெறமுடியாத நிலையில் மானிப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எச்.ஜீ.என்.டி ஜெயவீர, பொதுமக்களின் உதவியை நாடியுள்ளார். 45 தொடக்கம் 50 வயது மதிக்கத்தக்க குறித்த நபர் கடந்த 16ம் திகதி இரவு கல்லுண்டாய் வெளிபகுதியில் வாள்வெட்டுக்கு இலக்கான...
அரச ஊழியர்களின் பதவியுயர்வுக்கு புதிய முறைமையொன்றை அறிமுகம் செய்யவுள்ளதாக பொதுநிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சு அறிவித்துள்ளது. இதுவரை காலமும் சேவைக் காலத்தை அடிப்படையாக வைத்து வழங்கப்பட்டு வந்த பதவி உயர்வுகள், எதிர்காலத்தில் அரச சேவையாளர்களின் செயல்திறனை அடிப்படையாகக் கொண்டு இப்பதவியுயர்வுகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார். அரச சேவையை நவீனமயப்படுத்தும் வேலைத்...
வழமையான தொலைபேசி அழைப்புகளிற்கு மாறாக இணையத்தளத்தினூடாக மக்கள் தொடர்புகளை மேற்கொள்கின்றமையே இணையத்தளத்திற்கான வரி அதிகரித்துள்ளமைக்கான காரணம் என நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். இருப்பினும் அத்தொகை அதிகமானது அல்லவெனும் அவர் நேற்று நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் தெரியப்படுத்தியிருந்தார். மேலும் அவர் தெரிவிக்கையில், எம்மோடு தொலைபேசி நிறுவனங்கள் நடாத்திய பேச்சுவார்த்தையின்போது தொலைபேசி அழைப்புகளிற்குப் பதிலாக அதிகமானோர் வைபர்...
நாடு முழுவதிலுமுள்ள பாடசாலைகளை அண்மித்த பகுதிகளில், அதாவது, பாடசாலையிலிருந்து சுமார் 500 மீற்றர் தொலைவுக்குள், சிகெரட்டுகள் மற்றும் புகையிலை உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்யத் தடை விதிக்கப்போவதாக, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். அத்துடன், சுண்ணாம்பு மற்றும் பாக்கு விற்பனைக்கு எதிராகவும், கடுமையான சட்ட நடவடிக்கைகளை எடுக்க, நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் அவர் குறிப்பிட்டார். புகையிலை...
தற்போது பெய்து வரும் கடும்மழை காரணமாக, பூநகரி, மண்டைக்கல்லாறு ஏ - 32 (யாழ்ப்பாணம் - மன்னார்) வீதியை ஊடறுத்து, நீர் பாய்வதால் அவ்வீதியினூடான போக்குவரத்து தடைப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தற்போது, இந்தப் பகுதியூடாக 1 அடிக்கும் மேலாக நீர் பாய்கின்றது. இதனால் இப்பகுதியூடாக கனரகங்களைச் செலுத்திச் செல்வதை தவிர்த்துக்கொள்ளுமாறு, பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். இந்த வீதியினூடாக...
மத மற்றும் இன நல்லிணக்கத்துக்கு பங்கம் விளைவிக்கும் விதத்தில் குரோதப் பேச்சுக்கள், அறிக்கைகள் விடுதல் போன்றவற்றினால் மக்களைத் தூண்டி விடும் விதமாக செயற்படும் நபர்களை உடனடியாக கைது செய்து, அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் விதத்தில் பொலிஸ் தலைமையகத்தில் விசேட பிரிவொன்று நேற்று (21) ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மக்களைத் தூண்டி விடுபவர்களை விசாரணை செய்ய...
வாகன சாரதிகளுக்கு எதிரான ஆறு வகையான குற்றச்சாட்டுக்களுக்கான அபராதத்தை 25,000 ரூபா வரை அதிகரிக்க, தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்துடன் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதன்படி, போதையில் வாகனம் செலுத்துதல், சாரதி அனுமதிப் பத்திரம் இன்றி வாகனம் செலுத்துதல், பாதுகாப்பற்ற வகையில் ரயில் பாதைகளில் பயணித்தல், காப்புறுதி...
வங்கால விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழ் அமுக்கம் காரணமாக நாட்டின் பல பிரதேசங்களிலும் இன்று (18) கடுமையான மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்த தாழ் அமுக்கம் அடுத்துவரும் 48 மணித்தியாலங்களுக்கு காணப்படும் எனவும் திணைக்களம் மேலும் கூறியுள்ளது.
கிளிநொச்சியில் எலிக் காய்ச்சல் காரணமாக ஒருவா் மரணமடைந்துள்ளார் என மாவட்ட வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 13 ஆம் திகதி வயல் விதைப்பில் ஈடுப்பட்ட பின்னா் காய்ச்சல் காரணமாக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கிளிநொச்சி மருதநரைச் சோ்ந்த 57 வயது நிரம்பிய விவசாயியே எலிக் காய்ச்சல் காரணமாக நேற்று முன் தினம் உயிரிழந்துள்ளார். எனவே...
இந்த முறை கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு அடையாள அட்டை பெற்றுக் கொடுப்பதற்காக எதிர்வரும் 19ம் திகதி சனிக்கிழமை விஷேட வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுப்பதற்கு ஆட்பதிவுத் திணைக்களம் தீர்மானித்துள்ளது. இதுவரை அடையாள அட்டையைப் பெற்றுக் கொள்ளாத மாணவர்களுக்காக அன்றையதினம் காலை 8.30 மணி முதல் மாலை 4.30 மணிவரை விஷேட ஒருநாள்...
வடக்கு மாகாணத்தில் யுத்தத்தினாலும் ஏனைய காரணங்களினாலும் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டு சுயமாக நடமாடமுடியாது படுக்கையிலிருக்கும் நோயளிகளின் நலன்கருதி வடக்கு மாகாண சுகாதார அமைச்சு விசேட நடமாடும் மருத்துவ சேவையொன்றினை வடக்கு மாகாணத்தில் ஆரம்பித்துள்ளது. இந்த நடமாடும் மருத்துவ சேவைக்குழுவில் மருத்துவ தாதிய உத்தியோகத்தர், உளநலஆலோசகர் மற்றும் சுகாதார பணியாளர் ஆகியோர் இடம்பெறுவரென சுகாதார அமைச்சரின் ஊடக...
யாழ். மாநகர சபை சுத்திகரிப்புத் தொழிலாளர்களின் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பினால் யாழ். நகர் முழுவதும் கழிவுப்பொருட்கள் நிறைந்து காணப்படுகின்றன. இதனால் சுகாதாரச் சீர்கேடான நிலைமை ஏற்பட்டுள்ளது. இதன் தாக்கத்தினால் வயிற்றோட்டம், கொலரா மற்றும் டெங்கு ஆகிய நோய்கள் பரவலாம் என அரச மருத்துவ சங்கம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது மழை ஆரம்பித்துள்ளதால் கழிவுகள் நீரில்...
அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி நிற்கும் தேசிய அமைப்புக்கு ஆதரவு தெரிவித்து நாளை (சனிக்கிழமை) வடமராட்சியில் கையெழுத்து போராட்டம் நடத்தப்படவுள்ளது. அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலான இப்போராட்டத்திற்கு அனைத்து மக்களும் ஒன்றிணைய வேண்டும் என அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான யாழ்ப்பாணத்தின் இணைப்பாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார். குறித்த கையெழுத்து போராட்டமானது,...
விலை குறைக்கப்பட்டுள்ள மருந்துகளை கூடுதல் விலைகளில் விற்றால் அவை தொடர்பில் அறிவிக்குமாறு சுகாதார அமைச்சர் தெரிவித்தார். அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு, அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்றபோதே, அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். கட்டுப்பாட்டு விலையை மீறி மருந்து விற்பனை செய்யும் மருந்தகங்கள் தொடர்பிலான முறைப்பாடுகளை வழங்க, சுகாதார அமைச்சினால் விசேட தொலைபேசி இலக்கங்கள்...
பிரசவத்தின் போது பெண் ஒருவரை துணைக்கு அழைத்துக்கொள்ள கர்ப்பிணிகளுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட உள்ளது. பிரவசத்தின் போது கர்ப்பிணிகள் தங்களது மனோதிடத்தை வலுப்படுத்திக்கொள்ள தமக்கு விருப்பான பெண் ஒருவரை துணைக்கு அழைத்துக்கொள்ள சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என கொழும்பு காசல் மகப்பேற்று வைத்தியசாலையின் மகப்பேற்று நிபுணத்துவ மருத்துவர் பேராசிரியர் ஹேமந்த சேனாநாயக்க தெரிவித்துள்ளார். அண்மையில் கொழும்பில் நடைபெற்ற...
மருந்துகளின் விலை குறைக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றை உரிய முறையில் நடைமுறைப்படுத்தாத மருந்தகங்கள் குறித்து முறைப்பாடு செய்ய இரு தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி இவ்வாறு ஏதேனும் முறைப்பாடுகள் இருப்பின் 011 30 71 073 மற்றும் 011 30 92 269 என்ற இலக்கங்களுக்கு அழைத்து பொது மக்கள் தெரிவிக்க முடியும்.
வற் எனப்படும் பெறுமதி சேர் வரி மற்றும் தேசத்தை கட்டியெழுப்பும் வரி என்பன இன்று முதல் அமுலுக்கு வருகின்றன.கடந்த ஒக்டோபர் மாதம் 26ம் திகதி இதற்கான திருத்தச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருந்தது.இதன்படி முன்பு 11 சதவீதமாக இருந்த வற் வரி, 15 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. வற் வரி பதிவுக்கான மொத்த மற்றும் சில்லறை விற்பனைகளுக்கான குறைமட்ட...
1983 தொடக்கம் 2009ஆம் ஆண்டு காலப்பகுதிக்கு இடைப்பட்ட காலத்தில் பயங்கரவாத அச்சுறுத்தலினால் தமது சொந்தக் காணிகளை கைவிட்டவர்கள் அல்லது உயிர் அச்சுறுத்தலின் காரணமாக மிகக் குறைந்த விலையில் காணிகளை விற்றவர்கள் தங்களது காணிகளை மீளப் பெறுவதற்கான விசேட சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இச் சட்ட மூலமானது இரண்டு வருடத்திற்கு மாத்திரமே செல்லுபடியாகும் என்பதால் இவ்வாறான...
தேவையற்ற விதத்தில் சேதப்படுத்தப்பட்டுள்ள அல்லது திரிபுபடுத்தப்பட்டுள்ள நாணயத் தாள்களை பொறுப்பேற்பதை தவிர்ந்து கொள்ளுமாறும் அவ்வாறு பொறுப்பெற்பவர் நஷ்டமடைய வேண்டியேற்படும் எனவும் மத்திய வங்கி பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது. இதுபோன்ற பணத் தாள்களுக்கு மத்திய வங்கியினால் எந்தவொரு கொடுப்பனவும் வழங்கப்பட மாட்டாது எனவும் வங்கி தெரிவித்துள்ளது. இதனால், கொடுக்கல், வாங்கல் செய்யும்போது இவ்வாறான பணத்தாள்கள் குறித்து அவதானமாக இருக்குமாறும்,...
Loading posts...
All posts loaded
No more posts