- Wednesday
- January 15th, 2025
காலாவதியான சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடியாகும் காலத்தை நீடித்து அதிசிறப்பு அரசிதழ் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் போக்குவரத்து அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி கையெழுத்திட்டார். அதன்படி, ஏப்ரல் 1 முதல் செப்டம்பர் 30ஆம் திகதிவரை காலாவதியாகும் சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடியாகும் திகதியிலிருந்து 12 மாதங்கள் நீட்டிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இன்று ஒக்டோபர் முதலாம் திகதி காலாவதியாகும் சாரதி அனுமதிப்பத்திரங்களின்...
வடக்கு மாகாணத்தில் சிறப்பு தேவை மற்றும் நாட்பட்ட நோய்கள் உள்ள 12 தொடக்கம் 19 வயதினருக்கான கோவிட்-19 தடுப்பு மருந்தேற்றும் நடவடிக்கை நாளைமறுதினம் வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கப்படும் என்று மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார். இதுதொடர்பில் அவர் அனுப்பிவைத்த ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; கோவிட் 19 தடுப்பூசி வழங்கல் திட்டத்தின் கீழ் சிறப்புத்...
யாழ்ப்பாணத்தில் இன்னமும் கணிசமான கர்ப்பிணித்தாய்மார்கள் மத்தியில் கோவிட்-19 தடுப்பூசிக்கு வரவேற்பு குறைவாக காணப்படுகின்றது. தடுப்பூசியானது ஏனையவர்களைப் போலவே கர்ப்பவதிகளை கோவிட் – 19 தொற்றிலிருந்து பாதுகாப்பதுடன் தொற்றினால் ஏற்படும் பாதிப்புக்களையும் மிக கணிசமான அளவில் குறைக்கும். மாறாக இத்தடுப்பூசியானது அதனைப் பெற்றுக்கொள்ளும் கர்ப்பவதிக்கோ, அவரது சிசுவிற்கோ எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இவ்வாறு...
கடந்த ஜூலை மாதம் முதல் இது வரையில் கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களில் 12 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் ஏற்பட்டுள்ளதாக விசேட வைத்திய நிபுணர் பிரிமாலி ஜயசேகர தெரிவித்தார். கருப்பு பூஞ்சை நோய்க்கான பிரதான அறிகுறி முகத்தின் ஒரு பக்கத்தில் வலி ஏற்படுகின்றமையாகும். அத்தோடு ஒருபக்கமாக தலை வலி, தடிமன், சுவாசிப்பதில் சிரமம், மூக்கின் மேல்...
கொரோனா தொற்று காலத்தில் அவசர சேவைக்காக மட்டும் கிளை அலுவலகங்கள் வரையறுக்கப்பட்ட நாட்களுக்கு திறந்திருக்கும் என குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி வவுனியா, மாத்தறை கண்டி மற்றும் குருநாகல் உள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பிராந்திய அலுவலகங்கள் திறக்கப்படும் என அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. குறித்த அலுவலகங்கள் அத்தியாவசிய மற்றும் அவசர சேவைகளை வழங்குவதற்காக...
தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டாலும் அலட்சியமாக செயற்படாதீர்கள் என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். தற்போதைய வட. மாகாண கொரோனா நிலைமை தொடர்பாக கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார் இதன்போது தொடர்ந்தும் தெரிவித்த அவர், “வடக்கு மாகாணத்தில் தற்போது கொரோனா தொற்றுக்கு எதிராக தடுப்பூசி வழங்கும் பணிகள் சிறப்பாக இடம்பெற்று வருகின்றன. அந்த அடிப்படையிலே...
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகின்றவர்கள், அளவுக்கு அதிகமாக நோயெதிர்ப்பு மருத்துகளை பயன்படுத்துவதனை தவிர்த்துக்கொள்ளுங்கள் என சுகாதார பிரிவு வலியுறுத்தியுள்ளது. சமீபகாலமாக கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்பவர்களில் 30 வயதிற்கு குறைவானவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதை அவதானிக்க கூடியதாக உள்ளது என சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது. மேலும், நேற்று (வெள்ளிக்கிழமை) பதிவான கொரோனா மரணங்களில் 5 பேர்,...
கொரோனா தொற்றுக்குள்ளாகி இறப்பவர்களின் சடலங்களை தகனம் செய்வதற்கு யாழ் மாநகர சபையினால் 6500 ரூபா கட்டனம் அறிவிடப்படுகின்றது. எனினும் குறித்த கட்டணத்தை செலுத்த முடியாதவர்கள் யாரவது தனிப்பட்டமுறையில் என்னை தொடர்பு கொண்டால் அவர்களுக்கு என்னால் உதவ முடியும் என யாழ் மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார். யாழ் மாநகர ஆளுகைக்குள் உள்ள மின்மயான தகனம்...
யாழ்.போதனா வைத்தியசாலையில் நேற்றைய (திங்கட்கிழமை) நிலவரப்படி, கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 129 பேர், சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 10 பேர், அதிதீவிர சிகிச்சைப் பிரிவுகளில் மருத்துவக் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். யாழில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றமையினால், வைத்தியசாலைகளிலும் இட ஒதுக்கீடு முழுமையடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, தெல்லிப்பழை,...
பொதுமக்கள் தங்கள் சொந்த கிராம அலுவலகர் பிரிவு அல்லது சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனையில் இருந்து மட்டுமே கோவிட்-19 தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளுமாறு இராணுவ தளபதி, ஜெனரல் சவேந்திர சில்வா கேட்டுள்ளார். ஒவ்வொரு பகுதிக்கும் பரிந்துரைக்கப்பட்ட அளவுகள் கொடுக்கப்படுவதால், தடுப்பூசியை தங்கள் சொந்தப் பகுதியிலிருந்து மட்டுமே பெற்றுக்கொள்ளுமாறு அவர் குறிப்பிட்டுள்ளார். அண்மையில் பல தடுப்பூசி மையங்களில்...
தொண்டமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய அன்னதான மடத்தில் உணவு பரிமாறுபவருக்கு கொரோன தொற்று உறுதியானது. செல்வச்சந்நிதி ஆலய வருடாந்த மகோற்சவம் நேற்று முன்தினம் (8) ஆரம்பித்தது. இதை முன்னிட்டு ஆலயச்சூழலில் உள்ளவர்கள், ஆலயத்துடன் தொடர்புடையவர்களிடம் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் கச்சான் வியாபாரிகள் 2 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர். சந்நிதியின் மோகன் அன்னதான மடத்தின்...
கொரோனா தொற்று உறுதியான ஒருவருடன் நெருங்கிய தொடர்புடையவர்களுக்கு 3 முதல் 5 நாட்களுக்குள் பரிசோதனை நடத்தப்பட வேண்டும் என ஸ்ரீஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை மற்றும் நுண் உயிரியல் துறை பரிந்துரைத்துள்ளது. நோய் கட்டுப்பாட்டு நிலையத்தின் பரிந்துரை, சோதனைகளை மேற்கோள் காட்டி அத்துறையின் பணிப்பாளர், வைத்தியர் சந்திம ஜீவந்தர இதனை தெரிவித்துள்ளார். இது குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள...
உங்களுக்கு அல்லது உங்கள் குடும்ப உறுப்பினருக்கு தோல் நோய் அறிகுறிகள் இருந்தால் உடனடியாக அருகிலுள்ள அரச மருத்துவமனையில் உள்ள தோல் மருத்துவ சிகிச்சைப் பிரிவுக்குச் செல்லுமாறு தோல் மருத்துவ வல்லுநர் நிறுவனம் பரிந்துரைக்கிறது. கோவிட்-19 தொற்றுநோயின் போது டைனியா எனப்படும் பூஞ்சை தோல் நோய் வேகமாக பரவுவது குறித்து அரச தகவல் திணைக்களத்தில் நேற்று (04)...
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தற்போதுள்ள கோரோனா தொற்று அபாய நிலையைக் கருத்திற்கொண்டு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் சுற்றறிக்கைக்கு அமைவாக வழிபாட்டு தலங்கள், திருமண மற்றும் ஏனைய வைபவங்களின்போது கண்டிப்பாகப் பின்பற்றப்படவேண்டிய விதிமுறைகளை மாவட்டச் செயலாளர் க.மகேசன் அறிவித்துள்ளார். இதுதொடர்பில் அவர் அனுப்பிவைத்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; வழிபாட்டு தலங்களுக்கான கோவிட் -19 சுகாதார பாதுகாப்பு நடைமுறைகள்...
நாட்டில் குறுகிய காலத்திற்குள் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 3 இலட்சத்தை கடந்துள்ளமை சிறிய விடயமல்லவென சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆகவே மக்கள் அனைவரும் சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக கடைபிடிக்காவிடின், மீண்டும் கட்டுப்பாடுகளுக்கு முகம் கொடுக்க நேரிடுமென அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. இதேவேளை கடந்த புதன்கிழமையுடன் வைரஸ் தொற்றாளர்கள் எண்ணிக்கை 3 இலட்சத்தைக் கடந்திருந்தது. இந்நிலையில் நேற்று...
தடுப்பூசிகளைப் பெற்றுக் கொண்டாலும் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை நாங்கள் தொடர்ந்து பின்பற்ற வேண்டுமென வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ. கேதீஸ்வரன் தெரிவித்தார். தடுப்பூசி வழங்கல் தொடர்பில் நேற்று (28) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், வட மாகாணத்தில் கொவிட்-19 தடுப்பு மருந்தேற்றல் திட்டத்தின் கீழ்...
கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த நோயாளர்கள் குணமடைந்து 14 நாட்களின் பின்னர் தடுப்பூசியை பெறுவது உகந்ததாகும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. எனவே, தேவையற்ற முறையில் அச்சமடையத் தேவையில்லை என விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். நோயாளர் ஒருவர் குணமடைந்து வீடு திரும்பியதன் பின்னர், அன்று முதல் 14 நாட்களுக்குப் பின்னர் தாமதிக்காமல் தடுப்பூசியைப்...
மோட்டார் போக்குவரத்து குற்றங்களுக்கு தண்டம் செலுத்த இணைய முறையை அறிமுகப்படுத்தப்படவுள்ளது. அத்துடன், பல்வேறு போக்குவரத்து குற்றங்களுக்கு புள்ளியிடும் முறையும் அறிமுகப்படுத்தப்படும் என்று இலங்கை பொலிஸ் தெரிவித்துள்ளது. நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய மோட்டார் போக்குவரத்து மற்றும் வீதிப் பாதுகாப்பு பிரிவின் பணிப்பாளர், மூத்த பொலிஸ் அத்தியட்சகர் இந்திக ஹபுகோட இதனைத் தெரிவித்தார். வாகன சாரதிகள்...
கொரோனா பரவல் நிலைமையைக் கருத்திற்கொண்டு மக்கள் பின்பற்ற வேண்டிய புதுப்பிக்கப்பட்ட சுகாதார வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளது. இந்த சுகாதார வழிகாட்டல்கள் இன்று முதல் எதிர்வரும் 19ஆம் திகதி வரை அமுலாகவுள்ளன. இந்த சுகாதார வழிகாட்டல்கள், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தனவினால் வெளியிடப்பட்டுள்ளது. பொது போக்குவரத்து சேவைகளில் பயணிக்க, ஆசன கொள்ளளவில் 50 சதவீதமானோருக்கு...
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அதிகரித்து வரும் வன்முறைச் சம்பவங்களைக் கட்டுப்படுத்த அனைத்துப் பிரதேசங்களிலும் சிறப்பு அதிரடிப் படையினர், இராணுவத்தினரின் உதவியுடன் சிறப்பு பொலிஸ் ரோந்து நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த லியனகே அறிவுறுத்தியுள்ளார். அத்துடன், பொலிஸ் காவலரங்களையும் அதிகரிக்குமாறு சகல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும் அவர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். யாழ்ப்பாணம் மாவட்டத்தில்...
Loading posts...
All posts loaded
No more posts