மாற்றப்பட்ட காலாவதி திகதிகள்

நுகர்வோரை ஏமாற்றும் வகையில் காலாவதி திகதியை மாற்றி விற்பனை செய்த பிரபல நிறுவனத்தின் பொருட்கள் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அந்த சபையின் யாழ்ப்பாண மாவட்ட இணைப்பதிகாரி தெரிவித்துள்ளார். . யாழ்ப்பாணம் நீர்வேலி பகுதியிலுள்ள வியாபார நிலையத்தில் பாவனையாளர் அதிகார சபை உத்தியோகத்தர்கள் தேடுதல் நடத்திய வேளை மரக்கறி விதைகளை கொண்ட ரின்கள்...

வீதிகளில் நாய்களை விடுபவர்களுக்கு எதிராக அதிரடி சட்டம்

வீதிகளில் நாய்களை விட்டு செல்பவர்கள் மற்றும் வீதிகளில் திரியவிடுபவர்களுக்கு எதிராக ரூபாய் 25 ஆயிரம் அபராதம் மற்றும் 6 மாத சிறைத் தண்டனையும் விதிப்பதற்கு சட்டத்தை உருவாக்கவுள்ளதாக மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சு தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் பைசர் முஸ்தபா மேற்கொண்டவாறு தெரிவித்துள்ளார்....
Ad Widget

கிளிநொச்சி மக்களுக்கு அவசர அறிவித்தல்

கிளிநொச்சி மாவட்டத்தில் டெங்குக் காய்ச்சலானது மிகத் தீவிரமாகப் பரவக்கூடிய அபாயநிலை அவதானிக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார். வீடுவீடாகச் சென்று டெங்கு நுளம்பு வளரும் இடங்களை இனங்கண்டு அழித்தல், விழிப்புணர்வு ஏற்படுத்துதல், பாடசாலைகள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களை சுத்திகரித்தல் ஆகிய நடவடிக்கைள் மாவட்டம் முழுவதும் முன்னெடுக்கப்படுவதால் ஒவ்வொருவரும் உங்களால் இயன்றபங்களிப்பை...

7 போக்குவரத்துக் குற்றங்களுக்கான 25000 ரூபா தண்டப்பண அறிக்கை 2 வாரத்தில்

போக்குவரத்துச் சட்ட மீறல்களுக்காக 25 ஆயிரம் ரூபா தண்டப் பணம் அறவிடும் சட்ட மூலத்தின், மீளமைக்கப்பட்ட அறிக்கை இன்னும் இரு வாரங்களில் தயாரிக்கப்படும் என போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது. 7 போக்குவரத்துக் குற்றச் செயல்களுக்காக இந்த தண்டப்பணம் அறவிடப் போவதாக அரசாங்கம் அறிவித்திருந்தது. மோட்டார் போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் தண்டப் பணம் சீர்திருத்தம் செய்ய நியமிக்கப்பட்ட...

சிரேஷ்ட பிரஜைகளின் விஷேட வட்டிக்கான வைப்பு தொகை அதிகரிப்பு

நாட்டின் சிரேஷ்ட பிரஜைகளின் சேமிப்பு கணக்குகளுக்கு வழங்கப்படவுள்ள 15 வீத விஷேட வட்டிக்கான அதிகபட்ச நிலையான வைப்பு தொகை 10 இலட்சத்திலிருந்து 15 இலட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 2017 வரவு செலவு திட்டத்தில் முன் வைக்கப்பட்ட குறித்த யோசனை மார்ச் மாதம் 01ம் திகதி முதல் அமுலுக்கு வரும் என்று நிதியமைச்சு தெரிவித்துள்ளது. 60 வயதுக்கு மேற்பட்ட...

வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளுக்கான அவசர கலந்துரையாடல்

பட்டதாரிகளுக்கு உறுதியளிக்கப்பட்ட வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றப்படாத நிலையில், வடமாகாணத்தில் உள்ள வேலையற்ற பட்டதாரிகளுக்கான அவசர கலந்துரையாடலொன்று நாளை (ஞாயிற்றுக்கிழமை) நல்லூர் ஆலய முன்றலில் நடைபெறவுள்ளது. இதன்போது, பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பினை பெற்றுக்கொள்வது தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்கப்படவுள்ளதாக வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகத்தின் தலைவர் துஷாந்தன் தெரிவித்துள்ளார். காலை 10 மணிக்கு ஆரம்பிக்கப்படவுள்ள குறித்த கலந்துரையாடலில், வடமாகாண...

ச.தொ.ச. வில் அரிசி ஒரு கிலோ 66 ரூபா!

நாடு முழுவதிலுமுள்ள ச.தொ.ச. கிளைகளில் ஒரு கிலோ அரிசியை 66 ரூபாவுக்குப் பெற்றுக் கொள்ள முடியும் கைத்தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சு அறிவித்துள்ளது. தேசிய ரீதியிலுள்ள 340 கிளைகளில் நாட்டரிசி மற்றும் பச்சை அரிசி என்பவற்றை 66.00 ரூபாவுக்குப் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது. அரசாங்கத்தின் வாழ்க்கைச் செலவுக் குழுவினால் முன்னெடுக்கப்பட்ட...

அரிசி விலை 66 ரூபாவரை குறைக்கப்பட்டுள்ளது!

மக்களின் நன்மை கருதி அரிசிக்கான வரிகள் குறைக்கப்பட்டுள்ள நிலையில், ஒரு கிலோகிராம் அரிசியினை 66 ரூபாவிற்கு விற்பனை செய்யலாம் என நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். நிதி அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து தெரிவித்த அமைச்சர், ‘மக்களுக்கு சலுகைகளை பெற்றுக் கொடுக்கும் நோக்கில்...

ட்ராம்பின் தீர்மானத்தினால் இலங்கையர்களுக்கு பாதிப்பு எதுவும் கிடையாது

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ராம்பின் தீர்மானத்தினால் இலங்கையர்களுக்கு பாதிப்பு கிடையாது என வெளிவிவகார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் மஹேசினி கொலன்ணே தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் ஜோன் எப். கென்னடி விமான நிலையத்தில் இலங்கையர்கள் உள்ளிட்ட 71 வெளிநாட்டுப் பிரஜைகள் நாட்டுக்குள் பிரவேசிக்க முடியாதிருப்பதாக வெளியான தகவல்கள் தொடர்பில் அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார். இலங்கையைச் சேர்ந்த எவரும்...

இன்று வைத்தியர்கள் வேலை நிறுத்தம்

இன்றைய தினம் பரந்தளவிலான தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. இன்று காலை 08 மணிமுதல் 12 மணி வரை 4 மணித்தியாலங்கள் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக அந்த சங்கம் கூறியுள்ளது. சைட்டம் மருத்துவ கல்லூரிக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்கள் மீது, தாக்குதல் நடத்தப்பட்டமைக்கு...

பயணிகள் போக்குவரத்து பஸ் சாரதிகள் விசேட அனுமதிப் பத்திரம் ஜூலை 0 1 முதல் கட்டாயம்

பயணிகள் போக்குவரத்து பஸ்களில் சாரதிகளாக உள்ளவர்கள் பயணிகள் தொடர்பாக போக்குவரத்து திணைக்களத்தினால் பயிற்சியின் பின் வழங்கப்பட்ட அனுமதிப் பத்திரத்தை வைத்திருப்பது கட்டாயம் எனவும், இது தொடர்பான சட்டம் ஜூலை 01 ஆம் திகதி முதல் அமுலுக்கு வருவதாகவும் போக்குவரத்துப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தினால் இவ்வருடத்தில் புதிதாக இந்த சட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுவரையில்...

தரமான தலைக்கவசம் அணியும் சட்டம் ஏப்ரல் 01 ஆம் திகதி முதல் அமுல்

மோட்டார் சைக்கிளில் பயணிப்போருக்கான தரம் வாய்ந்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் கூடிய தலைக்கவசம் அணியும் சட்டம் எதிர்வரும் ஏப்றல் மாதம் 01 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். இலங்கை தரப்படுத்தும் நிறுவனமும், நுகர்வோர் அதிகார சபையும் இந்த பணிக்கு...

ஏப்ரல் 01 ஆம் திகதி முதல் முச்சக்கர வண்டி புதிய சட்டங்கள் அமுல்

இதுவரையில் முச்சக்கர வண்டி தொடர்பில் அறிமுகம் செய்துவந்த புதிய சட்டங்கள் அனைத்தும் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 01 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. ஏற்கனவே, இது தொடர்பில் வெளியிடப்பட்டிருந்த வர்த்தமானி அறிவித்தல் மேற்படி திகதி முதல் அமுலுக்கு வரும் எனவும் அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது. அறிமுகமாகியுள்ள புதிய சட்டதிட்டங்களின் படி, அனைத்து...

மழையுடன் கூடிய காலநிலை தொடரும்

நாட்டிலும், நாட்டைச் சூழவுள்ள கடற்பகுதியிலும் மழையுடன் கூடிய காலநிலை தொடரும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இது குறித்து திணைக்களம் இன்று அதிகாலை 5.30க்கு வெளியிட்டுள்ள அறிக்கையில் : சில இடங்களில் 100 மில்லி மீற்றர்களை தாண்டிய மழை பெய்யலாம். இடியுடன் கூடிய மழையின்போது வலுவான காற்றும் வீசக்கூடும். இடி மின்னல் தொடர்பில் பொது மக்கள்...

இன்றும் நாளையும் நாட்டின் பல பிரதேசங்களில் கடும் மழை பெய்யக்கூடும்!

நாட்டின் பல இடங்களில் இன்றும் நாளையும் இடியுடன் கூடிய கடுமையான மழை பெய்யக்கூடுமென எதிர்பார்ப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அடுத்து வரும் 48 மணித்தியாலத்துக்குள் வடக்கு, கிழக்கு உட்பட வடமத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் கடுமையான மழை எதிர்பார்க்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மட்டக்களப்பில் கடும் மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதுடன், மக்களின் அன்றாட...

 31ஆம் திகதி “ட்ரோன்“ பயிற்சி

ட்​ரோன் புகைப்படக் கருவியை பயன்படுத்தும் போது, கடைபிடிக்கப்பட வேண்டிய ஒழுக்க விழுமியங்கள் மற்றும் சட்ட விதிமுறைகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக தெளிவுபடுத்துவதற்கான செயலமர்வை அரச தகவல் திணைக்களம் ஏற்பாடு செய்துள்ளது. இந்த செயலமர்வு அரச தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில், எதிர்வரும் 31ஆம் திகதி,முழுநேர செயலமர்வாக நடைபெறும் என்றும் திணைக்களம் அறிவித்துள்ளது. ஊடக வர்த்தகம் மற்றும்...

வியாழன் மாலை 4 மணிக்கு நல்லூர் முன்றலில் கவனயீர்ப்பு!

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் முன்னெடுக்கும் உண்ணாவிரதப்போராட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில் அரசியல் கலப்பற்ற விதத்தில் இளைஞர்களின் ஆதரவு போராட்டத்துக்கான கவனயீர்ப்பு ஒன்றுகூடல் நாளை (26.01.2017) வியாழன் மாலை 4 மணிக்கு நல்லூர் முன்றலில் நடைபெறும். மேலும் வெள்ளிக்கிழமை 27.01.2017 அன்று காலை 9 மணிக்கு ஆதரவு தெரிவிக்கும் விதத்தில் வவுனியா விஜயம் செய்யப்பட்டு உண்ணாவிரத...

போலி ஐயாயிரம் ரூபா நாணயத்தாள்கள்

போலி ஐயாயிரம் ரூபா நாணயத்தாள்கள் புளக்கத்தில் இருப்பதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இதனால் கொடுக்கல் வாங்கல் நடவடிக்கையின் போது மிக அவதானத்துடன் இருக்குமாறு பொலிசார் பொதுமக்களை கேட்டுள்ளனர். களுத்துறை வடக்குப் பகுதியில் உள்ள வீடொன்றில் சிலரினால் அச்சிடப்பட்ட போலி ஐயாயிரம் ரூபா கள்ள நாணயத்தாள்கள் தரகர்கள் மூலம் புளக்கத்தில் விடப்பட்டுள்ளன. இது குறித்து மிக விழிப்புடன் செயற்படுமாறு,...

வடக்கு மாகாணத்தில் இலத்திரனியல் முறையில் வாகன வருமானவரி அனுமதிப்பத்திரம் வழங்க திட்டம்

வடக்கு மாகாணத்தில் இலத்திரனியல் முறையில் வாகன வருமானவரி அனுமதிப்பத்திரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது. இது குறித்து அந்த அமைச்சு இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “இலத்திரனியல் முறையில் வாகன வருமானவரி அனுமதிப்பத்திரம் வழங்கும் திட்டத்தின் மூலம் வாகன வருமான வரி...

கிழக்கு எழுகதமிழ் பெப்ரவரி 10 ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது

கிழக்கு எழுகதமிழ் பெப்ரவரி 10 ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தமிழ் மக்கள் பேரவை அறிவித்துள்ளது. இதுதொடர்பில் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்... தமிழ் மக்களின் அடிப்படை அரசியல் அபிலாசைகளையும் அன்றாட ஒடுக்குமுறைகளையும் மக்கள் ஒன்றுதிரண்டு வெளிப்படுத்தும் ஜனநாயக எழுச்சியான எழுகதமிழ் நிகழ்வானது கிழக்கு மாகாணத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தினத்தில் இருந்து தவிர்க்க முடியாத காரணங்களால் எதிர்வரும் மாசி...
Loading posts...

All posts loaded

No more posts