யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் பொதுமக்களுக்கு அவசர வேண்டுகோள்!

யாழ் போதனா வைத்தியசாலைக்கு நோயாளர்களைப் பார்வையிடுவதற்கு வருவதை இயன்றளவு தவிர்க்குமாறு வைத்தியசாலை பணிப்பாளர் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்... கடந்த சில வாரங்களாக நாட்டில் நிலவும் அசாதாரண காலநிலை மாற்றங்களால் தொற்று நோய்களின் தாக்கம் பல்வேறு தரப்பினரையும் பாதித்துள்ளது. இதில் குறிப்பாக டெங்கு, சளிசுரம் (இன்புளூவென்சா வகைக் காய்ச்சல்) மற்றும் பல்வேறு...

காணாமல்போனோரை கண்டறிய உதவி கோரல்

சவூதி அரேபியா, லெபனான் ஆகிய நாடுகளுக்கு வேலைவாய்ப்புக்காகச் சென்று காணாமல் போன இலங்கையர்கள் ஐவர் தொடர்பான தகவல்களைப் பெற்றுக்கொள்ளவதற்காக, மக்களின் உதவி கோரப்பட்டுள்ளது. இதுவரை எவ்விதத் தகவல்களும் இல்லாத இந்நபர்கள் தொடர்பில், பாதிக்கப்பட்டோரின் உறவினர்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்திடம் முறைப்பாடு செய்துள்ளனர். இதற்கமைய, வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம், காணாமல் போனவர்களின் விவரங்கள் அடங்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளது....
Ad Widget

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சிகளின் வருடாந்த பொதுக் கூட்டம்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சிகளின் 2017ஆம் ஆண்டிற்கான வருடாந்தப் பொதுக் கூட்டம் எதிர்வரும் 5ஆம் திகதி பங்குனி 2017 (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ளது. இது தொடர்பில் அவர்களால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சிகளின் 2017ஆம் ஆண்டிற்கான வருடாந்தப்...

கட்டுப்பாட்டு விலைக்கும் குறைவாக அரிசியை பெற்றுக் கொள்ளலாம்!

அரிசிக்கு நியமிக்கப்பட்ட உயர்ந்தபட்ட சில்லறை விலைக்கும் மூன்று ரூபா குறைவாக சதோசவில் அரிசி விற்கப்படுவதாக, அமைச்சர் ரிஷாட் பதியூதின் தெரிவித்துள்ளார். தேசிய மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட அரிசிகள் சதோச களஞ்சியசாலைகளில் தேவையான அளவு உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை நடமாடும் வாகனங்களைப் பயன்படுத்தி நகர மற்றும் சன நெரிசலுள்ள பகுதிகளில் அரிசி விற்பனை செய்ய நடவடிக்கை...

வடமாகாண வைத்தியர்கள் வேலை நிறுத்தம்

மாலபே தனியார் வைத்திய கல்வி வழங்கும் நிறுவனத்தினை அரசுடைமையாகுமாறு அரசினை வலியுறுத்தும் முகமாக வடமாகாண வைத்தியர்கள் எதிர்வரும் 2 ம் திகதி வியாழக்கிழமை வடமாகாணத்தில் 24 மணி நேர வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். எனினும் தெல்லிப்பளை புற்று நோய் வைத்தியசாலை மற்றும் ஏனைய வைத்தியசாலைகள் அனைத்திலும் அவசர நோயாளர் சேவைகள் இடம்பெறும் எனவும் அரச மருத்துவ...

வட மாகாண வேலையற்ற பட்டதாரிகளை பதிவுகளை மேற்கொள்ளுமாறு அழைப்பு

வட மகாணத்தில் உள்ள வேலையற்ற பட்டதாரிகளின் முழுமையான விபரங்களை அறிந்துகொள்வதற்காக அவர்களை இன்று புதன் கிழமை முதல் பதிவுகளை மேற்கொள்ளுமாறு அழைப்பு விடுவிக்கப்பட்டுள்ளது. மேற்படி அழைப்பினை வடக்கு மாகாண சபையின உறுப்பினர் கனகரட்னம் விந்தன் விடுத்துள்ளார். யாழ் மாவட்டச் செயலகம் முன்பாக காலவறையறையற்ற தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டும் வரும் வேலையற்ற பட்டதாரிகளை நேற்று செவ்வாய்கிழமை...

கடலுக்குச் செல்பவர்களே அவதானம்!

திருகோணமலை – கொழும்பு கடற்பகுதியில் மீன்பிடி மற்றும் கடற்தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் அவதானமாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு ஆழ்கடல் பகுதிகளில் மேக மூட்டம் அதிகமாக இருப்பதோடு, காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 70 – 80 கிலோமீற்றர் வேகத்தில் வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களின் போராட்டத்தை வலுப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல்

பிலக்குடியிருப்பு மற்றும் புதுக்குடியிருப்பு மக்களின் போராட்டத்தை வலுப்படுத்தல் தொடர்பான கல்துரையாடலுக்கு தமிழ் மக்கள் பேரவை அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பில் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்.. ஆக்கிரமிப்புக்கெதிரான குறியீட்டுவடிவமான மாறியுள்ள கேப்பாபிலவு குடியிருப்பு மற்றும் புதுக்குடியிருப்பு மக்களின் போராட்டம் ஏறத்தழ ஒருமாதத்தை எட்டியுள்ளது. தமது கொள்கையில் மிகத்தெளிவாகவும் உறுதியாகவும் அந்த மக்கள் சுய எழுச்சியுடன் முன்னெடுத்துள்ள இந்த...

கர்ப்பிணிகளே அவதானம்!

கிளிநொச்சி மாவட்டத்தில் இம் மாதம் 10ம் திகதி முதல் தற்போது வரை பத்து கர்ப்பிணித் தாய்மார்களுக்கு பன்றிக் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது என, மாவட்ட வைத்தியதுறை தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன. இது தொடர்பில் மாவட்ட மருத்துவ துறை பொது மக்களுக்கு விடுத்துள்ள வேண்டுகோளில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கிளிநொச்சி மாவட்டத்தில் 10.02.2017 இலிருந்து 25.02.2017 காலப் பகுதியில் பத்து கர்ப்பிணிப் பெண்கள்...

சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான தேசிய அடையாள அட்டை

கல்விப்பொதுத் தராதர சாதாரண பரீட்சைக்கு இம்முறை தோற்றும் மாணவர்களுக்கான தேசிய அடையாள அட்டைகளை வழங்கும் நடவடிக்கையை ஆட்பதிவுத் திணைக்களம் ஆரம்பித்துள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் மார்ச் மாதம் 31ஆம் திகதி வரை ஏற்றுக் கொள்ளப்பட இருக்கின்றன. தேசிய அடையாள அட்டையை பெற்றுக் கொள்வதற்கான வயதெல்லை 16 இல் இருந்து 15 வரை குறைக்கப்பட்டிருப்பதாக ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது....

வடமாகாண வைத்தியசாலைகள் அனைத்திலும் பொலித்தீன் பிளாஸ்ரிக் தடை!

வடமாகாண சுகாதார அமைச்சின் கீழ் உள்ள வைத்தியசாலைகள் அனைத்திலும் பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் பாவனையை முற்றுமுழுதாக தடை செய்வதற்கு ஆலோசனை முன்வைக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வடக்கில் டெங்கு தொற்று தொடர்பான முன்னேற்ற மீளாய்வு கூட்டம் நேற்றைய தினம் வடமாகாண சுகாதார அமைச்சின் அலுவலகத்தில் வடமாகாண சுகாதார அமைச்சர் தலைமையில் நடைபெற்றது. அதன் போதே மேற்கண்டவாறு தீர்மானம்...

தலைக்கவசம் அணிவது தொடர்பான முக்கிய 10 விடயங்கள் வர்த்தமானியில்

மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் தலைக்கவசம் பயன்படுத்தும் முறை தொடர்பான விதிமுறைகள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் நேற்று (23) இரவு வௌிடைப்பட்டுள்ளது. போக்குவரத்து துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவின் கையொப்பத்துடன் இந்த வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. அதன்படி மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் தலைக்கவசம் பயன்படுத்தும் போது பின்பற்ற ​வேண்டிய 10 விடயங்கள் தொடர்பில் இந்த...

பல்கலைக்கழகங்களில் பகிடிவதை செய்தால் உடன் அழையுங்கள்

கடந்த காலங்களில் புதிதாக பல்கலைக்கழகங்களில் தங்களது படிப்பை தொடர வரும் மாணவர்களை சிரேஸ்ட மாணவர்கள் பகிடிவதை மற்றும் சித்திரவதைகள் செய்தமையினால் பல மாணவர்கள் பல இன்னல்களுக்கு ஆட்படுத்தப்பட்டுள்ளனர். இதனை, கருத்திற் கொண்டு இந்தமுறை அதனை முற்றாக தடுக்கும் நோக்குடன் பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் பகிடிவதை மற்றும் மாணவர்கள் முகம் கொடுக்கும் அனைத்து சித்திரவதைகள் தொடர்பான முறைப்பாடுகளை இணையத்தின்...

யாழ் பல்கலைக்கழ கலைப்பீட புதுமுக மாணவர்களுக்கான அறிவித்தல்

கலைப் பீடத்துக்கு புதிதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள 2015/2016 ஆம் கல்வி ஆண்டுக்குரிய மாணவர்களுக்கான அறிமுக நிகழ்வு எதிர்வரும் 01.03.2017 புதன்கிழமை காலை ஆரம்பமாகும் என்று கலைப்பீடாதிபதி கலாநிதி கருணாகரன் சுதாகர் தெரிவித்துள்ளார். இதன்படி கலைப்பீடத்துக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள மாணவர்கள் 01.03.2017 புதன்கிழமை காலை ஒன்பது மணிக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கைலாசபதி கலையரங்கில் நடைபெறும் அறிமுக ஆரம்ப...

அரிசி தொடர்பான மோசடிகளை 1977 எனும் எண்ணுக்கு அறிவிக்கவும்

அரிசி பதுக்கி வைத்தல், அரசின் கட்டுப்பட்டு விலைக்கு அதிகமாக விற்பனை செய்தல் மற்றும் இரசாயன கலவை அடங்கிய அரிசி விற்பனை செய்தல் போன்ற மேசடிகள் தொடர்பில் 1977 எனும் இலக்கத்துக்கு முறைப்பாடு செய்யுமாறு அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். குறித்த இலக்கம் காலை 07 மணி முதல் இரவு 10 மணி வரை இயங்குமென அவர்...

யாழ் மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் காலவரையற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில்!

யாழ் மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் எதிர்வரும் திங்கட்கிழமையிலிருந்து காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளது. குறித்த விடயம் தொடர்பான கலந்துரையாடல் இன்றைய தினம் காலை 10.00 மணியளவில் யாழ். மாவட்ட செயலகத்தின் முன்பாக நடைபெற்றது. 2012ம் ஆண்டு முதல் பல்கலைக்கழக பட்டப்படிப்பினை நிறைவு செய்து பட்டதாரிகளாக வெளியேறிய மாணவர்களுக்கான உரிய வேலைகள் கிடைக்காததை கண்டித்தும், தொண்டர்...

வாகனங்களுக்கான அபராதத் தொகையை 50,000 வரை அதிகரிப்பதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது

போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்களுக்கான அபராதத் தொகையை 25,000 முதல் 50,000 வரை அதிகரிப்பதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து தொழிற்சங்கம் தெரிவித்தது. கடந்த வருடத்தின் டிசம்பர் 03 ஆம் திகதி ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய வாகனங்களுக்கான அபராதத் தொகையை விதிப்பது தொடர்பான பிரச்சினையை விசாரிப்பதற்கு விசேட குழு ஒன்று நியமிக்கப்பட்டது. நிதி, போக்குவரத்து, சட்டம் ஆகிய...

அரிசி வகைகளுக்கான அதிகபட்ச சில்லறை விலைகள் வெளியீடு!

இறக்குமதி மற்றும் உள்நாட்டு அரிசி வகைகளுக்கான சில்லறை விலைகள் நேற்று நள்ளிரவுமுதல் அமுலுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. இதற்கமைய, இறக்குமதி செய்யப்பட்ட உள்நாட்டு அரிசி ஒரு கிலோ 70 ரூபாவாகவும், உள்நாட்டு உற்பத்தி அரிசி ஒரு கிலோ 80 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இறக்குமதி செய்யப்பட்ட பச்சை அரிசி ஒரு கிலோகிராம் 70 ரூபாவாகவும், உள்நாட்டு பச்சை அரிசி ஒரு...

மின்சாரத்தை சிக்கனப்படுத்தினால் மின்கட்டணத்தில் கழிவு

மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துவோருக்கு மேலும் சலுகைகளை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது. மின்சார சபைக்கு வழங்கும் உதவி என்னவென்றால், வழமையை விட ஒரு மின்விளக்கை அணைத்து வைப்பதாகும். டிசம்பர் மாதத்தை விட ஜனவரி மாத மின் கட்டணத்தை 10 வீதத்தால் குறைத்துக் கொள்பவர்களுக்கும், ஜனவரியை விட பெப்ருவரி மாதத்தின் கட்டணத்தை 10 வீதத்தால் குறைத்துக்...

வடக்கில் காவல்துறையினருக்கு எதிராக முறைப்பாடுகளை பதிவு செய்ய அஞ்சும் மக்கள்!

வடமாகாண தேசிய காவல்துறை ஆணைக்குழுவில் கடந்த ஜனவரி மாதத்தில் காவல்துறையினருக்கு எதிராக இரண்டு முறைப்பாடுகள் பதியப்பட்டுள்ளதாக வடமாகாண தேசிய காவல்துறை ஆணைக்குழுவின் முகாமைத்துவ உதவியாளர் தர்மகுலசிங்கம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், குறித்த இரண்டு முறைப்பாடுகளும் காணி தொடர்பான பிரச்சினைகளில் காவல்துறையினர் பக்கச்சார்பாக நடந்துகொண்டமை தொடர்பிலான முறைப்பாடுகள் ஆகும். இதில் ஒரு முறைப்பாடு...
Loading posts...

All posts loaded

No more posts