- Tuesday
- January 21st, 2025
தற்கொலை செய்து கொள்வதனை ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதனை தவிர்க்குமாறு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றின் மூலம் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீண்ட காலமாக சிறுவர்கள் உட்பட இளைஞர்கள் ரயிலில் தலையை வைத்து தற்கொலை செய்து கொள்வது தொடர்பில்...
இலங்கையில் புழக்கத்திலிருக்கும் நாணயத்தாள்களை சேதப்படுத்துதல், அதில் மாற்றங்களை செய்தல், மற்றும் சிதைத்தல் என்பன தண்டனைக்குரிய குற்றம் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இவ்வாறு நாணயத்தாளை சேதப்படுத்துபவர்களுக்கு சிறைத்தண்டனை மற்றும் தண்டப்பணம் விதிக்கப்படும் அளவிற்கு சட்டத்தில் இடமிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை குறித்த செயற்பாட்டை நிறுத்திக்கொள்ளுமாறும், அவ்வாறு சேதமாக்கப்பட்டுள்ள நாணயத்தாளை உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளினூடாக மாற்றிக்கொள்ளுமாறும்...
யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் மன்னார் மாவட்டங்களில் இன்று (சனிக்கிழமை) உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின்விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு பணிகளுக்காக, மின்சார விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. இன்று காலை 8.30 முதல் மாலை 5.30 வரை இந்த மின்சார விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது. இதன்படி, யாழ்ப்பாண மாவட்டத்தில்...
வடக்கு மாகாண சபையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை தொடர்பிலும், மக்கள் முதல்வர் விக்னேஸ்வரன் ஐயாவின் கொள்கைகளை தொடர்ந்தும் கொண்டுசெல்வது குறித்துமான மக்கள் கலந்துரையாடல் ஒன்றிற்கு தமிழ் மக்கள் பேரவை அழைப்பு விடுத்துள்ளது. இடம் : 65, அம்மன் வீதி , நல்லூர் - வீரமாகாளி அம்மன் ஆலயத்திற்கு முன் செல்லும் வீதி காலம் : இன்று...
இயற்கை அனர்த்தம் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட பரீட்சைகளை மீண்டும் நடத்துவதற்கான திகதிகள் பரீட்சைத் திணைக்களத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி, அரச முகாமைத்துவ உதவியாளர் சேவையின் தரம் 3 இற்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை ஜூலை மாதம் 22 ஆம் திகதி நடைபெறவுள்ளது. மேலும் அரச முகாமைத்துவ உதவியாளர் சேவையின் தரம் 3 இற்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான...
யாழ்ப்பாணம், வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 8.00 மணி முதல் மாலை 6.00 மணிவரை மின் தடை அமுல்படுத்தப்பட உள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின்விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு பணிகளுக்காக இந்த மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது. இதற்கமைய, யாழ்ப்பாண...
தபால் தொழிற்சங்கம் இன்று நள்ளிரவு முதல் அடையாள பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளது. இதற்கமைய இன்று நள்ளிரவு முதல் 48 மணித்தியாலங்களுக்கு இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக தபால் தொழிற்சங்க முன்னணி தெரிவித்துள்ளது. நிர்வாக ரீதியாக தாம் முகம் கொடுத்துள்ள பிரச்சினைகளுக்கு இதுவரையில் உரிய தீர்வுகள் வழங்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த பணி...
சாரதிகள் உட்பட போக்குவரத்துத் தொடர்பான சட்டங்களை மீறுவேர் மீது இன்று (திங்கட்கிழமை) முதல் கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கொழும்பு நகரப் போக்குவரத்துப் பொலிஸ் பிரிவின் பணிப்பாளர் சுமித் நிஸ்ஸங்க தெரிவித்துள்ளார். பாதைச் சட்டத்தை மீறுவோர்களில் அதிகமானவர்கள் முச்சக்கரவண்டி சாரதிகளும், மோட்டார் சைக்கிள் சாரதிகளுமே காணப்படுகிறார்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த பாதை ஒழுங்கு...
தமிழக அரசினால் கைது செய்யப்பட்டுள்ள ஈழத் தமிழ் ஆதரவு செயற்பாட்டாளர் திருமுருகன்காந்தி அவர்களின் விடுதலையை வலியுறுத்தும் போராட்டத்திற்கான அழைப்பு கடந்த 2009 மே மாதம் முள்ளிவாய்க்காலில் எமது மக்கள் மீது ஸ்ரீலங்கா அரசாங்கம் இனவழிப்பு யுத்தம் ஒன்றின் மூலம் படுகொலையை அரங்கேற்றிய பின்னர் தமிழ் மக்களின் நீதிக்கான போராட்டம் தமிழகத்தையும், வெளிநாடுகளில் வாழும் தமிழ் மக்களையும்...
கட்டாரிலிருந்து இலங்கைக்குச் செல்பவர்கள், கட்டார் நாட்டின் உள்ளேயே, தங்களது பணத்தினை டொலராக மாற்றிக் கொள்ளுமாறு, கட்டாரில் உள்ள இலங்கைக்கான தூதுவர் ஏ.எஸ்.பி. லியனகே ஆலோசனை வழங்கியுள்ளார். தற்போழுது சுமார் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் இலங்கையர்கள் கட்டார் நாட்டில் உள்ளதாகவும், இப்போதைக்கு நாட்டின் நிலைமை மிகவும் அமைதியாகக் காணப்படுவதாகவும், விமான சேவைகளில் மாத்திரமே பிரச்சினைகள் இருப்பதாகவும்...
அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் மிக மோசமாக பாதிக்கபட்ட மாத்தறை பிட்டபத்தர டட்லி சேனாநாயக்க மகா வித்தியாலயத்தினை சுத்தப்படுத்தி பாடசாலை சமூகத்திற்கு மீள கையளிக்கவும் அம்மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் மற்றும் தேவையான அத்தியாவசிப் பொருட்கள் மற்றும் மருத்துவ, உளவள ஆலோசனைகளை வழங்குவதற்கும், இரத்தினபுரி களுத்துறை காலி மாத்தறை மாவட்ட மக்களுக்கு வழங்க முடிந்தளவு உதவிகளை வழங்குவதற்குமாக இந்த...
இறக்குமதி செய்யப்பட்ட பிளாஸ்ரிக் அரிசி மற்றும் முட்டை சந்தையில் இருப்பதாக பரப்பப்படும் வதந்திகளில் உண்மை இல்லை என்று சுகாதார அமைச்சின் உணவுக் கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இணையத் தளத்தில் வெளிவரும் செய்திகள் பொதுமக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. இது தொடர்பாக நாம் கேட்ட போது இந்த பிரிவின் சிரேஷ்டஅதிகாரி ஒருவர் இது குறித்து...
சமூக வலைத்தலங்கள் ஊடாக இனங்கள் மற்றும் ஆகமங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் நோக்கில் பொய்யான மற்றும் வெறுக்கத்தக்க கருத்துக்களை பரப்பும் நபர்கள் மற்றும் குழுவினருக்கு எதிராக கடுமையாக சட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இதன்பொருட்டு விஷேட பொலிஸ் குழுவொன்று அனுப்பப்பட்டுள்ளதாக, அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ள பொலிஸ் தலைமையகம் சுட்டிக்காட்டியுள்ளது. அண்மையில் நாரம்மல பகுதி ஹோட்டல் ஒன்றில்...
வெளிநாடுகளில் இலங்கைக் குடியுரிமையுடன் வசிப்பவர்களது பெயர்களை வாக்காளர் பெயர்ப்பட்டியலில் இங்குள்ள அவர்களது உறவினர்கள் இணைத்துக்கொள்ள முடியும்என தேர்தல்கள் திணைக்களத்தின் மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், நடப்பு ஆண்டுக்குரிய வாக்காளர் பெயர்ப் பட்டியல் தயாரிக்கும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. இந்த மாதம் 15 ஆம் திகதி வரையில் இந்த...
உலக வெப்பமயமாதல் காரணமாக எதிர்வரும் 50 வருடங்களில் யாழ்ப்பாணம் அரை பாலைவனமாக மாறும் வாய்ப்பு இருப்பதாக பெரு நகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க கூறியுள்ளார். நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், “தற்போது யாழ்ப்பாணத்தை...
ஈழத்தமிழர்களை நினைவு கூர்ந்தமைக்காக திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் கைதானமையைக் கண்டித்து யாழில் எதிர்ப்புப் போராட்டம் ஒன்று நடத்தப்படவுள்ளதகா தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். இதன்படி, எதிர்வரும் 08 ஆம் திகதி காலை 11 மணிக்கு எதிர்ப்புப் போராட்டம் ஒன்றை கட்சியின் சார்பாக யாழ்ப்பாணத்தில் நடத்துவதற்குத் தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். நேற்று...
தென்னிலங்கையில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி பொருட்களை வழங்க யாழ்ப்பாண மாவட்ட செயலகம் நடவடிக்கை எடுத்திருப்பதாக மாவட்ட செயலர் என்.வேதநாயகன் தெரிவித்துள்ளார். இந்த உதவி திட்டத்தில் பொதுமக்களையும் இணைந்து கொள்ளும்படி அழைப்பு விடுத்துள்ளார். இது விடயம் தொடர்பாக யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அரசாங்க அதிபர் இதனைத் தெரிவித்தார்....
நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி உதவிகளை வழங்க யாழ். மக்கள் முன்வர வேண்டும் என யாழ். மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் சஞ்சீவ தர்மரட்ண தெரிவித்துள்ளார். இது தொடர்பில் நேற்று (புதன்கிழமை) காலை ஊடகவியலாளர்களை சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது மேலும், அரிசி, சீனி, பருப்பு, பால்மா, மற்றும்...
யாழ்.பொதுநூலக எரிப்பின் 36 ஆவது ஆண்டு நினைவேந்தலும் கலந்துரையாடலும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ளது. யாழ். பொதுநூலக முன்றலில் இன்று (வியாழக்கிழமை ) மாலை 06 மணிக்கு ஆரம்பமாகவுள்ள இந்த நிகழ்வு. “இலங்கை அரசின் தொடரும் இன அழிப்பின் ஓர் அங்கமாகப் பண்பாட்டுப் படுகொலை” எனும் தொனிப்பொருளில் இடம்பெறவுள்ளது. இந்த நிகழ்வில் தமிழ்...
வங்காள விரிகுடாவின் கிழக்கு திசையில் நிலை கொண்டிருந்த ‘மோறா’ சூறாவளி இன்று (செவ்வாய்க்கிழமை) பங்களாதேஷ் பகுதிக்குள் நிழையும் எனவும் இதன்காரணமான இலங்கைக்கு பதிப்புக்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் இல்லை என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்காரணமாக, மேகம் மூட்டமாக காணப்படுவதுடன், மழை மற்றும் காற்று வீசக்கூடும் என்றும் அதிக மழை வீழ்ச்சி ஏற்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் எதிர்வு...
Loading posts...
All posts loaded
No more posts