- Wednesday
- January 22nd, 2025
டெங்கு நோயாளர்களை அடையாளம் காண்பதற்கு நடாத்தப்படும் இரத்தப் பரிசோதனையை 2 மணி நேரத்துக்குள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர ரணில் விக்கிரமசிங்க தனியார் வைத்தியசாலைகளின் பரிசோதனை நிலையங்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இரத்தப் பரிசோதனை அறிக்கை வழங்க 90 நிமிடங்களை அரச வைத்தியசாலைகள் எடுத்துக் கொள்கின்றன. தனியார் மருத்துவமனைகள் இதற்காக 8 மணித்தியாலங்களை எடுக்கின்றன. நோயாளர்களை அவசரமாக...
முல்லைத்தீவு மாவட்டத்தில் காடழிப்பினை மேற்கொண்டு திட்டமிட்ட குடியேற்றங்களை மேற்கொள்ளவு ள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பாரிய எதிர்ப்பு போராட்டம் நாளைய தினம் ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்படவுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் கூழாமுறிப்பு எனும் பகுதியில் உள்ள சுமார் 177 ஏக்கர் காட்டினை அழித்து குடியேற்றங்கள் மேற்கொள்ளபட உள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. முல்லைத்தீவு முள்ளியவளை காட்டா விநாயகர்...
தென்கொரியாவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள இலங்கையர்களுக்கு பொதுமன்னிப்பு காலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பொதுமன்னிப்பு காலம் வழங்கப்பட்டுள்ள கால எல்லைக்குள் இலங்கையர்கள் தென்கொரியாவை விட்டு வெளியேற வேண்டும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது. இதன்படி இலங்கையர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள பொதுமன்னிப்பு காலம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 10ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இக் காலப்பகுதிக்குள் தென்கொரியாவில் சட்டவிரோதமான முறையில்...
இராஜாங்க அமைச்சர் இராதாகிருஸ்னனின் கோரிக்கைக்கு அமைவாக உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கத்தின் 13 ஆவது சர்வதேச மாநாடானது இம்முறை யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளதாக உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கத்தினர் தெரிவித்துள்ளனர். நேற்றைய தினம் யாழ் ஊடக அமையத்தில் நடாத்தப்பட்ட பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டிருந்த உலக தமிழர் பண்பாட்டு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஆர்.ராஜசூரியன் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும்...
கனிய வள அமைச்சர் வழங்கிய வாக்குறுதிகளின் நடைப்பெறாவிட்டால் முன்னறிவித்தல் இன்றி மீண்டும் பணிப்புறக்கணிப்பில் ஈடுப்படவுள்ளதாக கனிய எண்ணெய் சார் தொழிற்சங்கம் எச்சரித்துள்ளது. அதன் இணைப்பாளர் டி.ஜே ராஜகருணா இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் மேற்கொள்ளப்பட்ட பணிப்புறக்கணிப்பு அரசாங்கத்தின் இணக்கப்பாட்டிற்கு அமைய தற்காலிமாக விலக்கிக்கொள்ளப்பட்டது. அதன்பின்னர் அரசாங்க தரப்பில் இருந்து எந்த விதமான உறுதி...
வடக்கு மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் 349 வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை நியமனம் செய்வதற்கான விண்ணப்பங்கள், மாகாண பொதுச் சபை ஆணைக்குழுவால் கோரப்பட்டுள்ளன. இதனடிப்படையில், விண்ணப்பிக்கும் பட்டதாரிகள் திறந்த போட்டிப் பரீட்சை மூலம் ஆசிரியர் சேவைக்கு உள்வாங்கப்படவுள்ளனர். விண்ணப்பமுடிவுத்திகதி 2017.08.04 என அறிவிக்கப்பட்டுள்ளது. பாடங்களும் அவற்றுக்கான வெற்றிடங்களும் வருமாறு- தமிழ்-61, வரலாறு-40, குடியியல்-39, தகவல் தொழில் நுட்பம்-27,...
இளைஞர்கள் மத்தியில் தொழில் திறனை ஊக்குவிக்கும் வகையில் புதிய சட்டம் ஏற்படுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அந்த வகையில் 35 வயதிற்கு குறைவான நபர்களுக்கு முச்சக்கரவண்டி அனுமதி பத்திரம் வழங்குவது தடை செய்யும் வகையில் குறித்த சட்டம் கொண்டுவரப்படவுள்ளது. புதிய சட்டத்திற்கான வரபுகள் தற்போது இடம்பெற்றுவருவதாகவும் விரைவில் நாடாளுமன்றத்தில் குறித்த சட்டமூலம் கொண்டுவரப்படும் என வீதி பாதுகாப்பு தொடர்பான...
கனடாவில் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாக கூறி, சிலர் நிதி மோசடியில் ஈடுபடுகின்றனர். இவ்விடயத்தில் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என, வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரல தெரிவித்தார். “இலங்கை மற்றும் கனேடிய அரசாங்கங்களுக்கு இடையில், வேலைவாய்ப்புத் தொடர்பில் எந்தவொரு ஒப்பந்தங்களும் இல்லை. “அண்மையில் கனடாவில் வேலைப் பெற்றுத்தருவதாகக் கூறி நிதி மோசடி செய்த பெண் ஒருவரை,...
இனி வரும் காலங்களில் முச்சக்கரவண்டி தொடர்பில் அதிகபட்ச வேகம், மணித்தியாலயத்துக்கு 40 கிலோமீற்றராக இருக்க வேண்டும் என, வீதிப் பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின் தலைவர் சிசிர கோதாகொட தெரிவித்தார். இதன் வர்த்தமானி அறிவித்தலை, அடுத்த வாரம் வெளியிட இருப்பதாகவும், அவர் மேலும் தெரிவித்தார்.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நாளை ஆரம்பிக்க இருந்த வேலை நிறுத்தப் போராட்டத்தை ஒருவார காலம் ஒத்திவைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இம்முறை, முதியோர் தினத்தை சிறந்த முறையில் கொண்டாடுவதற்கு, தேசிய முதியோர் செயலகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதற்காக, நூறு வயதைத் தாண்டியவர்களையும்,15 பிள்ளைகளைக் கொண்ட 75 வயதைத் தாண்டிய பெற்றோர்களையும் கௌரவிப்பதற்காக, அவர்கள் தொடர்பில் தகவல்களைத் தங்களுக்கு வழங்குமாறு அச்செயலகம் அறிவித்துள்ளது. இந்தத் தகவல்களை, பிரதேச செயலகத்தில், இம்மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் வழக்குமாறு, அச்செயலகம்,...
‘தடுமாறாத தமிழர்களிற்கு தலைமை ஏற்பது யார்?’ எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 9ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கருத்துப்பகிர்வு கலந்துரையாடலொன்று நடைபெறவுள்ளது. மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் கலைத்தூது மண்டபத்தில் இந்த கருத்துப் பகிர்வு இடம்பெறவுள்ளதாக மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்தார். குறித்த கருத்துப்பகிர்வு குறித்து அவர்...
சமகால அரசியல் நிலவரம் தொடர்பாக எழுத்துமூலமான கேள்விகளுக்கு மாத்திரமே பதிலளிக்கப்படும் என தமிழரசுக் கட்சி அறிவித்துள்ளது. “சமகால அரசியல் கருத்தரங்கும் கேள்வி பதில் நிகழ்ச்சியும்” என்ற குறித்த நிகழ்வுஎதிர்வரும் 11ஆம் நாள் செவ்வாய்க்கிழமை பி.ப.3.30க்கு நீர்வேலியில்இடம்பெறவுள்ளது. இலங்கை தமிழரசுக் கட்சித் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா மற்றும்நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் இதில்பங்கேற்கவுள்ளனர்....
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நாளை மறுதினம் (5ம் திகதி) முதல் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, அச் சங்கத்தின் உறுப்பினர்கள் இதனைக் கூறியுள்ளனர்.
இடம்பெயர்ந்து வாழும் மயிலிட்டி மக்கள் அனைவரையும் நாளை மறுதினம் திங்கட்கிழமை முற்பகல் 9 மணிக்கு மயிலிட்டி துறைமுக முன்றலில் ஒன்றுகூடி விடுவிக்கப்படாதுள்ள ஏனைய நிலப்பரப்புக்கு ஆதரவு தெரிவிக்குமாறு வலி.வடக்கு மீள்குடியேற்ற புனர்வாழ்வு சங்கத் தலைவர் அ.குணபாலசிங்கம் கேட்டுக்கொண்டுள்ளார். வலிகாமம் வடக்கு இராணுவ உயர்பாதுகாப்பு வலயத்தில் இருந்த மயிலிட்டி துறைமுகம் உட்பட அதனை அண்டிய பிரதேசம் சூழவுள்ள...
போக்குவரத்து குற்றங்கள் தொடர்பில் தண்டப்பணம் செலுத்துவதற்கான கால எல்லையை மேலும் ஒரு வாரத்திற்கு நீடித்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. தற்போது முன்னெடுக்கப்படும் தபால் ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டம் காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி , தண்டப்பண பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வழக்கு தினத்தில் இருந்து மேலும் ஒரு வார காலத்திற்குள் தண்டப்பணத்தை செலுத்த சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது....
பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்களை ஏற்கும் திகதி நீடிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதற்கமைய, அடுத்த மாதம் 7ம் திகதி வரை இந்தக் கால எல்லையை நீடிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, குறிப்பிடப்பட்டுள்ளது. தபால் ஊழியர்களால் மேற்கொள்ளப்படும் வேலை நிறுத்தம் காரணமாகவே இந்த முடிவை எடுத்துள்ளதாக, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது. முன்னதாக, 2016/ 2017ம் கல்வி ஆண்டுக்காக...
இலங்கைக்கு புயல் காற்று வீச கூடும் என வெளியாகியுள்ள தகவலில் எவ்வித உண்மையும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.வளிமண்டல திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது.இந்நிலையில், பொது மக்கள் அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தொடருந்துடன் ஆபத்தான வகையில் செல்பி புகைப்படம் எடுப்பவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளது என்று ரயில் பாதுகாப்பு அதிகாரி அனுர பிரேமரத்ன தெரிவித்துள்ளார். ரயில்வே கட்டளை சட்டத்துக்கமைய பயணிக்கும் ரயில் பயணி அல்லது ஏனைய நபர்கள் இவ்வாறு ஆபத்தான செல்பி புகைப்படங்கள் எடுக்க கூடாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு புகைப்படங்கள் எடுப்பவர்களுக்கு எதிராக சட்டரீதியான...
தனியார் வைத்தியசாலைகள் , இரசாயன கூடங்களில் மேற்கொள்ளப்படும் இரத்த பரிசோதனை மற்றும் டெங்கு இரத்த பரிசோதனைக்காக அறவிடப்படும் கட்டணம் நேற்று முதல் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. சுகாதார போசாக்கு மற்றும் சுதேசிய வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்னவின் வேண்டுகோளுக்கமைவாக நேற்று முதல் குறைக்கப்படுகின்றது. இதற்கமைவாக தனியார்வைத்தியசாலைகளில் முழுஅளவிலான இரத்த பரிசோதனைகளுக்கு 250 ரூபா ( Full...
Loading posts...
All posts loaded
No more posts