கிளிநொச்சியில் டெங்கு தாக்கம் அதிகரிப்பு!! பொதுமக்கள், பொது அமைப்புகளுக்கு அவசரவேண்டுகோள்!!

கடந்த சில நாட்களாகப் பெய்துவரும் மழை காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் டெங்கு நுளம்புகளின் பெருக்கம் சடுதியாக அதிகரித்துள்ளதாக கிளிநொச்சி மாவட்ட ஆராய்ச்சியியல் ஆய்வுப் பிரிவினர் எச்சரித்துள்ளனர். இவ்வாறு அதிகரித்துள்ள நுளம்புகள் டெங்குநோயாளிகளைக் கடிக்கநேரிட்டால் கிளிநொச்சி மாவட்டத்தில் அதிதீவிரமாக டெங்குநோய்த்தாக்கம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் ஆய்வுப்பிரிவினர் எச்சரித்துள்ளனர். தை மாதத்திலிருந்து நேற்று வரையான 227 நாட்களில் கிளிநொச்சி...

கால நிலையில் மாற்றம்!

கிழக்கு, ஊவா, வடக்கு, வடமத்திய மாகாணங்களில் மழையுடன் கூடிய காலநிலை இன்று முதல் எதிர்வரும் செவ்வாய்கிழமை வரையில் அதிகரிக்கலாம் என்று வளிமண்டவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டின் பெரும்பாலான இடங்களில் மேக மூட்டம் நிலவும் என்று திணைக்களம் அறிவித்துள்ளது. மேற்கு, சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையில் மழை பெய்யலாம்....
Ad Widget

மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்பு!

கிழக்கு, ஊவா, வடக்கு மற்றும் வட மத்திய ஆகிய நான்கு மாகாணங்களில் இன்று(10) மாலை மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. ஏனைய பிரதேசங்களிலும் வானத்தில் மேகக் கூட்டம் நிறைந்து காணப்படும். சப்ரகமுவ, மத்திய, மேற்கு, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள், காலி, மாத்தறை மாவட்டங்களில் மாலை 2 மணிக்கு பின்னர் இடியுடன்...

சாரதிகள் தவறிழைப்பின் 25,000 ரூபா அபராதம் விதிக்க அனுமதி

வாகன சாரதிகள் இழைக்கும் தவறுகளுக்காக குறைந்த பட்சம் 25,000 ரூபா வரையான அபராதத்தை விதிக்கும் யோசனைக்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. இதன்படி, மதுபோதையில் வாகனம் செலுத்துதல், உரிய வாகன அனுமதிப்பத்திரம் மற்றும் காப்புறுதி இல்லாமல் வாகனம் செலுத்துதல், ரயில் கடவைகளை கவனயீனமாக கடத்தல் போன்ற தவறுகளுக்காகவே இவ்வாறு அபராதம் விதிக்க அனுமதி கிட்டியுள்ளது. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும்...

வேலையற்ற பட்டதாரிகளை அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நியமிக்க அரசு தீர்மானம்!

வேலையற்ற பட்டதாரிகளை அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நியமிக்க தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகார அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்த விடயமாக அந்த அமைச்சு வெளியிட்டுள்ள அறிவித்தலில் அரசாங்கம் வேலையில்லாப் பட்டதாரிகளிடமிருந்து மாவட்ட அடிப்படையில் பயிற்சிக்காகவும் நியமனத்திற்காகவும் விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளத் தீர்மானித்துள்ளது. சுய தொழில், தனியார் துறை, அரச சார்பற்ற அல்லது அரசதுறை ஆகிய எந்தத் துறைகளிலும்...

கல்கிசை, காங்கேசன்துறை கடுகதி ரயிலில் மேலதிக பெட்டி இணைப்பு

பாடசாலை விடுமுறையை முன்னிட்டு கல்கிசையிலிருந்து காங்கேசன்துறை வரை பயணிக்கும் கடுகதி ரயிலிலும் காங்கேசன்துறையில் இருந்து கல்கிசை வரை பயணிக்கும் கடுகதி ரயிலிலும் மேலதிக பெட்டியொன்று இணைக்குமாறு ரயில் பொதுமுகாமையாளர் பணிப்புரை வழங்கியுள்ளார். மேலும் விடுமுறை காலத்தில் கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை நோக்கி செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் இன்று முதல் செப்டம்பர் மாதம்...

புதிய வாக்காளர் இடாப்பு பொது மக்கள் பார்வைக்கு, திருத்தம் இருப்பின் அறிவிக்கவும்

புதிய வாக்காளர் இடாப்பு பிரதேச செயலகங்களிலும், கிராம உத்தியோகத்தர் அலுவலங்களிலும், மாகாண சபை அலுவலகங்களிலும் நாளை (10) முதல் காட்சிப்படுத்தப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. வாக்காளர் இடாப்புக்களில் பொருத்தமற்றவர்களின் பெயர்கள் இடம்பெற்றிருந்தாலோ அல்லது பெயர்ப் பட்டியலில் தமது பெயர் இடம்பெறாதிருந்தாலோ அது தொடர்பான எதிர்ப்புக்களை தெரிவிக்க அடுத்த மாதம் 8ஆம் திகதி வரை காலாவகாசம் வழங்கப்படவுள்ளதாக...

செஞ்சோலைப் படுகொலையின் 11ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு!

செஞ்சோலைப் படுகொலையின் 11ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் எதிர்வரும் திங்கட்கிழமை (14-08-2016) இடம்பெறவுள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் கஜேந்திரன் தெரிவித்துள்ளார். மேற்படி நிகழ்வுகள் வள்ளிபுனம், முல்லைத்தீவில் (தாக்குதலுக்கு உள்ளான செஞ்சோலை வளாக வீதி) இடம்பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவில் செஞ்சோலை சிறுமிகள் காப்பகம் மீது கடந்த 2006ஆம்...

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழில் இன்று ஆர்ப்பாட்டம்

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெறவுள்ளது. இன்று மாலை 3.30 மணிக்கு யாழ். பேரூந்து தரிப்பிடம் முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட அரசியல் கைதி டில்ரூக்ஷனின் நினைவு தினத்தை முன்னிட்டு இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இலங்கை ஆசிரியர் சங்கம், யாழ்....

ரயில்வே திணைக்களத்தின் விசேட அறிவித்தல்!

ரயில் நிலையங்களில் உள்ள கழிவறைகளை முறையற்ற விதத்தில் பயன்படுத்துவோரை கைது செய்ய ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. ரயில்களிலும் ரயில் நிலையங்களிலும் இடம்பெறும் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுப்பதற்காகவே குறித்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும் ரயிலில் யாசகம் கேட்போரையும் கைதுசெய்வதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவோரை கைதுசெய்ய ரயில் நிலைய பாதுகாப்புப்...

இணையத்தள நிலையங்களும் செல்லும் சிறுவா்கள் தொடர்பில் அவதானம் செலுத்தவும்!

கிளிநொச்சி நகரத்தில் இயங்குகின்ற இணையத் தள நிலையங்களை நாடுகின்ற சிறுவர்கள் தொடர்பாக பெற்றோர்கள் விழிப்புடன் இருக்குமாறு அதிகாரிகளினால் அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன. 2010ம் ஆண்டின் பின்னர் கிளிநொச்சி நகரத்திலே பல இணையத் தள நிலையங்கள் இயங்குகின்றன. இவ் இணையத் தள நிலையங்களை நோக்கி சிறுவர்கள் கூடுதலாக செல்வதாகவும் இதன் காரணமாக பெற்றோர்கள் நெருக்கடியினை எதிர்கொண்டுள்ளதாகவும் கிளிநொச்சி மாவட்டச்...

ஊடகவியலாளர்களிற்கு கடன் திட்டம் : விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

ஊடகவியலாளர்களின் தொழில்வான்மையை மேம்படுத்தும் நோக்கில் அமுல்படுத்தப்படும் மாத்திய அருண என்ற கடன் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. ஊடக உபகரணங்களை கொள்வனவு செய்வதற்காக உயர்ந்த பட்சம் மூன்று இலட்சம் ரூபா வரை வட்டியின்றி கடன் வழங்கப்படவுள்ளது. இதேவேளை தம்மிடம் காணப்படும் ஊடக உபகரணங்களை திருத்துவதற்காக ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபா வரையிலான கடனை 50 சதவீத...

அவசர குடிநீர் தேவை ஏற்படின் 117 அழைக்கவும்!

நிலவிவரும் வறட்சியான காலநிலை காரணமாக குடிநீர்ப் பிரச்சினைகளை எதிர்நோக்குபவர்கள் 117 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு அறிவிக்குமாறு இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்தல் விடுத்துள்ளது. நாட்டின் பல பிரதேசங்களில் குடிநீர் விநியோகிக்கும் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், எதாவது குறைபாடுகள் காணப்படின் மேற்குறிப்பிட்ட தொலைபேசி இலக்கத்துக்கு அறியத்தருமாறு இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் ஊடகப்...

எதிர்பாராதவிதமாக மின்சாரம் தடைப்படக்கூடும் : இலங்கை மின்சார சபை எச்சரிக்கை!!

எதிர்பாராத விதமாக நாட்டில் இன்றைய தினம் மின்சாரம் தடைப்படக்கூடும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. நீர் மின் உற்பத்தி நிலையங்களின் மின்சார உற்பத்தியில் வீழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு காரணிகளினால் இவ்வாறு ஓர் நிலைமை ஏற்படும் என தெரிவித்துள்ளது. ஒரு பகுதியில் அதிகளவான மின்சாரம் தேவைப்படும் போது அங்கு மின்சார தடை ஏற்படும் என மின்சாரசபையின்...

மின்சாரத்தைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு வலியுறுத்தல்

மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு மின்சக்தி மற்றும் புதுப்பிக்கக்கூடிய வலு சக்தி அமைச்சு மக்களை கேட்டுள்ளது. நீர் ஏந்து பிரதேசங்களில் பொதியளவு மழைபெய்யாததினால் மின் உற்பத்திக்கான நீர்த் தேக்கங்களில் நீர் மட்டம் விரைவாக குறைந்து வருகிறது. தொடர்ச்சியான மின்விநியோகத்திற்காக மக்களின் ஒத்துழைப்புகள் தேவை என அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. மின்சாரம் கூடுதலாக பயன்படுத்தப்படும் மாலை 6.00 மணி முதல்...

நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருந்திருவிழா : வீதி தடை பற்றிய அறிவித்தல்!!

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருந்திருவிழா நாளை வெள்ளிக்கிழமை(28) முற்பகல்- 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. தொடர்ந்தும் 25 தினங்கள் காலை மாலை உற்சவங்களாக இடம்பெறவுள்ள இவ்வாலயப்பெருந்திருவிழாவில் பத்தாம் திருவிழாவான அடுத்த மாதம் 06 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 05 மணிக்கு மஞ்சத் திருவிழாவும், 12 ஆம் திகதி...

நவம்பரில் வடக்கு கிழக்கில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க கூடும்

நவம்பர் மாதம் அளவில் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் டெங்கு நோயளர்களின் எண்ணிக்கை அதிகரிக்ககூடும் என்று சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். இதனால் இந்த பிரதேசங்களில் சுற்றாடலை துப்பரவு செய்யும் நடவடிக்கையை துரிதமாக மேற்கொள்ளப்பட வேண்டியதன் அவசியத்தையும் அமைச்சர் தலைமையில் மாகாண சுகாதார அமைச்சர்கள் மாநாட்டில் அமைச்சர் சுட்டிக்காட்டினார்....

அரச வைத்தியர்கள் இன்று வேலை நிறுத்தம்

அர­ச­ வைத்­தி­ய­ அ­தி­கா­ரி­கள்­ சங்கம் இன்­று­காலை 8 மணி­முதல் 24 மணி ­நே­ர­ வே­லை­ நி­றுத்­தத்­தை­ முன்­னெ­டுக்­க­வுள்­ள­தா­க­ அ­றி­வித்­துள்­ளது. மருத்­து­வ­பீ­ட­ மா­ண­வ ­செ­யற்­பாட்டுக் குழுவின் ஒருங்­கி­ணைப்­பாளர் ரயன் ஜய­லத்­தை­க­டத்­த­ மு­யற்­சித்­தமை, வைத்­தி­ய­ ச­பையின் தலை­வ­ரை ­நி­ய­மிப்­பதில் ஏற்­பட்­டுள்­ள­ ஒ­ழுங்­கீ­னங்­கள்­ உள்­ளிட்­ட­ சி­ல ­முக்­கி­ய ­வி­ட­யங்­க­ளை­ முன்­வைத்­தே­ கு­றித்­த­ ப­ணிப்­பு­றக்­க­ணிப்பு இடம்­பெ­ற­வுள்­ள­தாக, அர­ச­ம­ருத்­து­வ­ அ­தி­கா­ரிகள் சங்­கத்தின் ஊட­கப்­பேச்­சாளர்...

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நாளை வேலை நிறுத்தம்!

தமது கோரிக்கைகளுக்கு அரசாங்கத்திடம் இருந்து உரிய தீர்வு வழங்காமையால், நாளை நாடளாவிய ரீதியில், அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, நாளை காலை 08.00 மணி முதல் 24 மணித்தியாலங்கள் இந்த நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

நாளை கண்டனப் பேரணி!

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தை கண்டித்து, வடக்கு கிழக்கில், நாளை செவ்வாய்க்கிழமை காலை 9:30க்கு கண்டனப் பேரணிகள் இடம்பெறவிருக்கின்றன. இந்தக் கண்டனப் பேரணிகளை வடக்கு, கிழக்கு ஒருங்கமைப்புக் குழு ஏற்பாடு செய்துள்ளது. அந்தக் குழு அனுப்பிவைத்துள்ள ஊடக அறிக்கையில், மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, யாழ்ப்பாணம் நல்லூர்ப்பகுதியில் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி...
Loading posts...

All posts loaded

No more posts