- Wednesday
- January 22nd, 2025
பிரதான மூன்று கோரிக்கைகளை முன்வைத்து இலங்கை மின்சாரசபை ஊழியர்கள் இன்று நண்பகல் 12மணி முதல் 48 மணித்தியால பணிப் பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக இலங்கை மின்சார சேவை சங்கத்தின் செயலாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்தார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில், நுகர்வோரின்...
செப்டெம்பர் 20 முதல் 26 வரையான ஒருவார காலம் தேசிய டெங்கு ஒழிப்பு வாரமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதன்போது, டெங்கு ஒழிப்பு துப்புரவுப் பணிகள் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் மழையுடன் கூடிய காலநிலையைத் தொடர்ந்து, டெங்கு நோய்த்தாக்கம் அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. வடக்கு, கிழக்கு, மலையகம் உட்பட நாட்டின் அனைத்துப் பிரதேசங்களிலும் டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்....
சையிட்டம் தனியார் மருத்துவக்கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்து, சையிட்டம் எதிர்ப்பு மக்கள் அரணின் ஏற்பாட்டில் எதிர்ப்பு வாகன பேரணி யாழில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட உள்ளது. அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள செய்திக்குறிப்பிலையே அவ்வாறு குறிப்பிடப்பட்டு உள்ளது. அதில் மேலும் குறிப்பிடப்பட்டு உள்ளதாவது, யாழ். முற்றவெளி திறந்த வெளியரங்கில் இன்று செவ்வாய்க்கிழமை காலை...
சைட்டம் தனியார் வைத்திய கல்லூரிக்கு எதிர்ப்பினை வெளிப்படுத்தி அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மீண்டும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்துள்ளது. சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிராக நாளை 12 ஆம் திகதி முதல் எதிர்வரும் 15ம் திகதி வரை மாவட்ட ரீதியாக ஒருநாள் அடையாள பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக குறித்த சங்கத்தின் செயலாளர்...
இலங்கையில் நாணயத்தாள் அச்சிடும் போது போலி அச்சிடலை தடுக்கும் தொழில்நுட்ப முறை ஒன்று கடைப்பிடிக்காமையினால் நாடு முழுவதும் போலி நாணயத்தாள் உள்ளதாக அரசாங்க அச்சுப்பொறி திணைக்களம் தெரிவித்துள்ளது. போலி நாணயத்தாள் அச்சிடப்படுவது தொடர்பில் ஒவ்வொரு மாதமும் முறைப்பாடு பதிவாகுவதாகவும், ஒரு மாதத்திற்கு நான்கு முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த சில மாதங்களாக நாடு...
விவசாய நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தாமல் கைவிடப்பட்டுள்ள தனியார் காணிகளை அரசமயப்படுத்தி அவற்றில் விவசாயத்தை மேற்கொள்ள கூடிய வகையில் தற்போது இருக்கின்ற சட்டத்தின் கீழ் விசேட அரச வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை பிறப்பிக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இலங்கையில் பாரிய அளவிலான தனியார் காணிகள் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதை தவிர்த்து கைவிடப்பட்ட நிலையில் காணப்படுவதாக சிறிசேன தெரிவித்தார்....
வீதி விதிமீறல்கள் தொடர்பில் விதிக்கப்பட்டுள்ள 25 ஆயிரம் ரூபா என்ற அபராதத் தொகையை நடைமுறைப்படுத்துவதற்கு அவசியமான சட்ட ஏற்பாடுகள் தற்போது தயாரிக்கப்பட்டு வருதாக வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின் தலைவர் சிசிர கோதாகொட தெரிவித்துள்ளார். குறித்த அபராதத் தொகை தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் அடுத்த வாரமளவில் வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, மோட்டார் சைக்கிள்களின் தலைக்கவசங்களுக்கு...
சென்ற மாதம் 12ம்திகதி கொக்குவில் குளப்பிட்டி பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் நபர் ஒருவர் காயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்தார். இவ்வாறு விபத்து சேவை பிரிவில் சிகிச்சைக்கு உட்படுத்து வந்த நபர் உயிரிழந்த நிலையில் சடலம் யாழ் போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் போக்குவரத்து பொலிஸார் குறிப்பிட்டனர். மேற்படி புகைப்படத்தில்...
போக்குவரத்து நெரிசல் காரணமாக அரச ஊழியர்கள் அலுவலகத்திற்கு வருவது தாமதப்படுவதால் அவர்களது வேலை நேரத்தில் சலுகை வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் அலுவலக நேரங்களில் நெகிழ்வுத் தன்மையினைக் கடைப்பிடிக்கும் திட்டம் எதிர்வரும் 18ம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இத்திட்டம் முதலில் அரச திணைக்களங்கள் அதிகளவில் காணப்படும் பத்தரமுல்ல பிரதேசத்தில் இருந்து அமுல்படுத்தப்படவுள்ளது. இத்திட்டத்தின்...
போக்குவரத்து விதியை மீறியதாக சாரதி ஒருவருக்கு தண்டப்பணம் அறவிடுதல் மற்றும் தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கும் போது போக்குவரத்து பொலிஸார் குறித்த சாரதிக்கு தெரிந்த மொழியிலேயே அதனை வழங்க வேண்டும். அவரது மொழி உரிமையை மீற முடியாது என, இலங்கை மனிதவுரிமை ஆணைக்குழுவின் வவுனியா பிராந்திய இணைப்பாளர் ஆர்.எல்.வசந்தராஜா தெரிவித்துள்ளார். போக்குவரத்து பொலிஸார் ஒருவரால், தனக்கு...
நேற்று முன்தினம் {05/09/17} யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் தமிழ் மக்கள் பேரவையினால் ஒழுங்குபடுத்தப்பட்ட "எம் அரசியல் தீர்வின் அடிப்படைகளும் சிறிலங்காவின் உத்தேச அரசியலமைப்பு முயற்சியும் " எனும் தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில்வெளியிடப்பட்ட பிரகடனம். பிரகடனம் தமிழ் மக்கள் பேரவை 05/09/17 1. இலங்கைத்தீவின் இனப்பிரச்சினைக்கான தீர்வானது, இந்த இனப்பிரச்சினையின் அடிப்படைக்காரணிகளை இனம்கண்டு நிரந்தரமாகத் தீர்ப்பதாக அமைய...
‘எம் அரசியல் தீர்வின் அடிப்படைகளும் சிறிலங்காவின் உத்தேச அரசியலமைப்பு முயற்சியும் ‘ தமிழ் மக்கள் பேரவையின் கருத்துப்பகிர்வும் பிரகடனமும். செப்டம்பர் 5 – காலை 9 மணி; யாழ் வீரசிங்கம் மண்டபம் தமிழ் மக்கள் பேரவையானது, துறைசார் நிபுணர்களின் உதவியுடன் சர்வதேச நாடுகளின் அரசியல் அனுபவங்களிற்கேற்ப ,தமிழர்களின் இருப்பை பாதுகாக்கும் அரசியற்கோரிக்கைகளையும் ஒரு தீர்வு யோசனையாக...
இலங்கையில் உள்ள மக்கள் அனைவரும் மறைமுகமாக மலேரியா தாக்கத்திற்கு உள்ளாகக்கூடிய சந்தர்ப்பம் மிக மிக அதிகமாக உள்ளதாக மலேரியா நோய் தடுப்பு பிரிவின் மன்னார் மாவட்ட பிராந்திய வைத்திய அதிகாரி டாக்டர் கே.அரவிந்தன் தெரிவித்துள்ளார். மலேரியா நுளம்பின் தாக்கம் மற்றும் அதன் பரவல் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில்...
எதிர்வரும் செப்டம்பர் மாதம் 6ஆம் திகதி வரையில் இலங்கைக்கு சூரியன் உச்ச வெப்பநிலையை கொடுக்கும் சாத்தியம் காணப்படுகின்றது. இதனால் வடக்கில் மேலும் வெப்பநிலை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது, அடுத்த மாதம் 6 ஆம் திகதி வரையில் இலங்கைக்கு செங்குத்தாக சூரியன் பயணிக்கவுள்ளது....
எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 2ஆம் திகதி இடம்பெறவிருந்த கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பொது அறிவு பாடத்துக்கான பரீட்சையை, 3ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடத்துவதற்கு, கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது என, கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார். எதிர்வரும் 2ஆம் திகதி, முஸ்லிம்கள் ஹஜ் பெருநாள் தினத்தை கொண்டாடுவதால், அன்று இடம்பெறவிருந்த மேற்குறிப்பிட்ட பாடத்துக்கான பரீட்சையைப் பிற்போடுமாறு,...
சூழல் மாசை கட்டுப்படுத்தும் வகையில் பொலித்தீன் மற்றும் பிளாிஸ்டிக் பாவனையை முற்றாக தடை செய்யும் நடவடிக்கைகளில் இலங்கை ஈடுபட்டுள்ளது. எதிா்வரும் செப்டெம்பா் முதலாம் திகதி தொடக்கம் இத்தடை அமுலுக்கு வரும் எனத் தெரிய வருகின்றது. 20 மைக்குரோனுக்கு குறைந்த தடிப்பையுடைய பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் மற்றும் பாவனை வியாபாரம் மற்றும் உற்பத்தி ஆகிய அனைத்தும் குறித்த...
உடுவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில், வறுமைக் கோட்டின் கீழ் வாழும் கலைஞர்களுக்கு கலாசார அலுவல்கள் திணைக்களத்தால் உதவி வழங்கும் செயற்றிட்டத்தின் கீழ், 2017ஆம் ஆண்டுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக, உடுவில் பிரதேச செயலாளர் மதுமதி வசந்தகுமார் தெரிவித்துள்ளார். உடுவில் பிரதேச கலாசார அதிகார சபையில் அங்கத்துவமுடைய கலைஞர்கள் 55 வயது முதல் 77 வயதுக்கு உட்பட்டவர்கள்...
யாழ்.மாவட்டத்தில் இதுவரை காலமும் பொது மக்கள் தாங்கள் விண்ணப்பித்த வாகன இலக்கத் தகடுகள் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திற்கு கிடைக்கப்பெற்றமை தொடர்பில் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்திலேயே பார்வையிட்டு வந்தனர். இதனை இலகுவாக்கும் முறையில் இணைய சேவை ஊடாக தற்போது யாழ்.மாவட்ட செயலக உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பொது மக்கள் பார்வையிடுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இச் சேவையினை www.jaffna.dist.gov.lk எனும்...
இணைய சேவைக்காக இதுவரை விதிக்கப்பட்டு வந்த 10 வீத தொலைத்தொடர்பு வரி வரும் செப்டம்பர் மாதம் 01ம் திகதி முதல் குறைக்கப்படும் நிதியமைச்சர் மங்கள சமரவீர கூறியுள்ளார். அதேவேளை 150 சீசீ இற்கு குறைவான மோட்டார் சைக்கிள்கள் மீதான வரியை இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் நூற்றுக்கு 90 வீதத்தால் குறைப்பதாகவும் அவர் கூறியுள்ளார்....
வடக்கு மாகாணத்தில் உள்ள இளைஞர் யுவதிகளை தாதிய உத்தியோகத்தர் பதவிக்கு விண்ணப்பிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “தாதிய உத்தியோகத்தர்களுக்கான பயிற்சியின் மூலம் தாதிய உத்தியோகத்தர்களை நியமனம் செய்வதற்கு சுகாதார போசனை மற்றும் சுதேஷ வைத்திய அமைச்சினால் விண்ணப்பங்கள்...
Loading posts...
All posts loaded
No more posts