யாழில் 100 பேருக்கு பிளாஸ்ரிக் சத்திரசிகிச்சை!! தேவைப்படுபவர்கள் தெல்லிப்பளை வைத்தியசாலையுடன் தொடர்புகொள்ளவும்!!

வடக்கு மாகாணத்தில் போரின் காரணமாக ஏற்பட்ட காயங்களின் அடையாளங்களைப் போக்கும் வகையிலான பிளாஸ்ரிக் சர்ஜரி சிகிச்சை, நவம்பர் மாதத்தில் 100 பேருக்கு மேற்கொள்ளவுள்ளதாக கலாநிதி அமுதா கோபாலன் தெரிவித்தார். கொட்டாஞ்சேணை 306 B1 இலக்க மாவட்ட லயன்ஸ் கிளப் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ள குறித்த சத்திர சிகிச்சை தொடர்பில் நேற்று யாழ் விருந்தினர் விடுதியில் இடம்பெற்ற செய்தியாளர்...

யாழ். மக்களுக்கு சட்ட உதவி வழங்கும் ‘சொலிடாரிடி சென்ரர்’

யாழ்ப்பாண மக்களுக்கு சட்ட உதவிகளை வழங்கும் நோக்கில், ‘சொலிடாரிடி சென்ரர்’ எனும் சட்ட உதவி அலுவலகம் திறந்துவைக்கப்பட்டுள்ளது. யாழ். நல்லூர் வீதியில் அமைக்கப்பட்டுள்ள இவ் அலுவலகத்தை, யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் மற்றும் சொலிடாரிடி நிறுவனத்தின் வதிவிட பணிப்பாளர் அலோன்சோ சசோன் ஆகியோர் இணைந்து நேற்று (திங்கட்கிழமை) சம்பிரதாயபூர்வமாக திறந்துவைத்தனர். இந்த அலுவலகத்தின் ஊடாக...
Ad Widget

இன்று முதல் 65 ரூபாவுக்கு தேங்காய் விநியோகம்: அரசாங்கம் நடவடிக்கை

அரச தோட்டங்களிலிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட தேங்காய்களை இன்று முதல் (02) 65 ரூபா சில்லறை விலைக்கு சந்தைப்படுத்த தெங்கு உற்பத்தி சபை நடவடிக்கை எடுத்துள்ளது. சிறியளவிலான தெங்கு உற்பத்தியாளர்களினது தேங்காய்களும் இவ்வாறு குறைந்த விலையில் சந்தைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் நடமாடும் தேங்காய் விற்பனை, நகர்ப் பகுதிகளிலும் எதிர்வரும் 4 ஆம் திகதி முதல் நாட்டிலுள்ள...

உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு

சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து உணவகங்களில் பரிமாறப்படும் சில உணவுகளின் விலைகளையும் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை உணவக உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது. உணவு தயாரிப்பதற்கு பிரதானமாக எரிவாயுவை பயன்படுத்தப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ள சங்கம், சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பைத் தொடர்ந்து உணவுகளின் விலைகள் அதிகரிப்பதை தம்மால் கட்டுப்படுத்த முடியாதுள்ளதாகவும் அச்சங்கம் குறிப்பிட்டுள்ளது. அதன் அடிப்படையில்...

தியாகி திலீபன் நினைவேந்தல் இறுதிநாள் நிகழ்வுகள்

தியாகி திலீபன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு தொடர்பில் ஏற்பாட்டுக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கை.... தியாகி திலீபன் நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழு யாழ் மாவட்டம் 2017 புரட்டாதி 24 தியாகி திலீபன் நினைவேந்தல் இறுதிநாள் நிகழ்வுகள் தமிழ் மக்களின் அரசியல் விடுதலைக்கான போராட்டத்தில் இந்திய அரசிடம் நீதி கோரி காந்திய வழியில் நீராகாரம் அருந்தாது தன்னுடலை மெழுகாய் உருக்கி...

வடக்கு ரயில் சேவைகள் பாதிப்பு

கோட்டையிலிருந்து குருநாகல் நோக்கிய பணித்துகொண்டிருந்த ரயில், பொல்ஹாவலையில் தடம்புரண்டமையால், வடக்குக்கான ரயில் சேவைகள் யாவும் பாதிப்படைந்துள்ளன என்று ரயில்வே கட்டுப்பாட்டறை அறிவித்துள்ளது

வைத்தியர்கள் சங்கம் நாளை 8 மணி முதல் வேலைநிறுத்தத்தில்!

மாலபே SAITM தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிராக நாளை ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் சங்கம் நடாத்தும் வேலைநிறுத்த போராட்டத்துக்கு அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கமும் (GMOA) ஆதரவு வழங்கியுள்ளது. அதன்படி, நாளை காலை 08 மணி முதல் 24 மணி நேர வேலைநிறுத்த போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக GMOA அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தியாகி திலீபன் நினைவேந்தல் நிகழ்வு

தியாகி திலீபன் நினைவேந்தல் நிகழ்வு தொடர்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையில்... தியாகி திலீபன் அவர்களின் 30ஆம் ஆண்டு நினைவேந்தலின் இறுதிநாள் நிகழ்வுகளை பொது அமைப்புக்கள் மற்றும் கட்சிகளுடன் இணைந்து நடாத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. எதிர்வரும் 26.09-2017 அன்று முற்பகல் 10.30 மணியளவில் அஞ்சலி நிகழ்வுகள் ஆரம்பமாகும். இந்நிகழ்வில்...

இரவுவேளைகளில் திறக்கப்படவுள்ள தெகிவளை மிருகக்காட்சிசாலை

தெகிவளை மிருகக்காட்சிசாலை வாரத்தில் 3 நாட்கள் இரவு வேளைகளில் திறந்திருக்கும் என்று தேசிய விலங்கியல் திணைக்களத்தின் பணிப்பாளர் தம்மிகா மல்சிங்க தெரிவித்துள்ளார். வெள்ளி , சனி, மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 7.30 முதல் 10.00 மணிவரையில் மிருகக்காட்சிசாலையை திறந்துவைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இரவுவேளைகளில் மிருகக்காட்சி சாலைக்கு வருவோர் பிளாஸ் வைத்து புகைப்படம் எடுப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக...

மின்சார சபையில் நாளை முதல் அரிய வாய்ப்பு!

அத்தியாவசிய தேவையை கருத்தில் கொண்டு மின்சார சபைக்கு புதிய ஊழியர்களை உள்வாங்குவதற்காக நாளை முதல் நேர்முக தேர்வு இடம் பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, பல்­வேறு கோரிக்­கை­களை முன்­வைத்து மின்­சார சபை ஊழி­யர்கள் மேற்­கொண்­டுள்ள தொழிற்­சங்க நட­வ­டிக்கை 7­வது நாளாக இன்றும் தொடர்­கி­றது. மேலும் குறித்த தொழிற்­சங்கப் போராட்­டத்தில் தொழில்­நுட்ப பொறி­யி­ய­லாளர் சங்கம், மின் அத்­தி­யட்­சகர் சங்கம்...

ரயில்வே ஊழியர்கள் நாளை நள்ளிரவு முதல் பணி பகிஷ்கரிப்பு!

ரயில்வே ஊழி­யர்கள் நாளை நள்­ளி­ரவு முதல் 48 மணி நேர பணி பகிஷ்­க­ரிப்பில் ஈடு­ப­ட­வுள்­ள­தாக “ரயில்வே கட்­டுப்­பாட்டு அதி­கா­ரிகள் தொழிற்­சங்க முன்­னணி” தெரி­வித்­துள்­ளது. சம்­பளப் பிரச்­சினை உட்­பட பல்­வேறு கோரிக்­கை­களை முன்­வைத்து குறித்த பணி பகிஷ்­க­ரிப்பில் ஈடு­ப­ட­வுள்­ள­தாக ரயில்வே கட்­டுப்­பாட்டு அதி­கா­ரிகள் தொழிற்­சங்க முன்­ன­ணியின் ஏற்­பாட்­டாளர் லால் ஆரி­ய­ரத்ன தெரி­வித்தார். அவர் மேலும் குறிப்­பி­டு­கையில், ரயில்...

யாழில் விவசாயக் கண்காட்சி ஆரம்பம்!

”காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளக் கூடிய சந்ததியை எதிர்நோக்கிய நிலைபேறான விவசாயம்” எனும் தொனிப்பொருளில் யாழில் விவசாயக் கண்காட்சி இன்று (செவ்வாய்க்கிழமை) ஆரம்பமாகியது. மாகாண விவசாய அமைச்சினால் யாழ். திருநெல்வேலி விவசாய பயிற்சி நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இக்கண்காட்சியை வடமாகாண முதலமைச்சர் சார்பாக கல்வி அமைச்சர் கலாநிதி கந்தையா சர்வேஸ்வரன் ஆரம்பித்துவைத்தார். யாழ்,கிளிநொச்சி,மன்னார்,வவுனியா,முல்லைத்தீவு மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தி பல்வேறு...

வடக்கு மக்களுக்கு காலநிலை தொடர்பில் எச்சரிக்கை!

வங்­காள விரி­கு­டா­வில் ஏற்­பட்­டுள்ள தாழ­முக்­கம் வடக்கு மாகா­ணத்தை நோக்கி நகர்­வ­தால் இரு தினங்­க­ளுக்கு பலத்த காற்று வீசு­வ­து­டன் மழை­யும் பெய்­வ­தற்­கான சாத்­தி­யக்­கூ­று­கள் இருகின்றன என்று யாழ்ப்­பா­ணப் பல்­க­லைக்­க­ழக புவி­யி­யல் துறை மூத்த விரிவுரையாளர் நா.பிரதீபராஜா தெரி­வித்­தார். வங்­காள விரி­கு­டா­வில் ஏற்­பட்­டுள்ள தாழ­முக்­கம் கார­ண­மாக நாடு முழு­வ­தும் சடு­தி­யான கால­நிலை மாற்­றம் ஏற்­பட்­டுள்­ளது. தாழ­முக்­க­மா­னது தற்போது இலங்­கை­யின்...

நாடளாவிய ரீதியில் டெங்கு ஒழிப்பு வாரம்!

எதிர்வரும் 20ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் டெங்கு ஒழிப்பு வாரம் அனுஷ்டிக்கப்படுமென டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தின் தேசிய இணைப்பாளரும் விசேட வைத்தியருமான ஹசித்த திசேரா தெரிவித்துள்ளாா். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற செய்தியாளர்களுடனான சந்திப்பின்போது இவர் இந்த விடயங்களை குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “2017ஆண்டில் டெங்கு நோயாளர்களின்...

வியாழன் தான் நவராத்திரி ஆரம்பம்

நவராத்திரி ஆரம்பம் தொடர்பாக இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தால் அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இவ்வருட நவராத்திரி விரதம் ஆரம்பிக்கும் தினம் தொடர்பாக வாக்கிய பஞ்சாங்கம் மற்றும் திருக்கணித பஞ்சாங்கம் என்பவை முறையே 20.09.2017 புதன் கிழமை மற்றும் 21.09.2017 வியாழக்கிழமை என இரு வேறு தினங்களை குறிப்பிட்டுள்ளது. இதனால் இந்து...

முச்சக்கர வண்டிகளில் மீற்றர் பொருத்துவதற்கான கால எல்லை நீடிப்பு!

முச்சக்கர வண்டிகளில் மீற்றர் பொருத்த வழங்கப்பட்ட கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளதாக வீதிப் பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை குறிப்பிட்டுள்ளது. இதன்படி டிசம்பர் 31 ஆம் திகதி இறுதி கால எல்லையாகத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பயணிகள் மற்றும் பொருட்களை ஏற்றிச் செல்லும் முச்சக்கர வண்டிகளுக்கு மீற்றர் பொருத்துவதைக் கட்டாயமாக்கி அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால்...

வட. மாகாணத்தின் மூன்று மாவட்டங்களில் இன்று மின் தடை!

யாழ்ப்பாணம், வவுனியா மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் இன்று (சனிக்கிழமை) திருத்த வேலைகள் காரணமாக மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. இதன்படி, காலை 08.30 மணி முதல் மாலை 05 மணி வரை யாழ். குடாநாட்டின் மானிப்பாயின் ஒரு பகுதி, கரம்பைக் குறிச்சி ஆகிய பகுதிகளிலும், கிளிநொச்சி மாவட்டத்தில் காலை 09 மணி முதல்...

குப்பை சேகரிப்பது தொடர்பில் பொதுமக்களுக்கு யாழ் மாநகர சபையின் அறிவித்தல்!

யாழ் மாநகர சபையினால் பொதுமக்களுக்கு குப்பை சேகரிப்பது தொடர்பில் அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது. சபையினால் புதிதாக அட்டவணைப்படுத்தப்பட்டிருக்கும் ஒழுங்குமுறையின் பிரகாரம் குப்பை சேகரிக்கும் ரக்டர்கள் தங்கள் வீதிகளுக்கு சுழற்சிமுறையில் வருகைதர இருக்கின்றன. தங்களால் உருவாக்கப்பட்ட / உருவான குப்பைகளை உக்கக் கூடியன , உக்கமுடியாதன, இலத்திரனியல் கழிவுகள் என வேறுவேறாகத் தரம்பிரித்து குறித்த...

காலநிலையில் மாற்றம்: நாளை முதல் கடுங்காற்று!

நாட்டில் வடக்கு வடமத்திய, வடமேற்கு மாகாணங்கள் மற்றும் நாட்டை சுற்றியுள்ள கடற்கரையோர பிரதேசங்களில் நாளை முதல் பலத்த காற்றுவீசக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது. ஊவா மாகாணம் மற்றும் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களின் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணியின் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று திணைக்களம் இன்று (வெள்ளிக்கிழமை)...

காட்டை விட்டு வீதிக்கு வரும் யானைகள்! : அச்சத்தில் நெடுங்கேணி பொதுமக்கள்

நெடுங்கேணி – புளியங்குளம் வீதியில் நான்கு யானைகள் வீதிக்கு வந்தமையால் அவ் வீதி வழியாக பயணித்தோர் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர். நேற்று மாலை முதல் குறித்த பகுதியில் யானைகளின் நடமாட்டம் அதிகமாக காணப்பட்டதாக அவ் வீதி வழியாக பயணித்தோர் தெரிவித்துள்ளனர். இதன்காரணமாக அச்சத்துடனேயே பலரும் அவ்வீதியில் பயணங்களை மேற்கொண்டதாகவும், அப்பகுதியில் தற்போது மாலை நேரங்களில் யானைகள்...
Loading posts...

All posts loaded

No more posts