- Wednesday
- January 22nd, 2025
கர்பிணி தாய்மார்கள் எதிர்வரும் காலங்களில் வரிசையில் நிற்காமல், தொலைபேசி ஊடாக போசாக்கு பொருட்களை பெற்றுக்கொள்ளக் கூடிய வசதியினை மேற்கொள்ளவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சர் சாகலரத்னாயக்க தெரிவித்துள்ளார். மாத்தறை-தெனியாய பிரதேசத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற காணி உறுதிபத்திரம் வழங்கி வைக்கும் நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், “நாங்கள் கர்பிணி தாய்மார்களுக்கு...
யாழ்ப்பாணக் குடாநாடு உட்பட வடமாகாணத்தின் பல இடங்களில் கடுமையான மழை பெய்வதனால் வீதிகள் அனைத்தும் வெள்ளம் நீரால் சூழ்ந்துள்ளன. தொடர்ந்து 5 நாட்களுக்கும் மேலாக கடுமையான மழை பெய்வதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் வளிமண்டல தாழமுக்கம் நிலைகொண்டிருப்பதனாலேயே யாழ்ப்பாணத்தில் கடுமையான மழை பெய்வதாக வளிமண்டலவியல் திணைக்கள பொறுப்பதிகாரி ரி.பிரதீபன் தெரிவித்தார். அத்துடன்...
அத்தியாவசிய பொருட்கள் பலவற்றின் விலைகளை சத்தோச நிறுவனம் குறைத்துள்ளது. இதற்கமைய இந்த புதிய விலைக்கு கடந்த 2ம் திகதி முதல் சத்தோச நிறுவன விற்பனை கிளைகளில் பின்வரும் பொருட்களை பெற்றுக்கொள்ளமுடியும்: சம்பா அரிசி ஒரு கிலோ ரூபா 78.00 நாட்டரிசி ஒரு கிலோ ரூபா 74.00 வெள்ளை பச்சரிசி ஒரு கிலோ ரூபா 65.00 சிவப்பு...
நாட்டில் நிலவும் மழையுடனான கால நிலை தொடரும் என காலநிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பனிமூட்டத்துடன் மழைவீழ்ச்சி காணப்படும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. அதே போன்று நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சில நேரங்களில் கடும் காற்று ஏற்படும் எனவும் மலைப்பாங்கான பகுதிகளில் அதிக மழை பெய்வதற்கான வாய்ப்பு காணப்படுவதாகவும் காலநிலை அவதான...
நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாணம் - கண்டிக்கான ஏ9 வீதியில் இன்று காலை முதல் கடும் பனி மூட்டம் காணப்படுகின்றது. இதற்கமைய, வவுனியா, மாங்குளம், புளியங்குளம் ஆகிய பகுதிகளிலேயே இந்த நிலை அதிகமாக காணப்படுவதாக வாகன சாரதிகள் குறிப்பிட்டுள்ளனர்.
பொலிஸ் தடைநீக்கச் சான்றிதழை (Police Clearance Reports) பெற்றுக்கொள்வதற்காக அறிவிடப்படும் கட்டணம் மறுசீரமைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இந்த கட்டண மறுசீரமைப்பு எதிர்வரும் 5 ஆம் திகதி (2017.11.05)முதல் நடைமுறைக்குவருவதாக பொலிஸ் தமைமையகம் விடுத்துள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது, பொலிஸ் தடைநீக்கச் சான்றிதழை இலங்கையிலிருந்து விண்ணப்பித்து அதனை இலங்கை முகவரிக்கு தபாலில் சேர்க்கும் போது அறவிடப்படும் புதிய...
மென் பாணங்களிலுள்ள சீனியின் அளவை குறைக்க புதிய வரி திட்டமொன்றை நடைமுறைப்படுத்தவுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார். அலரிமாளிகையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், “சீனி நுகர்வைக் கட்டுப்படுத்தும் நோக்கில், மென் பாண வகைகளில் 6 கிராமுக்கும் அதிக சீனி காணப்படுமாயின், மேலதிகமாக...
இலங்கையில் கால்நடைகளை வாகனங்களில் ஏற்றிச் செல்வதற்கான அனுமதி பத்திரம் வழங்குவதை தற்காலிகமான இடைநிறுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார். கட்டாருக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி, இன்று காலை நாடு திரும்பிய நிலையிலேயே, மேற்படி உத்தரவைப் பிறப்பித்துள்ளார். இலங்கையில் சட்டவிரோதமாக கால் நடைகளை கடத்திச் செல்கின்ற சம்பவங்கள் அதிகரித்துக் காணப்படுவதால் பாற்பண்ணைக் கைத்தொழில்துறைக்கும் விவசாயத்தேவைகளுக்கும் பாரியதாக்கம்...
ரயில் கடவைகளுக்கு குறுக்காக பயணிக்கும் பொழுதும், ரயில் கடவைகளுக்கு அருகில் வாகனங்களை நிறுத்தும் போது கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம் என்று அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். ரயில் கடவைகள் தொடர்பாக கவனம் செலுத்தாதவர்களுக்கு எதிராக 25 ஆயிரம் ரூபா தண்டம் விதிப்பதற்கான சட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று சிவில் மற்றும் விமானசேவைகள்...
கொழும்பு - காங்கேசன்துறை வரையான ரயில் சேவை நாவற்குழி ரயில் நிலையம் வரை மட்டுப்படுத்தப்படவுள்ளது. நாவற்குழியில் உள்ள ரயில் பாலத்தில் உள்ள திருத்த பணிகள் இடம்பெறுவதாலே குறித்த பகுதிகளுக்கான ரயில் சேவை இடை நிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும் குறித்த பகுதிகளுக்கான ரயில் சேவை இன்று முதல் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை,...
வடக்கு புகையிரத பாதையின் யாழ்ப்பாணம் வரையிலான புகையிரத சேவைகள் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளது. இதுதொடர்பாக புகையிரத திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் யாழ்ப்பாணம், நாவற்குழி பாலம் சேதமடைந்துள்ளது. இதன் காரணமாகவே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நாவற்குழி புகையிரத நிலையத்தில் இருந்து யாழ்ப்பாணம் புகையிரத நிலையம் வரையில்...
தற்போது நிலவி வரும் இடைநிலை பருவப்பெயர்ச்சி காலநிலை காரணமாக மாலை நேரங்களில் நாட்டின் சில பிரதேசங்களில் ஆலங்கட்டி மழை விழக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளரும் காலநிலை அவதானியுமான கே.ஆர்.அபேசிங்க தெரிவித்துள்ளார். மின்னல், மழை, டொனாடோவை ஏற்படுத்தும் மழை மேகங்களில் மேற்பரப்பில் சுமார் 8 கிலோ மீற்றர் வரை 95 வீதம் பனி படிந்திருப்பதாகவும்...
அரசியல் கைதிகளின் போராட்டம் தொடர்பான ஊடகஅறிக்கை 12-10-2017 வவுனியாமேல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்த தங்களுடைய வழக்குகள் அனுராதபுரம் மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டதை எதிர்த்து, அந்தவழக்குகள் மீண்டும் வவுனியா மேல்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட வேண்டும் என்னும்,கோரிக்கையை முன்வைத்து தமிழ் அரசியல் கைதிகள் மூவர்கடந்த 18 நாட்களாக உணவு தவிர்ப்பு போராட்டமொன்றை மேற்கொண்டு வருகின்றனர். இந்தவிடயம் தொடர்பாக ஒரு தீர்க்கமான...
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுத்தி வட. மாகாணம் முழுவதும் நாளை (வெள்ளிக்கிழமை) ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஹர்த்தாலுக்கு அனைத்து சமூகங்களும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தமிழ்தேசிய கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட கிளை கோரிக்கை விடுத்துள்ளது. அனுராதபுர சிறையில், உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தமிழ் அரசியல் கைதிகளின் நியாயமான கோரிக்கைகளை ஏற்று அவர்களின் வழக்கு...
அனுரபுரம் சிறையில் உண்ணாவிரதமிருக்கும் கைதிகளின் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தியும் அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை(13-10-2017) அன்று வடமாகாணம்முழுவதும் பூரண கதவடைப்புப் போராட்டமும் காலை 09:30 மணிக்கு வடக்கு மாகாண ஆளுநர் செயலகம் முன்பாக கவனயீப்புப் போராட்டத்திற்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழ் அரசியற் கைதிகளுக்கு நிரந்தர விடுதலை கிடைக்கும்வரை...
யாழ் போதனா வைத்தியசாலை முன்புறமாக 08.10.2017 அன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டம் தொடர்பாக பொதுமக்களுக்குத் தெளிவுபடுத்துதல் 2017.10.08 ஆம் திகதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கடந்த ஒரு வாரமாக பல்வேறு சமூக வலைத்தளங்கள் ஊடாக 08.10.2017 இல் ஆர்ப்பாட்டம் நடாத்த போவதாக அறிவித்திருந்தார்கள். பொதுமக்களையும் பல்வேறு சமூக அமைப்புக்களையும் ஆர்ப்பாட்டத்திற்கு அழைத்திருந்தார்கள். ஆனால், அன்றையதினம் பொதுமக்களோ சமூக அமைப்புக்களோ...
டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தினை முன்னெடுப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல் எதிர்வரும் 13.10.2017 (வெள்ளிக்கிழமை) யாழ்ப்பாண மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி செயலணி, நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சுடன் இணைந்து அரசாங்கத் தகவல் திணைக்களம், வட.மாகாணத்தில் பரவியுள்ள டெங்கு நோயினை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. சுகாதார அமைச்சின் தரவுகளின்படி கடந்த மாதத்தில் வட.மாகாணத்திலேயே...
கொழும்பிலிருந்து காங்கேசன்துறை நோக்கிய புகையிரத சேவைகள் யாவும் எதிர்வரும் 23 ஆம் திகதிமுதல் ஒரு வாரத்துக்கு நாவற்குழிவரை மட்டுமே நடைபெறவுள்ளதாக புகையிரத திணைக்களம் ரயில் நிலைய கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணத்திற்கும்-நாவற்குழிக்கும் இடையிலான புகையிரத பாதையில் உள்ள நாவற்குழி பாலத்தின் புனரமைப்பு பணிகள் நடைபெறவுள்ளமையினாலேயே அனைத்துப் புகையிரத சேவைகளும் நாவற்குழி புகையிரத சேவைகளும் நாவற்குழி புகையிரத...
அநுராதபுரம் சிறையில் உண்ணாவிரதமிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளுக்கு நீதி கிடைக்கவேண்டியும் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும் நாளை மறுதினம் யாழ்ப்பாண பஸ் நிலையத்திற்கு முன்னால் மாபெரும் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யும் தேசிய அமைப்பின் ஏற்பாட்டில் இன்றைய தினம்யாழில் செயற்படும் பொது அமைப்புகள் மற்றும் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளுக்குமிடையில் நடைபெற்ற சந்திப்பின்...
அபராதத் தொகையினை இணையத்தளம் மூலம் செலுத்தமுடியும் என்பதுடன், அனுமதிப்பத்திரத்தைப் பொலிஸாரிடம் கையளிக்க வேண்டியதில்லை எனவும் பொலிஸ் ஊடகபேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். முன்னர் அபராத தொகையை செலுத்திய பின்னரே ஓட்டுநர் அனுமதிப் பத்திரத்தை காவல் நிலையங்களில் சென்று பெற்றுக்கொள்ள வேண்டும் எனும் நடைமுறை இருந்தது. எனினும் குறித்த நடைமுறை சாரதிகளுக்கு மிகவும் அசௌகரியம் என்பதனால் அதனை...
Loading posts...
All posts loaded
No more posts