- Wednesday
- January 22nd, 2025
நாட்டிலிருந்து 1100 கிலோமீற்றர் தொலைவில் தென்கிழக்கு திசை வங்காள விரிகுடா கடற்பிரதேசத்தில் நிலவும் தாழமுக்க நிலை எதிர்வரும் 24 மணித்தியால காலப்பகுதியில் வலுவடையக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. கிழக்கு மற்றும் வடமாகாணங்களிலும் , வடக்கு கிழக்கு கடற்கரையோர பிரதேசங்களிலும் இன்று முதல் காற்றின் வேகம் அதிகரிக்கும். வடக்கு , வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா...
தெற்கு அந்தமான் தீவு கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுப்பெற்று குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலாமாக உருவாகலாமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதேவேளை, குறித்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை 5 ஆம் திகதி மேலும் வலுவடைய வாய்ப்புக்கள் உள்ளதாகவும் இலங்கையைச் சுற்றியுள்ள கடல்பகுதி குறிப்பாக வடக்கு, கிழக்கு,...
மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளதெனக் குறிப்பிட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரண, யாழ்ப்பாணத்தில் “ஹெரோய்ன் ரொபி” விற்கப்படுவதாகவும் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தின் போது, புத்திக பத்திரண எம்.பி, கல்வியமைச்சரிடம் கேள்விகளை கேட்டிருந்தார். அக்கேள்விகளுக்கு கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் அளித்த பதிலையடுத்தே, அவர் மேற்கண்டவாறு...
யாழ்.போதனா வைத்தியசாலை மற்றும் வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் கீழ் இயங்கும் வைத்தியசாலைகளில் பணியாற்றும் தாதியர்கள் அனைவரும் நாளைக் காலை 7 மணி முதல் 24 மணிநேர பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர். பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாடு முழுவதும் முன்னெடுக்கப்படும் அரச தாதியர்கள், துணைமருத்துவ சேவையாளர்களின் போராட்டத்துக்கு ஆதரவாகவே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படும் என வடமாகாண...
இந்த ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான அடையாள அட்டையை விரைவாக பெற்றுக் கொள்வதற்காக எதிர்வரும் 25ம் திகதி விஷேட ஒருநாள் சேவை திட்டம் ஒன்றை முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களம் கூறியுள்ளது. அன்றைய தினம் பாடசாலை விண்ணப்பதாரிகள் வருவது கட்டாயம் அல்ல என்றும், அந்த மாணவர்களின் உறவு முறையை...
இளைஞர்களை மது பாவனைக்கு தூண்டிவிடும் அரசின் பியர் வரிக் குறைப்பு யோசனைக்கு எதிர்ப்பு குரல் கொடுக்க ஒன்றிணையுமாறு யாழ். போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் அழைப்பு விடுத்துள்ளனர். குறித்த ஆர்ப்பாட்டமானது இன்று (வெள்ளிக்கிழமை) யாழ். மாவட்ட ஆளுநர் செயலகத்திற்கு முன்னால் இடம்பெறவுள்ளது. அதன்போது ஆளுநர் மற்றும் அரசாங்க அதிபர் ஆகியோருக்கு மகஜர்களும் கையளிக்கப்படவுள்ளது. சிவில் சமூக அமைப்புகள்,...
பரசன்கஸ்வெவ - மதவாச்சிக்கு இடையிலான ரயில் பாதையில் நேற்று இரவு 08.45 மணி அளவில் ரஜரட்ட ரெஜின ரயில் தடம் புரண்டமையால் வடக்கு ரயில் போக்குவரத்துக்கு தடைப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக இன்று காலை 05.10க்கு கல்கிசையில் இருந்து காங்கேசன்துறைக்கு செல்லவிருத்த ரயில் சேவை ரத்துச் செய்யப்பட்டுள்ளது. மேலும் மதவாச்சியில் இருந்து காங்கேசன்துறைக்கு...
எதிர்வரும் 2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அரச ஊழியர்களின் சம்பளங்கள் 15 வீதத்தினால் அதிகரிக்கப்படும் என பொதுநிர்வாக அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதன் அடிப்படையில், அலுவலக உதவியாளர் ஒருவரின் சம்பளம் 23600 ரூபா வரையில் உயர்த்தப்படும் என்றும் சட்ட மா அதிபரின்...
சிறையில் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரியும் அவர்களின் விடுதலையை விரைவு படுத்த வலியுறுத்தியும் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு மாபெரும் கவனயீர்ப்பு பேரணி ஒன்று யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டவுள்ளது. அனுராதபுரம் சிறைச்சாலையில் உணவு தவிர்ப்பில் இருந்த தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கையை நிறைவேற்றக் கோரியும், ஏனைய அரசியல் கைதிகளின்...
2018ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்ட யோசனைக்கு அமைய அரசாங்க சேவைகளுக்காக அறிவிடப்படும் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அரச சேவைக்கான கட்டணமாக நூற்றுக்கு 15 வீதம் அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் இந்த கட்டணம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. அதற்கமைய கடவுச்சீட்டு, அடையாள அட்டை, தபால் கட்டணம், மிருகக்காட்சி சாலை கட்டணம், நீதிமன்ற சேவை கட்டணம்...
யாழில் பெய்து வரும் கன மழை காரணமாக தொண்டமனாறு கடல் நீரேரியின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதால் அதனைச் சூழவுள்ள கிராம மக்களை அவதானமாக இருக்குமாறு நீர்பாசனத் திணைக்களம் எச்சரிக்கைவிடுத்துள்ளது. யாழில்.கடந்த 24 மணிநேரமாக மழை பெய்து வருகின்றது. இந்த மழை தொடர்ந்து நீடிக்குமாயின் தொண்டமனாறு கடல் நீரேரியின் நீர் மட்டும் மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகின்றது....
நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளிலும் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் கல்வி அமைச்சின் அறிவித்தலுகமைய நேற்று ஆரம்பமானது. இவ் வேலைத்திட்டம் இன்றும் தொடரும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. பாடசாலைகளில் டெங்கு பரவும் அபாயம் காணப்படின் அதற்கு பாடசாலை அதிபர்களே பொறுப்பு கூற வேண்டும் என்று மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக டெங்கு நுளம்பு...
யாழ் பல்கலைக்கழகத்தின், வவுனியா வளாகம் நடத்தும் மாபெரும் தொழிற்சந்தை இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்று வருகின்றது. இன்றும் நாளையும் இடம்பெறவுள்ள இந்நிகழ்வானது யாழ் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தின் முதல்வர் கலாநிதி த.மங்களேஸ்வரன் தலைமையில் பம்பைமடுவில் அமைந்துள்ள வவுனியா வளாகத்தில் இரு நாட்களும் காலை 9.00 மணிதொடக்கம் மாலை 4.00 மணிவரை நடைபெறவுள்ளது. இலங்கையின் பிரபலமான 30 இற்கு...
இலங்கையின் வடகிழக்கில்,வங்காள விரிகுடாவில் தாழமுக்கம் ஏற்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. வடக்கு, கிழக்கு, வடமத்திய மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் அதேவேளை, நட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் மழை அல்லது இடியுடன் கூடிய மழை தொடந்த்தும் பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அடுத்து வரும் நாட்களிலும் வானம் மப்பும் மந்தாரமுமாக இருக்குமென்று வளிமண்டலவியல்...
தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அமைச்சினால் பட்டதாரிகளுக்கான அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனம் தொடர்பான விண்ணப்பங்கள் கோரப்பட்டு பல மாதங்கள் கடந்தும் இதுவரை நியமனம் தொடர்பான சரியானதொரு தகவல்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. தற்போது தேர்தலிற்கான அறிவித்தல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் தேர்தலிற்கு முன் தமக்கான நியமனங்களை வழங்குதல் வேண்டும் என வலியுறுத்தி வடக்கு மாகாண பட்டதாரிகள் எதிர்வரும் 15...
Techstars அமைப்பின் வணிக புத்தாக்குநர்களுக்கான Startup Weekend Jafffna நிகழ்வு, யாழ்ப்பாணத்தில் 2வது தடவையாக எதிர்வரும் 10ம் திகதி தொடக்கம் 12ம் திகதி வரை கோப்பாயில் அமைந்துள்ள சக்தி ஓய்வு விடுதியில் நடைபெற உள்ளது. இலங்கையில் முதன்முறையாக யாழ்ப்பாணத்தில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடாத்தப்பட்டது. இதில் நுாற்றுக்கும் மேற்பட்ட தொழில்முனைவோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்....
வாகனங்களுக்கு மாத்திரம் பெற்றோல் நிரப்புவதற்கான சுற்றறிக்கையை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மீளப் பெற, பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சர் அர்ஜூன ரணதுங்க உத்தரவிட்டுள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள பெற்றோல் தட்டுப்பாட்டையடுத்து, வாகனங்கள் தவிர்த்து போத்தல்கள் போன்ற வேறு எவற்றிலும் பெற்றோல் வழங்கப்படாது என, சுற்றறிக்கை ஒன்று வௌியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் குறித்த சுற்றறிக்கையை தற்போது...
டெங்கு நுளம்பை போன்று மலேரியா நுளம்புகளும் வடமாகாணத்தில் பல இடங்களில் காணப்படுவதாக யாழ் மாவட்ட சுகாதார அமைச்சு தொற்றுநோய் தடுப்பு பிரிவு டொக்டர் ஜி.ரஜீவ் தெரிவித்தார். இந்த மலேரியா நுளம்பு முதன்முறையாக மன்னாரில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும். பின்னர் இது யாழ்ப்பாணம் , கிளிநொச்சி, வவுனியா உள்ளிட்ட வடமாகாண பிரதேசங்களில் காணப்படுவதாகவும். இதனை இல்லாதொழிப்பதற்கு தீவிர நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும்...
நாட்டில் காணப்பட்டு வரும் பெற்றோல் நெருக்கடிகளுக்கு மத்தியில் வாகனங்களுக்கு மாத்திரம் பெற்றோலை விநியோகிக்க வேண்டும் என அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. கனிய வள அபிவிருத்தி அமைச்சு வெளியிட்டுள்ள சுற்றறிக்கை ஒன்றின் மூலமாகவே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. குறித்த விடயம் தொடர்பில், கனிய எண்ணெய் வள அமைச்சின் செயலாளர் உபாலி தென்னகோன் கருத்து வெளியிடுகையில்,...
யாழ். சாவகச்சேரியில், இடம்பெற்ற சட்ட விரோதமான பிரமிட் வியாபாரம் தொடர்பான தெளிவூட்டும் நிகழ்வில், நிறுவன முகவர்களால் ஏமாற்றப்பட்டவர்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனத்தால் மேற்கொள்ளப்படும் அரசால் தடைசெய்யப்பட்ட பிரமிட் முறையிலான வியாபார முறை மூலம் ஏமாற்றப்பட்ட மக்கள், ஏமாற்றிய பணத்தை திருப்பி வழங்குமாறும் இந்நிகழ்வின் போது எதிர்ப்பில் ஈடுபட்டனர். இதன்போது, எதிர்ப்பில் ஈடுபட்டவர்களை அடிபணியும் வகையில்...
Loading posts...
All posts loaded
No more posts