கொழும்பில் வேலை செய்து கொண்டிருந்த யாழ் இளைஞனை 7 மாதங்களாக காணவில்லை!

கொழும்பில் வேலை செய்து கொண்டிருந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் காணாமல்போயுள்ளார். மயிலிட்டி - தாளையடி வீதியைச் சேர்ந்த சிவகுமார் பிந்துசன் என்ற 29 வயதான இளைஞரே கொழும்பு புறக்கோட்டையில் வேலை செய்து கொண்டிருந்த காலத்தில் காணாமல் போயுள்ளார். இளைஞன் காணாமல்போனமை தொடர்பாக 2022.10.13 அன்று பலாலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றும் பதிவு செய்தும் இதுவரை...

யாழ்.நகரில் அதிகரித்துள்ள மோட்டார் சைக்கிள் திருட்டு!

யாழ்.நகர் பகுதியில் அண்மைக்காலமாக மோட்டார் சைக்கிளில் திருட்டுக்கள் அதிகரித்து உள்ள நிலையில் பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். அண்மைய நாட்களில் பல முறைப்பாடுகள் பொலிஸ் நிலையங்களுக்கு கிடைக்க பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். வீடுகளுக்கு முன்பாக கடைகளுக்கு முன்பாக தமது மோட்டார் சைக்கிள்களை நிறுத்தி விட்டு ஒரு சில நிமிடத்தில் திரும்பி வந்திடுவோம் எனும் நோக்கில்...
Ad Widget

சுற்றுலா பயணங்களை சமூக வலைத்தளங்களில் பகிர வேண்டாம்!

எதிர்வரும் பண்டிகை காலத்தில், சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவது தொடர்பில் பொலிஸ் தலைமையகம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி,தாங்கள் முன்னெடுக்கப்போகும் நடவடிக்கைகள்,சுற்றுலா பயணங்கள் பற்றிய விபரங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்வதைத் தவிர்க்குமாறு பொது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொலிஸ் ஊடகப் பேச்சாளர்,சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் கூறுகையில்,"நாட்டில் அண்மைய நாட்களில் திட்டமிடப்பட்ட...

இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள எச்சரிக்கை!!

கிரிப்டோகரன்சியின் பயன்பாடு மற்றும் அதில் முதலீடு செய்வதன் அபாயம் குறித்து கவனமாக இருக்குமாறு மக்களுக்கு இலங்கை மத்திய வங்கி மீண்டும் வலியுறுத்துகிறது. கிரிப்டோகரன்சியின் பயன்பாடு சில தரப்பினரால் இலாபகரமான முதலீடாக விளம்பரப்படுத்தப்படுகிறது, மேலும் இதுபோன்ற முதலீடுகளால் மக்கள் பெரும் நிதி இழப்பை சந்தித்துள்ளதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது. நிதி மோசடிகள் விரைவான வளர்ச்சியைக் காட்டுவதால், தங்கள்...

கேக் கொள்வனவு செய்வதை தவிருங்கள்! இலங்கை மக்களுக்கு அறிவுறுத்தல்

இறக்குமதி செய்யப்பட்ட இந்திய முட்டைகளைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் கேக்களை கொள்வனவு செய்யவேண்டாம் என்று அகில இலங்கை சிற்றுண்டி உரிமையாளர்கள் சங்கம் மக்களிடம் அறிவுறுத்தியுள்ளது. ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சங்கத்தின் தலைவர் அசேல சம்பத், கொழும்பு துறைமுகத்துக்கு வந்த திரவ முட்டைகள் சுமார் ஏழு நாட்களாக விடுவிக்கப்படாமல் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளன. இந்தநிலையில், அவை பழுதடைந்திருக்கலாம் என்ற அடிப்படையில், எதிர்வரும்...

யாழ்.பல்கலைக்கழக மாணவனின் மோட்டார் சைக்கிள் திருட்டு; பொதுமக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸ்

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவனின் மோட்டார் சைக்கிள் திருட்டுப் போயுள்ளமை தொடர்பில் அதனை கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை பொலிஸார் நாடியுள்ளனர். கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோண்டாவில் சந்தியில் சிவராத்திரி தினத்தில் மோட்டார் சைக்கிள் திருடப்பட்டுள்ளது. இதுதொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவனினால் முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மோட்டார் சைக்கிளின் விவரத்தை பகிரங்கப்படுத்தி அதனை...

கடவுச்சீட்டுக்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள புதிய வசதி

கடவுச்சீட்டுகளை விண்ணப்பதாரியின் முகவரிக்கே தபால் மூலம் பெற்றுக் கொள்ள முடியும் என குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி கடவுச்சீட்டுக்களை விண்ணப்பதாரர்களின் நிரந்தர முகவரியில் மட்டுமின்றி தற்காலிக வசிப்பிடத்தின் முகவரிக்கும் அவற்றை தபால் மூலம் பெற்றுக் கொள்ள முடியும். விண்ணப்பதாரர்கள் தங்கள் கடவுச்சீட்டைக் கொண்டு வர வேண்டிய தற்காலிக முகவரியையும் விண்ணப்பப் படிவத்தில் குறிப்பிட...

யாழில் பொது மக்களை கொடூரமாக தாக்கி துன்புறுத்திய நபர் – அடையாளம் காண உதவுமாறு கோரிக்கை

யாழ்ப்பாணத்தில் மீட்டர் வட்டிக்கு பணம் கொடுத்தவர்களிடம் பணத்தை மீள வசூலிப்பதற்காக அடித்துத்துன்புறுத்திய சம்பவத்துடன் தொடர்புடையவரை அடையாளம் காண உதவுமாறு பொதுமக்களிடம் பொலிஸார் கோரியுள்ளனர். மீட்டர் வட்டிக்கு பணம் பெற்ற இருவரை தோட்டக் காணி ஒன்றுக்கு அழைத்து வந்து கொடூரமாகத் தாக்கி துன்புறுத்தும் காணொளி காட்சி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது. இந்த காணொளி தொடர்பில் வடமாகாண...

நெற்பயிர்களில் அதிகரிக்கும் இலைமடிச்சுக்கட்டி – அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறு பணிப்பாளர் கோரிக்கை

வடக்கு நெற்பயிர்களில் தற்பொழுது மிகவும் தீ விரமாக இலைமடிச்சுக்கட்டியின் தாக்கம் அவதானிக்கப்படுவதாக வடமாகாண பதில் விவசாயப் பணிப்பாளர் அஞ்சனாதேவி தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போதைய காலநிலையானது இதன் பெருக்கத்திற்கு சாதகமாக காணப்படுகிறது. விவசாயிகள் சரியான கட்டுப்பாடுகளை உரிய நேரத்தில் விவசாய போதனாசிரியரின் ஆலோசனையுடன் சிபார்சு செய்யப்பட்ட இராசயன நாசினிகளை பயன்படுத்தி கட்டுப்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்....

இலங்கை மக்களுக்கு மத்திய வங்கி விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

தொலைபேசி அழைப்புக்கள், குறுஞ்செய்திகள், மின்னஞ்சல்கள் ஊடாக மோசடியில் ஈடுபடும் கும்பல்கள் தொடர்பாக பொதுமக்கள் விழிப்புணர்வுடன் நடந்துகொள்ளவேண்டும். என இலங்கை மத்திய வங்கி நாட்டு மக்களிடம் கோரிக்கை விடுத்திருக்கின்றது. இது குறித்து நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தலில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, தொலைபேசி அழைப்புகள், குறுஞ்செய்திகள், மின்னஞ்சல் செய்திகள் மற்றும் சமூக ஊடக வலையமைப்புகள் மூலம் தவறான தகவல்களைத்...

அடுத்த சிலமணி நேரங்களின் பின்னர் வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் கனமழைக்கு வாய்ப்பு!!

இலங்கையின் வடக்கு பகுதியை தாழமுக்கம் ஊடறுத்து செல்லும் என விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். அவரது முகநூல் பதிவிலேயே இவ்வாறு குறிப்பிள்ளார். வங்காள விரிகுடாவில் நிலை கொண்டிருந்த தாழமுக்கம் வடக்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து தற்போது குடத்தனைக்கு நேரே கிழக்காக 112 கி.மீ. தொலைவில் வங்காள விரிகுடாவில் நிலை கொண்டுள்ளது. இது இன்னும் சில...

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் ஏற்பாட்டில் குருதிக்கொடை முகாம்

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் "ஒரு துளி உயிர் தரும்!" என்ற தொனிப்பொருளிலான குருதிக்கொடை முகாம்  24 செப்டெம்பர், 2022 சனிக்கிழமை அன்று காலை 9.00 மணிமுதல் கல்லூரி வளாகத்தில் குமாரசுவாமி மண்டபத்தில் இடம்பெற உள்ளது வருடாந்தம் இடம் பெறும் இந்த குருதிக்கொடைமுகாமில் இம்முறையும் பழைய மாணவர்கள், நலன்விரும்பிகள் மற்றும் ஆர்வலர்களை...

காணாமல் போன அடையாள அட்டைக்கு பொலிஸ் அறிக்கைகளை பெறுவது தொடர்பில் பொலிஸ் மா அதிபர் விடுத்துள்ள அறிவுறுத்தல்!!

நாட்டில் காணாமல் போன அடையாள அட்டைகளுக்காக பொலிஸ் அறிக்கைகளை பெறுவது தொடர்பில் பொலிஸ் மா அதிபர் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். உத்தியோகபூர்வமற்ற முறையில் பொலிஸ் அறிக்கைகளை வழங்குவது தொடர்பில் ஆட்பதிவு ஆணையாளர் நாயகம் பொலிஸ் நிலையப் பரிசோதகர் நாயகத்திற்கு விடுத்துள்ள அறிவித்தலுக்கமைய, இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. காணாமல் போன அடையாள அட்டைகள் தொடர்பில் முறைப்பாடுகளை சமர்ப்பிக்க...

வெசாக் தினத்தன்று மின்வெட்டு இல்லை!

வெசாக் தினத்தினை முன்னிட்டு எதிர்வரும் 15ஆம் திகதி மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவரினால் வெளியிடப்படுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று 7 1/2 மணிநேர மின்வெட்டு

நாடளாவிய ரீதியில் இன்று ஏழரை மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. போதிய எரிபொருள் இன்மை காரணமாக இலங்கை மின்சார சபை விடுத்த வேண்டுகோளுக்கிணங்க குறித்த அனுமதியின‍ை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வழங்கியுள்ளது. அதன்படி காலை 8.00 மணி முதல் மாலை 6.00 மணிவரை சுழற்சி முறையில் 5 மணிநேர மின்வெட்டும், மாலை 6.00 மணி முதல்...

அனைத்து அரச அலுவலர்களும் ஏப்ரல் மாத இறுதிக்குள் முழுமையாக தடுப்பூசி பெற்றுக்கொள்ள வேண்டும்!!

அனைத்து அரச அலுவலர்களும் ஏப்ரல் மாத இறுதிக்குள் முழுமையாக தடுப்பூசி பெற்றுக்கொள்ள வேண்டும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் அறிவுறுத்தியுள்ளது. முழுமையாக தடுப்பூசி பெற்றுக்கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்குச் செல்வதை தடுக்கும் வகையில் இத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. அனைத்து அரச நிறுவனங்களும் பொது இடங்கள் என்பதால், அந்த இடங்களில் பணியாற்றும் அனைவரும் தடுப்பூசி பெற்றிருக்க வேண்டும்...

கோவிட்-19 நோயாளிகள் குறிப்பிட்ட அறிகுறிகளுக்கு மட்டுமே மருந்தை உட்கொள்ள வேண்டும்!!

கோவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் குறிப்பிட்ட அறிகுறிகளுக்கு மட்டுமே மருந்துகளை உட்கொள்ள வேண்டும் என்று சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். கோவிட்-19 நோயாளிகள் மருத்துவ ஆலோசனையைப் பெறாமல் நுண்ணுயிர் எதிர்ப்பிகளை உட்கொள்வதைத் தவிர்க்குமாறு அவர்கள் வலியுறுத்தினர். சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மருத்துவ வல்லுநர் பிரியங்கர ஜயவர்தன மேற்கண்டவாறு தெரிவித்தார். அறிகுறிகளின் தன்மை மற்றும்...

வடக்குக்கான ரயில் சேவை ஆறு மாத காலத்துக்கு பாதிப்பு!!

அனுராதபுரம் -− ஓமந்தை ரயில் பாதை புனரமைப்பு பணிகளுக்காக எதிர்வரும் மார்ச் மாதம் 05 ஆம் திகதி முதல் ஆறு மாத காலத்துக்கு அப்பகுதி மூடவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் நிதியுதவியுடன் மேற்படி ரயில் பாதை புனரமைப்புச் செய்யப்படவுள்ளதாகவும் மார்ச் 05 ஆம் திகதிக்குப் பின்னர் வடக்குக்கான ரயில் சேவை கொழும்பிலிருந்து அனுராதபுரம் வரை...

காய்ச்சல், சளி, வயிற்றுப்போக்கு, வாந்தி போன்ற அறிகுறிகள் உள்ள மாணவர்களை பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம் என வலியுறுத்து!

காய்ச்சல், சளி, வயிற்றுப்போக்கு அல்லது வாந்தி போன்ற அறிகுறிகள் காணப்படும் மாணவர்களை பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம் என மாணவர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட மருத்துவ நிபுணர் சன்ன டி சில்வா இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார். நாட்டில் தற்போது மாணவர்கள் மத்தியில் கொரோனா, வைரஸ் காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல் போன்ற...

யாழில் ஜனவரி 31 முதல் பெப்ரவரி 5 வரை கோவிட்-19 தடுப்பூசி வாரமாகப் பிரகடனம்

“யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஜனவரி 31ஆம் திகதி தொடக்கம் பெப்ரவரி மாதம் 5ஆம் திகதிவரை தடுப்பூசி வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நாள்களில் 20 வயதிற்கு மேற்பட்டவர்களில் ஏற்கனவே சினோபாம் கோவிட்-19 தடுப்பூசியை இரண்டு தடவைகள் பெற்றுக்கொண்டவர்கள் அனைவருக்கும் மேலதிகமாக மூன்றாவது தடவையாக கோவிட்-19 தடுப்பூசியானது (பூஸ்டர்) வழங்கப்பட உள்ளது. இத்தடுப்பூசியினை இரண்டாவது தடுப்பூசியைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து ஆகக்குறைந்து...
Loading posts...

All posts loaded

No more posts