சுகாதார அமைச்சு மக்களுக்கு விடுத்துள்ள முக்கிய எச்சரிக்கை!!

நாட்டில் நிலவும் அதிக வெப்பத்துடனான வானிலை தொடர்பாக மக்கள் அதிக கவனத்துடன் செயற்பட வேண்டும் என சுகாதார அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது. குறிப்பாக குழந்தைகளும் கர்ப்பிணி தாய்மார்களும் அவதானத்துடன் இருத்தல் அவசியம் எனவும் அந்த அமைச்சின் தொற்றுநோயியல் தடுப்புப்பிரிவின் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். அதிக வெப்பம் நிலவுவதால், பல்வேறு நோய்களும் ஏற்படக்கூடிய சாத்தியங்கள்...

கடும் வெப்பம்: 4 மாகா­ணங்­க­ளுக்கு விஷேட அறி­வு­றுத்தல்

நாட்டில் நிலவும் அதிக வெப்­ப­மான கால­நிலை கார­ண­மாக வடமேல், மேல், சப்­ர­க­முவ மற்றும் தென் மாகா­ணங்­க­ளுக்கும் மன்னார், மொன­ரா­கலை ஆகிய மாவட்­டங்­க­ளுக்கும் விஷேட அறி­வு­றுத்தல் விடுக்­கப்­பட்­டுள்­ளது. குறித்த பகு­தி­களில் வெப்பம் அதி­க­ரிக்கக்கூடும் என்­பதால் பொதுமக்கள் சுகா­தார நலன் தொடர்பில் அக்­க­றை­யுடன் செயற்­பட வேண்டும் என்று அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலையம் தெரி­வித்­துள்­ளது. அதிக வெப்­ப­மான கால­நிலை...
Ad Widget

கடும் வெப்பம் – உடல் ஆரோக்கியம் தொடர்பில் வைத்தியர்கள் ஆலோசனை

நாட்டில் தற்பொழுது பெரும்பாலான பிரதேசங்களில் நிலவும் அதிக வெப்பநிலையினால் உடல் ஆரோக்கியம் தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சுகாதார பிரிவு ஆலோசனைகளைத் தெரிவித்துள்ளது. வெப்பநிலையின் காரணமாக வைத்தியசாலைக்கு வரும் நோய் நிலைமைக்கு உட்பட்டுள்ள நோயாளர் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகவும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். தற்பொழுது நிலவும் வெப்பத்துடனான காலநிலையில் சிறுவர்கள், குழந்தைகள், வயதானோர் அதிக வெயில் வேளையில்...

வளிமண்டலவியல் திணைக்களம் பொது மக்களுக்கு எச்சரிக்கை!

நாட்டில் நிலவும் அதிக வெப்பநிலையைக் கருத்திற் கொண்டு அவதானமாக செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று காலை 10.30 மணி முதல் நாளை காலை வரை நாட்டில் நிலவக் கூடிய காலநிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, வட மேல் மாகாணம், மேல் மாகாணம் மற்றும்,...

யாழில் கிராம சேவையாளரிடம் மீண்டுமொரு ஈஸி காஸ் மோசடி முயற்சி!!

யாழில் கிராம சேவையாளரிடம் மீண்டுமொரு ஈஸி காஸ் மோசடி மேற்கொள்ள முயற்சித்த போதிலும் குறித்த கிராம சேவையாளர் சுதாகரித்துக் கொண்டதால், மோசடி கும்பலிடம் ஏமாறாது தப்பிக்கொண்டார். குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது , யாழ்.அச்சுவேலி பகுதியை சேர்ந்த கிராம சேவையாளர் ஒருவருக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்ட நபர் ஒருவர் தன்னை புலனாய்வு பிரிவின் காவற்துறைப்...

பல்கலைக்கழகக் கற்கை நெறியைக் கைவிட்டுச் சென்ற மாணவர்களுக்கு வாய்ப்பு

பல்கலைக்கழகக் கற்கை நெறிகளை பகிடிவதையின் காரணமாக இடையில் கைவிட்டுச் சென்ற மாணவர்களுக்கு மீளவும் பல்கலைக்கழக கல்வியை பெற்றுக்கொடுக்கும் யோசனைத் திட்டமொன்று முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக ஆராய்ந்து உரிய சிபாரிசுகளை மேற்கொள்வதற்கு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார். அந்தவகையில், இக்குழுவிற்கு பாதிக்கப்பட்ட மாணவர்கள் தமது விண்ணப்பங்களை எதிர்வரும் 28ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்க...

ஏமாற்று பேர்வழிகள் தொடர்பில் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்!! பொலிஸார் எச்சரிக்கை!!

தென்னை மர வட்டு மிதிப்பதாக குறைந்த கூலி பேசி வேலையை தொடங்கும் நபர்கள் வேலை முடிய அதிக பணம் கேட்டு மிரட்டி பணத்தினை பெற்று சென்றனர் என பாதிக்கப்பட்ட ஒருவர் கூறினார். இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது; திருநெல்வேலி தபால் பெட்டி சந்திக்கு அருகில் உள்ள வீடொன்றுக்கு நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை சென்ற இருவர்...

பட்டதாரிகளுக்கு தொழில் வழங்கும் வேலைத்திட்டம் – விண்ணப்பகாலம் நீடிப்பு

தொழில்வாய்ப்பின்றி இருக்கும் பட்டதாரிகளுக்கு தொழில் வழங்கும் வேலைத்திட்டத்தில் விண்ணப்பங்களை பொறுப்பேற்கும் இறுதி தினம் பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டிருப்பதாக கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இந்த திட்டத்தின் கீழ் பட்டதாரிகளை இணைத்துக்கொள்வதற்கான வயதெல்லை 45 ஆக அதிகரித்திருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார். விண்ணப்பங்களை பொறுப்பேற்கும் இறுதி தினம் இம் மாதம் 14 ஆம்...

தொழில்வாய்ப்பற்ற பட்டதாரிகளுக்கு தொழில்வாய்ப்பினை வழங்கும் நிகழ்ச்சித்திட்டம் ஆரம்பம்!!

தொழில்வாய்ப்பற்ற பட்டதாரிகள் மற்றும் டிப்ளோமா பட்டங்களை பெற்றுள்ளவர்களுக்கு தொழில் வழங்கும் நிகழ்ச்சித்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நாட்டுக்காக பணி செய்யும் கலாசாரமொன்றை ஏற்படுத்தும் வகையில் இளம் தலைமுறையினரை பேண்தகு அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு நம்பகமாகவும் தர்க்கபூர்வமான அடிப்படையிலும் பங்களிக்கச் செய்வது இதன் நோக்கமாகும். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் “சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைப் பிரகடனத்திற்கேற்ப திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன. தொழிலை எதிர்பார்த்துள்ளவர்கள்...

சாரதி அனுமதி பத்திரத்திற்கான மருத்துவ அறிக்கையினை அரச வைத்தியசாலைகளில் பெற்றுக்கொள்ளலாம்!

இலகு ரக வாகனங்களுக்கான சாரதி அனுமதிப்பத்திரங்களை பெற்றுக் கொள்வதற்கு தேவையான மருத்துவ அறிக்கையினை அரச வைத்தியசாலைகளினூடாக வழங்க அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளது. அத்துடன் இந்த மருத்துவ அறிக்கையினை வௌியிடக் கூடிய வகையில் அரச வைத்தியசாலைகளின் வசதிகளை மேம்படுத்தவும இதன் போது தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவகத்துனால் உருவாக்கப்படும் மாதிரிக்கு அமைய இந்த சான்றிதழ் விநியோககிக்கப்படவுள்ளதாக...

கிராம அலுவலரின் சான்றிதழ்களுக்கு பிரதேச செயலரின் ஒப்பம் தேவையில்லை!!

கிராம சேவையாளரினால் வழங்கப்படும் சான்றிதழ்களுக்கு பிரதேச செயலரின் ஒப்பம் பெறும் நடைமுறை இரத்துச் செய்யப்படுவதாக பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கை வரும் பெப்ரவரி 10ஆம் திகதி திங்கட்கிழமை தொடக்கம் நடைமுறைக்கு வரும் என்று அமைச்சு குறிப்பிட்டுள்ளது. கிராம சேவையாளரால் வழங்கப்படும் வதிவிடச் சான்றிதழ், நற்சான்றிதழ் உள்ளிட்ட அனைத்து சான்றிதழ்கள், கடிதங்களுக்கு அந்தப்...

கொரோனா வைரசில் இருந்து மாணவர்களை பாதுகாப்பதற்கு பாடசாலைகளுக்கு ஆலோசனை!!

கொரோனா வைரசில் இருந்து பாடசாலை மாணவர்களை பாதகாப்பதற்காக கடைப்பிடிக்க வேண்டிய நடைமுஙைகள் தொடர்பில் அனைத்து மாகாண, வலய மற்றும் தொகுதி கல்வி அதிகாரிகளுக்கும், தேசிய பாடசாலை அதிபர்களுக்கும் தெளிவு படுத்துவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. சீனாவில் வூஹான் மாநிலத்தில் காணப்பட்ட இந்த வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவிவருகின்றது. இந்த வைரஸ் இதற்கு முன்னர்...

கொரோனா வைரஸ் – மக்களுக்கு அரசாங்கத்தின் முக்கிய அறிவிப்பு

கொரோனா வைரஸ் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் மேற்கொள்ளப்படும் உண்மைக்கு புறம்பான பிரசாரங்களைக்கண்டு ஏமாற வேண்டாம் என அரச தகவல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. இந்த விடயம் தொடர்பாக அந்த திணைக்களம் இன்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளது. வைரஸ் தொற்றுக்கு உள்ளான நபர் அல்லது இடம் ஒன்று இனங்காணப்பட்டால் அது தொடர்பாக அரச சுகாதார அதிகாரிகளால்...

சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கான மருத்துவ பரிசோதனை: அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு!!

வாகன சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்குத் தேவையான வைத்திய பரிசோதனைக்கு இணையத்தள பதிவுகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. வைத்திய பரிசோதனைக்கான நாள் மற்றும் நேரத்தை இணையத்தளம் ஊடாக பதிவுசெய்வதற்கு இன்று (திங்கட்கிழமை) முதல் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன் இதற்கென அறிமுகப்படுத்தப்பட்ட இணையத்தள செயலி இன்று முதல் செயற்பாட்டுக்கு வரவுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை முதல்...

கொரோனா வைரஸ் தாக்கம் : கொழும்புக்கு வரும் மக்களுக்கு அவசர எச்சரிக்கை!!!

கொரோனா வைரஸ் காரணமாக கொழும்புக்கு வரும் அனைவரையும் மூக்கு கவசம் அணியுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், நெரிசலான பகுதியில் கூடும் அனைவரும் முகத்திற்கு மூக்கு கவசம் அணியுமாறு கொழும்பு தலைமை மருத்துவ அதிகாரி வைத்தியர் ருவன் விஜயமுனி தெரிவித்தார். கொழும்பு நகரத்தில் உள்ள பொது இடங்கள், ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களுக்குள் நுழையும்போது இந்த முறையை பின்பற்றவும் ஊழியர்களுக்கு...

உலகை உலுக்கும் பாம்பு வைரஸ் தொற்று; வடக்கு மக்களும் விழிப்போடு இருக்கவேண்டும் – மருத்துவர் யமுனாந்தா

“சீனாவை தாக்கி அங்கு மக்களை உயிரெடுத்து வரும் கோரோனா வைரஸ் தற்போது அமெரிக்கா, தாய்லாந்து, சவுதி உள்ளிட்ட நாடுகளுக்கும் தொற்றியுள்ளது. எனவே வடக்கு மாகாணத்திலும் இந்த தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு விழிப்போடு இருக்கவேண்டும்” இவ்வாறு மருத்துவர் சி. யமுனானந்தா வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது; தற்போது உலகம் முழுவதும் அச்சம் ஏற்பட்டுள்ளது. கோரோனா வைரஸ் என்ற...

இறக்குமதியாகும் பால்மா வகைகளால் ஆபத்து!!

இறக்குமதி செய்யப்படும் பால்மா வகைகளில் தேங்காயிலிருந்து உற்பத்தி செய்யப்படும் பாம் எண்ணெய் கலக்கப்படுவதாக மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பில் பொதுமக்களை தெளிவுபடுத்தும் வகையிலான செயற்திட்டமொன்றினை சுகாதார அமைச்சுடன் இணைந்து மருத்துவ அதிகாரிகள் சங்கம் ஆரம்பித்துவைத்தது. இந்த வேலைத்திட்டத்தின் ஆரம்பகட்ட நிகழ்வு நேற்று திங்கட்கிழமை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இடம்பெற்றது. இதன்போது பால்மாவினால் ஏற்படும்...

100,000 வேலைவாய்ப்பு விண்ணப்ப படிவமும், முழு விபரமும் வெளியானது!

அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட 1 இலட்சம் வேலைவாய்ப்பு தொடர்பான முழுமையான விபரங்கள் வெளியாகியுள்ளன. பலநோக்கு அபிவிருத்தி செயலணி திணைக்களத்தினால், பயிலுனர் பதவிகளிற்கான முதலாம் கட்ட ஆட்சேர்ப்பிற்கான விபரங்கள் இன்று அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. 100,000 வேலைவாய்ப்பிற்கான பூர்வாங்க நடவடிக்கைகள் இன்று (20) முதல் ஆரம்பிக்கிறது. இதற்கான மாதிரி விண்ணப்படிவத்தை நீங்கள் வசிக்கும் பிரதேச செயலாளர் பிரிவில் பெற்று, பூர்த்தி...

தமிழர் வரலாற்றைப் பறைசாற்றும் அரும்பொருள் காட்சியகம் யாழ்ப்பாணத்தில் அமைப்பு!!

யாழ்ப்பாணத்தின் வரலாற்றில் முதன்முறையாக “சிவபூமி யாழ்ப்பாணம் அரும்பொருள் காட்சியகம்” உருவாக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தின் நுழைவாயிலான நாவற்குழியில் எதிர்வரும் 25ஆம் திகதி சனிக்கிழமை இந்த அரும்பொருள் காட்சியகம் பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்படவிருக்கிறது. இதுதொடர்பில் சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் செஞ்சொற் செல்வர் ஆறு திருமுருகன்  தெரிவித்ததாவது: சுமார் 12 பரப்பு காணியில் 3 மாடிக் கட்டடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அதன் நுழைவாயிலில்...

100,000 வேலைவாய்ப்பு: 20ம் திகதிக்கு முன் விண்ணப்படிவம்!! திட்டத்தின் முழு விபரம்!!

குறைந்த வருமானம் பெறும் மற்றும் வறிய குடும்பங்களை சேர்ந்தவர்களிற்கு வழங்கப்படவுள்ள 100,000 வேலை வாய்ப்புகள் தொடர்பான, பல்நோக்கு மேம்பாட்டு பணிக்குழுவின் திட்டங்கள் இறுதி செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு அறிவித்துள்ளது. அதன்படி, இதற்கான பொருத்தமான ஆட்சேர்ப்பு நடைமுறை மற்றும் விண்ணப்பங்கள் ஜனவரி 20 க்கு முன்னர் பகிரங்கப்படுத்தப்படும். பல்நோக்கு மேம்பாட்டு பணிக்குழுவின் நோக்கம், மிகவும் வறிய...
Loading posts...

All posts loaded

No more posts