- Thursday
- January 16th, 2025
யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், இங்கு பலருக்கு கொரோனா தொற்றுக்கான வாய்ப்புக்கள் அதிகம் உண்டு என யாழ்ப்பாண போதான வைத்தியசாலையின் பணிப்பாளர் மருத்துவர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். இலங்கையிலும் கொரோனா தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 86 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் யாழ்ப்பாணத்திலும் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ள...
வடக்கு மாகாணத்தில் தொடர்ச்சியாக ஊரடங்கு நிலை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதால் வறுமைக் கோட்டுக்குட்பட்ட குடும்பங்கள் மற்றும் வெளியிடங்களிலிருந்து வந்து பணியாற்றுவோர் தொடர்பில் கிராம அலுவலர்கள் ஊடாக விவரங்களைச் சேகரித்து உணவுப் பொருள் பொதிகள் வழங்கப்படவுள்ளது என்று அரசு தெரிவித்துள்ளது. எனவே வறுமைக்கோட்டுக்கு உள்பட்ட – உணவுப் பொருள்களைப் பெற்றுக்கொள்வதில் பிரச்சினை உள்ளவர்கள் தமது கிராம சேவையாளருக்கு அறிவிக்குமாறு இலங்கை...
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நோயாளிகள் தொடர்பில் வாந்திகள் மற்றும் சமூக ஊடகங்களில் வரும் உண்மைக்குப்புறம்பான தகவல்களில் பொதுமக்கள் ஏமாந்துவிட வேண்டாம். நோயாளிகள் தொடர்பான விடயங்கள் நாளாந்தம் பொது மக்களுக்கு அறிவிக்ப்படும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்தார். கொரோனா வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் காணப்பட்டால் 1990 என்ற சுவசெரிய அம்புலன்ஸ்...
வடக்கு மாகாணத்தின் 5 மாவட்டங்களிலும் கொழும்பு, கம்பஹா மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் நாளை காலை 6 மணிக்குத் தளர்த்தப்படும் ஊரடங்கு மீளவும் மதியம் 12 மணிக்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. அத்துடன், நாளை நண்பகல் 12 மணிக்கு நடைமுறைத்தப்படும் ஊரடங்குச் சட்டம் வரும் வெள்ளிக்கிழமை காலை 6 மணிவரை நடைமுறையில் இருக்கும் என்றும்...
நாடளாவிய ரீதியில் பரவிவரும் கொரோனா வைரஸ் தொற்று பாரிய நெருக்கடியொன்றைத் தொற்றுவித்திருக்கிறது. இந்நிலையில் நாட்டில் வைரஸ் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாட்டின் பிரபல கிரிக்கெட் வீரர்கள், மக்கள் மத்தியில் விழப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான கருத்துக்களை முன்வைத்து, குறுகிய நேரக்காணொளிகளையும் எழுத்துமூலப் பதிவுகளையும் தமது டுவிட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைத்தளப் பக்கங்களில் பதிவேற்றி வருகின்றனர். அவ்வாறு...
சுவிஸ் நாட்டில் இருந்து வருகை தந்த மதபோதகரின் தலைமையில் நடைபெற்ற ஆராதனை மற்றும் நிகழ்வுகளில் பங்கேற்றவர்களை உடனடியா தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துவதுடன் தங்களது விவரங்களை அருகில் உள்ள பொதுச் சுகாதார உத்தியோகத்தருக்கு தெரியப்படுத்தி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் கேட்டுள்ளார். தவறும் பட்சத்தில் அவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆளுநர்...
இல்ஙகையில் நாடுமுழுவதும் கடந்த 20ம் திகதி மாலை 6 மணி தொடக்கம் 24 செவ்வாய்க்கிழமை காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்டு மதியம் 12 மணிக்கு மீண்டும் அமுல் படுத்தப்பட உள்ளது. ஊரடங்கு நாளை காலை விலக்கப்பட்டு மதியம் 12 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்பட உள்ள வேளையில் மக்கள் என்ன செய்யவேண்டும் என சுயதொழில் முனைவாளரும் தகவல்தொழில்நுட்பவியலாளருமான ...
வெளிநாடுகளுக்குச் சென்று திரும்பி தனிமைப்படுத்தல் மருத்துவ கண்காணிப்பிற்கு உட்படாமலிருப்பவர்கள் தாமாக கண்காணிப்பிற்கு முன்வருவதற்கு 48 மணித்தியாலங்கள் கால அவகாசம் வழங்க்கப்பட்டுள்ளது. இதற்கு முன்வராதவர்கள் பாதுகாப்பு துறையினரால் இனங்காணப்பட்டால் 3 வருட சிறை தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய வெளிநாடுகளிலிருந்து வருகை தந்தவர்கள் நாளை மறுதினம் 24 ஆம் திகதி செவ்வாய்கிழமை நள்ளிரவு 12 மணிக்கு...
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் கர்ப்பிணித்தாய்மாரின் எண்ணிக்கை குறைந்தளவாகக் காணப்பட்டாலும் அவர்கள் ஏனையவர்களை விட விசேட கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய பிரிவினராகக் கருதப்படுவதாக விசேட வைத்தியர் கபில ஜயரத்ன தெரிவித்துள்ளார். தற்போதைய சூழ்நிலையில் கர்பிணிப் பெண்கள் பொது இடங்களுக்குச் செல்வதை முற்றாக தவிர்த்துக் கொள்ளுமாறும் வைத்தியர் கபில ஜயரத்ன மேலும் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும்...
கொழும்பு, ஹம்பகா மற்றும் புத்தளம், ஆகிய மாவட்டங்களில் நேற்று மாலை நடைமுறைக்கு வந்த ஊரடங்கு நிலை வரும் 24ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 6 மணிவரை நீடிக்கப்பட்டுள்ளது. அத்துடன், செவ்வாய்க்கிழமை காலை 6 மணிக்குத் தளர்த்தப்படும் ஊரடங்கு சட்டம் மீளவும் பிற்பகல் 2 மணிக்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. நாடுமுழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்ட ஊரடங்கு...
யாழ்.செம்மணி, இளையதம்பி வீதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் மதபோதனையில் கலந்துகொண்டவர்கள் முடிந்தளவு சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். கொரோனா தொற்று தொடர்பான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக யாழ்.போதனா வைத்தியசாலையில் தம்மை பாிசோதனைக்கு உட்படுத்துமாறும் கேட்கப்பட்டுள்ளது. யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி த.சத்தியமூா்த்தி மற்றும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் ஆகியோர்...
ஊரடங்கு வேளையில் வாகனங்களில் நடமாடுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. “அத்தியாவசிய சேவைகள், ஊடகவியலாளர்கள், மருத்துவ சேவையாளர்கள் மற்றும் வெளிநாடுகளுக்குப் பயணமாவதற்கு விமான நிலையத்துக்குப் பயணிப்போர் வீதிகளில் பயணிக்க அனுமதிக்கப்படுவர். வெளிநாடு பயணமாவோர் நுழைவுவிசைவு மற்றும் கடவுச்சீட்டு என்பன காண்பிக்கவேண்டும். ஏனையோர் வாகனத்தில் பயணித்தால் வாகனம் பொலிஸாரால் கையகப்படுத்தப்படும். அந்த...
இலங்கை முழுவதும் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் எதிர்வரும் திங்கட்கிழமை வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படுமென பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று பிற்பகல் 6 மணி முதல் எதிர்வரும் திங்கட்கிழமை வரை இந்த ஊரடங்கு அமுலில் இருக்கும் என பொலிஸார் அறிவித்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்று நாட்டில் தற்போது அதிகரித்து வருகின்றமையினால் அதனை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வரும்பொருட்டே இந்த...
யாழ்ப்பாணத்தில் மக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த உரிய அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இரண்டு வார காலமாவது வர்த்தக நிலையங்களை மூடி மக்கள் நடமாட்டத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அரச வைத்திய அதிகாரி சங்க பிரதிநிதிகள் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளனர். யாழ்.ஊடக அமையத்தில் நேற்றைய தினம்(புதன்கிழமை) ஊடகவியலாளர்களை சந்தித்த போதே இவ்வாறு...
மார்ச் 16 ஆம் திகதி தொடக்கம் ஏப்ரல் 15 ஆம் திகதிவரையான காலத்தில் காலவதியாகும் சாரதி அனுமதிப்பத்திரங்களின் கால எல்லை ஜூன் மாதம் 30 ஆம் திகதி வரை நீடிக்கப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் மகிந்த அமரவீர அறிவித்துள்ளார். சாரதி அனுமதிப் பத்திரம் வழங்கல், சாரதி அனுமதிப்பத்திரத்துக்கான எழுத்து மற்றும் செயல்முறைப் பரீட்சைகள் யாவும் மறு...
உலகளாவிய தொற்றுநோயாக கோரோனா (COVID 19) தொற்றுநோய் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையிலும் 16.03.2020 வரை 28 நோயாளிகள் கோரோனா தொற்றுக்குள்ளானதாக அடையாளங் காணப்பட்டுள்ளனர். எனினும் இதுவரை வடமாகாணத்தில் கோரோனாத் தொற்றுள்ள ஒரு நோயாளரும் அடையாளங் காணப்படவில்லை. ஆனாலும் இந் நிலையில் கொரோனா தொற்றிலிருந்து தற்காத்துக் கொள்வதற்கான மாகாண சுகாதார சேவையினரின் பொதுமக்களுக்கான அறிவுறுத்தல்கள் வருமாறு: தனிமைப்படுத்தல் (Quarantine)...
எதிர்வரும் பண்டிகை காலத்திற்கு தேவையான புடவைகளை கொள்வனவு செய்வதை தற்காலிகமாக தவிர்த்துக் கொள்வது கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுப்பதற்கு பெரும் உதவியாக அமையும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விஷேட வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்தார். புடவை முதலானவற்றை கொள்வனவு செய்யும் பொழுது சில வேளைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும் புடவைகளை தொடுதல், அந்த...
மார்ச் 1 தொடக்கம் 15 வரையான காலப்பகுதியில் ஐரோப்பா, தென்கொரியா மற்றும் ஈரான் நாட்டிலிருந்து இலங்கைக்கு வருகைத் தந்த அனைவரும் அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களுக்குச் சென்று தங்களை பதிவு செய்துகொள்வது அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பதிவு செய்யாத நபர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக...
புதிய கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொடர்பில் சர்வதேச ரீதியில் காணப்படும் அச்சுறுத்தலை கவனத்தில் கொண்டு வெளிநாடுகளுக்கான பயணத்தை முடிந்தவரை இரத்து செய்யுமாறு சுகாதார அமைச்சு பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது. கொழும்பில்நேற்று(9) நடைபெற்ற செய்தியாளர்களுடனான சந்திப்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் யாசிங்க இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். குழுக்களாக செல்வதற்கு திட்டமிடப்பட்டுள்ள அனைத்து வெளிநாட்டு பயணங்களையும்...
கொவிட் 19 (கொரோனா) வைரஸ் கையடக்கத் தொலைபேசியின் திரைகளில் உயிர்வாழ்ந்து தொற்றும் ஆபாயம் உள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். தொற்றுக்குள்ளானவர்கள் தும்மும் போதும் இருமும் போதும் வெளியேறும் வைரஸ், கையடக்கத் தொலைபேசியின் திரையில் ஏழு நாட்கள் உயிர் வாழும் தன்மை கொண்டது என்று லண்டனிலுள்ள பல்கலைக்கழகம் ஒன்று நடத்திய ஆய்வில் மூலம் கண்டறியப்பட்டள்ளதாக சர்வதேச ஊடகம் ஒன்று...
Loading posts...
All posts loaded
No more posts