- Thursday
- January 16th, 2025
கோரோனா தொற்று பரவலை கவனத்திற்கொள்ளும் போது இடர் வலயங்களாக இனம் காணப்பட்டுள்ள கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் தற்போது நடைமுறையில் இருக்கும் ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் நடைமுறையில் இருக்கும் என்று ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு...
“கோவிட் – 19 நோய்த்தொற்றால் பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருக்க வடமாகாணத்தில் சுமார் பத்தாயிரம் மருத்துவப் பணியாளர்கள் இரவு பகலாக தமது உயிரையும் பணயம் வைத்து சேவையில் ஈடுபட்டு இருக்கின்றனர். அவர்கள் அனைவர் சார்பாகவும் உங்களிடம் ஓர் வேண்டுகோளை விடுத்து நிற்கின்றோம். தயவு செய்து உங்கள் வீடுகளில் இருந்து இந்த நோய் பரவாமல் இருக்க ஒத்துழைப்பு வழங்குமாறு...
அளவுக்கு அதிகாமாக நோய்பற்றிய செய்திகளையும் காணொலிகளையும் பார்வையிடுதல் மன உளைச்சலை ஏற்படுத்தக்கூடும் என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் மருத்துவர் த. சத்தியமூர்த்தி எச்சரித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது; ஒருநாளில் ஒருசில தடவைகள் மாத்திரம் இந்த நோய் நிலை பற்றிய தகவல்களுக்காக நம்பிக்கையான வலைதளங்களை பார்வையிடுங்கள். அளவுக்கு அதிகாமாக நோய்பற்றிய செய்திகளையும் காணொலிகளையும்...
கொரோனா தொற்றின் காரணமாக நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள சூழ்நிலைக்கு மத்தியில் பிறப்பு மற்றும் இறப்பு பதிவுகளை மேற்கொள்வதில் தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்திக்கொள்ள வேண்டாம் என்று பதிவாளர் நாயகம் திணைக்களம் பொது மக்களுக்கு அறிவித்துள்ளது.. இந்த விடயங்கள் தொடர்பாக பதிவாளர் நாயகம் திணைக்களம் வெளியிட்டள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு: பதிவாளர் நாயகம் திணைக்களம் எனது இலக்கம் :...
கண், மூக்கு, தொண்டை மருத்துவ நிபுணர்கள் சமகாலத்தில் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டல்கள் பலவற்றை வழங்கியுள்ளனர். கொரோனா-வைரஸ் பரவியுள்ள காலகட்டத்தில் பொதுமக்களையும், குறிப்பாக பிள்ளைகளையும், முறையாக பாதுகாப்பது இதன் நோக்கமாகும். மருத்துவமனை ஊழியர்கள் மத்தியில் கொவிட்-நைன்ரீன் வைரஸ் பரவக்கூடிய அபாயம் காரணமாக, மருத்துவமனைகளில் ENT சிகிச்சை சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. எனவே, கண், மூக்கு, தொண்டை சம்பந்தப்பட்ட...
கொரோனா வைரஸ் தொற்றின் முடிவு நெருங்கி விட்டது. தற்போதைய நிலைமை சிறப்பானதாக மாறிவிடும் என்று நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி விஞ்ஞானி மைக்கேல் லெவிட் தெரிவித்துள்ளார். கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபே மாகாணம் வுகானில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக உயிர் இயற்பியலாளரும், வேதியலுக்கான...
மார்ச் மாதம் 10ஆம் திகதிக்குப் பின்னர் வெளிநாடுகளிலிருந்து நாட்டுக்கு வந்த அனைவரையும் நாளை முதலாம் திகதி புதன்கிழமைக்கு முன்னர் பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யுமாறு பதில் பொலிஸ் மா அதிபர் அறிவித்துள்ளார். பதிவு செய்யாமல் மறைந்திருந்தை தொடர்பில் கண்டறியப்படுவோர் கைது செய்யப்படுவார்கள் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். மார்ச் மாதம் 10ஆம் திகதிக்குப் பின்னர் நாட்டுக்கு...
கொரோனா தொற்றுநோய் தொடர்பான விபரங்கள் மற்றும் அறிவித்தல்களுக்காக வடக்கு மாகாணத்தில் 24 மணி நேர உதவி அழைப்பெண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அந்தவகையில், 021-2217982 மற்றும் 021-2226666 ஆகிய தொலைபேசி இலக்கங்க்ள அறிடுகப்படுத்தப்பட்டுள்ளன. வடமாகாணத்தில் கொரோனா தொற்றுநோயினால் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையில், இவை தொடர்பாக சுகாதார ரீதியில் பொதுமக்கள் தமக்குத் தேவையான ஆலோசனைகளையும், தகவல்களையும் பெற்றுக் கொள்ள முடியும்...
கொரோனா வைரசு தொற்றை தடுப்பதற்காக அரசாங்கம் பொலிஸ் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. இலங்கையில் மாத்திரமின்றி பெரும்பாலான நாடுகளில் இந்த நடைமுறை தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளது. இது ஆயூதங்களை பயன்படுத்தி மக்களுக்கெதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கையல்ல. மக்கள் நலத்தை முன்னிலைப்படுத்தி மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கையின் ஒரு கட்ட நடவடிக்கை. இதன் கீழ் நாம் வீட்டில் தங்கியிருப்பதுபோல் நோய் எதிர்ப்பு சக்தி நமது...
நாட்டில் கோரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவருவதற்கு ஏப்ரல் 27ஆம் திகதிவரை ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் இருக்கவேண்டும் என்று அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் நரம்பியல் அறுவைச் சிகிச்சை நிபுணர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார். “கோரோனா நோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக ‘எவிகன்’ எனப்படும் 5 ஆயிரம் மருந்து வில்லைகளை இலங்கைக்கு ஜப்பான் வழங்கியுள்ளது. இந்த மருந்து எதிர்வரும்...
அரச ஊழியர்களின் ஓய்வூதிய கொடுப்பனவு எதிர்வரும் ஏப்ரல் 2, 3 ஆகிய தினங்களில் வழங்கப்படும் என, நிதி அமைச்சின் சார்பில் பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது. இவ்விரு தினங்களில் பெற முடியாதவர்கள் இருப்பின், ஏப்ரல் 6ஆம் திகதி அவர்களுக்கு அதனை வழங்கி முடிக்க எதிர்பார்ப்பதாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று (29) இடம்பெற்ற...
யாழ்ப்பாணம், கொழும்பு, கம்பஹா, புத்தளம், கண்டி மற்றும் களுத்துறை ஆகிய 6 மாவட்டங்களில் மறு அறிவித்தல் வரை ஊரடங்குச் சட்டம் நீடிக்கப்பட்டுள்ளது. ஏனைய 19 மாவட்டங்களிலும் நாளை திங்கட்கிழமை காலை 6 மணிக்குத் தளர்த்தப்படும் ஊரடங்குச் சட்டம் அன்றய தினம் பிற்பகல் 2 மணிக்கு மீளவும் நடைமுறைப்படுத்தப்படும் என்று ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பில் ஜனாதிபதி...
கொரோனா வைரஸை நாட்டிலிருந்து ஒழிக்கும் வரை தாம் வாழும் இடங்களிலேயே பாதுகாப்பாக இருக்குமாறு தாய்நாட்டிற்கு வருகை தருவதற்காக எதிர்ப்பார்த்துள்ள வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களிடம் அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. கொரோனா வைரஸ் நாட்டினுள் பரவுவதை தவிர்ப்பதற்கு அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. நாட்டினுள் வைரஸ் வருவது மற்றும் பரவுவதை தவிர்க்கும் நடவடிக்கையாக வெளிநாடுகளில் இருந்து வருகை தருவதை முழுமையாக...
யாழ்.போதனா வைத்தியசாலை மாதாந்த கிளினிக் ஊடாக பயன் பெறும் யாழ்.தீவக மக்கள் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி அவசர கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். கொரோனோ தொற்று தாக்கம் காணரமாக ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் உள்ளதால் நோயாளர் பெரும் பாதிப்பை எதிர்நோக்கி வருகின்றனர். குறிப்பாக மருத்துவ கிளினிக்கில் சிகிச்சை பெறுகின்றவர்கள் எதிர்நோக்கும் பாதிப்பையடுத்து யாழ் போதனா வைத்தியசாலை...
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உலர் உணவுப் பொருள்கள் மற்றும் மருந்துகளை வீடுகளுக்கே கொண்டு சென்று வழங்கும் வியாபார நிலையங்கள் மற்றும் மருந்தகங்களின் விவரம் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் தமக்குத் தேவையான அத்தியாவசிய உணவுப்பொருள்கள் மற்றும் மருந்துகள் தொடர்பில் தொலைபேசி ஊடாக ஓடர் வழங்கினால் வீடுகளுக்கு கொண்டு அவை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கோரோனா வைரஸ்...
எதிர்வரும் 30 ஆம் திகதியில் இருந்து ஏப்ரல் 3 ஆம் திகதி வரை வீட்டிலிருந்து பணியாற்றுவதற்கான காலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் ஊடகப்பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், குறித்த காலப்பகுதி அரசாங்க விடுமுறை நாட்களாக அறிவிக்கப்படவில்லை என ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. இதற்கு முன்னரும் இதுபோன்றதொரு காலப்பகுதி அறிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஊரடங்கு அமுலில் உள்ள நேரத்தில் மிக அவசர தேவையின்றி வெளியில் செல்வதற்கு அனுமதி இல்லை என்றும், ஒரு பிரதேசத்திருந்து இன்னொரு பிரதேசத்திற்கு செல்வதற்கு அனுமதி இல்லை எனவும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்hறு தெரிவித்தார். ‘ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நேரத்தில் ஒரு...
ஊரடங்குச்சட்டம் அமுலில் உள்ள காலப்பகுதியிலும் நாட்டிலுள்ள சகல 'ஒலுசல' மருந்தகங்களும் திறந்திருக்குமென சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. வைத்தியசாலைகள், மருந்தகங்கள் என்பனவற்றிலிருந்து நாளாந்தம் மருந்துகளை கொள்வனவு செய்வோர் ஊரடங்குச்சட்டத்தினால் பாரிய சிரமங்களுக்கு முகங்கொடுத்துள்ளார்கள். இந்த விடயத்தைக் கருத்திற் கொண்டு சுகாதார அமைச்சு இந்த நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளது. நோயாளர்களின் நோய் தொடர்பான அட்டை, மருந்துச் சீட்டு என்பனவற்றை ஊரடங்குச்...
காய்ச்சல், இருமல் ,தொண்டை வலி, இசுவாசிப்பதில் சிரமம் முதலான அறிகுறிகள் உங்களிடம் காணப்பட்டால் நீங்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் எனக் கூற முடியாவிட்டாலும், இவை கொரோனா வைரஸ் தொற்றின் போது ஏற்படும் அறிகுறிகள் என்பதால் உங்கள் அன்புக்குரியவர்களைப் பாதுகாக்க கீழே குறிப்பிட்டுள்ள படிகளைப் பின்பற்றவும். இலங்கை நாட்டின் குடிமகனாக இது உங்கள் தேசிய பொறுப்ப்பாகும். மருத்துவ...
வடக்கு மாகாணத்தின் 5 மாவட்டங்கள் மற்றும் கொழும்பு, கம்பஹா, புத்தளம் மாவட்டங்களில் இன்று காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்ட ஊரடங்கு சட்டம் பிற்பகல் 2 மணிக்கு மீள நடைமுறைப்படுத்தப்படும் என்று ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. முன்னர் நண்பகல் 12 மணிக்கு மீள நடைமுறைப்படுத்தப்படும் என தீர்மானிக்கப்பட்ட போதும் பிற்பகல் 2 மணிக்கே நடைமுறைப்படுத்தப்படும் என்று ஜனாதிபதி...
Loading posts...
All posts loaded
No more posts