- Saturday
- January 18th, 2025
சூப்பர் ஸ்டார் நடித்து சமீபத்தில் வெளியான லிங்கா பலரையும் கவராமல் போனது என்னவோ உண்மை என்றாலும் வசூல் ரீதியில் இன்றும் முன்னிலையில் உள்ளது. இதையடுத்து சூப்பர் ஸ்டாரின் அடுத்த படம் யார் இயக்க போகிறார் என்ற ஒரு கேள்வி கோலிவுட் மத்தியில் எழும்பியுள்ளது, ஒரு தரப்பு மீண்டும் ஷங்கருடன் இணைய போகிறார் என்று கூறி வந்தாலும்...
‘கத்தி’ படத்திற்கு பிறகு விஜய், சிம்புதேவன் இயக்கும் பெயரிடப்படாத படம் ஒன்றில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் வேளையில், ரசிகர்களும் இப்படத்தின் தலைப்பை பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்தனர். இப்படத்திற்கு முதலில் ‘மாரீசன்’, ‘கருடா’, ‘போர்வாள்’ ஆகிய பெயர்கள் பரிசீலனையில் இருந்து வந்தது. இன்று படத்தின் தலைப்பை வெளியிட்டுள்ளனர். அதன்படி, படத்திற்கு ‘புலி’...
மணிரத்னம் துல்கர் சல்மான், நித்யா மேனன், கனிகா, பிரகாஷ் நடிப்பில் ஓகே கண்மணி என்ற படத்தை இயக்கி வருகிறார். இதனை அலைபாயுதே படத்தின் இரண்டாம் பாகம் என்றும் சொல்லலாம் என கேமராமேன் பி.சி.ஸ்ரீராம் கூறியுள்ளார். தொடர்ச்சியாக தோல்விகளை சந்தித்தவேளை மணிரத்னம் எடுத்த படம், அலைபாயுதே. மாதவன், ஷாலினி நடித்த அப்படத்துக்கும் பி.சி.ஸ்ரீராம்தான் ஒளிப்பதிவு செய்திருந்தார். ராவணன்,...
கப்பல் படத்தில் கரகாட்டக்காரனில் இடம்பெற்ற ஊருவிட்டு ஊரு வந்து பாடலைப் பயன்படுத்தியதற்காக அதன் தயாரிப்பாளரான இயக்குநர் ஷங்கருக்கு இளையராஜா வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இயக்குநர் ஷங்கர் மற்றும் ஜெயராம் ஆகியோர் தயாரிப்பில் கப்பல் என்ற படம் வெளியாகியுள்ளது. கார்த்திக் ஜி கிரீஷ் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். நடராஜன் சங்கரன் என்பவர் இசையமைத்துள்ளார். படத்தில் இடம் பெறும்...
பொங்கலை முன்னிட்டு ஜனவரி 14 திரைக்கு வரும் என்று தயாரிப்பாளரால் அறிவிக்கப்பட்ட அஜீத்தின் என்னை அறிந்தால் படம் திடீரென பொங்கல் ரேஸிலிருந்து விலகிக் கொண்டது. பொங்கல் தினத்தில் தொடர்ச்சியாக விடுமுறை வருவதால் பெரிய படங்கள் பொங்கல் தினத்தில் வெளியாக ஆர்வம் காட்டும். ஷங்கரின் ஐ ஜனவரி 9 -ஆம் தேதியே திரைக்கு வருகிறது. ஜனவரி 14...
2014–ல் ஜனவரி முதல் டிசம்பர் இறுதி வரை தமிழில் 269 படங்கள் ரிலீசாகியுள்ளன. நிறைய தமிழ் படங்கள் வேறு மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டும் வசூல் பார்த்துள்ளன. இந்த படங்களின் மொத்த முதலீடு ரூ. 1100 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது. இவற்றில் குறைவான படங்களே வெற்றிகரமாக ஓடி லாபம் ஈட்டியுள்ளன. நிறைய படங்கள் தோல்வி அடைந்து தயாரிப்பாளர்களை...
கமல்ஹாசன் தமிழ் சினிமாவிற்கு புதிதுபுதிதாக பல அறிய படைப்புகளை தந்தவர். இவரின் கனவுப்படமான மருதநாயகம் 1997ம் ஆண்டு பூஜை போட்டு தொடங்கப்பட்டது. சில வருடங்கள் படப்பிடிப்பு சென்ற நிலையில் நிதி பற்றாக்குறை காரணமாக அந்த படம் நின்றது. ஆனால், தற்போது இது குறித்த கேள்வி ஒன்றிற்கு சுவையான பதிலை கூறியுள்ளார். இப்படத்தை மீண்டும் எடுக்கவிருப்பதாகவும், லண்டனில்...
விஜய் சில வருடங்களுக்கு முன் அமீர் கான் நடித்த 3 இடியட்ஸ் படத்தை ரீமேக் செய்து நடித்தார். அந்த படம் அவருக்கு மாபெரும் வெற்றியை தந்தது. அந்த வகையில் தற்போது வெளிவந்த பிகே திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்த படத்தை சமீபத்தில் விஜய் பார்த்து ரசித்தார். மேலும் பிகே படத்தை தமிழில்...
கர்நாடகாவில் மைசூர் அரண்மனையை அடுத்து இரண்டாவது பெரிய அரண்மனையாக கருதப்படுவது லலிதா மஹால் அரண்மனை. சாமுண்டி ஹில்ஸ் பகுதியில் அமைந்துள்ள இந்த அரண்மனையில் பல்வேறு சினிமா படப்பிடிப்புகள் நடைபெற்றுள்ளது. சமீபத்தில் ரஜினி நடிப்பில் வெளிவந்த ‘லிங்கா’ படத்தின் சில காட்சிகள்கூட இந்த அரண்மனையில் படமாக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் புதிய படத்தின்...
கௌதம்மேனன் இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் புதிய படம் ‘என்னை அறிந்தால்’. இப்படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக அனுஷ்கா, திரிஷா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் பாடல்களை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் அஜீத்...
பாலு மகேந்திரா, பாலச்சந்தர் உள்ளிட்ட முன்னணி தமிழ் திரைப்பட கலைஞர்கள் 2014ல் விண்ணுலகம் சென்றுள்ளனர். அதில் பெரும்பாலானோர் படைப்புகள் காலம் கடந்தும் சாகா வரம் பெற்றவை. அந்த இமயங்களின் பெயர்களை அவர்களின் படைப்புகள் எப்போதும் நினைவுபடுத்திக் கொண்டே இருக்கும். அந்த வகையில் இறந்தும் சாகாவரம் பெற்றவர்கள்தான் இந்த கலைஞர்கள். ஆம்.. கலைஞர்கள் மறையலாம், ஆனால் அவர்களின்...
அஜித் ஒருவரை பாராட்டுகிறார் என்றால் அதை என்றுமே பப்ளிக்காக அறிக்கை விட மாட்டார். தனக்கு பிடித்தால் உடனே அந்த நபருக்கு போன் செய்து பாராட்டுவாராம். அந்த வகையில் மான் கராத்தே படத்தில் சிவகார்த்திகேயன் லுக்கை பார்த்த அஜித் மிகவும் பாராட்டியுள்ளாராம். ஆனால், இதை சிவகார்த்திகேயன் கூறவில்லை.அந்த படத்தில் பணியாற்றிய காஸ்டியூம் டிசைனர் ஒரு முன்னணி நாளிதழ்...
ரஜினியின் லிங்கா ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை சந்தித்தது. இதனால், உடனே அடுத்த படத்தை ஆரம்பிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் ரஜினியின் அடுத்த படத்திற்கான கதையை அவருடைய மூத்த மகள் ஐஸ்வர்யா தனுஷ் ரெடி செய்து விட்டதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது. இன்னும் சூப்பர் ஸ்டாரின் வாய்ஸிற்காக தான் ஐஸ்வர்யா வெயிட்டிங். இது குறித்து அதிகாரப்பூர்வ...
கத்தி பட கதை திருடப்பட்டதாக வழக்கு: நடிகர் விஜய், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் கோர்ட்டில் ஆஜராக உத்தரவு
கத்தி பட கதை திருடப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர் விஜய் உள்பட 5 பேர் அடுத்த மாதம் 23-ந்தேதி நேரில் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று தஞ்சை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. திரைப்பட இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த கத்தி திரைப்படத்தை எதிர்த்து தஞ்சையை அடுத்த இளங்காடு கிராமம் கீழத்தெருவை...
ரஜினிகாந்த, கமல் ஹாசன், சுஜாதா, சரிதா, உள்ளிட்ட நூற்றுக்கணக்கான தமிழ் நடிகர்-நடிகையரை அறிமுகப்படுத்தியதுடன் சமூக சீர்திருத்த கருத்துகளுடன் கூடிய கதையம்சத்துடன் அமைந்த பல புரட்சிப் படங்களை இயக்கியதன் மூலம் ‘இயக்குனர் சிகரம்’ என புகழப்பட்ட கே.பாலசந்தர் இன்றிரவு காலமானார். தஞ்சை மாவட்டம், நன்னிலம் அருகேயுள்ள நல்லமாங்குடி கிராமத்தில் 9-7-1930 அன்று பிறந்த கே.பாலசந்தர், மேடை நாடகத்...
வெங்கட்பிரபு இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படம் ‘மாஸ்’. ‘அஞ்சான்’ தோல்வியைத் தொடர்ந்து சூர்யா நடித்து வரும் படம் என்பதால், இப்படத்திற்காக மிகுந்த சிரத்தை எடுத்து நடித்து வருகிறார் சூர்யா. வெங்கட் பிரபுவுக்கும் ‘பிரியாணி’ படம் எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை. ஆகவே, இவருடைய உழைப்பும் இந்த படத்தில் அதிமாக இருப்பதாக கூறப்படுகிறது. இப்படம் வருகிற தமிழ்...
ஜெயப்பிரதா மகன் சித்து கதாநாயகனாக அறிமுகமாகும் படம் உயிரே உயிரே. இதில் நாயகியாக ஹன்சிகா நடிக்கிறார். ராஜசேகர் டைரக்டு செய்கிறார். இவர் ஏற்கனவே விஷால் நடித்த சத்யம், படத்தை டைரக்டு செய்தவர். ஜெயப்பிரதாவே இந்த படத்தை தயாரிக்கவும் செய்கிறார். இதன் வேலைகள் இறுதி கட்டத்தில் உள்ளன. சமீபத்தில் ரஜினியை ஜெயப்பிரதா நேரில் சந்தித்து ‘உயிரே உயிரே’...
‘மொழி’, ‘அபியும் நானும்’ ஆகிய படங்களை இயக்கியவர் ராதா மோகன். வித்தியாசமான கதையும் திரைக்கதையும் கொண்டு வெளியான இவ்விரு படங்களும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது. வணிக ரீதியிலும் வெற்றியடைந்தது. அதன் பிறகு நாகார்ஜூனாவை வைத்து ‘பயணம்’ படத்தை இயக்கினார். இவருடைய இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த ‘கௌரவம்’ படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியானது....
திடீர் உடல்நலக் கோளாறு காரணமாக பாலசந்தர் சென்ற வாரம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வயோதிகம் மற்றும் ஜுரம் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், அவருக்கு உரிய சிகிச்சை அளிப்பதாகவும் மருத்துவமனை வட்டாரம் தெரிவித்தது. பாலசந்தரை சந்தித்த ரஜினியும், அவர் நலமாக இருப்பதாக தெரிவித்தார். ஆனால் இரண்டு தினங்கள் கழிந்து நிலைமை மோசமானது. சிறுநீரகக் கோளாறு காரணமாக...
பிரசாந்த் நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் ‘சாஹசம்’. இப்படத்தை அருண்ராஜ் வர்மா என்ற புதுமுக இயக்குனர் இயக்கியுள்ளார். தமன் இசையமைப்பில் உருவாகும் இப்படத்தில் எண்ணற்ற நட்சத்திரங்கள் பாடல்கள் பாடியுள்ளனர். ஏற்கெனவே, இவருடைய இசையில் அனிருத், நடிகை லஷ்மி மேனன், ஆண்ட்ரியா இந்தியாவின் சிறந்த பாடகர்களான மோஹித் சவ்ஹான், யோ யோ ஹனிசிங், அர்ஜித் சிங்...
Loading posts...
All posts loaded
No more posts