- Saturday
- January 18th, 2025
அஜீத்தின் ‘என்னை அறிந்தால்’ படம் பொங்கலுக்கு ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டது. விளம்பரங்களும் வந்தன. ஆனால் பொங்கலுக்கு வரவில்லை. தொழில்நுட்ப பணிகள் முடிவடையாததால் ரிலீசாகவில்லை என விளக்கம் அளிக்கப்பட்டது. வருகிற 29–ந்தேதி படம் ரிலீசாகும் என படக்குழுவினர் தெரிவித்தனர். ரசிகர்கள் அன்றைய தினம் படம் வரும் என்ற எதிர்பார்ப்போடு இருக்கிறார்கள். ஆனால் ‘என்னை அறிந்தால்’ பட விளம்பரங்களில்...
அனிருத்தின் வளர்ச்சி இமயமலையை விட உயரமாக இருக்கும் போல, இசையமைத்த சில படங்களிலேயே தென்னிந்தியாவின் நம்பர் 1 இடத்தை பிடித்து விட்டார். இந்நிலையில் முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த கத்தி படத்தில் இவரது இசை பெரிதும் பேசப்பட்டது. இதை தொடர்ந்து ஷங்கர் அடுத்து இயக்கும் படத்திற்கு அனிருத்தை தான் இசையமைப்பாளராக புக் செய்துள்ளாராம். அது மட்டுமில்லாமல் கௌதம்...
பொங்கலுக்கு வெளியான ஐ, ஆம்பள இரண்டும் எதிர்பார்ப்பை நிறைவேற்றவில்லை. தயாரிப்பில் இருக்கும் பிரமாண்டமும், உழைப்பும் கதை திரைக்கதையில் இல்லை என்பதை ஐ படத்தைப் பார்த்தவர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர். அதேபோல் ஆம்பள. சுந்தர் சி.யின் மூன்று மாதத்துக்கு ஒரு படம் பார்முலாவை அவர் மறுபரிசீலனை செய்யும்படி ஆம்பளயின் ரிசல்ட் வலியுறுத்துகிறது. இவைகளுக்கு நடுவே வெளியான ஜீ.வி.பிரகாஷ் நடித்திருக்கும்...
87 -வது ஆஸ்கர் விருதுகளுக்கான பரிந்துரைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ரஹ்மானின் பெயர் இடம்பெறவில்லை. அதனால் அவர் ஆஸ்கர் வெல்வார் என எதிர்பார்த்த ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். ரஹ்மான் இசையமைத்த, ஹன்ட்ரட் புட் ஜர்னி, மில்லியன் டாலர் ஆர்ம், கோச்சடையான் ஆகிய படங்கள் ஆஸ்கர் பரிந்துரைப் பட்டியலுக்கு தகுதியான படங்களின் பட்டியலில் இருந்தன. ஆனால் அவை பரிந்துரைப்...
இந்திய சினிமாவே வியந்து பார்க்கும் நடிகர் கமல்ஹாசன். இவர் திரையில் ஜொலித்து கொண்டிருக்கும் போதே, அவரது மூத்த மகள் ஸ்ருதி சினிமாவில் காலடி எடுத்து வைத்து வெற்றி பெற்றார். தற்போது அவருடைய இரண்டாவது மகளான அக்ஷராவும் ஹிந்தியில் தனுஷ்க்கு ஜோடியாக ஷமிதாப் படத்தில் விரைவில் அறிமுகமாகவிருக்கிறார். ஆனால், அவருக்கும் அப்பா, அக்கா போல தமிழில் கால்...
ஐ படத்தை அனைத்து தரப்பு ரசிகர்களும் ஆர்வமாக பார்த்து ரசித்து வருகின்றனர். இந்நிலையில் இப்படத்தை விஜய் ரசிகர்கள் இன்னும் அதிகமாக ரசிக்கின்றனர். ஏனெனில் படத்தில் ஒரு காட்சியில் சந்தானம் ‘விஜய் ரசிகர்கள் அரிசி கொடுக்குறாங்க’ என்ற வசனம் வர திரையரங்குகளிலேயே இந்த காட்சிக்கு விசில் சத்தம் வெடித்தது. இதனால், விஜய் ரசிகர்கள் மீண்டும் மீண்டும் படத்தை...
சூர்யா தற்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் மாஸ் படத்தில் நடித்து வருகிறார். ஹாரர் படமான இதில் சூர்யாவுக்கு ஜோடி நயன்தாரா. சூர்யாவின் தம்பி கார்த்தி கொம்பன் படத்தை முடித்து அடுத்த மாதம் கோகுல் இயக்கும் கஸ்மோரா படத்தில் நடிக்க உள்ளார். மாஸ் படத்துக்கும் இதற்கும் பல ஒற்றுமைகள். மாஸில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கும் நயன்தாராதான் இந்தப் படத்தில்...
விருமாண்டியில் நடித்த பிறகு காணாமல் போன அபிராமியை கமல்தான் விஸ்வரூபம் படத்தில் பூஜா குமாருக்கு டப்பிங் பேச மீண்டும் அழைத்து வந்தார். இந்த இரண்டாவது இன்னிங்ஸ் அபிராமிக்கு செமையாக வொர்க் அவுட் ஆகியுள்ளது. மலையாளத்தில் சுரேஷ்கோபியின் மனைவியாக அப்போதகரே படத்தில் நடித்தவர் தற்போது மலையாள ஹவ் ஓல்ட் ஆர் யூ படத்தின் தமிழ் ரீமேக்கில் ஜோதிகாவின்...
திரிஷாவுக்கு திருமணம் முடிவாகியுள்ளது. ‘வாயை மூடி பேசவும்’, ‘காவியத்தலைவன்’ போன்ற படங்களை தயாரித்த வருண்மணியனை மணக்கிறார். இவர்கள் திருமண நிச்சயதார்த்தம் வருகிற 23-ந்தேதி சென்னையில் நடக்கிறது. இதனை திரிஷாவே டுவிட்டரில் அதிகாரபூர்வமாக அறிவித்து இருக்கிறார். நெருங்கிய உறவினர்கள் மட்டுமே நிச்சயதார்த்ததுக்கு அழைக்கப்பட உள்ளனர். 25-ந்தேதி நடிகர், நடிகைகள் உள்ளிட்ட திரையுலகினருக்கு திரிஷாவும் வருண்மணியனும் இணைந்து பிரத்யேக...
சமூக வலைத்தளங்களில் எல்லோருக்கும் ஒரு பிரச்சனை என்றால் விஜய், அஜித் ரசிகர்களுக்கு எப்போது ஒரே பிரச்சனை தான். தலயா? தளபதியா? என்பது தான். இந்த நேரத்தில் தான் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவரவிருக்கும் காக்கிசட்டை படத்தின் ட்ரைலர் வெளிவர, பிரச்சனை மீண்டும் அவர்களுக்கிடையே பூதாகரமானது. சிவகார்த்திகேயன் ட்ரைலரில் அஜித் வசனத்தை கூற, உடனே விஜய் ரசிகர்கள் கோபமாகிவிட்டனர்....
ஜனவரி 14 ஐ வெளியாகிறது. திரையுலகமும், பொதுமக்களும் ஆவலுடன் எதிர்பார்த்த படம். விக்ரமின் கடின உழைப்பும், ஷங்கரின் பிரமாண்ட கற்பனையும், ரஹ்மானின் இசையும், ஆஸ்கர் ரவிச்சந்திரனின் கோடிகளும் படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. பொதுவாக இரண்டரை மணி நேரம் படம் இருந்தாலே பார்வையாளர்கள் நெடியத் தொடங்குவார்கள். இரண்டே முக்கால் மணி நேரம் என்பது மிக...
ஆர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘மீகாமன்’. இதில் ஆர்யாவிற்கு ஜோடியாக ஹன்சிகா நடித்திருந்தார். இப்படத்தை மகிழ்திருமேனி இயக்கியிருந்தார். தமன் இசையமைத்திருந்தார். சதீஷ்குமார் ஒளிப்பதிவை செய்திருந்தார். ஆக்ஷன் திரில்லராக உருவாகி இருந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்று வருகிறது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ஆர்யாவை வைத்து மீண்டும் இயக்கவிருக்கிறார் மகிழ்திருமேனி....
ரஜினி நடித்த லிங்கா படம் கடந்த மாதம் 12–ந்தேதி ரிலீசானது. இந்த படத்தால் நஷ்டம் ஏற்பட்டு விட்டதாகவும். எனவே நஷ்டஈடு வேண்டும் என கோரியும் விநியோகஸ்தர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். இந்த பிரச்சினையில் ரஜினி தலையிட்டு நஷ்டஈடு பெற்று தர வேண்டும் என்று கோரி விநியோகஸ்தர்கள் நேற்று வள்ளுவர் கோட்டம் அருகில் காலை 10 மணிக்கு உண்ணாவிரத...
குருநாதர் கே பாலச்சந்தர் மரணம் குறித்து விகடனில் ரஜினிகாந்த் எழுதிய கட்டுரை இது. குருவின் மரணம் அவரை எந்த அளவுக்கு பாதித்துவிட்டது என்பதற்கு அவரது இந்த எழுத்துக்களே சான்று. அந்தக் கட்டுரை என் வீட்டுத் தொலைபேசி ஒலித்தது. தொலைபேசியை எடுக்க மறுமுனையில் இருந்து 'சார்... நான் கே.பி சாரோட அசிஸ்டென்ட் பேசறேன். நீங்க உடனே காவேரி...
விஜய் தற்போது சிம்புதேவன் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு சில நாட்களுக்கு முன் தான் புலி என்று தலைப்பு வைத்தனர். ஏற்கனவே விஜய் படத்திற்கு பிரச்சனைகள் வரிசை கட்டி நிற்கும். அந்த வகையில் இந்த முறை பிரச்சனை டைட்டிலேயே ஆரம்பித்தாலும் ஆச்சரியம் இல்லை. ஏனெனில் புலி என்ற இந்த ஒரு சொல்லே போதும், இந்நிலையில்...
பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு நீண்ட நாட்களாக நடித்துவரும் படம் இது நம்ம ஆளு. இப்படத்தின் முழுப்படப்பிடிப்பு முடிந்த நிலையில் ஒரே ஒரு பாடல் காட்சி மட்டுமே மீதம் உள்ளது. சமீபத்தில் இப்படத்தின் டீசர் பொங்கலுக்கு வரும் என படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில் நேற்று இயக்குனர் பாண்டிராஜ் தன் டுவிட்டர் பக்கத்தில் சிம்புவிற்கும் அவரது தம்பி குறளரசனுக்கும்...
முருகதாஸ் இன்று இந்த உயரத்தில் இருக்கிறார் என்றால் அதற்கு காரணம் அஜித் தான். இவர்கள் கூட்டணியில் உருவான தீனா மாபெரும் வெற்றியடந்தது. மீண்டும் இவர்கள் எப்போது இணைவார்கள் என்று அனைவரும் வெயிட்டிங். இந்நிலையில் முருகதாஸ் தன் டுவிட்டர் பக்கத்தில் தீனா படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்களை தற்போது பகிர்ந்துள்ளார். இதன் மூலம் முருகதாஸ் அடுத்த அஜித் படத்திற்கான...
கிளாமர் ரோல்களில் பலசுற்றுகள் சொல்லி அடித்த நயன்தாரா இப்போது சவாலான வேடங்களுக்கு திரும்பியிருக்கிறார். ராஜா ராணியில் வலிப்பு வந்தவராக நடித்ததே ஒரு சோதனை முயற்சிதான். தனுஷ் தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கும் நானும் ரவுடிதான் படத்தில் நயன்தாராவுக்கு காது கேளாதவர் வேடம் என்கின்றது படயூனிட். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி ஹீரோ. ஹீரோயின் நயன்தாரா. சிம்பதி...
ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், எமி ஜாக்சன் நடித்து மிகப் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் படம் ஐ. இன்று அனைத்து சினிமா ரசிகர்களுக்கும் பெரிய எதிர்பார்ப்பாக இருப்பது ஐ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தான். அப்படிப்பட்ட சினிமா பிரியர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக வருகின்ற 14ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர்.
தமிழ் சினிமாவில் விஜய் போலவே மேனரிசங்களால் ரசிகர்களை கவர்ந்து வருபவர் சிவகார்த்திகேயன். ஆனால், இவர் நடிகர் மட்டுமின்றி இவருக்கு இருக்கும் திறமைகளை பற்றி நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. இந்நிலையில் சமீபத்தில் ஒரு குழந்தையின் எலும்பு தொடர்பான மருத்துவ சிகிச்சைக்கு விஜய் தன் மக்கள் இயக்கம் சார்பில் பண உதவி செய்தார். தற்போது சிவகார்த்திகேயனும்...
Loading posts...
All posts loaded
No more posts