- Saturday
- January 18th, 2025
உலகம் முழுவதும் உள்ள காதலர்களால் காதலர் தினம் நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. பலவிதமான காதலர் தின கொண்டாட்டங்களை நாம் பார்த்திருப்போம். ஆனால் மலையால நடிகர் மோகன்லால் சற்று வித்தியாசமாக காதலர் தினத்தை கொண்டாடியுள்ளார். அவர் நேற்று முன்தினம் குடும்பத்துடன் ஒரு ஆதரவற்றோர் இல்லத்திற்கு சென்று, அங்கு உள்ளவர்களுடன் நேரம் செலவழித்து கொண்டாடியுள்ளார். அதுபற்றி அவர் முகநூல்...
நடிகர், நடிகைகள் படத்தில் நடித்து பணம் சம்பாதிப்பதோடு மட்டும் இல்லாமல், தங்கள் மனதுக்குப் பிடித்த நல்ல காரியங்களுக்கு செலவு செய்து தங்கள் ஈடுபாட்டை தெரிவித்து வருகிறார்கள். அப்படி பல நல்ல விஷயங்களில் தன்னை ஈடுபடுத்தி வரும் நடிகர்களில் விஜய்யும் ஒருவர். கஷ்டப்பட்டு வரும் ரசிகர்களுக்கு தன்னால் முடிந்த உதவியை விஜய் செய்து வருகிறார். தற்போது சென்னையில்...
என்னை அறிந்தால் படத்தின் இரண்டாம் பாகத்துக்கான ஸ்கிரிப்ட் தயாராக இருக்கிறது என்று மீண்டும் கூறியுள்ளார் கௌதம். தோல்விகளால் துரத்தப்பட்டு தமிழ் சினிமாவின் விளிம்புக்கு சென்ற கௌதமை மீண்டும் மையத்தில் உட்கார வைத்துள்ளது, என்னை அறிந்தால். தன்னுடைய ஸ்கிரிப்டோ இயக்கமோ இதற்கு காரணமல்ல, அஜீத் என்ற நடிகரின் ஸ்டார் பவரே காரணம் என்பது அவருக்கும் நன்றாகவே தெரிந்துள்ளது....
ஆஸ்கார் நாயகன் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் குடும்பத்தில் ஏற்கெனவே ரெஹனா, ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் இசையமைப்பாளர்களாக உருவெடுத்துள்ளனர். தற்போது இவரது குடும்பத்தில் இருந்து மீண்டும் ஒரு இசைக்கலைஞன் உருவாகியுள்ளார். ரகுமானின் தங்கை மகனான இ.ஆர்.அசார் காஷிஃப் ‘கண்ணாலே’ என்ற மியூசிக் வீடியோ மூலம் இசையுலகில் தனது பயணத்தை தொடங்குகிறார். இளமை பொங்கும் இந்த காதல் பாடலை காஷிஃப் இசையமைக்க,...
டெல்லி அருகே உள்ள ஆக்ராவில் உலக அதிசயங்களில் ஒன்றாக போற்றப்படும் 17–ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட தாஜ்மகால் உள்ளது. இதை நாட்டின் நினைவுச்சின்னமாக மத்திய அரசின் தொல்லியல் துறை பாதுகாத்து வருகிறது. இந்த நிலையில் தாஜ் மகாலின் அருகே 500 மீட்டர் தூரத்தில் உள்ள அரங்கில் இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானின் இசை நிகழ்ச்சி நடத்த முடிவு...
தமிழ் சினிமாவில் தொட்டதெல்லாம் வெற்றியாக இன்று உச்சத்தில் இருக்கிறார் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் விரைவில் திரைக்கு வரும் படம் காக்கிசட்டை. ஆனால், தற்போது இவர் அடுத்து நடிக்கும் படமான ரஜினிமுருகன் படத்திற்கும் தற்போதே வியாபாரம் தொடங்கி விட்டது. இப்படத்தை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரிக்க, இதன் தமிழ் நாட்டு வெளியீட்டு உரிமையை ஸ்டுடியோ கிரீன் வாங்கியுள்ளதாக...
தமிழ் சினிமாவில் நகைச்சுவை மட்டுமின்றி அதில் கருத்துக்களையும் கூறி அனைவரையும் கவர்ந்தவர் விவேக். இவர் நீண்ட இடைவேளைக்கு பிறகு நடித்து, திரையில் வெற்றி நடைப்போடும் படம் என்னை அறிந்தால். இப்படத்தில் காமெடி குறைவு என்றாலும் இவர் வரும் காட்சிகள் அனைவராலும் ரசிக்கப்படுகிறது. இது குறித்து இவர் கூறுகையில் ‘இன்று சினிமாவை தியேட்டரில் வந்து பார்ப்பவர்கள் என்றால்...
கார்த்தி - சுராஜ் இணையும் புதிய படத்துக்காக திருப்பதி போய் மொட்டை போட்டுத் திரும்பியுள்ளார் நடிகர் விவேக். அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ‘என்னை அறிந்தால்' படத்தில் விவேக் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார். வழக்கமாக ஹீரோ போலீஸ் அதிகாரி என்றால், காமெடியனை கான்ஸ்டபிளாக்கி காமெடி செய்ய வைப்பார்கள். ஆனால் இந்தப் படத்தில் ஹீரோ அஜீத்த்துக்கு இணையான...
இளைய தளபதி முதன் முறையாக சிம்புதேவன் இயக்கத்தில் நடித்து வரும் படம் புலி. இப்படம் அரசர் காலத்து கதை என்பதால், தமிழ் உச்சரிப்பு மிக சுத்தமாக இருக்க வேண்டும் என்று இயக்குனர் எண்ணியுள்ளார். இதனால், ஸ்ருதி, ஸ்ரீதேவி, ஹன்சிகா ஆகியோர் மிகுந்த பயிற்சி எடுத்து வருகின்றனர். மேலும், விஜய்யும் முதன் முறையாக சுத்தமான தமிழில் பேசவிருக்கிறாராம்....
57 ஆவது கிராமி விருது வழங்கும் விழாவில், இந்தியாவை சேர்ந்த இருவர் இசையுலகின் கவுரவம் மிக்க இவ்விருதினை பெற்றனர். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இசையுலகின் உயரிய விருதான கிராமி விருது வழங்கும் விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திரையுலகம் மற்றும் பாப் இசை உலகை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் பலர் இவ்விழாவில் பங்கேற்றனர். இவ்விருதுக்கான...
அமீர் கான் நடிப்பில் வெளியான பிகே இந்திய சினிமா சரித்திரத்தில் மிக அதிகம் வசூல் செய்த படம் என்ற பெருமையை பெற்றது. ராஜ்குமார் ஹிரானி பிகேயை இயக்கியிருந்தார். வேற்றுக்கிரகவாசியான அமீர் கான், இந்தியாவிலுள்ள மத மூடநம்பிக்கைகளை கேள்வி கேட்பதாக பிகே உருவாக்கப்பட்டிருந்தது. எதிர்ப்பையும், வழக்கையும் சந்தித்த இந்தப் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை ஜெமினி புரொடக்ஷன்ஸ்...
ஹலோ பிரபா ஒயின்ஸ் ஆப் ஓனர் இருக்காரா? என்று வடிவேலு கேட்கும் காமெடி காட்சியை யாரும் இன்றும் மறந்திருக்க முடியாது. இந்த காட்சியில் மட்டுமில்லாமல் பல படங்களில் வடிவேலுவுடன் காமெடி காட்சிகளில் நடித்தவர் செல்லத்துரை. இவர் உடல் நிலை சரியில்லாமல் காலமானார். இவரின் வயது 74. சில நாட்களாகவே சிறுநீரக கோளாறு காரணமாக சென்னை அரசு...
மலையாளத்தில் முப்பதுக்கும் மேற்பட்ட படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் துளசிதாஸ் தமிழில் இயக்கும் படம் ‘இனி வரும் நாட்கள்’. எம்.ஜே.டி. புரொடக்ஷன் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் முழுக்க, முழுக்க பெண்கள் மட்டுமே நடித்திருக்கிறார்கள். ஒரு இடத்தில் கூட ஆண்கள் நடிக்கவில்லையாம். இப்படத்தில் இனியா, ஆர்த்தி, சுபிக்சா, ஈடன், அர்ச்சனா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். முக்கிய கதாபாத்திரத்தில்...
ஈரானிய சினிமாவை உலகளவில் பேச வைத்த படம் ‘சில்ட்ரன் ஆஃப் ஹெவன்’. இப்படத்தை மஜித் மஜிதி என்பவர் இயக்கியிருந்தார். இப்படம் 1997-ல் வெளிவந்து உலக ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. ஒரு ஜோடி ஷூவையும் இரண்டு சிறு குழந்தைகளையும் வைத்துக்கொண்டு உலக ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தார் இயக்குனர். உலகப் பட விழாக்களில் நூற்றுக்கணக்கான விருதுகளை...
என்னை அறிந்தால் திரைப்படத்திற்கு கிடைத்த வரவேற்பை பார்த்து படத்தில் முக்கிய கதாப்பாத்திரமாக நடித்துள்ள அருண் விஜய் தியேட்டரிலேயே கண்ணீர் விட்டு அழுதுள்ளார். கவுதம் மேனன் இயக்கத்தில், அஜித், திரிஷா, அனுஷ்கா, பார்வதி மேனன் உள்ளிட்டோர் நடித்த என்னை அறிந்தால் திரைப்படம் இன்று ரிலீஸ் ஆகியுள்ளது. இந்த திரைப்படத்தில் நடிகர் விஜயகுமாரின் மகன், அருண் விஜய் முக்கிய...
ரஜினியின் ‘எந்திரன்’ படம் 2010 அக்டோபரில் வெளிவந்தது. நாயகியாக ஐஸ்வர்யா ராய் நடித்து இருந்தார். ஷங்கர் இயக்கினார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்தார். இப்படம் உலகம் முழுவதும் வசூல் சாதனை நிகழ்த்தியது. தயாரிப்பாளர், விநியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்களுக்கு கணிசமான லாபத்தையும் சம்பாதித்து கொடுத்தது. இதன் 2–ம் பாகத்தை விரைவில் எடுப்பேன் என்று ஷங்கர் ஏற்கனவே அறிவித்து இருந்தார். அதற்கான...
விஜய்-அஜித் என இருவரின் படங்களுக்கு தான் எப்போதும் போட்டி இருக்கும். அந்த வகையில் சூர்யா தனக்கென்று ஒரு தனி ட்ராக் அமைத்து அதில் பயணிப்பவர். இந்நிலையில் சில வருடங்களுக்கும் முன் வேலாயுதம், 7ம் அறிவு ஆகிய படங்கள் ஒரே நாளில் வெளிவந்தது. இந்த இரண்டு படங்களுமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது. தற்போது மீண்டும் இவர்கள்...
பார்ஸ்ட் ஃபுட் உலகில் இரண்டரை மணிநேரப் படம் என்றாலே ரசிகர்கள் நொருங்குகிறார்கள். ஆனால் இப்போதுதான் கோடம்பாக்கத்தில் மூன்று மணி நேர ஜவ்வு மிட்டாய்களை அதிகமாக தயாரிக்கின்றனர். சென்ற வாரம் வெளியான இசை படமும் 3 மணி நேரம் ஓடுகிறது. சென்டிமெண்ட் காட்சிகள் அதிகம். இந்த அதிகபடி நேரமே படத்தை ரசிக்க முடியாமல் தடுக்கிறது. இதனை லேட்டாக...
எஸ்.ஜே.சூர்யா இயக்கி, இசையமைத்து வெளியே வந்துள்ள திரைப்படமான இசை, தமிழ் சினிமாவின் இரு முக்கிய இசையமைப்பாளர்களை பிம்பிப்பது போல எடுக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில், அவரே நடித்து, இசையமைத்துள்ள திரைப்படம் இசை. மூத்த இசையமைப்பாளர் ஒருவர், திடீரென விஸ்வரூபம் எடுத்த இசையமைப்பாளரை பழிவாங்குவதுதான் கதை. மூத்த இசையமைப்பாளர் வெற்றிச்செல்வன் கேரக்டரில் சத்யராஜும், இளம் இசையமைப்பாளர்,...
Loading posts...
All posts loaded
No more posts