திருட்டு விசிடி, நடிகைகளின் ஆபாசப் படங்கள் – விவாதிக்கிறது நடிகர் சங்க செயற்குழு

நடிகர் சங்க செயற்குழு இன்று கூடுகிறது. செயற்குழு கூட்டத்துக்கு நடிகர் சங்க தலைவர் சரத்குமார் தலைமை தாங்குகிறார். பொதுச் செயலாளர் ராதாரவி துணை தலைவர்கள் விஜயகுமார், காளை, பொருளாளர் வாகை சந்திரசேகர் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். இந்த கூட்டத்தில் தமிழ் சினிமாவுக்கு அச்சுறுத்தலாக உள்ள திருட்டு விசிடியை ஒழிப்பது குறித்தும், சமீபமாக நடிகைகளின் ஆபாசப் படங்கள்...

விஜய்யுடன் பாடப்போகும் ஸ்ருதி…?

நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஜய் தான் நடிக்கும் படங்களில் ஒரு பாடல் பாட ஆரம்பித்துள்ளார். துப்பாக்கியில் அவரது இரண்டாவது இன்னிங்ஸ் வெற்றிகரமாக தொடங்கியது. சிம்புதேவன் இயக்கும் புலியில் விஜய்யுடன் ஸ்ருதியும் நடிக்கிறார். இருவருமே சிறந்த பாடகர்கள். இருவரையும் வைத்து டூயட் பாடலை பாட வைக்க வேண்டும் என்பது சிம்புதேவன் மற்றும் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்தின்...
Ad Widget

தனுஷுக்கு போட்டியாக டண்டனக்கா பாடும் அனிருத்

தனுஷ் நடிப்பில் வெளிவந்த அனேகன் படத்தில் இடம்பெற்ற ‘டங்காமாரி ஊதாரி’ என்ற பாடலை எழுதியவர் ராகேஷ். இவர் எழுதிய அந்த பாடலை மரணகானா விஜி, தனுஷ், நவீன் மாதவன் ஆகியோர் இணைந்து பாடினர். இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த பாடலுக்கு பிறகு ராகேஷுக்கு நிறைய பாடல்கள் எழுதும் வாய்ப்புகள் வந்தவண்ணம்...

காஞ்சனா 2 ஆக மாறியது முனி 3

லாரன்ஸ் நாயகனாக நடித்து இயக்கிய முனி படம் பெரும் வரவேற்பை பெற்றது. இதையடுத்து அதன் இரண்டாம் பாகத்தை காஞ்சனா என்ற பெயரில் எடுத்தார். அதுவும் வெற்றிகரமாக ஓடியது. தற்போது இப்படங்களின் தொடர்ச்சியாக மூன்றாம் பாகத்தை எடுக்கிறார். இதற்கு முனி 3 கங்கா என பெயரிடப்பட்டது. ஆனால் தற்போது இப்படத்தின் தலைப்பை காஞ்சனா-2 ஆக மாற்றி விட்டதாக...

சிம்புவுக்கு பரபரப்பு கொடுக்க வரும் மார்ச் மாதம்

சிம்பு நடித்த படங்கள் கடந்த இரண்டு வருடங்களாக வெளிவராமல் உள்ளன. ‘வாலு’, ‘இது நம்ம ஆளு’ ஆகிய படங்கள் முடிவடைந்தும் ரிலீசாகமல் உள்ளது. மேலும், கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கும் புதிய படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில், மார்ச் மாதத்தில் இப்படத்தின் அனைத்து வேலைகளையும் பரபரப்புடன் முடிக்கவுள்ளதாக சிம்பு கூறியுள்ளார். இதுகுறித்து சிம்பு தனது டுவிட்டர்...

மூன்று தோற்றங்களில் ஜீவா நடிக்கும் புதிய படம்

யான் படத்துக்குப் பிறகு எந்தப் படத்திலும் கமிட்டாகாமல் இருந்த ஜீவா, இயக்குனர் ராம்நாத் இயக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்தப் படத்தில் ஜீவா முன்றுவித கெட்டப்புகளில் தோன்றுகிறார். சமுத்திரக்கனி போலீஸ் அதிகாரியாக முக்கிய வேடம் ஏற்றுள்ளார். சக்தி ஒளிப்பதிவு செய்ய, விடி விஜயன் எடிட்டிங்கை கவனிக்கிறார். கலை இயக்கம் சீனு. இந்தப் படத்தில் ஹீரோயினாக நடிக்க...

தனுஷ், சமந்தா, எமி ஜாக்சன் படம்…

வேலையில்லா பட்டதாரி டீம் அப்படியே இன்னொரு படத்தை எடுக்கிறது. தயாரிப்பும், நடிப்பும் தனுஷ், இயக்கம் வேல்ராஜ், இசை அனிருத் என அதே டீம். நாயகி மட்டும் அமலா பாலுக்குப் பதில் சமந்தா, எமி ஜாக்சன் என இரட்டை வெடிகள். இந்தப் புதிய படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. அதற்குள் கம்போஸிங்கை தொடங்கிவிட்டார் அனிருத். தனுஷ் –...

காக்கி சட்டை கலவர சட்டையாகிறதா?

சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் காக்கி சட்டை படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. ஆனால் படம் வெளியாகும் முன்னர் படத்தின் தயாரிப்பாளர் தனுஷுக்கும், சிவகார்த்திகேயனுக்கும் சண்டை என்ற செய்தி ஊடகங்களில் பரவி வருகிறது. சமீபத்தில் கூட நடந்த நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் வந்ததும், தனுஷ் வெளியேறி இருக்கிறார் என்ற செய்தி வந்தது. அச்செய்திகளை குறித்து சிவகார்த்திகேயனும் எங்களுக்குள் எந்த...

பிரபல இயக்குநர் ஆர்சி சக்தி மரணம்

ரஜினி, கமல் போன்ற முக்கிய நடிகர்களை இயக்கிய பிரபல இயக்குநர் ஆர் சி சக்தி நேற்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 76. ரஜினிகாந்தை வைத்து தர்மயுத்தம், கமல் ஹாஸனை வைத்து உணர்ச்சிகள், லட்சுமி நடித்த தவம், வரம், ரகுவரன் நடித்த கூட்டுப் புழுக்கள், விஜயகாந்த் நடித்த மனக்கணக்கு உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியவர்...

ஆஸ்கர் விருது: சிறந்த நடிகராக எடி ரெட்மேன் ; சிறந்த நடிகையாக ஜூலியானே மூரே தேர்வு

உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருந்த ஆஸ்கர் விருதுகள் அறிவிக்கப்பட்டன. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில், 87வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. ஹாலிவுட் திரையுலகில், மிக உயரிய விருதான ஆஸ்கர் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சிக்காக, பல்வேறு நாடுகளிலிருந்து திரைநட்சத்திரங்கள் அங்கு குழுமியிருந்தனர். தி கிராண்ட் புத்தா பெஸ்ட் ஓட்டல் என்ற திரைப்படம்,...

சிவா படம், அஜீத்துக்கு இரண்டு வேடங்கள்?

சிவா இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படத்தில் அவருக்கு இரு வேடங்கள் என தகவல் வெளியாகி உள்ளது. வீரம் படம் அஜீத்தின் நகர்ப்புற படங்களிலிருந்து வித்தியாசமாக அமைந்தது. அஜீத்தால் இனி கிராமத்து கதையில் நடிக்க முடியுமா? அப்படியே நடித்தாலும் வெற்றி பெற முடியுமா? என்ற கேள்விகளுக்கு வீரம் நேர்மறையான பதிலாக அமைந்தது. அந்த மகிழ்ச்சியில், அப்போதே மீண்டும்...

மீண்டும் சூப்பர்ஸ்டாருடன் ஜோடி சேரும் ஐஸ்வர்யாராய்?

இந்திய சினிமாவையே புரட்டி போட்ட படம் எந்திரன். 2010ல் வெளியான இப்படத்தின் வசூல் இந்தியளவில் தற்போதும் டாப் 10ல் தான் இருக்கிறது. ரஜினி-ஐஸ்வர்யா என உச்ச நட்சத்திரங்கள் நடித்திருந்த இப்படத்தை பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கியிருந்தார். இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க ஷங்கர் தீவிரமாக உள்ளார். இதிலும் ரஜினியை வைத்து இயக்க திட்டமிட்டுள்ளார். ஆனால் ஐஸ்வர்யா...

தனுஷ் எனக்கு சம்பளமே தரவில்லை! சிவகார்த்திகேயன் ஆதங்கம்

தமிழ் சினிமாவில் நடித்த சில படங்களிலேயே உச்சத்தை தொட்டவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் விரைவில் காக்கிசட்டை படம் வரவிருக்கிறது. இதற்காக தமிழகத்தின் முன்னணி நாளிதழ் ஒன்றில் பேட்டியளித்த இவரிடம், நீங்கள் சம்பள விஷயத்தில் மிகவும் கறாராக இருக்கிறீர்கள் என்று ஒரு தகவல் வெளியாகிறதே? என்று கேட்டுள்ளனர். சிவகார்த்திகேயன் ” ‘காக்கிச்சட்டை’ படத்துக்கு என்ன சம்பளம் என்றே...

விஜய், தனுஷ் நேரடி மோதல்?

இளைய தளபதி விஜய் வளரும் கலைஞர்களுக்கு என்று மரியாதை கொடுப்பவர். அந்த வகையில் சில விருது விழாக்களில் தனக்கு பிடித்திருந்தால், உடனே மேடையிலேயே பாராட்டி விடுவார். இந்நிலையில் கடந்த வருடம் வெளிவந்த கத்தி திரைப்படம் தெலுங்கில் அடுத்த வாரம் ரிலிஸாகவுள்ளது. அதேபோல் அனேகன் படமும் இதே நாளில் தான் ரிலிஸ் செய்யவிருக்கின்றனர். ஆனால், ஒரே நேரத்தில்...

உத்தம வில்லனின் வில்லன்களுக்கு மரியாதை செய்யும் கமல்

உத்தமவில்லன் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பழம்பெரும் வில்லன் நடிகர்களுக்கு மரியாதை செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் மற்றும் கமலின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனம் இணைந்து இதனை தயாரித்துள்ளனர். இந்த படத்தின் படபிடிப்புகள் அனைத்தும் முடிந்து, தற்போது போஸ்ட் புரொடக்க்ஷன் வேலைகள் நடைபெற்று வருகிறதாம். இந்நிலையில் உத்தமவில்லன் படத்தின் ஆடியோ வெளியீட்டு...

விக்ரமிற்கு ஜோடியான நயன்தாரா

தமிழ் சினிமாவில் நீண்ட இடைவேளைக்கு பிறகு நடிக்க வந்து முன்னணி நடிகையாகி விட்டார் நயன்தாரா. இவர் தற்போது மாஸ், மாயா, நண்பேண்டா, இது நம்ம ஆளு என அரை டஜன் படங்களில் நடித்து வருகிறார்.இப்படங்கள் முடிந்த கையோடு, அடுத்து விக்ரமிற்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்கவுள்ளாராம். விக்ரம் தற்போது 10 எண்றதுக்குள்ள படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்திற்கு...

விஜய் பிறந்த நாளில் வெளியாகும் புலி?

கத்தி’ படத்திற்கு பிறகு விஜய் நடித்து வரும் படம் ‘புலி’. இப்படத்தை சிம்புதேவன் இயக்கி வருகிறார். விஜய்க்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன், ஹன்சிகா நடித்து வருகிறார்கள். ஸ்ரீதேவி கபூர், நான் ஈ சுதீப் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்து வருகிறார். ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் இப்படத்தில் விஜய் 3...

கார்த்திக் சுப்பாராஜின் இறைவியில் நடிக்கும் விஜய் சேதுபதி, எஸ்.ஜே.சூர்யா

ஜிகிர்தண்டாவுக்குப் பிறகு கார்த்திக் சுப்பாராஜ் இயக்கும் படத்தை அவரது முதல் படம் பீட்சாவை தயாரித்த திருக்குமரன் என்டர்டெய்ன்மெண்ட் சி.வி.குமாரே தயாரிக்கிறார். இறைவி என பெயர் வைக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் விஜய் சேதுபதி, எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹா ஆகியோர் நடிக்கின்றனர். மேலும் ஒரு நடிகர் இவர்களுடன் இணைந்துகொள்ளவிருக்கிறார். அவர் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை....

ஜெயம் ரவியுடன் மீண்டும் இணைந்த விவேக்

ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் ‘அப்பாடக்கர்’. இப்படத்தை சுராஜ் இயக்குகிறார். திரிஷா, அஞ்சலி ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். இப்போது இந்த கூட்டணியில் காமெடி நடிகர் விவேக்கும் இணைந்துள்ளார். இதை ஜெயம் ரவி தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, ‘எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி’ படத்திற்கு பிறகு ‘அப்பாடக்கர்’...

மனோரமா அபாய கட்டத்தில் இருப்பதாக சமூக வலைதளங்களில் வதந்தி

பழம்பெரும் நடிகை மனோரமா உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகிறது. ஆனால், அது வெறும் வதந்தி என அவரது குடும்பத்தார் தெரிவித்துள்ளனர். தமிழ் திரைப்பட ரசிகர்களால் ‘ஆச்சி' என அன்போடு அழைக்கப்படும் நடிகை மனோரமா, இந்தியத் திரைப்படத்துறையில் மாபெரும் சாதனைப் படைத்த புகழ்பெற்ற நடிகை ஆவார். தமிழ்த் திரையுலகம் தந்த...
Loading posts...

All posts loaded

No more posts