கபாலி படத்தில் ரஜினிக்கு சர்வதேச போலீஸ் வேடமா?

ரஜினியின் ‘கபாலி’ படப்பிடிப்பு வரும் செப்டம்பர் 17-ம் தேதி தொடங்க இருப்பதால் அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பரபரப்பாக நடந்து வருகின்றன. இந்தப் படத்தில் ரஜினியின் கதாபாத்திரம் ஒரு நிழல் உலக தாதா என இதுவரை நம்பப்பட்டு வந்தது. இந்நிலையில், தற்போது வெளியாகியுள்ள இப்படத்தின் புகைப்படம் ஒன்றில் ரஜினி மலேசிய போலீஸ் அதிகாரி தோற்றத்தில் உள்ளார். இதனால்,...

படத்தில் நடிப்பதற்காக குண்டு பெண் ஆனது எப்படி? – அனுஷ்கா

ஆர்யாவுடன் நடிக்கும் ‘இஞ்சி இடுப்பழகி’ படத்துக்காக அனுஷ்கா தனது உடல் எடையை அதிகமாக்கி குண்டு பெண்ணாக மாறினார். படத்துக்காக பிரபல ஹீரோக்கள் தங்கள் உடல் எடையை அதிகமாக்கி கொள்வார்கள். பின்னர் எடையை குறைப்பார்கள். கதாநாயகிகள் அனைவரும் உடலை ஒல்லியாக ஒரே அளவில் வைத்துக் கொள்ளத்தான் விரும்புவார்கள். ஆனால் அனுஷ்கா இதற்கு விதிவிலக்கு ‘இஞ்சி இடுப்பழகி’ படத்தின்...
Ad Widget

குறுந்திரைப்பட போட்டிக்கு ஆக்கங்கள் கோரல்

வடமாகாண சுகாதார சுதேச மருத்துவ சமூக சேவைகள் புனர்வாழ்வு நன்னடத்தை சிறுவர் பராமரிப்புச் சேவைகள் மற்றும் மகளிர் விவகார அமைச்சினால் சிறுவர் மற்றும் பெண்கள் எதிர்நோக்கும் சமூகப் பிரச்சினைகள் தொடர்பில் விழிப்புணர்வை ஊட்டும் குறுந்திரைப்படங்களைத் தயாரிப்பது தொடர்பான போட்டிக்கான ஆக்கங்கள் கோரப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் சி.திருவாகரன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும்...

கமலின் புது முடிவு

இனி ஒரு படத்தின் ஷூட்டிங்கை 100 நாட்கள், 200 நாட்கள் என இழுக்கப் போவதில்லை. அதிகபட்சம் நாற்பது நாட்களில் முடிக்கப் போகிறேன், என்று கமல் ஹாஸன் தெரிவித்துள்ளார். கமல் ஹாஸன் படங்கள் முன்பெல்லாம் நூறுக்கும் அதிகமான நாட்களுக்கு படப்பிடிப்பு நடப்பது வழக்கம். ஆனால் அவரது சமீபத்திய படமான பாபநாசம் வெறும் 40 நாட்களில் எடுக்கப்பட்டு, நல்ல...

ஹாலி வுட் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ள ஈழத் தமிழ் இளைஞர்

லண்டனைச் சேர்ந்த ஈழத் தமிழ் இளைஞர் ஒருவர் அமெரிக்க ஹாலி வுட் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். புது ஹீரோவாக நடிக்க இவர் தற்போது ஒப்பந்தமாகியுள்ளார். சிவா கனேஸ்வரன் என்னும் இந்த ஈழத் தமிழ் இளைஞர் ஏற்பனவே லண்டனில் மிகவும் பிரபல்யமானவர். ஆரம்ப காலங்களில் அவர் மாடலாக இருந்தார். பின்னர் அவர் "வாண்டட்" என்னும் இசைக் குழுவில்...

இசையமைப்பாளர் எம்.எஸ்.வி காலமானார்

பழம்பெரும் தமிழ் திரைப்பட இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் காலமானார். உடல் நலக் குறைவால் சென்னையிலுள்ள தனியார் மருத்துமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர், அதிகாலை 4.15- அளவில் இவ் உலகை விட்டு நீங்கினார். அவருக்கு வயது 84. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட 1,200 படங்களுக்கு இசையமைத்துள்ளார். ராமமூர்த்தியுடன் சேர்ந்து 700 படங்களுக்கும், தனியாக 500...

SPBக்கு ஹரிவராசனம் விருது

ஐயப்பன் குறித்து யேசுதாஸ் பல பக்திப் பாடல்கள் பாடியுள்ளார். அதில் ஒரு பாடல், ஹரிவராசன் என ஆரம்பிக்கும். ஹரிவராசனம் பெயரில் விருதும் வழங்கப்படுகிறது. இந்திய திரையுலகில் பல்லாயிரக்கணக்கான பாடல்கள் பாடி, இந்தியாவில் மட்டுமின்றி உலக அளவில் சாதனையாளராக திகழும் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு, சபரிமலை ஐயப்பனின் பெருமையையும், புகழையும் விளக்கும் பல பாடல்களை பாடி மதச்சார்பின்மை மற்றும் சர்வதேச...

செய்த தவறுக்காக மன்னிப்பு கேட்ட கமல்…

கமல் நடிப்பில் தற்போது ரிலீசுக்கு தயாராக இருக்கும் படம் ‘பாபநாசம்’. மலையாளத்தில் வெற்றி பெற்ற ‘திரிஷ்யம்’ படத்தின் ரீமேக்தான் ‘பாபநாசம்’. இப்படத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு கௌதமி நாயகியாக நடித்துள்ளார். மேலும், நிவேதா தாமஸ், எஸ்தர், கலாபவன் மணி உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். மலையாள படத்தை இயக்கிய ஜீது ஜோசப் இப்படத்தையும் இயக்கியுள்ளார். இந்நிலையில், இப்படத்தில் கமல்,...

ரஜினியுடன் இணையும் பிரகாஷ்ராஜ்!

ஐ லவ் யூ செல்லம் என்ற வார்த்தையை தமிழர்களின் வாழ்க்கையில் இரண்டறக் கலக்கச் செய்தவர் நடிகர் பிரகாஷ்ராஜ். கில்லி படத்தின் மாபெரும் வெற்றிக்கு முக்கியக் காரணமான பிரகாஷ் ராஜை தற்போது தமிழில் அதிக படங்களில் பார்க்க முடியவில்லை. தமிழ் சினிமாவில் சிறிது காலம் காணாமல் போயிருந்த பிரகாஷ் மீண்டும் கமலின் தூங்கா வனம் படத்தின் மூலம்...

பக்திப்பழமாய் காட்சி தரும் சிம்பு…

சிம்பு நடித்துள்ள கான் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நேற்று வெளியிடப்பட்டது. இந்த போஸ்டரில் விபூதி பட்டை போட்டு நடுவே குங்குமம் வைத்து பக்திப்பழமாய் காட்சித்தருகிறார் சிம்பு. இந்த போஸ்டர் டிவிட்டரில் டிரெண்ட் ஆனதோடு நம்பர் 1 இடத்தையும் பிடித்துள்ளது. சிம்பு தனது படங்களில் எப்போதுமே ஸ்டைலிஸ் ஆகவே காட்சி தருவார். ஆனால் செல்வராகவன் இயக்கத்தில் கான்...

திரிஷாவுக்கு மேக்கப் போட்டுவிட்ட கமல்!

நடிகை திரிஷா, இன்று தனது டிவிட்டரில் ஒரு சூப்பர் படத்தைப் போட்டுள்ளார். எத்தனை பேருக்கு இந்த “பாக்கியம்” கிடைத்ததோ நமக்குத் தெரியாது.. ஆனால் திரிஷா தனக்குக் கிடைத்த பாக்கியத்தை ஊரைக் கூட்டி உலகைக் கூட்டி அறிவித்துள்ளார் இந்தப் படத்தின் மூலம். அதாவது கமல்ஹாசன், திரிஷாவுக்கு மேக்கப் போடும் படம்தான அது. ஒரு தொழில்முறைக் கலைஞர் போல...

‘போர்க்களத்தில் ஒரு பூ’வுக்கு தடை

தமிழீழ விடுதலைப் புலிகளின் தொலைக்காட்சி அறிவிப்பாளரான இசைப்பிரியாவின் வாழ்க்கை வரலாற்றை சித்திரிக்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ள 'போர்க்களத்தில் ஒரு பூ' என்ற திரைப்படத்துக்கு இந்திய மத்திய திரைப்படக்குழு, சான்றிதழ் வழங்க மறுத்துள்ளது. 2009ஆம் ஆண்டு நடந்த இறுதிக்கட்ட மோதல்களின் போது இலங்கை இராணுவத்தினரால் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் இசைப்பிரியாவை மையப்படுத்தி, இயக்குநர் கே.கணேசன் என்பவரால் இந்த திரைப்படம் எடுக்கப்பட்டது....

கேன்ஸின் உயர்ந்த விருதை வென்ற முதல் ஈழத் தமிழர் படம் “தீபன்”

கேன்ஸ் சர்வதேசத் திரைப்பட விழாவில் உயரிய விருதான தங்கப் பனை விருதை வென்றுள்ளது ஈழத் தமிழர்களின் அவல வாழ்வை எடுத்துக் கூறும் தீபன் திரைப்படம்.ஈழத் தமிழர்களின் வாழ்க்கையை முறையாக பதிவு செய்த முதல் ஐரோப்பியத் திரைப்படம் இது. இயக்கியிருப்பவர் ஈழத் தமிழர் அல்ல மாறாக பிரான்சின் பிரபல திரைப்பட இயக்குனர் ஜக்குவாஸ் ஓடியேட். ஈழத்தமிழரின் அவல...

இந்த செல்ஃபி மட்டும் அப்படி என்ன ஸ்பெஷல்? சொல்கிறார் ஹன்சிகா

தென்னிந்திய சினிமாவில் தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஹன்சிகா. இவர் தற்போது இளைய தளபதிக்கு ஜோடியாக புலி படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தான் முடிந்தது. ஹன்சிகா இப்படத்திற்காக மிகவும் சிரமப்பட்டு நடித்துள்ளாராம். இப்படத்தில் இளவரசியாக வரும் ஹன்சிகா, சண்டைக்காட்சிகளில் கூட நடித்துள்ளதாக கூறப்படுகின்றது. ’புலி படம் தனக்கு மிகவும்...

விஜய் படத்தில் நடிக்கிறார் பிரபுதேவா

பாலிவுட்டில் கொடி கட்டி பறக்கும் இயக்குனர்களில் பிரபுதேவாவும் ஒருவர். இவர் நடிப்பில் தமிழில் படங்கள் வந்து பல வருடங்கள் ஆகிவிட்டது. தங்கர் பச்சன் இயக்கத்தில் பிரபுதேவா நடித்த ’களவாடிய பொழுதுகள்’ படமும் இன்னும் ரிலிஸாகாமல் உள்ளது. தற்போது மீண்டும் பிரபுதேவாவிற்கு நடிக்கும் ஆசை வந்துள்ளது. ஏற்கனவே திரு இயக்கத்தில் ஜெய்க்கு அண்ணனாக நடிக்க இவருக்கு வாய்ப்பு...

இனி காமெடி வேடங்களில் நடிக்கத் தயார்: கதவை திறந்துவிட்ட வடிவேலு

வடிவேலு கதாநாயகனாக நடித்துள்ள ‘எலி’ படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் நடந்தது. இதில் வடிவேலு, இயக்குனர் யுவராஜ் தயாளன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர். இதில் நடிகர் வடிவேலு பேசும்போது, இந்த படம் கண்டிப்பாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும் விதமாக இருக்கும். முழுக்க முழுக்க நகைச்சுவையாக...

செல்வராகவன்-சிம்பு இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது

‘காதல் கொண்டேன்’, ‘7ஜி ரெயின்போ காலனி’, ‘புதுப்பேட்டை’ உட்பட பல வெற்றிப்படங்களைத் தந்தவர் இயக்குனர் செல்வராகவன். நீண்ட நாள் இடைவேளைக்குப் பின், செல்வராகவன் சிம்புவை வைத்து படம் இயக்கவுள்ளார் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நேற்று துவங்கியது. மேலும் இப்படத்தின் படப்பிடிப்பை சென்னை புறநகர், ஹைதராபாத் மற்றும் வெளிநாடுகளிலும் படமாக்கத்திட்டமிட்டுள்ளனர். இப்படத்தை குளோ...

கமலின் விக்ரம் படம் ரீமேக் ஆகிறது: சூர்யா நடிக்கிறார்

கமலின் நடிப்பில் கடந்த 1986-ம் ஆண்டு வெளிவந்த படம் ‘விக்ரம்’. இதில், கமலுடன் சத்யராஜ், டிம்பிள் கபாடியா, லிசி ஆகியோர் நடித்து இருந்தனர். ராஜசேகர் இயக்கியிருந்தார். ‘விக்ரம் விக்ரம்’, ‘வனிதா மணி’, ‘என் ஜோடி மஞ்சக்குருவி’, ‘மீண்டும் மீண்டும் வா’ போன்ற இனிய பாடல்கள் இப்படத்தில் இடம் பெற்று இருந்தன. இப்படம் தமிழகம் முழுவதும் வெற்றிகரமாக...

நேபாள பூகம்பத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரண பொருட்களை வழங்கிய விஜய்

நடிகர் விஜய் சினிமாவில் மட்டும் ஹீரோவாக இல்லாமல் நிஜ வாழ்க்கையிலும் பலருக்கு உதவிகள் செய்து ஹீரோவாக மக்கள் மனதில் பதிந்துள்ளார். தனது விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஏழை குழந்தைகளின் படிப்பு செலவு, மாணவ, மாணவிகளுக்கு இலவச புத்தகங்கள், இலவச கம்யூட்டர் பயிற்சி மையங்கள் என பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். இந்நிலையில், விஜய், கடந்த...

சைவம் படத்தையும் தமிழ் சினிமாவையும் திட்டி தீர்த்த 8 வயது சிறுமி

தமிழ் படங்களுக்கு தற்போது உலகம் முழுவதும் பல இடங்களில் வரவேற்பு உள்ளது. அந்த வகையில் இந்த வருடம் வந்த பல படங்கள் அமெரிக்காவில் வசூல் சாதனை படைத்துள்ளது. இந்நிலையில் அமெரிக்காவில் 8 வயது ஆகும் ஒரு சிறுமி சைவம் படக்குழுவினர்களுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். இதில் ‘நான் தமிழ் படங்களே பார்த்தது இல்லை, ஆனால், உத்ரா...
Loading posts...

All posts loaded

No more posts