- Sunday
- January 19th, 2025
பழம்பெரும் நடிகை மனோரமா உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 78. ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர் மனோரமா. தமிழ்த் திரையுலகினராலும், தமிழ்த் திரைப்பட ரசிகர்களாலும் 'ஆச்சி' என அன்போடு அழைக்கப்பட்டார். தென்னிந்தியாவின் ஐந்து முதலமைச்சர்களுடன் நடித்த பெருமை கொண்டவர். அண்ணா மற்றும் கருணாநிதி இருவரும் நாடக மேடைகளில் மனோரமாவுடன் நடித்திருக்கிறார்கள். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா மற்றும்...
பாலிவுட் கனவு நாயகி ஐஸ்வர்யாராய் 5 ஆண்டு இடைவெளிக்கு பிறகு நடித்த ‘ஜாஸ்பா’ திரைப்படம் நேற்று ரிலீஸ் ஆனது. இந்த இடைவெளி குறித்து ஐஸ்வர்யாராயிடம் கேட்ட போது…. கடந்த 5 ஆண்டுகளாக படங்களில் நடிக்கவில்லை என்றாலும், இடைப்பட்ட காலத்தில் விளம்பரபடம், திரை உலகம் தொடர்பான பொது நிகழ்ச்சிகள் ஆகியவற்றில் பங்கு பெற்றேன். நான் ஒரு போதும்...
ஆண்டவன் என்பதைவிட என்னை பகுத்தறிவு பகலவன் என்று அழைப்பது நன்றாக இருக்கிறது என்று பட தூங்காவனம்’ விழாவில் கமல்ஹாசன் கூறினார். கமல்ஹாசன் நடித்துள்ள புதிய படம் ‘தூங்காவனம்’. இதில் கதாநாயகியாக திரிஷா நடித்து இருக்கிறார். பிரகாஷ்ராஜ், கிஷோர், சம்பத் போன்றோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள். ராஜேஷ் எம்.செல்வா டைரக்டு செய்துள்ளார். இந்த படத்தின் பாடல் மற்றும்...
“விஷாலின் சூழ்ச்சி வலையில் சில நண்பர்கள் சிக்கி இருக்கிறார்கள். நடிகர் சங்கத்தின் ஒற்றுமையை உடைப்பதுதான் விஷாலின் நோக்கம்” என்று சிம்பு ஆவேசமாக பேசினார். தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு வருகிற 18-ந் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில் சரத்குமார் தலைமையில் ஒரு அணியும், விஷால் தலைமையில் இன்னொரு அணியும் போட்டியிடுகிறது. சரத்குமார் அணியில் துணைத்தலைவர் பதவிக்கு...
தமிழ் ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகியாக இருப்பவர் ஹன்சிகா. அவருக்கு மிகவும் பிடித்தமானது என்ன? மகிழ்ச்சி அளிப்பது எது என்பது குறித்து சொல்கிறார்.. திரை உலகில் காலடி வைத்த பிறகு அதில் அதிக கவனம் செலுத்தி வருகிறேன். எனக்கு பொருத்தமான வேடம் கிடைத்தால் ‘ஈகோ’ பார்க்காமல் நடிப்பேன். ‘அரண்மனை–2’ படத்தில் திரிஷாவுடன் நடிப்பது புதிய அனுபவம்....
சிம்புதேவன் இயக்கத்தில் விஜய், ஸ்ருதிஹாசன், ஹன்சிகா, ஸ்ரீதேவி, சுதீப் உள்ளிட்ட பலர் நடித்து வெளியாகி இருக்கும் படம் ‘புலி’. தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கும் இப்படத்தை எஸ்.கே.டி.பிலிம்ஸ் சார்பில் பி.டி.செல்வகுமார், ஷிபு தமீன்ஸ் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இப்படம் கடந்த அக்டோபர் 1-ந் தேதி வெளியானது. இப்படம் வெளியான அன்று விஜய்யின் ரசிகர்களான சவுந்திர ராஜன் மற்றும்...
நடிகர் விஜய், நடிகைகள் நயன்தாரா, சமந்தா உள்ளிட்ட 10 பேரின் வீடுகளில் நடைபெற்ற வருமான வரிச் சோதனையில் கணக்கில் காட்டாத ரூ. 100 கோடி சொத்துகள் சிக்கியது தெரிய வந்துள்ளது. மேலும், அவர்களது வீட்டில் இருந்த கணக்கில் வராத ரூ. 2 கோடி மதிப்புள்ள தங்க நகை, ரூ.2 கோடி ரொக்கம் ஆகியவற்றை வருமான வரித்...
ஜெனீவாவில் நேற்று நடைபெற்ற ஐ.நா. மனித உரிமைகள் ஆணைய கூட்டத்தில் "போர்க்களத்தில் ஒரு பூ" என்ற தமிழ்ப்படம் திரையிடப்பட்டது. விடுதலைப்புலிகள் இயக்கத்தின் ஊடக பிரிவைச் சேர்ந்த இசைப்பிரியா என்ற இளம்பெண், இறுதிக்கட்ட போரின் போது இலங்கை ராணுவத்தால் பிடித்துச் செல்லப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டார். இலங்கையில் 2009 ஆம் ஆண்டு நடந்த இறுதிக்கட்டப் போரில் தமிழீழ பத்திரிகையாளர்...
இன்றைய தினம் நடிகர் விஜய் இன் புலி திரைப்படம் உலகெங்கும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அந்த வகையில் யாழ்ப்பாணத்திலும் குறித்த திரைப்படம் ராஜா, மெஜெஸ்டிக் கொம்பிளக்ஸ் தியேட்டர்களில் இன்று காலை வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. திரைப்படத்தை பார்ப்பதற்கு அதிகாலை முதலே அதிகளவான ரசிகர்கள் திரையரங்குகள் முன்பு குழுமி இருந்தனர். ஆனாலும் குறித்த நேரத்துக்கு...
அண்மைக்காலமாக வௌியாகி வரும் தமிழ் திரைப்படங்கள் சிறுவர்களை இலக்கு வைக்கும் விதம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வறிக்கையொன்றும், 'நிதர்சனம்' பத்திரிகை வௌியீடும் மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையத்தினால் (ADIC) நேற்று (30) வௌியிடப்பட்டது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (30) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே இவ் இரண்டு வௌியீடுகளும் நடைபெற்றன. இன்று (01) இடம்பெறவுள்ள...
விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள பேண்டசி திரைப்படம் ‘புலி’. சிம்புதேவன் இயக்கியுள்ள இப்படத்தில் ஸ்ரீதேவி, ஸ்ருதிஹாசன், ஹன்சிகா மொத்வானி, பிரபு, சுதீப் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள இப்படத்தை எஸ்.கே.டி.ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் இன்று அக்டோபர் 1-ந் தேதி வெளியாவதாக இருந்தது. இதையொட்டி, விஜய் ரசிகர்கள்...
கே.எஸ்.ரவிக்குமார் தற்போது கன்னட நடிகர் சுதீப்பை வைத்து ‘முடிஞ்சா இவன புடி’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நித்யாமேனன் நடித்து வருகிறார். சுதீப் கதாநாயகனாக நடிக்கும் முதல் நேரடி தமிழ் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் சுதீப்புக்கு வில்லனாக முகேஷ் திவாரி, சரேத் லோஹித்சுவா ஆகியோர் நடிக்கின்றனர். மேலும், நாசர்,...
சிம்புதேவன் இயக்க்ததில் விஜய் நடித்துள்ள ‘புலி’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார். விஜய்யுடன் சேர்ந்து நடித்த அனுபவம் குறித்து ஸ்ருதிஹாசன் கூறும்போது, விஜய் எவ்வளவு பெரிய நடிகர். அவருக்கு பின்னால் எவ்வளவு ரசிகர் கூட்டம் இருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும். அவருடன் நடித்தது மிகவும் நல்ல அனுபவம். விஜய் மிகப்பெரிய நடிகர் என்றாலும் அதை...
பிரபல தெலுங்கு நடிகர் நாகர்ஜூனாவின் இளைய மகன் அகில். இவர் தற்போது, ‘அகில்’ என்ற தெலுங்கு படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார். இந்த படம் தமிழிலும் டப் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது. தமிழ் பதிப்பின் வெளியீட்டு உரிமையை பிரபல தயாரிப்பாளர் சி.கல்யாண் வாங்கியுள்ளார். இந்நிலையில், தெலுங்குக்கும், தமிழுக்கும் அறிமுகமாகும் அகிலை, சூப்பர் ஸ்டார் ரஜினி அறிமுகப்படுத்தி வைக்கப்...
வல்லிபுர ஆழ்வார் ஆலய தேர்த்திருவிழாவின் போது 16 பவுண் நகைகள் திருடப்பட்டுள்ளமை தொடர்பில் தமக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். வல்லிபுர ஆழ்வார் ஆலய தேர்திருவிழா சனிக்கிழமை(26) இடம்பெற்றது. இதன்போது பெண்கள் அணிந்திருந்த 7 பவுண், 5 பவுண் தாலிக் கொடிகள் மற்றும் இரண்டு சிறுமிகள் அணிந்திருந்த இரண்டு பவுன் சங்கிலிகள் திருடப்பட்டுள்ளதாக முறைப்பாடு...
கன்னட படங்களில் பிசியாக நடித்து வந்த கிஷோர் தமிழில் ‘ஜெயங்கொண்டான்’ படத்தின் மூலம் வில்லனாக அறிமுகமானார். இப்படத்தில் இவரின் நடிப்பு வரவேற்பு பெறவே, இவருக்கு அடுத்தடுத்து வில்லன், போலீஸ், குணச்சித்திர வேடங்கள் அமைந்தது. முன்னணி நடிகர்கள் மற்றும் இளம் நடிகர்கள் படத்தில் நடித்த கிஷோர், கமல் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘தூங்காவனம்’ படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில்...
'ஐ’ படத்திற்குப் பிறகு விக்ரம் நடித்து வரும் படம் ‘பத்து எண்றதுக்குள்ள’. இதில் விக்ரமுக்கு ஜோடியாக சமந்தா நடித்துள்ளார். ‘கோலி சோடா’ படத்தை இயக்கிய விஜய் மில்டன் இப்படத்தை இயக்கியுள்ளார். பாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸ் மூலம் ஏ.ஆர். முருகதாஸ் இப்படத்தை தயாரித்திருக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியானது. இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இதையடுத்து...
நடிகை குஷ்பு சினிமாவை விட்டு ஒதுங்கி அரசியல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். கடைசியாக, ‘தீயா வேலை செய்யனும் குமாரு’, ‘ஆம்பள’ படங்களில் கவுரவ தோற்றங்களில் தலைகாட்டினார். அதன்பிறகு புதுப்படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகவில்லை. சில டைரக் டர்கள் நடிக்க அழைத்தும் மறுத்துவிட்டார். தி.மு.க.வில் இருந்து விலகி, காங்கிரஸ் கட்சியில் இணைந்த அவருக்கு, அக்கட்சியில் தேசிய...
‘என்னை அறிந்தால்...’ படத்தை அடுத்து ஏ.எம்.ரத்னம் மிக பிரமாண்டமான முறையில் அஜித்குமாரை வைத்து ஒரு புதிய படம் தயாரித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது. படத்துக்கு பெயர் சூட்டப்படாத நிலையில், இந்த படம் வேகமாக வளர்ந்து வந்தது. படத்தின் பெயரை அறிந்து கொள்வதற்கு அஜித்குமார் ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக...
கத்தி பட விவகாரம் தொடர்பான வழக்கு நிலுவையில் இருப்பதால் விரைவில் வெளிவரவுள்ள புலி திரைப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என தஞ்சை முதன்மை நீதிமன்றத்தில் அன்புராஜசேகர் என்பவர் மனுதாக்கல் செய்துள்ளார். தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே இளங்காடு கிராமத்தை சேர்ந்தவர் அன்புராஜசேகர். இவர் தாகபூமி என்ற தன்னுடைய குறும்படத்தை பெரிய திரைப்படமாக வெளியிட காத்திருந்தார். இந்நிலையில்...
Loading posts...
All posts loaded
No more posts