தீபாவளிக்கு என்னென்ன புதுப் படங்கள்? முன்னணி நடிகர்களின் படங்கள் ?

தீபாவளிக்கு இன்னும் இருபது நாட்கள்கூட இல்லை. ஆனால் என்னென்ன படங்கள் வரப்போகின்றன என்ற விவரமே தெளிவாகத் தெரியவில்லை. இந்தத் தீபாவளிக்கு அஜீத்தின் வேதாளம் படம் வரும் என்று நீண்ட நாட்களாகக் கூறி வருகின்றனர். ஆனால் இப்போது படம் தீபாவளிக்கு வருவது கடினம் என்ற பேச்சு நிலவுகிறது. இன்னும் பட வேலைகள் முடிந்தபாடில்லை. தீபாவளிக்கு வருவதாகக் கூறப்பட்ட...

ஏ.ஆர்.ரகுமானுக்கு ஜோடியாக நடிக்க வேண்டும் – ஆன்டிரியா

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் டான் ஆக ஒரு படத்தில் நடிக்கவேண்டும் , அவருக்கு ஜோடியாக நான் நடிக்க ஆசை என்று கூறியுள்ளார் நடிகை ஆன்டிரியா.ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நடிகை குஷ்பு நடத்தி வரும் ‘சிம்ப்ளி குஷ்பு’ நிகழ்ச்சி கடந்த சில வாரங்களாக மாபெரும் வரவேற்புடன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் கமல், சிம்பு, ஜி.வி.பிரகாஷ், சிவகார்த்திக்கேயன் உள்ளிட்ட...
Ad Widget

நடிகர் சங்கத்தில் ரஜினி கமலுக்கு முக்கிய பதவிகள்?

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு நடந்த தேர்தலில் விஷால் அணி வெற்றிபெற்றுள்ளது. தலைவராக நாசரும், பொதுச்செயலாளராக விஷாலும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். விஷால் அணியை சேர்ந்த கார்த்தி பொருளாளராகவும், பொன்வண்ணன், கருணாஸ் ஆகியோர் துணைத்தலைவர்களாகவும் வெற்றி பெற்றுள்ளனர். செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு விஷால் அணியை சேர்ந்த ராஜேஷ், ஜூனியர் பாலையா, குட்டி பத்மினி, கோவை சரளா, பிரசன்னா, நந்தா, ரமணா,...

ரஜினிகாந்த்–கமல்ஹாசனுக்கு அழைப்பு: நடிகர் சங்க பொதுக்குழு கூடுகிறது புதிய நிர்வாகிகள் பதவி ஏற்கிறார்கள்

நடிகர் சங்க பொதுக்குழு சென்னையில் கூடுகிறது. இதில், புதிய நிர்வாகிகள் பதவி ஏற்க உள்ளனர். கூட்டத்தில் கலந்து கொள்ள ரஜினிகாந்த்–கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுக்கப்படுகிறது. தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் விஷால் அணியினர் வென்றுள்ளனர். நாசர் தலைவராகவும், விஷால் பொதுச் செயலாளராகவும், பொன்வண்ணன், கருணாஸ் ஆகிய இருவரும் துணைத்தலைவர்களாகவும் தேர்வாகியுள்ளார்கள். பொருளாளராக கார்த்தி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 24 பேரை...

சங்கம் மீது கொண்ட அதிருப்தியே அஜீத் வாக்களிக்கவில்லை!!

வேதாளம் படத்தின் டப்பிங்கில் பிசியாக இருந்ததாலும், சங்கம் மீது கொண்ட அதிருப்தியாலும் அஜீத் நடிகர் சங்க தேர்தலில் வாக்களிக்கவில்லை என்று கூறப்படுகிறது. தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த தேர்தலில் விஷாலின் பண்டவர் அணியும், சரத்குமார் தலைமையிலான அணியும் நேருக்கு நேர் மோதின. இதில் விஷால் அணி வெற்றி பெற்றுள்ளது. நேற்று ஏராளமான...

‘போர்க்களத்தில் ஒரு பூ’ தடைக்கு எதிராக மேன்முறையீடு

போர்க்களத்தில் ஒரு பூ' என்ற திரைப்படத்துக்கு மேன்முறையீட்டுத் தீர்ப்பாயம் சான்றிதழ் வழங்க மறுத்துள்ளமை தொடர்பில், பெங்களூரைச் சேர்ந்த திரைப்பட இயங்குநரொருவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் மேன்முறையீட்டு மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார். 2009ஆம் ஆண்டு நடந்த இறுதிக்கட்ட இலங்கை இராணுவத்துக்கும் புலிகளுக்கும் இடையிலான யுத்தத்தின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்ற ஆதாரங்களை இலண்டனிலுள்ள சனல் 4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பியது....

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல்: விஷால் தலைமையிலான பாண்டவர் அணி அமோக வெற்றி

தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கத் தேர்தலில், நடிகர் விஷால் தலைமையிலான பாண்டவர் அணியினர் அமோக வெற்றி பெற்றுள்ளனர். தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் சரத்குமார் தலைமையிலான அணியும், நாசர் தலைமையிலான அணியும் போட்டியிட்டது. இதற்காக சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் பள்ளியில் வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு...

விஷால் மீது சரத்குமார் தரப்பினர் தாக்குதல் – தேர்தலில் பரபரப்பு

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் நடைபெற்றுவரும் நிலையில், விஷால் மீது எதிர் அணியினர் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஷால் மீதான தாக்குதல் குறித்து நடிகை சங்கீதா கூறியதாவது, வாக்குசீட்டுகளை என் கையில் இருந்து சரத்குமார் அணியை சேர்ந்தவர்கள் புடுங்கி சென்றனர். 3 நபர்கள் சரத்குமார் பக்கத்திலேயே இருக்கிறார்கள் ஒருவர் கிச்சா ரமேஷ், சிசர்ஸ்...

‘‘எனக்கு பிடித்த நடிகை சமந்தா’’ – விக்ரம்

‘எனக்கு பிடித்த நடிகை சமந்தா’ என்று நடிகர் விக்ரம் கூறினார். நடிகர் விக்ரமும், நடிகை சமந்தாவும் ‘10 எண்றதுக்குள்ள’ என்ற படத்தில் ஜோடியாக நடித்துள்ளனர். விஜய் மில்டன் டைரக்டு செய்துள்ளார். ‘பாக்ஸ் ஸ்டார்’ பட நிறுவனத்துடன் இணைந்து ஏ.ஆர்.முருகதாஸ் தயாரித்துள்ளார். இந்தபடம் குறித்து விக்ரம் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- ‘10 எண்றதுக்குள்ள’...

படப்பிடிப்பில் விபத்து: நடிகர் அஜித்குமாருக்கு ஆபரேஷன்?

நடிகர் அஜித்குமாருக்கு படப்பிடிப்பின்போது திடீர் விபத்து ஏற்பட்டது. அவருடைய காலில் அடிபட்ட இடத்தில், ‘ஆபரேஷன்’ செய்வது பற்றி டாக்டர்கள் ஒரு வாரத்தில் முடிவு செய்கிறார்கள். அஜித்குமார் இப்போது, ‘வேதாளம்’ என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக சுருதிஹாசன் நடிக்கிறார். தங்கை வேடத்தில் லட்சுமி மேனன் நடித்து வருகிறார். சிவா டைரக்டு செய்கிறார். பெரும்பகுதி...

‘கமல்ஹாசன் நன்றி இல்லாதவர்’ – சரத்குமார்

கமல் ஹாஸனின் பல பிரச்சினைகளை நான்தான் முன் நின்று தீர்த்து வைத்திருக்கிறேன். அவர் நன்றி இல்லாதவர் என்ற ஆதங்கம் எனக்கு உண்டு, என்றார் நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார். நடிகர் சங்க விவகாரத்தில் விஷால் அணிக்கு ஆதரவான நிலைப்பாட்டை மூத்த நடிகரான கமல் ஹாஸன் எடுத்திருப்பது குறித்து சரத்குமார் கூறுகையில், "விஸ்வரூபம்', ‘உத்தம வில்லன்' ஆகிய...

ரஜினியின் பாட்ஷா ஸ்டைலில் உருவாகும் அஜித்தின் வேதாளம்

அஜித், சுருதிஹாசன், லட்சுமி மேனன், ராகுல் தேவ், கபீர் சிங், வித்யூலேகா உள்ளிட்ட பலர் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார் இயக்குநர் சிறுத்தை சிவா அனிருத் இசையமைத்து உள்ளார். ஏ.எம்.ரத்னம் தயாரித்து வருகிறார். ஏற்கனவே படத்தின் முதல் கட்ட பணிகள் அனைத்துமே முடிக்கப்பட்டு விட்டன. தற்போது இரண்டாம் கட்ட பணிகளை விரைவில் முடிக்கவிருக்கிறார்கள். சமீபத்தில் தான்...

நடிகைகளை பார்த்து பெண்கள் கவர்ச்சி உடை அணியவேண்டாம்

தமன்னா நடித்த ‘பாகுபலி’ படம் வசூலில் சாதனை நிகழ்த்தி உள்ளது. அவரது நடிப்புக்கும் பாராட்டுகள் குவிகின்றன. இதனால் மகிழ்ச்சியில் இருக்கிறார். அடுத்து பாகுபலி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறார். தமன்னா சமீபத்திய படங்களில் தூக்கலான கவர்ச்சியில் நடிப்பதாக விமர்சனங்கள் கிளம்பியுள்ளன. தாராளமாக ஆடை குறைப்பு செய்வதாகவும் கூறப்படுகிறது. ‘பாகுபலி’ படத்தில் பாடல் காட்சியொன்றில் அரைநிர்வாண...

புலி படம் பார்த்த குழந்தைகளுக்கு விஜய் ரூ 5 லட்சம் உதவி!

நடிகர் - இயக்குநர் ராகவா லாரன்ஸின் அறக்கட்டளைக்கு நடிகர் விஜய் ரூ 5 லட்சம் உதவித் தொகை வழங்கினார். புலி படத்தை அவரது அறக்கட்டளை நடத்தும் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் பார்த்ததற்காக இந்த உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது. விஜய்யும், லாரன்ஸும் நீண்ட காலமாக நண்பர்கள். ஒன்றாகப் பணியாற்றியவர்கள். விஜய் நடித்த 'புலி' படம் சமீபத்தில் வெளியானது....

‘புலி முதல் வார வசூல் ரூ 71 கோடி’…. தயாரிப்பாளர் அறிவிப்பு!

பல்வேறு கடும் விமர்சனங்களைச் சந்தித்த விஜய்யின் புலி படம் முதல் வாரத்தில் ரூ. 71 கோடி வசூல் செய்துள்ளதாக அப்படத்தைத் தயாரித்த எஸ்.கே.டி. நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. சிம்புதேவன் இயக்கத்தில் விஜய், ஸ்ரீதேவி, ஹன்சிகா, ஸ்ருதிஹாசன், சுதீப் நடிப்பில் சில வாரங்களுக்கு முன்பு வெளியான படம் - புலி. ரசிகர்களின் எதிர்பார்ப்புக்குப் ஈடு கொடுக்காததால் படத்துக்குச்...

இறந்துபோன மகனுக்கு ஹரித்வாரில் திதி கொடுத்த சில்வஸ்டர் ஸ்டாலோன்

ஹாலிவுட் சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான சில்வஸ்டர் ஸ்டாலோன் தனது இறந்த மகனுக்கு இந்தியாவின் ஹரித்வாரில் இந்து முறைப்படி ஸ்ரார்தம் செய்து திதி அளித்தார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹாலிவுட் திரைப்பட உலகில் ஏராளமான ஆக்‌ஷன் படங்களில் நடித்தவர் பிரபல நடிகர் சில்வஸ்டர் ஸ்டாலோன். இவருடைய இளைய மகன் சாகே ஸ்டாலோன். இவரும் ஹாலிவுட் நடிகர் ஆவார்....

ஏமிக்கு அடித்த அதிர்ஷ்டம் : எந்திரன் 2வில் ரஜினிக்கு ஜோடி!!

ஷங்கரின் எந்திரன் 2 படத்தில் ஏமி ஜாக்சன் நடிக்க உள்ளதை நினைத்து பல நடிகைகள் ஏக்கப் பெருமூச்சு விடுகிறார்களாம். வெற்றிகரமான இயக்குனராக பல ஆண்டுகளாக இருந்து வருபவர் ஷங்கர். அவர் படத்தில் நடிக்க நடிகர், நடிகைகள் ஏங்குகிறார்கள். ஷங்கரின் இயக்கத்தில் ஒரு படத்திலாவது நடித்துவிட்டால் அது பெரிய பாக்கியம் என்று நினைக்கிறார்கள். இந்நிலையில் ஏமி ஜாக்சனுக்கு...

அஜித் பற்றி தவறாக பேசினேனா? உதயநிதி விளக்கம்

சமூக வலைத்தளங்களில் சமீபகாலமாக பிரபல நடிகர்களின் ரசிகர்கள் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொள்வது வாடிக்கையாகி வருகிறது. சமீபத்தில் உதயநிதி ஸ்டாலின் தனது டுவிட்டர் தளத்தில் பதிவிட்ட ஒரு டுவிட்டுக்கு, அஜித் ரசிகர் ஒருவர் அவரை கிண்டல் செய்து கமெண்ட் ஒன்றை பதிவு செய்ததாக கூறப்படுகிறது. எனவே, கடுப்பான உதயநிதி, அவரிடம் அஜித்தை பற்றி தவறான வார்த்தைகளால்...

அனிருத் பிறந்தநாளில் அஜித் பட பாடல்கள் வெளியீடு

அஜித் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் ‘வேதாளம்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. சமீபத்தில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் சமீபத்தில் வெளிவந்து ரசிகர்களிடையே பெறும் வரவேற்பை பெற்று வருகிறது. மேலும், டீசர் பல்வேறு சாதனைகளையும் முறியடித்து வருகிறது. இதனால், இப்படத்தின் பாடல்களுக்கு...

போர் களத்தில் பூ படத்துக்கு அனுமதி மறுப்பு!

சென்னை ஐகோர்ட்டில், கணேசன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறி இருப்பதாவது:– ‘போர்களத்தில் ஒரு பூ’ என்ற தலைப்பில் படம் ஒன்றை இயக்கியுள்ளேன். இந்த படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கேட்டு, திரைபட தணிக்கை வாரியத்திடம் விண்ணப்பித்தேன். இந்த படத்தை பார்த்த தணிக்கைக்குழு உறுப்பினர்கள், இந்த படத்தில் இடம் பெற்றுள்ள காட்சி இந்தியா-இலங்கை நட்புறவுக்கு கேடு விளைக்கும்...
Loading posts...

All posts loaded

No more posts