ரஜினிக்கு கிடைக்கும் வரலாறு காணாத வரவேற்பு!

மலாய மக்கள், சீனர், தமிழர் மற்றும் பல நாட்டவர்களின் கலவையான மலேசியாவில் எந்த நாட்டு பிரதமர், அதிபர் அல்லது எத்தனை பெரிய நடிகர் வருகை தந்த போதும், அந்த மக்கள் பெரிதாக அலட்டிக் கொண்டதில்லை. தங்கள் பக்கத்தில் எத்தனைப் பிரபலம் நடந்து போனாலும் அந்த மக்கள் கண்டு கொள்வதில்லை. அல்லது ஏதேனும் நிகழ்ச்சியில் பங்கேற்றாலும் அத்தனை...

3,500 நடிகர்-நடிகைகளுக்கு தீபாவளி பரிசு: நடிகர் சங்கம் வழங்குகிறது

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு சமீபத்தில் நடந்த தேர்தலில் நாசர், விஷால், கார்த்தி, கருணாஸ், பொன்வண்ணன் ஆகியோர் வெற்றி பெற்று பொறுப்புக்கு வந்துள்ளனர். நடிகர் சங்கத்துக்கு கட்டிடம் கட்டுதல், உறுப்பினர்கள் பட்டியல் சரிபார்த்தல் போன்ற பணிகளில் புதிய நிர்வாகிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். நடிகர் சங்கத்தில் உள்ள நாடக நடிகர்கள் பற்றிய கணக்கெடுப்பு விரைவில் தொடங்க உள்ளது. இதற்காக...
Ad Widget

ஏ.ஆர்.ரகுமான் பகிர்ந்து கொண்ட உணர்ச்சிகரமான வீடியோ

ஏ.ஆர்.ரகுமான் என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது அவரது கடின உழைப்பும், அர்ப்பணிப்பும் தான். பேஸ்புக் சமூக வலைத்தளத்தில் இருக்கும் ரகுமான் மிக அரிதாகத்தான் மற்றவர்களின் புகைப்படங்களையோ வீடியோக்களையோ பகிர்ந்துக்கொள்கிறார். அப்படிபட்ட ரகுமான் ஒரு வீடியோவை பகிர்ந்துகொண்டார் என்றால் அதன் முக்கியத்துவத்தை சொல்லி தெரியவேண்டியது இல்லை. வாழ்க்கை மீது புகார் சொல்பவர்களுக்கானது இந்த வீடியோ என்று ரகுமான்...

விஜய்யுடன் படப்பிடிப்பில் கலந்துக் கொண்ட எமி ஜாக்சன்

புலி படத்திற்குப் பிறகு விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் நடித்து வருகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக எமி ஜாக்சன் மற்றும் சமந்தா நடிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்படத்தில் விஜய் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்திற்கு ‘காக்கி’ என தலைப்பு வைக்க இருப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில் இப்படத்தின் சண்டைக்காட்சி ஒன்று படமாக்கப்பட்டது....

இந்தி படம் தோல்வி ஐஸ்வர்யாராய்க்கு ரூ.3 கோடி நஷ்டம்

நடிகை ஐஸ்வர்யாராய், இந்தி நடிகர் அபிஷேக் பச்சனை மணந்து குடும்பம், குழந்தை என்று இருந்ததால் சினிமாவை விட்டு தற்காலிகமாக ஒதுங்கினார். 3 வருடங்களாக படங்களில் நடிக்கவில்லை. சில மாதங்களுக்கு முன், திடீரென மீண்டும் நடிக்க வந்தார். ‘ஜாஷ்பா’ என்ற இந்தி படத்தில் நடிக்க அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டார். இது, இந்தியா முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது. இந்த...

வேதாளம் படத்தின் புதிய அப்டேட்

அஜித் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘வேதாளம்’. இதில் அஜித் இரண்டு வேடத்தில் நடித்திருக்கிறார். இதில் அஜித்துக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார். மேலும் லட்சுமி மேனன், அஸ்வின், கபீர்சிங், ராகுல் தேவ், தம்பிராமையா ஆகியோர் நடித்துள்ளார்கள். சிறுத்தை சிவா இப்படத்தை இயக்கியிருக்கிறார். அனிருத் இசையில் இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியானது. இதில் இடம் பெற்ற ‘ஆலுமா......

விஜய்க்கு தந்தையாக நடிக்கும் எஸ்.ஏ.சந்திரசேகர்

பிரபல இயக்குனரும், விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் கடைசியாக ‘டூரிங் டாக்கீஸ்’ என்னும் படத்தை இயக்கி நடித்திருந்தார். நீண்ட நாட்களாக படங்களை இயக்காமல் இருந்த இவர் தற்போது தந்தை கதாபாத்திரத்திற்கு நடிக்க தயாராகி வருகிறார். துரை செந்தில் இயக்கத்தில் தனுஷ் நடிக்க இருக்கும் புதிய படத்தில், தனுஷுக்கு தந்தையாக நடிக்க எஸ்.ஏ.சந்திரசேகர் ஒப்பந்தமாகியிருக்கிறார். இதுதவிர, பாடலாசிரியர் பா.விஜய்...

டெங்குவினால் நடிகர் விவேக்கின் மகன் மரணம்!

டெங்குவின் கோரப் பிடியில் சிக்கி சென்னையில் உயிர் துறந்தார் நடிகர் விவேக்கின் மகன் பிரசன்னா (வயது 13). பிரசன்னாவுக்கு ஒரு மாதத்துக்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்டது. அது என்ன நோய் என்று ஆரம்பத்தில் கண்டறிய முடியவில்லை. பின்னர்தான் டெங்கு காய்ச்சலால் குழந்தை பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. ஆனால் அதற்குள் உடல்நிலை மோசமாகி, கோமா நிலைக்குப் போய்விட்டார். சென்னை...

ஏஞ்ஜலினா ஜோலியின் ஸ்பெஷல் புகைப்படங்கள்: எடுத்தது யார் தெரியுமா?

ஹாலிவுட்டின் எவர்கிரீன் அழகி, அகதிகளுக்கான ஐ.நா. சபை ஆணையத்தின் சிறப்புத் தூதர், பாலியல் வன்முறைக்கு எதிரான அமைப்பின் இணை நிறுவனர். உலகில் நடக்கும் கொடுமைகளுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் செயற்பாட்டாளர் என்று பன்முகங்கள் கொண்ட ஏஞ்ஜலினா ஜோலியின் ஸ்பெஷல் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது. சினிமாவிலும் சரி நிஜ வாழ்விலும் சரி...

தனுஷுக்கு அப்பாவான எஸ்.ஏ.சந்திரசேகர்

தனுஷ் தற்போது பிரபு சாலமன் இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். மேலும், இவர் நடித்துள்ள ‘தங்கமகன்’ படம் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. இவ்விரு படங்களுக்கு பிறகு தனுஷ், துரை.செந்தில்குமார் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்தில் முதன்முதலாக இரட்டை வேடத்தில் நடிக்கும் தனுஷுக்கு ஜோடியாக முன்னணி நடிகைகள் இருவரை ஒப்பந்தம் செய்ய முடிவு...

புகைபிடிக்கும் காட்சி: சமந்தாவுக்கு விநியோகஸ்தர்கள் கண்டனம்

விக்ரம், சமந்தா ஜோடியாக நடித்துள்ள படம் ‘10 எண்றதுக்குள்ள.’ இந்தப் படம் கடந்த வாரம் வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. இதில் சமந்தா, கதாநாயகி, வில்லி என இருவேடங்களில் வருகிறார். வில்லி கதாபாத்திரம் குரூரமாக சித்தரிக்கப்பட்டு உள்ளது. சாதி வெறி பிடித்த உயர்சாதி பெண்ணாக வந்து கொலைகள் செய்கிறார். சுருட்டு பிடித்து மூக்கில் புகை விடுகிறார். ஓடும்...

அஜித்தை பாராட்டிய விஜய்

அஜித் நடித்துள்ள ‘வேதாளம்’ படம் தீபாவளி தினத்தில் திரைக்கு வருகிறது. இந்த படத்தின் ‘டீசர்’ சமீபத்தில் வெளியிடப்பட்டது. இணையதளத்தில் வெளியான இதை லட்சக்கணக்கான ரசிகர்கள் பார்த்து ரசித்தனர். இதற்கு ஏக வரவேற்பு இருந்ததாக செய்திகள் வெளியாகின. தற்போது அட்லி இயக்கும் படத்தில் விஜய் நடித்து வருகிறார். இந்த படப்பிடிப்பின் போது, விஜய், வேதாளம் டீசரை பார்த்து...

“போர்க்களத்தில் ஒரு பூ” : உண்மைக்கு புறம்பான கதையா?? – இசைப்பிரியா குடும்பத்தின் வேண்டுகோள்

போர்க்களத்தில் ஒரு பூ என்னும் பெயரில் இசைப்பிரியாவின் வாழ்க்கை வரலாறைப் படமாக்கியுள்ளதாக்க் கூறி இசைப்பிரியாவின் வாழ்க்கையில் நடக்காத சம்பவங்களை மட்டுமே படமாக்கி வெளியிடத் துடிக்கும் இயக்குனர் கணேசன் அவர்களுக்கும் எம் தமிழ் உறவுகளுக்கும் இசைப்பிரியா குடும்பத்தின் வேண்டுகோள்: இசைப்பிரியா அல்லது இசையருவி எனும் புனைபெயரைக் கொண்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினராக இருந்து இறுதி...

அஜித்தை பற்றி அவதூறான பேச்சு!! – கருணாஸின் விளக்கம்

நடிகரும், நடிகர் சங்க துணை தலைவருமான கருணாஸ், அஜித்தை பற்றி அவதூறாக பேசியதாக செய்திகள் வெளியாகியிருக்கிறது. இதற்கு அஜித் ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதனை கருணாஸ் மறுத்துள்ளார். இது குறித்து கருணாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘என்னுடைய டுவிட்டர் கணக்கில் நடிகர் அஜித்தை பற்றி நான் அவதூறாக செய்திகளை கூறியதாக இன்று செய்தி வெளிவந்திருக்கிறது....

அஜித் மச்சினி விஜய்யின் தீவிர ரசிகையாம்!!

மணிரத்னம் இயக்கிய ‘அஞ்சலி’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் பேபி ஷாம்லி. இவர் தற்போது விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகும் ‘வீரசிவாஜி’ படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் ஷாம்லி, விஜய்யின் தீவிர ரசிகையாக நடிக்கிறாராம். தமிழ் சினிமாவில் சகபோட்டியாளர்களாக கருதப்படும் அஜித்-விஜய் பொது வாழ்வில்...

சிவகார்த்திகேயனின் புதிய படத்துக்கான பணிகள் தொடங்கியது

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த ‘காக்கிச்சட்டை’ படத்திற்கு பிறகு இந்த வருடத்தில் எந்த படமும் வெளியாகவில்லை. இவருடைய நடிப்பில் உருவாகியுள்ள ‘ரஜினி முருகன்’ படம் முடிவடைந்தும், பல்வேறு காரணங்களால் வெளியாக முடியாத சூழ்நிலையில் உள்ளது. இந்நிலையில், அட்லியின் உதவியாளர் பாக்யராஜ் கண்ணன் இயக்கும் புதிய படத்தில் நடிக்க சிவகார்த்திகேயன் ஒப்பந்தமானார். இப்படத்திற்கு ஒளிப்பதிவு பி.சி.ஸ்ரீராம், சவுண்ட் இன்ஜினியராக...

அஜித்துக்கு மாரடைப்பு : திரையுலகில் பரபரப்பு!!!

அஜித்தின் உடல்நிலை குறித்து வதந்திகளைப் பரப்பியவர்கள் மீது போலீஸில் புகார் அளிக்க முடிவு செய்திருக்கிறார்கள். அஜித் நடித்து வரும் படங்கள், படங்களின் பெயர்கள் உள்ளிட்ட அதிகாரப்பூர்வ தகவல்களை வெளியிடுபவர் சுரேஷ் சந்திரா. இவருடைய ட்விட்டர் தளத்தை SCREENSHOT எடுத்து போட்டோ ஷாப் மூலமாக மாற்றி "அஜித்துக்கு மாரடைப்பு. அவருக்காக பிராத்தனை செய்யுங்கள்" என்று மாற்றி வாட்ஸ்-அப்...

கமலுடன் ஜோடி சேரும் தமன்னா?

கமலின் ‘தூங்காவனம்’ விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இதில் கமலுடன் திரிஷா நடித்து இருக்கிறார். ராஜேஷ் செல்வா இந்த படத்தை இயக்கி இருக்கிறார். பிரகாஷ்ராஜ் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவதற்குள்ளாகவே கமல் அடுத்த படத்துக்கான ஏற்பாடுகளை தொடங்கி விட்டார். இளம் தாடியுடன் இருந்த...

தமிழ் சினிமாவில் சிறப்பாக நடனமாடக் கூடியவர் விஜய் – தனுஷ்

தனுஷ் தயாரிப்பில் தற்போது வெளிவந்திருக்கும் படம் ‘நானும் ரௌடிதான்’. இதில் விஜய் சேதுபதி நாயகனாகவும், நயன்தாரா நாயகியாகவும் நடித்திருக்கிறார்கள். விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள இப்படத்தை அனிருத் இசையமைத்திருக்கிறார். தற்போது இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. நேற்று இவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு சுவாரஸ்யமாக பதிலளித்திருக்கிறார். அவை வருமாறு, கேள்வி: விஜய் பிடிக்குமா?...

சரத்குமார், ராதிகாவிற்கு பதிலடி கொடுத்த சூர்யா

நடிகர் சங்க தேர்தலில் வெற்றிப்பெற்ற விஷால் பல அதிரடி முடிவுகளை எடுத்து வருகிறார். இந்நிலையில் பாண்டவர் அணிக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். நடிகர் சூர்யா நேற்று தன் வாழ்த்தை பாண்டவர் அணிக்கு தெரிவித்துள்ளார். இதோடு மட்டுமில்லாமல், ராதிகா, சரத்குமார், ராதாரவிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சில கருத்துக்களை கூறியுள்ளார். ஏனெனில் சரத்குமார் பிரச்சாரத்தின்...
Loading posts...

All posts loaded

No more posts