- Monday
- January 20th, 2025
வருகிற 24–ந்தேதி 4 படங்கள் திரைக்கு வருகின்றன. ‘பசங்க–2’, ‘அஞ்சல’, ‘வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான்’ ஆகிய படங்கள் கடந்த மாதமே வெளி வர இருந்தவை. மழை மற்றும் பல்வேறு காரணங்களால் இவை திரைக்கு வருவதில் தாமதம் ஏற்பட்டது. தற்போது இந்த 3 படங்களும் 24–ந்தேதி திரையிடப்படுகின்றன. இதில் அஞ்சல படம் விமல் நடிப்பிலும்,...
சிம்பு எழுதி பாடி அனிருத் இசையமைத்திருப்பதாக கூறப்படும் பீப் சாங், பல்வேறு சர்ச்சைகளை சந்தித்து வருகிறது. இந்த பாடலுக்கு பல்வேறு அமைப்புகள், சமூக ஆர்வலர்கள், பாடலாசிரியர்கள், இசையமைப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த பாடல் பற்றி நடிகர் சங்கம் விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், ‘‘முறையாக வெளியிடப்பட்டதா?, திருட்டுத்தனமாக...
விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் ‘தெறி’ படத்தில் நடித்து வருகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா, எமி ஜாக்சன் நடித்து வருகிறார்கள். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தற்போது இப்படத்தின் கிளைமாக்ஸ் சண்டைக்காட்சியின் படப்பிடிப்பு சென்னை ஒமேகா தொழிற்சாலையில் நடைபெற்று வருகிறது. இதில் விஜய்யுடன் 50க்கும் மேற்பட்ட வெளிநாட்டு சண்டை...
நடிகர் சிம்பு எழுதி, பாடியதாக வெளிவந்த ‘பீப் சாங்’ பிரச்சினை விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியுள்ளது. இந்த பீப் பாடல் வெளியானது குறித்து நடிகர் சிம்பு தரப்பிலிருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சிம்புவின் அப்பாவும், பிரபல இயக்குனரும், நடிகருமான டி.ராஜேந்தரும் இந்த பாடலுக்கு விளக்கம் அளிக்கும்விதமாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறும்போது, இந்தப் பாடல்...
நீண்ட இடைவேளைக்குப் பிறகு மாதவன் நடிப்பில் வெளிவரவுள்ள படம் ‘இறுதிச்சுற்று’. தமிழ் மற்றும் இந்தியில் இப்படம் தயாராகியுள்ளது. இந்தியில் ‘சால காதூஸ்’ என்ற தலைப்பில் வெளியாகவுள்ளது. ‘துரோகி’ படத்தை இயக்கிய சுதா.கே.பிரசாத் இப்படத்தை இயக்கியிருக்கிறார். இதில் மாதவன் குத்துச்சண்டை பயிற்சியாளராக நடித்துள்ளார். இப்படத்தின் டிரைலரை நேற்று சிவகார்த்திகேயன் வெளியிட்டார். இந்த டிரைலருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல...
ஹரி இயக்கத்தில் சூர்யா போலீஸ் அதிகாரியாக நடித்த சிங்கம், சிங்கம்–2 படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றன. இதையடுத்து ‘சிங்கம்–3’ படம் தயாராக இருக்கிறது. சிங்கம் 2 பாகங்களிலும் போலீஸ் அதிகாரியாக சூர்யாவுடன் நடித்த அனுஷ்கா, இந்த படத்திலும் ஜோடியாக நடிக்கிறார். இவர்களுடன் சுருதிஹாசன் சி.ஐ.டி. போலீஸ் வேடத்தில் நடிக்கிறார். எந்தெந்த நாடுகளில் படப்பிடிப்பு நடத்துவது என்பது...
ரஜினி நடிப்பில் பிரம்மாண்டமாக வெளிவந்த படம் ‘எந்திரன்’. இப்படம் ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பை பெற்று வசூலில் பெரிய சாதனையையும் படைத்தது. தென்னிந்திய சினிமாவில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி இந்த படத்தை ஷங்கர் இயக்கியிருந்தார். ஐஸ்வர்யா ராய், கருணாஸ், சந்தானம் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க ஷங்கர்...
சமீபத்தில் கனடாவில் இசை நிகழ்ச்சி நடத்த அங்குள்ள தமிழர்கள் அனிருத்தை அழைத்து இருந்தனர். இதற்காக தனது இசைக்குழுவினருடன் ஒரு வாரத்துக்கு முன்பு கனடா சென்று இருந்தார். அப்போதுதான் ஆபாச பாடல் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியது. இசை நிகழ்ச்சியை முடித்துவிட்டு நேற்று அவர் சென்னை திரும்ப விமானத்தில் டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அவர்...
ரஜினி நடிப்பில் பிரம்மாண்டமாக வெளிவந்த ‘எந்திரன்’ படம் ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பையும், வசூலில் பெரிய சாதனையையும் படைத்தது. தென்னிந்திய சினிமாவில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி இந்த படத்தை ஷங்கர் இயக்கியிருந்தார். ஐஸ்வர்யா ராய், கருணாஸ், சந்தானம் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க ஷங்கர் மும்முரமாக களமிறங்கினார்....
விக்ரம் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘10 எண்றதுக்குள்ள’. இதில் விக்ரமுக்கு ஜோடியாக சமந்தா நடித்திருந்தார். இப்படத்தை விஜய் மில்டன் இயக்கியிருந்தார். காதல் கலந்த ஆக்ஷன் படமான இது ரசிகர்களிடையே சுமாரான வரவேற்பை பெற்றது. இப்படத்திற்குப் பிறகு ‘அரிமா நம்பி’ படத்தின் இயக்குனர் ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். இப்படத்திற்கான பூஜை நேற்று...
விஷாலை வைத்து ‘தீராத விளையாட்டு பிள்ளை’, ‘சமர்’, ‘நான் சிகப்பு மனிதன்’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் திரு. இவர் மீண்டும் விஷாலை வைத்து படம் இயக்க இருப்பதாக செய்திகள் வெளியானது. ஆனால் தற்போது அவர் விக்ரமை வைத்து படம் இயக்குவதாக அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியாகியுள்ளது. ‘10 எண்றதுக்குள்ள’ படத்திற்குப் பிறகு விக்ரம் சிறந்த கதையை தேடிவந்த...
ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் சூப்பர் ஹிட்டான படம் ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’. இதில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக ‘கயல்’ ஆனந்தி நடித்திருந்தார். ஆதிக் ரவிச்சந்திரன் இப்படத்தை இயக்கியிருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. மேலும் ஜி.வி.பிரகாஷ்-ஆனந்தி ஜோடி ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது. தற்போது இந்த ஜோடி புதிய படம் மூலம் இணையவுள்ளது. ஜி.வி.பிரகாஷை வைத்து ‘டார்லிங்’...
நடிகர் சிம்பு, இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் கோவை, ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் டிசம்பர் 19-ஆம் தேதிநேரில் ஆஜராக வேண்டும் என போலீஸார் அழைப்பாணை வழங்கியுள்ளனர். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் கோவை மாவட்டச் செயலாளர் ராதிகா, மாநகர காவல் ஆணையர் அ.அமல்ராஜிடம் பெண்களை இழிவுபடுத்தும் விதமாக பாடலை சமூக வலை தளங்களில் பரவ விட்ட சிம்பு,...
சினிமா பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சிறுவயதில், தான் படித்த நகரி அரசு உயர்நிலைப்பள்ளியின் ஆண்டு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். விழாவில் அவர் பேசியதாவது:- ‘நான் சினிமா பின்னணி பாடகராக அறிமுகமாகி 50 வருடங்கள் ஆகிறது. இத்தனை ஆண்டுகள் சினிமாவில் இருப்பது கஷ்டம். கடவுளின் அனுக்கிரகம், ரசிகர்கள் ஆதரவு, அதிர்ஷ்டம் போன்றவற்றால் இன்னும் நான் பாடகராக...
சென்னையை புரட்டிப்போட்ட மழை, வெள்ளம் காஞ்சீபுரம், திருவள்ளூர், கடலூர் மாவட்டங்களையும் சின்னாபின்னப்படுத்தியது. வெள்ள சேதத்துக்கு மத்திய அரசு வழங்கியுள்ள முதல்கட்டநிதி நீங்கலாக நடிகர், நடிகைகள் மற்றும் தொழிலதிபர்கள் ஆகியோர் தமிழக முதலமைச்சரின் வெள்ள நிவாரண நிதிக்கு தாராளமாக நன்கொடை அளித்து வருகின்றனர். அவ்வகையில், ஆஸ்கர் விருதுபெற்ற பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானும் 25 லட்சம் ரூபாயை...
தனுஷ் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘தங்கமகன்’. இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சமந்தா மற்றும் எமி ஜாக்சன் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தை வேல்ராஜ் இயக்கியுள்ளார். ஏற்கனவே தனுஷ், அனிருத், வேல்ராஜ் கூட்டணியில் வெளியான ‘வேலையில்லா பட்டதாரி’ வெற்றி பெற்றதால் ரசிகர்கள் மத்தியில் ‘தங்கமகன்’ படம் பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படம் குறித்து தனுஷ் கூறும்போது,...
சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ பொன்ராம் இயக்கிய ‘ரஜினி முருகன்’ கடந்த தீபாவளிக்கே வெளியாவதாக இருந்தது. ஆனால், ஒருசில காரணங்களால் படம் வெளியாவது தள்ளிப் போனது. அடுத்தடுத்து பல தேதிகளில் இப்படம் வெளியாகும் என அறிவிப்புகள் எழுந்த வண்ணம் இருந்தபோதிலும், படம் ரிலீசாவதில் தொடர்ந்து சிக்கல் நிலவி வந்தது. இந்நிலையில், கடந்த டிசம்பர் 4-ந்...
எழுத்தாளர்கள் மற்றும் பாடலாசிரியர்களுக்கு நிச்சயம் சமூக பொறுப்புணர்வு தேவை என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். பெண்களை இழிவுபடுத்தி பாட்டு பாடியதாக நடிகர் சிம்பு, இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளனர். இணையதளத்தில் வெளியாகியுள்ள அந்த பாடலின் வரிகளை கண்டித்து இருவர் மீது அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார்...
இன்று ரஜினிகாந்தின் 65வது பிறந்த நாள். முதல் முறையாக எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் மிக அமைதியாக, மக்களுக்கு உதவி செய்தபடி இந்த நாளை கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள் ரஜினி ரசிகர்கள். [caption id="attachment_54963" align="aligncenter" width="600"] கபாலியில் ரஜினியின் தோற்றம்[/caption] பொதுவாக ரஜினி பிறந்த நாளை ரசிகர்கள் திருவிழா மாதிரி கொண்டாடுவார்கள். டிசம்பர் மாதம் முழுவதும் கொண்டாட்டங்கள்...
இயக்குனர் மோகன்ராஜா இதுவரை இயக்கியுள்ள 7 படங்களில் 6 படங்களில் அவரது தம்பியான ஜெயம் ரவி தான் நடித்துள்ளார். மீதியுள்ள ஒரேயொரு படமான வேலாயுதத்தில் விஜய் நடித்திருந்தார். இவர் இயக்கிய படங்களில் கடைசியாக வெளிவந்த ‘தனி ஒருவன்’ படம் மட்டும்தான் நேரடி தமிழ் படமாக இருந்தது. மற்ற படங்கள் அனைத்தும் தெலுங்கில் இருந்து ரீமேக் செய்யப்பட்டவை....
Loading posts...
All posts loaded
No more posts