விஜய்யுடன் நடிக்கும் குழந்தை நட்சத்திரம் மோனிகா சிவா!

இன்றைய குழந்தை நட்சத்திரங்கள் வருங்கால நம்பிக்கை நட்சத்திரங்கள் என்பது உண்மை ! கமல், ஸ்ரீதேவி, விஜய், சிம்பு, ஷாலினி, ஷாம்லி இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். அந்த வரிசையில் மோனிகா சிவாவும் வருங்காலப் பட்டியலில் இடம் பிடிப்பாள். சென்னையில் படிக்கும் அந்த ஆறு வயசு குழந்தையின் கைகளில் பத்து விரல்களை மிஞ்சிய படங்கள். இளைய தளபதி...

அரசியல்வாதிகளுக்கு எமனாகும் விஜய் ஆண்டனி!

சசி இயக்கிய பிச்சைக்காரன் படத்திற்கு பிறகு விஜய் ஆண்டனியின் சினிமா கேரியர் பரபரப்பாகி விட்டது. அதனால் அவர் சின்ன பட்ஜெட்டில் நடித்து வந்த சைத்தான் படமும் இப்போது பிரமாண்டப்படுத்தப்பட்டுள்ளது. அதையடுத்து லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் அவர் நடித்து வரும் எமன் இன்னும் பெரிய மெகா பட்ஜெட்டில் உருவாகி வருகிறது. அதோடு, இந்த படத்தில் முன்னணி ஹீரோக்களைப்...
Ad Widget

பாட்ஷா ரஜினியாட்டம் போஸ் கொடுக்கும் மொட்டை ராஜேந்திரன்!

சிவகார்த்திகேயனுக்குப்பிறகு விஜய் டிவியில் இருந்து சினிமாவில் ஹீரோவானவர் மா.கா.பா.ஆனந்த். வானவராயன் வல்லவராயன் என்ற படத்தில் கிருஷ்ணாவுடன் இணைந்து நடித்தார். படமும் ஓரளவு ஓடியதால் அதையடுத்து கிட்டத்தட்ட அரை டஜன் படங்களில் ஒப்பந்தமானார் மா.கா.பா., ஆனால் பின்னர் அவர் நடிப்பில் வெளியான நவரச திலகம் படம் வெற்றி பெறவில்லை. விளைவு, அவரது நடிப்பில் வேகமாக வளர்ந்து வந்த...

அபிஷேக் பச்சன் கின்னஸ் சாதனை

டெல்லி -6 திரைப்படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சிக்காக வெவ்வேறு நகரங்களில் மக்களின் முன் தோன்றி சாதனை படைத்துள்ளார் பொலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன். 2009ஆம் ஆண்டில், ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ராவின் “டெல்லி – 6′ படத்தில் அபிஷேக் பச்சனுடன் சோனம் நடித்தார். அவருக்கும் இந்தப் படம் நல்ல நடிகை என்ற பெயரைப் பெற்றுத் தந்தது. டெல்லி –...

‘போகன்’ படத்தில் அரவிந்த்சாமி யார்?

சோஷியல் மீடியா வந்த பிறகு அக்கப்போர்களுக்கு அளவே இல்லாமல் போய்விட்டது. சினிமாவுக்கு சம்மந்தமே இல்லாத ஆட்கள் இல்லாம் கையில் ஒரு மொபைலை வைத்துக் கொண்டு கோடம்பாக்கத்தில் அலைய ஆரம்பித்துவிட்டனர். இப்படிப்பட்ட ஆட்களால் திரையுலகில் அநியாயத்துக்கு குழப்பம். ஒரு ஸ்டில் வெளிவந்தால் போதும், அதில் உள்ள நடிகரின் கெட்அப்பைப் பார்த்துவிட்டு அவர் இந்த கேரக்டரில் தான் நடிக்கிறார்...

3ந் தேதி ரஜினி வருகை, 7ந் தேதி சென்சார், 22ந் தேதி கபாலி ரிலீஸ்?

திட்டமிட்டபடி கபாலி வருகிற 15ந் தேதி ரிலீசாக வேண்டும். ஆனால் படத்தை மலாய் மொழியில் டப் செய்யும்போது ரஜினி வாய்சை அந்த ஸ்டைல் மாறாமல் மலாய் மொழியில் பேச சரியான ஆள் கிடைக்காமல் அது தள்ளிப்போனது. அதனால் திட்டமிட்டபடி படம் வெளிவருதில் சிக்கல் ஏற்பட்டது. தற்போது புதிய ஷெட்யூல்படி ரஜினி அமெரிக்காவில் இருந்து நாளை (3-ம்...

4 ஹீரோக்களுடன் புதிய படத்தைத் தொடங்கும் கவுதம் மேனன்?

கவுதம் மேனன் அடுத்ததாக 4 ஹீரோக்கள் நடிக்கும் படத்தை தொடங்கப் போவதாக கூறப்படுகிறது. 'அச்சம் என்பது மடமையடா' படத்துக்குப் பின் தனுஷ்-மேகா ஆகாஷை வைத்து 'என்னை நோக்கி பாயும் தோட்டா'வை கவுதம் மேனன் இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக் கட்டத்தில் இருக்கிறது. இந்நிலையில் கவுதம் மேனன் அடுத்ததாக பிருத்விராஜ்(மலையாளம்), சாய் தரண்தேஜ்(தெலுங்கு), புனித்...

கிளிநொச்சியில் 500 ஏக்கர் காணி விரைவில் விடுவிப்பு-சுவாமிநாதன்

கிளிநொச்சி மாவட்டத்தில் இராணுவத்தினர் வசமுள்ள 500 ஏக்கர் காணிகள் விரைவில் விடுவிக்கப்படவுள்ளதாக புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து மதவிவகார அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பகுதிக்கு நேற்று வெள்ளிக்கிழமை விஜயம் செய்த புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத விவகார அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டார். இதன் பின்னர்...

சுந்தர்.சி படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கப் போறாரா?

சுந்தர்.சி இயக்கும் சரித்திரப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100 வது படத்தை சுமார் 350 கோடி பட்ஜெட்டில் சுந்தர்.சி இயக்கவிருக்கிறார். ஒருபுறம் இப்படத்திற்கான நடிக, நடிகையரைத் தேடி வரும் சுந்தர்.சி மறுபுறம் திரைக்கதையை விறுவிறுப்பாக எழுதி வருகிறார். சூர்யா, மகேஷ்பாபு, விஜய் என்று கோலிவுட் மற்றும்...

யூரோ கோப்பை: இறுதிப் போட்டியை நேரில் காண பிரான்ஸ் செல்கிறார் தனுஷ்!

பிரான்ஸில் நடைபெற்று வரும் யூரோ கோப்பையின் இறுதிப் போட்டியை நேரில் காண பாரிஸ் செல்கிறார் தனுஷ். (ஜூலை 11 அன்று நடைபெற உள்ள) யூரோ கோப்பை இறுதிப் போட்டியை நேரில் காண உள்ளேன் என்று போட்டியின் டிக்கெட்டைப் பகிர்ந்து ட்விட்டரில் தகவல் தெரிவித்துள்ளார் தனுஷ்.

ரஜினிக்கு அழைப்பு விடுத்த கிரண் பேடி

தற்போது புதுச்சேரியில் கவர்னராக நியமிக்கப்பட்டிருப்பவர் கிரண்பேடி. ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரியான இவருக்கு, அரசியல்வாதி, சமூக சேவகர் என பலமுகம் உண்டு. அதோடு, திகார் சிறையில் ஆய்வாளராக இருந்தபோது இவர் செய்த சீர்திருத்தங்கள் அவருக்கு விருது பெற்றுக்கொடுத்தது. தற்போதைய பல ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு இவரே ரோல் மாடலாக இருந்து வருகிறார். இந்நிலையில், தற்போது புதுச்சேரியின் கவர்னராகியிருக்கும்...

நாளை 6 படங்கள் ரிலீஸ்

எல்லாம் திட்டமிட்டபடி சரியாக நடந்திருந்தால் இந்த வாரம் அதாவது ஜூலை 1 ஆம் தேதி கபாலி படம் ரிலீஸ் ஆகியிருக்கும். முஸ்லீம்களின் விரத காலமான ரமலான் மாதத்தில் அதாவது ஜூலை 1 ஆம் தேதி கபாலி படத்தை வெளியிட்டால் மலேஷியா மற்றும் வளைகுடா நாடுகளில் மக்கள் தியேட்டருக்கு வர மாட்டார்கள் என்று சொல்லப்பட்டதால் கபாலி ரிலீஸை...

சிம்பு வராததால் காத்திருக்கும் கௌதம் மேனன்

'அச்சம் என்பது மடமையடா' படத்தில் இடம் பெறுமா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கும் 'தள்ளிப் போகாதே' பாடலை இதுவரை 1 கோடியே 58 லட்சம் பேர் பார்த்திருக்கிறார்கள். இந்தப் பாடலைப் படமாக்குவதற்காக படக் குழுவினருடன் சுமார் 80 லட்ச ரூபாய் செலவு செய்து துருக்கி நாட்டிற்குச் சென்றிருக்கிறார் கௌதம் மேனன். ஆனால், தெலுங்கில் நடிக்கும் ஹீரோவான நாக...

எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பிறந்த நாள் விழாவில் ஏ.ஆர்.ரகுமான் கச்சேரி!

இந்தியாவிலுள்ள கர்நாடக இசைப்பாடகிகளில் எம்.எஸ்.சுப்புலட்சுமி முக்கியமானவர். இவர் இந்தியாவில் மட்டுமின்றி பல உலக நாடுகளிலும் கர்நாடக இசைக் கச்சேரிகள் நடத்தி புகழ் பெற்றவர். 1966-ம் ஆண்டில் ஐ.நா.சபையில் பாடினார் எம்.எஸ்.சுப்புலட்சுமி. இந்நிலையில், அவரது 100-வது பிறந்த தினத்தை ஐ.நா.சபை சிறப்பாக கொண்டாட திட்டமிட்டுள்ளது. இந்திய சுதந்திர தினமான ஆகஸ்ட் 15-ந்தேதி நடைபெறும் நிகழ்ச்சிகளில் எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பிறந்த...

கமலின் முத்த சாதனையை முறியடித்த ஜீவா

“லொள்ளு சபா’ என்ற தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் அறிமுகமானவர் ஜீவா. இவர் தமிழ் சினிமாவில் பல்வேறு படங்களில் காமெடி வேடங்களில் நடித்து வருகிறார். இவர் தற்போது கதாநாயகனாக ஒரு படத்தில் அறிமுகமாகிறார். அஜித்தின் தீவிர ரசிகரான இவர், அறிமுகமாகும் முதல் படத்தின் தலைப்பே அஜித் படங்களின் தலைப்பை இணைத்து வைத்துள்ளார். அஜித் நடித்த ‘ஆரம்பம்’,...

சர்வதேச தரத்தில் ‘அப்பா’ திரையிடல்

தமிழ்த் திரையுலகத்தில் மட்டுமல்லாமல் இந்தியத் திரையுலகத்தில் தற்போது வெளிவரும் படங்கள் அனைத்துமே 'சினிமாஸ்கோப்' என்ற அகன்ற திரை வடிவத்தில்தான் திரையிடப்பட்டு வருகின்றன. திரையில் படம் தெரியும் புலன் விகிதம் என்பது பொதுவாக 'சினிமாஸ்கோப்' என்றால் 1 : 2.35 என்ற அளவில் இருக்கும். அந்தக் காலத்தில் பெரும்பாலும் 1:1.33 என்ற விகிதத்தில்தான் எடுத்து வந்தனர். அதை...

ஸ்ருதிஹாசனுக்கு சுதந்திரம் கொடுத்த கமல்!

புலி, வேதாளம் படங்களுக்குப்பிறகு ராக்கி ஹேட்சம் என்ற இந்தி படத்தில் நடித்த ஸ்ருதிஹாசன், தற்போது ஒரே நேரத்தில் தமிழ், இந்தி, தெலுங்கு என மூன்று மொழிப்படங்களிலும் நடித்து வருகிறார். தமிழில் சூர்யாவுடன் எஸ்-3 படத்தில் நடிக்கும் ஸ்ருதிஹாசன், தனது அப்பா கமல் நடிக்கும் சபாஷ் நாயுடு படத்திலும் நடிக்கிறார். இந்த படத்தில் கமலின் மகளாகவே நடிக்கிறாராம்...

ஹாலிவுட் படத்தில் ரஜினிகாந்த் ஜாக்கிசான்

ரஜினிகாந்த் கபாலி படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் அடுத்த மாதம்(ஜூலை) 15-ந்தேதி திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமாக தயாராகும் 2.0 படத்திலும் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு 50 சதவீதம் முடிவடைந்து விட்டதாக அந்த படத்தின் இயக்குனர் ஷங்கர் கூறி இருக்கிறார். இந்த நிலையில் ஹாலிவுட் படமொன்றில் ரஜினிகாந்தையும்...

திருமண வாழ்க்கை, ஷாருக்கானுடன் நடனம் குறித்து மனம் திறந்த சன்னி லியோன்

கனடாவில் ஆபாச படங்களில் நடித்த வந்த் சன்னி லியோன். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் இந்தியாவிற்கு வந்தார். அவரை பாலிவுட் உலகம் அரவணைத்துக் கொண்டது. சன்னி லியோன் தமிழ் படமான வடகறியில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார். தொடர்ந்து இந்தியில் பல படங்கள் நடித்து வருகிறார். அர்பாஸ் கான் நடிக்கும் 'தேரா இன்டிசார்', லோலோ, ஷாருக்கானின்...

சிம்புவின் புதிய கெட்டப் வெளியானது!

அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில் சிம்புவின் புதிய கெட்டப் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. இது நம்ம ஆளு படத்தின் வெற்றிக்குப் பின் சிம்பு நடித்திருக்கும் அச்சம் என்பது மடமையடா திரைப்படம் விரைவில் வெளியாகவிருக்கிறது. இந்நிலையில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருக்கும் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில், சிம்புவின் புதிய கெட்டப் ஒன்றை படக்குழு வெளியிட்டிருக்கிறது....
Loading posts...

All posts loaded

No more posts