- Saturday
- January 18th, 2025
ஆனந்த் சங்கர் இயக்கத்தில் நடித்த இருமுகன் படத்தை அடுத்து ஹரி இயக்கும் சாமி-2 படத்தில் நடிக்கிறார் விக்ரம். சாமி படம் திருநெல்வேலியை மையமாகக்கொண்ட கதையில் உருவான போன்று இந்த படம் தூத்துக்குடி கதையில் உருவாகிறதாம். தற்போது சிங்கம்-3 படத்தின் இறுதிகட்டத்தை நெருங்கிவிட்ட ஹரி, சாமி-2 படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகளையும் தொடங்கி விட்டதால், சிங்கம்-3 படத்தின் ரிலீசுக்கு...
சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கடந்த வாரம் வெளியான ரெமோ படத்தின் சக்ஸஸ் மீட் விழா சென்னையில் நடைபெற்றது. ரெமோ படக்குழுவினர் உட்பட பலர் பங்குகொண்ட இந்த விழாவில், ரெமோ திரைப்படம் வெளியாவதில் பல சிக்கல்கள் இருந்ததாகவும், அதற்காக தானும், தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜாவும் பல இடையூறுகளை சந்தித்தாகவும் சிவகார்த்திகேயன் தெரிவித்தார். மேலும் எங்களை நிம்மதியாக வேலை...
அஜீத் பிறருக்கு உதவி செய்யும் தாராள மனம் உள்ளவர் என்பது கோடம்பாக்கத்தில் உள்ள அனைவருக்கும் தெரியும். தனது வீட்டில் வேலை செய்பவர்களுக்கும் சொந்த வீடு இருக்க வேண்டும் என்று நினைத்தார். இதையடுத்து அவர்களுக்கு தனது செலவில் இடம் வாங்கி வீடு கட்டிக் கொடுத்து அசத்தினார். பணியாளர்களின் வீடுகள் அஜீத் வீட்டில் இருந்து 10 கிலோ மீட்டர்...
36 வயதினிலே படத்துக்குப் பிறகு ஜோதிகா நடிக்கும் புதிய படத்துக்கு மகளிர் மட்டும் என்று தலைப்பிட்டுள்ளனர். இந்தப் படத்தையும் ஜோதிகாவின் கணவர் சூர்யா தனது 2 டி என்டர்டெயின்மெண்ட் மூலம் தயாரிக்கிறார். திருமணத்துக்குப் பிறகு நீண்ட காலம் நடிக்காமல் இருந்த ஜோதிகா, 36 வயதினிலே படத்தில் நடித்தார். அந்தப் படத்தின் வெற்றி, அவரைத் தொடர்ந்து நாயகியாக...
இந்திய சினிமா வரலாற்றில் எம்.எஸ்.டோணி: தி அன்டோல்ட் ஸ்டோரி தான் அதிக வசூல் செய்துள்ள வாழ்க்கை வரலாற்று படம் என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. கிரிக்கெட் வீரர் டோணியின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட எம்.எஸ்.டோணி: தி அன்டோல்ட் ஸ்டோரி படம் கடந்த மாதம் 30ம் தேதி 60 நாடுகளில் 4 ஆயிரத்து 500 தியேட்டர்களில்...
அமுதேஷ்வர் இயக்கத்தில் பிரபு, காளிதாஸ் ஜெயராம், ஆஷ்னா சவேரி, பூஜாகுமார், ஊர்வசி ஆகியோர் நடித்துள்ள படம் மீன் குழம்பும் மண்பானையும். ஒரு தமிழ் குடும்பம் மலேசியாவில் ஓட்டல் நடத்தும் கதையில் இந்த படம் உருவாகியிருக்கிறது. முக்கியமாக மண்பானையில் செய்யப்படும் மீன்குழம்பின் சுவையை பிதானப்படுத்தும் இந்த படத்தில் கமல்ஹாசன் நட்புக்காக நடித் துள்ளார். இந்த படத்தில் நடிக்க...
நடிகர் சிம்பு, பேஸ்புக்கில் ரசிகர்களின் கேள்விக்கு, நேற்று முன்தினம் பதில் அளித்தார். அப்போது, ரசிகர் ஒருவர், உங்கள் படங்களில், அஜித் பற்றிய காட்சிகள் இடம்பெறுவது ஏன்? என, கேள்வி எழுப்பினார். அதற்கு, அஜித்தை யாருமே கண்டுகொள்ளாதபோது, நான் தான் முதலில் அவரை, தல... தல... என, என் படங்களில் தூக்கி வைத்து கொண்டாடினேன் என, பதிலளித்தார்....
தல 57 படத்தில் அஜீத் இரட்டை வேடங்களில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் படம் தல 57. இன்டர்போல் ஏஜெண்டாக நடிக்கும் அஜீத்தின் மனைவியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். கமல் ஹாஸனின் இளைய மகள் அக்ஷரா அஜீத்தின் உதவியாளராக நடிக்கிறார். தமிழ்நாட்டில் நடக்கும் கொலையை விசாரிக்க அஜீத் பல...
மாஜி ஹீரோயின்களான ராதிகா, குஷ்பு, ஊர்வசி, சுஹாசினி ஆகியோர் தற்போது ஆஸ்திரேலியாவில் முகாமிட்டு ஊர்சுற்றி ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் சுற்றுலா எதுவும் செல்லவில்லை. ஜேம்ஸ் வசந்தன் இயக்கும் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். வானவில் வாழ்க்கை படத்திற்கு பிறகு இசை அமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் இயக்கும் படம் இது. ஆஸ்திரேலியாவில் செட்டிலாகிவிட்ட நான்கு நடுத்தர வயது...
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குறித்து பாலிவுட் நடிகர் கமால் ஆர் கான் சர்ச்சைகுரிய கருத்து ஒன்றை டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாலிவுட்டின் நடிகர், தாயாரிப்பாளரான கமால் ஆர் கான் டுவிட்டரில் வெளியிட்ட கருத்தில், நல்ல உடல்வாகும் பார்ப்பதற்கு அழகானவர்கள் தான் ஸ்டார் ஆக முடியும் என்றால் பார்ப்பதற்கு அழகாக இல்லாத ரஜினிகாந்த்...
நாளை (10ந் தேதி) ஆயுதபூஜையும், 11ந் தேதி சரஸ்வதி பூஜையும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதையட்டி தமிழ் சேனல்களில் புத்தம்புதிய திரைப்படங்கள் ஒளிபரப்பாகிறது. இதில் ஹைலைட்டாக சூர்யா நடித்த புத்தம் புது திரைப்படமான 24 நாளை மாலை 6 மணிக்கு ஜெயா டி.வியில் ஒளிபரப்பாகிறது. 11ந் தேதி சரஸ்வதி பூஜையன்று மாலை 6 மணிக்கு இறைவி ஒளிபரப்பாகிறது....
கார்த்தி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘காஷ்மோரா’. கோகுல் இயக்கியுள்ளார். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். டிரீம் வாரியர் பிக்சர்ஸ் எஸ்.ஆர்.பிரகாஷ், எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ளனர். இதன் இசை மற்றும் டிரைலர் நேற்று வெயியிடப்பட்டது. தீபாவளிக்கு திரைக்கு வர இருக்கும் இந்த படம் பற்றி கார்த்தி கூறும்போது... “இந்த...
வேதாளம் படத்தில் இடம் பெற்ற ஆளுமா டோளுமா பாடல் சூப்பர் ஹிட்டானதோடு, அந்த பாடலில் அஜித் வரிந்து கட்டி ஆடி தனது ரசிகர்களை சந்தோசப்படுத்தியிருந்தார். அதனால் பட்டி தொட்டியெல்லாம் கலக்கிய அந்த பாடலைப் போன்று அஜித்தின் புதிய படத்திலும் பாடல் இருக்க வேண்டும் என்று அவரது ரசிகர்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தற்போது அனிருத்...
பைரவா படத்தில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ், அப்படத்தில் நடிக்கத் தொடங்கியதில் இருந்தே விஜய்யுடன் நடிக்கும் அனுபவங்களை அவ்வப்போது கூறி வருகிறார். தற்போது இன்னொரு தகவலையும் வெளியிட்டுள்ளார். அதாவது, விஜய்யின் தீவிரமான ரசிகையான எனக்கு இந்த படத்தில் சான்ஸ் கிடைத்தது மிகப்பெரிய சந்தோசத்தை கொடுத்தது. என்றாலும், மற்ற நடிகர்களுடன் கேசுவலான நடிக்கத் தொடங்கிய எனக்கு விஜய்யை...
நீ என் படத்தில் நடிக்கக் கூடாது, நீ தல ஆள் என எனக்கு தெரியும் என்று இளைய தளபதி விஜய் பிரேம்ஜி அமரனிடம் தெரிவித்துள்ளார். மங்காத்தா படம் அஜீத்துக்கும் சரி, வெங்கட் பிரபுவுக்கும் சரி மிகவும் முக்கியமான படமாக அமைந்தது. மங்காத்தா படத்தை அடுத்து இளைய தளபதி விஜய் வெங்கட் பிரபுவை தனது வீட்டிற்கு அழைத்து...
சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் 2.ஓ படத்தை ஷங்கர் இயக்குகிறார். ரஜினியுடன் அக்ஷய்குமார், எமி ஜாக்சன் நடிக்கிறார்கள். 350 கோடி ரூபாய் செலவில் லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. இது ஏற்கெனவே ரஜினி நடித்து வெற்றி பெற்ற எந்திரன் படத்தின் இரண்டாம் பாகம். இதன் படப்பிடிப்புகள் சென்னை மும்பை, அமெரிக்கா என பல கட்டங்களாக நடந்துள்ளது. தற்போது...
கைத்தொலைபேசி மற்றும் பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தங்களுக்கு மக்கள் அடிமைகளாகி விட்டனர். எப்போதும் கைபேசியும் கையுமாகவே திரிகிறார்கள். வாரத்தில் 7 நாட்களும் ஒரு நாளில் 24 மணி நேரமும் சமூக வலைத்தளங்களிலேயே மூழ்கிக் கிடக்கின்றனர். யாராவது தன்னிடம் பேசினால் அவர்களுக்கு பதில் சொல்ல கூட நேரம் இல்லாமல் காதுகளில் கைபேசியை வைத்து தீவிரமாக பேசிக்கொண்டே...
நீண்ட இடைவெளிக்கு பின், சிவகார்த்திகேயன் நடிக்கும், ரெமோ படம் வெளியாக உள்ளது. மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த படம் குறித்து, சிவா, நம்மிடம் பேசியதாவது: ரெமோ படத்தில் என்ன ஸ்பெஷல்? ரெமோ எனக்கு மட்டும் அல்ல இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் உட்பட, ஒட்டுமொத்த டீமுக்கும் ஸ்பெஷல்.ஹீரோ ஏன் பெண் வேஷம் போட்டான், காதலுக்காக ஒரு...
பவர் பாண்டி படத்தை அடுத்து சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கும் படத்திலும் அனிருத்தை ஒப்பந்தம் செய்யாததற்கு தனுஷ் காரணம் என்று கூறப்படுகிறது. தனுஷ் தனது மனைவி ஐஸ்வர்யாவின் சொந்தக்கார பையனான இசையமைப்பாளர் அனிருத்தை தட்டிக் கொடுத்து வாய்ப்பு அளித்து வளர்த்துவிட்டு அழகு பார்த்தார். எப்பொழுது அனிருத் சிம்புவிடன் சேர்ந்து பீப் பாடல் சர்ச்சையில் சிக்கினாரோ அன்றே தனுஷுக்கு...
ரெமோ, றெக்க இரண்டு படங்களும் ஒரேநாளில் வெளியாவதால் தேவி படத்துக்கு போதிய தியேட்டர்கள் கிடைக்கவில்லை. எனவே படு டென்ஷனில் இருக்கிறார் பிரபுதேவா. இந்த நேரத்தில்தான் புதிய தலைவலி ஒன்று முளைத்திருக்கிறது. அதாவது, காவிரி பிரச்சனையின் எதிர்வினையாக தேவி படத்துக்கு புதிய பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது. தேவி படத்தின் ஹீரோவும், தயாரிப்பாளருமான பிரபுதேவா கர்னாடகா மாநிலத்தைச் சேர்ந்தவர். ஆனால்...
Loading posts...
All posts loaded
No more posts