- Saturday
- January 18th, 2025
புனேயில், மேடையில் நடனமாடியபோது மாரடைப்பு ஏற்பட்டு மராத்தி நடிகை உயிரிழந்த சம்பவம் திரையுலகினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ‘அக்லேச்சே காந்தே’ என்ற மராத்தி படம் மூலம் அறிமுகமானவர் அஸ்வினி ஏக்போதே(வயது44). இவர் ‘தும்காதா’, ‘பாவரே பிரேம் ஹே’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் ‘கணபதி பாபா மோரியா’, ‘தேபு’, ‘தன்யவார் தன்கா’ உள்ளிட்ட டி.வி....
டான்ஸ்மாஸ்டராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, நடிகராகி, இயக்குனர் ஆனவர் பிரபுதேவா. தமிழில் விஜய் நடித்த ‘போக்கிரி’ ‘வில்லு’ விஷால் நடித்த ‘வெடி’ ஜெயம் ரவி நடித்த ‘எங்கேயும் காதல்’ படங்களை இயக்கினார். பின்னர் இந்திக்கு சென்ற பிரபுதேவா பிரபல இயக்குனராக உயர்ந்தார். சமீபத்தில் இவர் தமன்னாவுடன் நடித்த ‘தேவி’ படம் தமிழ்,தெலுங்கு, இந்தியில் வெளியாகிஉள்ளது. இந்த...
எந்திரன் படத்தின் வெற்றிக்கு பிறகு அதன் இரண்டாம் பாகமாக தற்போது ‛2.O படம் உருவாகி வருகிறது. ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்சன் மற்றும் பலர் நடிக்கும் இப்படத்தை ஷங்கர் முன்பை விட இன்னும் பிரமாண்டமாய் இயக்குகிறார். லைக்கா நிறுவனம் சுமார் ரூ.350 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கிறது. 75 சதவீத ஷூட்டிங் நிறைவடைந்துள்ளது. ‛2.O படத்தின்...
சினிமாவில் ஹீரோ, இயக்குனர், தயாரிப்பாளர், ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர், பாடலாசிரியர், பாடகர் என பன்முகம் காட்டி வந்தவர் டி.ராஜேந்தர். அதோடு சண்டை காட்சிகளில், வாடா என் மச்சி வாழக்கா பச்சி -என்று அடுக்கு மொழி டயலாக் பேசிக்கொண்டே எதிரிகளை பந்தாடுவார். அந்த வகையில், தனக்கேன ஒரு தனி பாணியை வைத்து நடித்து வந்த டி.ராஜேந்தரின் ரசிகராக சில...
அழகிய தமிழ் மகன் படத்தில் முதன்முறையாக விஜய்யை இரண்டு வேடங்களில் இயக்கியவர் பரதன். அதையடுத்து மீண்டும் தற்போது விஜய்யை இயக்கி வரும் படத்திலும் அவரை இரண்டுவிதமான வேடங்களில் இயக்கிக்கொண்டிருக்கிறார். இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், அபர்ணா வினோத், ஜெகதிபாபு, டேனியேல் பாலாஜி, தம்பி ராமைய்யா, மைம் கோபி, சதீஷ் உள்பட பலர் நடித்து வருகின்றனர். இதுவரை அந்த...
தமிழ், மலையாளம் ஆகிய 2 மொழிகளில் ‘திரைக்கு வராத கதை’ என்ற பெயரில் புதிய படம் தயாராகி உள்ளது. இதில் முழுக்க பெண்கள் மட்டுமே நடித்து உள்ளனர். நதியா, இனியா, கோவை சரளா, ஈடன், ஆர்த்தி, ஆரதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள். பேய் அமானுஷ்யங்கள் நிறைந்த திகில் படமாக உருவாகி இருக்கிறது. மேலை நாட்டு...
விஜய் சேதுபதி நடிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் புதிய படம் உருவாகி வருகிறது. டி.ராஜேந்தர், மடோனா செபஸ்டியான் ஆகியோரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இதில், விஜய் சேதுபதி - டி.ராஜேந்தர் இருவரும் வில்லனாக நடித்து வருவதாக கூறப்படுகிறது. இப்படத்திற்கு தலைப்பு வைக்காமலேயே படக்குழுவினர் படமாக்கி வந்தனர். இந்நிலையில், நேற்று மாலை 6 மணிக்கு இப்படத்தின்...
மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி நடித்து வரும் 'காற்று வெளியிடை' படம் தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பில் உள்ளது. தற்போது காஷ்மீரின் லடாக் பகுதியில் நடைபெற்று வரும் படப்பிடிப்பைத் தொடர்ந்து, இந்த ஆண்டு இறுதிக்குள் படத்தின் எஞ்சியுள்ள பணிகளை முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் காதலர் தினத்தை முன்னிட்டு வெளியிட இயக்குனர்...
ரெமோ படத்தை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிவகார்த்திகேயனுக்கும் , ரெமோ படத்தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜாவுக்கும் தொலைபேசி மூலமாக வாழ்த்து தெரிவித்துள்ளார். சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ரெமோ படத்தை பாக்கியராஜ் கண்ணன் இயக்கியுள்ளார். ஆர்.டி. ராஜா தயாரித்துள்ள இப்படத்துக்கு ஒளிப்பதிவு - பி.சி. ஸ்ரீராம், இசை - அனிருத். இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த...
இளவட்ட நடிகர்களுக்கு அம்மாவாக தொடர்ந்து நடித்து வரும் சரண்யா, தனுசுடன் வேலையில்லா பட்டதாரி படத்தில்தான் இணைந்தார். அந்த படத்தில் தனுஷின் அம்மாவாக நடித்த சரண்யா எப்போதும் போலவே இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். அதேபோல் தனுசும் இயல்பாக நடித்திருந்தார். அந்த வகையில், அந்த படத்தில் அவர்கள் நடித்த காட்சிகள் உருக்கமாக வெளிப்பட்டிருந்தது. விளைவு, இப்போது தான் இரண்டு...
வீரம், வேதாளம் படங்களைத் தொடர்ந்து அஜித் நடிக்கும் 57வது படத்தை இயக்கி வரும் சிறுத்தை சிவா, முதல்கட்ட படப்பிடிப்பை ஐரோப்பாவில் நடத்திவிட்டு தற்போது ஆந்திராவில் இரண்டாம்கட்ட படப்பிடிப்பை நடத்தி வருகிறார். இன்டர்நேசனல் போலீசாக நடிக்கும் அஜித், சமூகவிரோதிகளை களையெடுக் கும் கதை என்பதால் இதுவரை அஜித் நடித்த படங்களை விட இந்த படத்தில் கூடுதலான ஆக்சன்...
இந்தியாவில் தயாராகும் படங்களில் இந்தி படங்களின் வியாபார வட்டம்தான் மிகப்பெரியது. தமிழ்ப்படங்களின் வட்டம் தென்னிந்தியாவிற்குள்தான். என்றாலும், ஷங்கர் இயக்கத்தில் தமிழில் உருவான எந்திரன் படம்தான் இந்தியாவிலேயே அதிக பட்ஜெட்டில் உருவானது. ஆனால் அதையடுத்து ராஜமவுலி இயக்கிய பாகுபலி படம் எந்திரனை மிஞ்சும் பட்ஜெட்டில் அதாவது 300 கோடியில் தயாரானது. ஆனால் தற்போது மீண்டும் ரஜினியை வைத்து...
சிவகார்த்திகேயன் தன் நண்பர் ஆர்.டி.ராஜாவின் '24 ஏஎம் ஸ்டியோஸ்' நிறுவனத்தின் சார்பில் முதல் தயாரிப்பாக உருவாக்கிய ரெமோ படம் அக்டோபர் 7ஆம் தேதி வெளியானது. ரெமோ படம் குறித்து ரசிகர்கள் மத்தியில் இருவேறாக கருத்துக்கள் நிலவி வந்தபோதும், வரிசையாக 6 நாட்கள் விடுமுறை தினமாக அமைந்துவிட்டதால் வசூலில் குறைச்சல் இல்லை. தயாரிப்பு தரப்பு முன்கூட்டியே கணித்தபடி...
நடிகை ஸ்ருதிஹாசன் ஒரு பெண்ணியவாதி என்பது அனைவரும் அறிந்ததுதான். அவர் தற்போது நவீன பெண்களுக்கு ஆதரவாக பி தி பிட்ச் என்ற தலைப்பில் ஒரு வீடியோவை இணைய தளத்தில் வெளியிட்டுள்ளார். பொதுவாக ஆண்கள் பெண்களை குறைவாக மதிப்பிட்டு சொல்கிற வார்த்தை பிட்ச். அந்த வார்த்தையை அப்படியே பாசிட்டிவாக மாற்றி அதற்கு விளக்கம் அளித்து அவரே நடித்தும்...
முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து அப்பல்லோ மருத்துவர்களிடம் நடிகர் ரஜினி நலம் விசாரித்தார். உடல்நலக் குறைப்பாட்டின் காரணமாக முதல்வர் ஜெயலலிதா கடந்த செப்.,22 ம் தேதியிலிருந்து அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் நீண்ட நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டும் என அப்பல்லோ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அவரது உடல்நிலை குறித்து கேட்டறிய...
அனிருத்தை இசையமைப்பாளராக்கியவர் தனுஷ். தனது மனைவி ஐஸ்வர்யா ஆர்.தனுஷ் இயக்கிய 3 படத்தில் தான் நாயகனாக நடித்ததோடு அனிருத்தை இசையமைப்பாளராக்கிய தனுஷ், அந்த படத்தில் ஒய் திஸ் கொலவெறி என்ற பாடலையும் எழுதி பின்னணி பாடியிருந்தார். அந்த பாடல் சூப்பர் ஹிட்டானதால் அது அனிருத்துக்கு திருப்புமுனையாக அமைந்ததோடு, அதன்பிறகு தனுசும் அதிகப்படியான பாடல்கள் பாட வழிவகுத்தது....
சிம்பு நடிக்கும் படம் என்றாலே நீண்டகாலத் தயாரிப்புதான் என்று எழுதப்படாத விதியாகிவிட்டது. குறிப்பிட்ட காலத்தில் படப்பிடிப்பு முடிவடைந்து, திட்டமிட்டபடி படம் வெளியாவதே கிடையாது. இதற்கு கௌதம் மேனன் இயக்கும் 'அச்சம் என்பது மடமையடா' படமும் விதிவிலக்கில்லை. நீண்டநாட்களாக தயாராகி வரும் இந்தப்படம் சிம்புவுக்கும் கௌதம் மேனனுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலினால் கிடப்பில் போடப்பட்டது. இப்படத்தில் இடம்பெற்றிருக்கும்...
24 ஏஎம் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் முதல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் நடித்த 'ரெமோ' படம் கடந்த வாரம் வெளிவந்த வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த நிறுவனத்தின் அறிமுக விழாவின் போதே அடுத்தடுத்து சில புதிய படங்களை அறிவித்தார்கள். அதில் இரண்டாவதாக அறிவிக்கப்பட்ட படம் மோகன் ராஜா இயக்கும் படம். கடந்த சில...
ரஜினியை வைத்து சந்திரமுகி படத்தை இயக்கிய பி.வாசு. அந்த படத்தில் இரண்டாம் பாகமாக இப்போது சிவலிங்கா படத்தை இயக்கி வருகிறார். கன்னடத்தில் சிவராஜ்குமாரை வைத்து சிவலிங்கா படத்தை இயக்கிய அவர், அதே பெயரில் தமிழில் இப்போது ராகவா லாரன்சை வைத்து ரீமேக் செய்து வருகிறார். இறுதிச்சுற்று நாயகி ரித்திகா சிங், வடிவேலு, ஊர்வசி உள்பட பலர்...
ஆரம்பத்தில் இசை ஆல்பங்களை தயாரித்து வெளியிட்டு வந்த ஹிப் ஹாப் தமிழா ஆதி, அதன்பிறகு அனிருத்துடன் இணைந்து ஒரு சில படங்களில் பாடல்கள் பாடினார். இருவர் கூட்டணியில் வெளிவந்த பாடல்கள் பெரிய அளவில் வெற்றிபெறவே, சுந்தர்.சி தான் இயக்கிய ‘ஆம்பள’ படத்தில் ஆதியை இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தினார். அதைத்தொடர்ந்து இவர் இசையமைத்த ‘அரண்மனை-2’ ‘தனி ஒருவன்’ படங்களின்...
Loading posts...
All posts loaded
No more posts